Share on facebook
Share on telegram
Share on whatsapp

எது நல்லது, எது கெட்டது ?

எனக்கு எது நல்லது, எது கெட்டது  என்று எப்படி தெரிந்து கொள்வது?

என்னை பொறுத்த வரை ஒரே வரியில் சொல்லலாம். வாழ்வு முன்னேற, மனப்பான்மை முன்னேற, தேவையான எல்லாம் நல்லது. அதற்கு எதிரானது எல்லாம் கெட்டது. 

வாழ்வில் முன்னேற்றம் என்பது வளம். அது வெறும் பணம் தான் என்று சொல்லாமல், வளம் என்று சொன்னதற்கு காரணம் – அது வெற்றியின் ஒரு நிலை- a  status of success, a  symbol of development and personality  என்பதற்காகத் தான். வளம் என்னும் இந்த வார்த்தைபணம், அதை பெரும் முறைகள், வழிகள், மனநிலை, அதை நாம் அனுபவிக்கும் சூழல், அது பிறருக்குத் தரும் பயன், என்று பலவற்றை உள்ளடக்கியது.  அதற்காக நாம் செய்யும் எல்லாமே நல்லதே.  அதற்கான திறமை, திறன், வல்லமை, செயல் வல்லமை, skill -capacity ,ability , capability  என்று வாழ்வு முன்னேற, positive வாக, நேர்வழியில் முன்னேற, சத்தியத்தின் வழியில் முன்னேற, நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்லது.  அதே போல, மனநிலையை, உயர் சித்தத்தை  உயர்த்த செய்யும் முயற்சிகள், குறிப்பாக, விவேகம், பாகுபாடு, பொதுபுத்தி போன்றவற்றை வளர்த்துக் கொள்வது நல்லது. அதற்கெதிரான அனைத்தும், மனிதர்கள் சூழல் உட்பட அனைத்தும் கெட்டது. 

கர்ணன் கொடையாளி. அதை உயர்ந்த குணம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உயிரை பறிக்கும் கருவியாக அதை பயன்படுத்தும் போது, அது தெரிந்தும், உயர்ந்த குணம் என்ற பெயரில் விவேகம், பாகுபாடு, பொது புத்தி, இல்லாமல் நடந்தது, அதனால் அவனுடைய லட்சியமான துரியோதனனை காப்பாற்ற வேண்டும் என்பதும் முடியாமல் போனது, போன்றவைகளை நாம் எங்கே செய்கிறோம் என்று பார்ப்பது நல்லது.  தனக்கு தெரிந்ததே, உயர்ந்ததே நல்லது என்று இருப்பது கெட்டது.  Common sense என்பதைக் கூட எல்லோரும் செய்தால், நாமும் செய்யலாம் என்று எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அதன் உண்மையான பொருள் என்ன,  சத்தியம், TRUTH   என்றால் என்ன என்று புரிந்து செய்வது நல்லது. மனப்பான்மை வளம் பெற செய்வது அனைத்தும் நல்லது.  அதற்கு எதிரானது எல்லாம் கெட்டது.  நாம் அறிந்த உயர்ந்த விஷயங்களை, நல்லதை, எப்போதும் கடைபிடிப்பது நல்லது. சிங்கப்பூர் flight ஏறும் போதே வரும் சுத்தம், ஒழுங்கின் ஞானம், – திரும்ப இந்தியா வந்து இறங்கும் போது flilght -டிலேயே மறந்து விடுகிறது.  அப்படி இல்லாமல் எப்போதும் நமக்கு தெரிந்த உயர்ந்த சிறந்த நிலையிலேயே அனைத்தையும் செய்வது நல்லது. 

சிறு விஷயங்களில் கூட இதை செய்து மனநிலையை உயர்த்தலாம் என்பதற்கு கர்மயோகி தரும் சில உதாரணங்கள் – நான்கு பேர் உட்கார்ந்து இருக்கும் சேரில்,  நாம் காலாடி, அனைவரையும் ஆட்டாமல் இருப்பது, வயதானவரை பார்க்கப் போகும் போது அவர் கண் உறுத்தாத கலரில், பட்டைகள்  இல்லாத உடைகளை அணிந்து செல்வது, என்று ஏராளமான விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதையே skill ,capacity பற்றி சொல்லும் போது, பேப்பர் வெட்டும் கத்திரியால் துணியை  வெட்டக்கூடாது, ஆணி அடிக்க chair எடுக்காமல், stool அல்லது ஏணியை உபயோகிக்க வேண்டும் என்று ஏராளமான உதாரணங்களை தந்திருக்கிறார். அப்படி ஒரு முழுமையான personality -யாக மாற, தேவையான அனைத்தும் நல்லது. உதாரணமாக, நமக்கு ஒரு பண்பை பின்பற்ற தோன்றுகிறது, தியானம் செய்ய தோன்றுகிறது என்றால், அது அன்னை நம்மை நாடி வருவதாக பொருள்.  அது போன்ற மன நிலைகளை கவனித்து அதை வளரச் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லது.

அது வாழ்வில் எப்படி வெளிப்பட வேண்டும் ?

குடும்பதிற்கான கடமைகளை ஒரு இழை பாக்கி இல்லாமல் எதிர்பார்ப்பு இல்லாமல் முடிப்பது.

வேலையில் அடுத்த அடுத்த கட்ட திறமை, திறன், ஆளுமை, புதியது படைப்பது, நூதனம், அறிவு, ஞானம், தொழில் முனைவு ( skill, capacity, creativity, innovation, knowledge, entrepreneurship) என்று முயல்வது.

ஆன்மீகத்தில் குருவிற்கு sincerity, அவரின் கொள்கைகள், அறிவுரைகள், நோக்கங்களை  -ஐ அடுத்ததடுத்த  உயர்ந்த பட்சம்  என்ற அளவில் பின்பற்றுவது.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »