Share on facebook
Share on telegram
Share on whatsapp

பொருள்வாதியின் பகுத்தறிவும் – வாழ்வில் வளமும் – 2

ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்தால் லைப் டிவைன் முதல் அத்தியாயத்தில் -இல் சொன்னதின் வெளிப்பாடான சாகாவரம், எல்லையில்லா ஞானம் , வரையில்லா ஆற்றல் என்று தான் இரண்டு பேருடைய தேடலும் இருக்கிறது.  பொருள்வாதி ஆயுளை நீடிக்க, சாகாமல் இருக்க மருந்துகளைத் தேடுகிறான். எல்லாவற்றையும் தன் சக்திக்கு உட்படுத்த ஆயுதங்களைக்  கண்டு பிடிக்கிறான். எல்லையில்லா ஞானத்திற்காக  ஆராய்ச்சி செய்கிறான். செவ்வாய், சனி, நிலாவில் கூட அறிவைத் தேடுகிறான்.

ஆன்மீகவாதி சாகாவரத்தை மோட்சமாகவும் பிரபஞ்ச அறிவை ஞானமாகவும் உடல் உணர்வு மனம் ஆகியவற்றை அடக்கும் ஆற்றலையும் தேடுகிறான். ஆக இரண்டு பேரும் ஒன்றையே தேடுகிறார்கள்.  ஆனால் வெவ்வேறு திசைகளில்.  ஆனால் இந்தப் பகுத்தறிவு பொருள்வாதிகளால் புற வழி அறிவாக communication, internet, artificial intelligence, virtual reality, augmented reality என்று மனித குலத்திற்கு மிகப் பெரிய முன்னேற்றத்தையும் ஆன்மீகவாதி meta physics, human consciousness, universal consciousness, என்று பிற முன்னேற்றங்களையும் தனித்தனியாக வழங்கி இருக்கிறார்கள். இதற்குக்  காரணம் தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் வாழ்க்கையை மனித முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து சிந்தித்தது தான். 

நாம் பகுத்தறிவுடன் இருப்பதாக நினைத்தாலும் பெரும்பாலும் தவறு செய்வோம்.  சாதாரண மக்களுக்குத் தெரிந்த விஷயங்கள் கூட நமக்குத் தெரிந்திருக்காது.  பட்டம் பெற்று விட்டதாலேயே நமக்கு அறிவு இருப்பதாக நினைப்போம்.  வீட்டில் பத்திரம் பாதுகாப்பாக வைத்து இருப்பதாலேயே சொத்து பத்திரமாக இருப்பதாக நினைத்து இழந்தவர் பலர்.

தாலிக்கு நோன்பு வைத்து, கணவனை இம்சிக்கும் மனைவிகள் இருக்கிறார்கள்.  Living  Together  என்பதே கணவன் மனைவி உறவு தான் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.  இப்படி அடிப்படையையே தவறாகப் புரிந்துக் கொண்டு செயல்படுபவர்கள் அதையே, அறிவுஜீவி, பகுத்தறிவு என்று நினைப்பவர்களைப் பார்த்தால் இது புரியும்.

அதே போல உடலைப் பற்றிய பொருள்வாதியின் கருத்துக்களை எடுத்துக்கொண்டால் அவனை பொறுத்தவரை ஆரோக்கியம் என்பது வலுவான உடல். பெரும்பாலும் அலோபதி மருந்து specialist மேல் நம்பிக்கை, நிறைய செலவு செய்து scan எடுத்துப் பார்த்து ஒன்றும் இல்லை என்றால் ஒரு ஏமாற்றம்.  ஒவ்வொரு party அல்லது திருமணத்தில் இனிப்பு சாப்பிடும் போது சர்க்கரை அளவை பற்றி  ஒப்பிட்டு கொள்ளும் பெருமை என்றே இருக்கிறது.  நம்பிக்கை மூலம் தீர்ந்த நோய்கள் placebo மருந்து முறைகள் உடல் மட்டுமல்ல மனம், புலன், உணர்வுகளின் ஆரோக்கியமே முழு ஆரோக்கியம் போன்றவற்றைப் பற்றி பொருள்வாதிகள்  சிந்திப்பதேயில்லை.

இது வேறு வகையான agnostic – தம்மை தெரியாதவர், தம்மை அறியாதவர், தம்மை புரியாதவர்.

நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால் நமக்குத் தெரிந்தச் செய்திகளை, நிகழ்வுகளை, நம் அறிவாக நினைப்பது. அதனால் என்னவாகிறது என்றால் Mind மட்டும் இணக்கத்தீர்வை நாடும் போது அது குழப்பத்தில் முடிகிறது.  vital மட்டும் இணக்கத்தீர்வை நாடும் போது அது மன அழுத்தத்தில் முடிகிறது.  physical மட்டும் இணக்கத்தீர்வை நாடும் போது அது வியாதியில் முடிகிறது.  இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று பொருந்தி ஆன்மாவில் இணக்கத்தீர்வை தேடும் போது அது mind இல் ஞானமாகவும், vital இல் நிம்மதியாகவும், physical லில் ஆரோக்கியமாகவும் வளருகிறது.

தனக்குத் தெரிந்தது மட்டுமே உண்மை என்பவரின் எல்லை குறுகியதாகவே இருக்கும்.  அவர்களின் சிந்தனை எல்லாமே அவர் வாழ்விற்கும் அறிவிற்கும் உட்பட்டதாகவே இருக்கும்.  இந்த இரண்டையும் மீறினால் ஏராளமான உண்மைகள், நிகழ்ச்சிகள், கருத்துக்கள், அனுபவங்கள் வெளிப்படும்.  அறிவிற்கும் புலனுக்கும் புலப்படாத ஏராளமான விஷயங்கள் உள்ளன என்பது தெளிவாகும்.  உடலைப் பற்றிய,  உணர்வைப் பற்றிய தெளிவே  நம் உலகை நிர்ணயிக்கிறது என்று நாம் நம்பும் போது நமக்கு தெரியவரும் புதிய விஷயங்கள், புதிய உலகத்தைப் படைக்கமுடியும் .

முரண்பாடுகள் தான் நம் முன்னேற்றம் என்னும் போது நம் ஜடமும் ஆன்மாவுமே மிகப் பெரிய முரண்பாடு. அந்த இரண்டையும் உடன்பாடக்குவது தான் நம் மிகப் பெரிய வெற்றி, அதுவே பரிணாமத்தில்  முன்னேற்றம்.

ஜடத்திலிருந்து ஆன்மாவிற்கு ஏறு முகமாக reconciliation point இணக்கத்தீர்வுக்கான இடம் இருந்தால் தான் நாம் நம் மூடநம்பிக்கையிலிருந்து வெளியே வரமுடியும்.  பொருள்வாதி வெளியே பார்க்கிறான்.  ஆன்மீகவாதி உள்ளே பார்க்கிறான். இரண்டுக்கும் பொதுவாக நின்று உள்ளேயும் வெளியேயும் பார்ப்பது பரிணாமத்தில் முன்னேற்றம்.  அப்போது தான் ஜடம், பிராணன், மனம், ஆன்மா என்று ஏறு வரிசையில் அடைவது தெரியும்.  அதன் தொடர்பு அம்சங்கள் புரியும்.

பொருள்வாதி என்று சொன்னால் கண்ணால் காணக் கூடியதையும் , அல்லது புலன்களால் உணரக் கூடியதையும் மட்டுமே உண்மை என்று நம்புபவன்.  ஆனால் நாம் நம்மை பொருள்வாதி என்று சொல்லும் அளவிற்காவது இருக்கிறோமா?  நாம் நம் நம்பிக்கை நம் பகுத்தறிவு என்று நினைப்பதெல்லாம் நம் பழைய அனுபவங்கள், நினைவுகள் – Our memory is our knowledge.

எது நடக்கும் எது நடக்காது, எது நடக்கக் கூடாது, எது வேண்டும் எது வேண்டாம் என்று அதன் அடிப்படையில் தேர்வு செய்வதை பகுத்தறிவு என்று நினைக்கின்றோம்.அதை அறிவுடைமை என்று நினைக்கின்றோம். நம் வாழ்வில் இணக்கத்தீர்வை நாடுவதாக நினைக்கிறோம்.  ஆனால் அது conflict and compromise – குழப்பமும் சமாதானமும். நமக்குத் தேவை knowledge and reconciliation – ஞானமும் இணக்கத்தீர்வும்.

Money பணம் என்னும் உதாரணத்திற்கு வருவோம் – பொருள்வாதம் சொல்வது – சிக்கனமாக இருக்க வேண்டும், தேவைக்கு மட்டும் செலவு செய்ய வேண்டும், பேரம் பேச வேண்டும், There is no rule for money love and war  என்று சொல்லும் அளவிற்கு சுயநலமாக தயவு தாட்சிண்யம் இல்லாமல் இருக்க வேண்டும், தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு. 

ஆன்மீகவாதி பணம் பகட்டுக்கு, அகந்தைக்கு வழி வகுக்கும்.  அது தேவையில்லை என்று தூக்கி எறிகிறான்.இதில் higher consciousness க்கான இணக்கத்தீர்வு எது? முதல் நிலையில் பொருள்வாதி செய்வது பணத்திற்கான கவனம் attention என்பது புரிவது.  அது நாம் வாழ்வில் முன்னேற, பிறர் வாழ்வில் முன்னேற என்று நினைப்பது, பணத்தைத் தூக்கி எறிவதற்கு பதிலாக சேர்த்து வைக்காமல், அனைத்தையும் மேலும் முன்னேற உபயோகப்படுத்துவது.  பணம் ஆன்மாவின் பண்புகளுக்கு அதிகம் பலிக்கும் என்று அறிவது. 

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »