அடுத்தது, முயற்சி என்பதை தனி மனித முயற்சி என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நம் ஒவ்வொரு செயலிலும், பலரது முயற்சி, திறமை, ஒத்துழைப்பு, உணர்வு, உணர்ச்சி, அவர்களுடைய goal , ambition எல்லாம் கலந்து உள்ளது. மற்றவர்களின் தேவை, மனப்பான்மை, உணர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அது other man point – பிறர் நிலைப்பார்வை என்னும் உயர்ந்த பண்பாகிறது. சுயநலத்தை விட்டு, நம் தனிமனித தன்மையிலிருந்து விலகி இதை செய்யும் போது தான் சுமுகம் இருக்கும். பல பிரச்சினைகளை அத்தகைய சுமூகமே தடுத்து விடும். குறைந்த பட்சம், எப்படி நம் வாழ்வை ஆனந்தமாக, அர்த்த முள்ளதாக மாற்றத் துடிக்கிறோமோ, அப்படித் தான் அனைவரும் அவரவருக்கு தெரிந்ததை செய்கிறார்கள் என்ற அடிப்படையான பொதுப்புத்தி, நாம் அடைய வேண்டிய ஆனந்தத்தை துரிதப்படுத்தி கொண்டு வந்து சேர்க்கும்.
நமக்கு வரும் எதிர்வினை, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை சுமுகம், உறவு, நட்பு என்ற பெயரில் மாற்றி புரிந்துக் கொண்டு விட்டுக் கொடுத்துவிடுவோம். Challenge, risk என்று இருக்கும் இடங்களை நாம் வெவ்வேறு காரணம் கொண்டு தவிர்ப்போம். அது நம் ஆழ்மன பயத்தின் வெளிப்பாடு. அதற்கு பதிலாக சுமுகக்குறைவு, பிரச்சினை challenge , risk-களை நம் goal, ambition பார்வையில் பார்த்தால் அவை, சூழல் நமக்கு ஏற்படுத்தும் தடை என்பது புரியும். அதை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப நடந்தால் அது நம்மை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். உதாரணமாக நான் என் சொந்த product ஐ கொண்டுவர ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்த போது அதற்கான sample -கள் , trial -கள் , Test -கள் செய்ய ஏராளமாக செலவாகிக் கொண்டிருந்தது. தவறான முடிவு எடுத்து விட்டோமோ என்று தோன்றியது. சரியாக product develope ஆகாத அந்த நேரம் பார்த்து ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டார்கள். எனக்கு சூழல் சரியில்லாதது போல பட்டது. கர்மயோகிக்கு எழுதி கேட்டேன். அவர் இல்லை உனக்கு வர போகும் prosperity அவர்களுக்கு subconscious -இல் தெரிவதால் அப்படி கேட்கிறார்கள், தந்து விடு என்றார். என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படி தெரிந்துக் கொள்வது என்று மீண்டும் எழுதி கேட்டேன். சூழலை கவனி என்றார். அதன் பின் இரண்டு நாட்களும் அந்த துறை வளர்ச்சி பற்றியே செய்தி வந்தது மட்டுமல்லாமல், labour -ரும் தொழிலாளிகளும் அப்படி பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. நான் அடுத்த காட்ட முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பது போலவே அடுத்த கட்ட properity ஐ எதிர்பார்ப்பது போலவே அவர்களும் இருக்கிறார்கள் என்னும் கரெஸ்பாண்டென்ஸ் ஐ பார்த்தேன். அடுத்த இரண்டு நாட்களில் அந்த product நல்ல படியாக வந்தது. இன்று என் product -க்கு அகில இந்திய அளவில் ஒரு நல்ல பெயர் பெயர் இருக்கிறது. சூழல் ஏற்படுத்தும் தடைகளை எதாவது ஒரு பண்பில் பார்வையில் பார்த்து அதை ஒட்டிய முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.
அப்படி இல்லாமல் நாம் வேறு பண்பை, நடத்தை, நல்லெண்ணம் என்ற அடிப்படையில் செய்தால் கூட அது சித்தத்தின் முன்னேற்றம் அல்ல, ஏதோ ஒரு பயத்தின் அடிப்படையில் அடிபணிவது. இது இல்லாமல் மரியாதை, பக்தி, adoration , admiration என்ற அடிப்படையில் சிலவற்றை விட்டுக் கொடுப்போம். அப்படி இருந்தால் நாம் மற்றவர்களின் சுயநலத்திற்கு அல்லது அவர்களது ambition-க்குத் தான் நாம் உழைப்போமே தவிர, நம் ambition பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அதனால் எந்த பிரச்சினை, தடை என்று வந்தாலும் அதை நம் ambition-னோடு பொருத்திப் பார்த்து ஒரு முகமாக செயல்பட வேண்டும் என்பது அடுத்த பொதுப்புத்தி.
அடுத்தது ambition மட்டும் போதாது. அதற்கான மனப்பான்மை, திறமை, திறன் ஆகியவற்றை திட்டமிட்டு பெற வேண்டும். அல்லது அப்படி ஒருவர் சாதித்திருந்தால் அவருடைய சித்ததுடன் ஒன்றி அவர் செய்த அனைத்தையும் அதே மனப்பான்மையுடன் செய்ய வேண்டும். அது நம்மை அதே போன்ற ஒரு ஸ்தாபனத்திற்கு தலைவனாக்கும். மனித சுபாவத்தில் , நமக்கு நன்றாக தெரிந்த, நம்மை சுற்றியுள்ள, ஒருவரின் நடத்தை, ஆர்வம், குறிக்கோள், குறிப்பாக – அவரது சித்தம், consciousness நமக்கு புரியும் அளவிற்கு, ஒருவரை எடுத்துக் கொண்டு, அதை emulate முன்மாதிரியாக கொண்டு செய்தால், அவர் போல் நிச்சயம் வர முடியும் , அவரைத் தாண்டி செல்ல முடியும் என்று எழுதியிருப்பார். குறிப்பாக, அவர் சொல்லும் உதாரணத்தில், நமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி, நம்மளவில் உயர்ந்தவர். அவரை, அவர் consciousness நோக்கில் பார்த்து, அவர் உயர, அதே பண்புகளை எடுத்துக் கொண்டு பாடுபட்டால், அந்த company -க்கு parter ஆகலாம். அந்த company -ஐ தாண்டிச் செல்லலாம் என்று எழுதியிருப்பார். அது, என் வாழ்விலும், என் நண்பர்கள் இருவர் வாழ்விலும் நடந்திருக்கிறது.அதை சாதித்த பிறகு இப்போது உனக்கு consciousness -ஐ தொடும் process தெரிந்து விட்டது. அதனால், நீ subcontractor ஆக இருக்கும் L &T யின் முதலாளியின் consciousness -ஐ தொட முடியுமா? தொட்டால் அந்த company -யின் Director ஆக முடியும், அல்லது அதை மீறிச் செல்ல முடியும் என்றார். ஆனால், அவர் யார், எப்படியிருப்பார் , அவர் நோக்கம், ஆர்வம், சுபாவம், சித்தம், புரியாததால், ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை.
இதை நம்முள் , நம் மனநிலையில் எப்படி கொண்டு வருவது என்பதற்கான process -ஐயும் சொல்கிறார். நம் மனம் இரு பகுதிகளில் ஆனது. ஒன்று அறிவு, knowledge , இன்னொன்று will – உறுதி. இன்று இப்போது கேட்பதை , அறிவு ஏற்றுக் கொண்டால், உணர்வு அதை உண்மை என்று நம்பினால், மனம் அதை செய்ய உறுதி எடுக்கும். மனது மட்டுமோ, அறிவு மட்டுமோ ஏற்றுக் கொண்டால் அது opnion . அபிப்ராயமாக மாறி விடும். இதை செய்ய வேண்டும் என்று உணர்வில் தோன்றினால், அதை மனம் முழுதுமாக ஏற்கும். அது முடிவு. decision. இது மேல் மனதை கட்டுப்படுத்துவது. இதை ஆழமாக ஏற்பது, முன்னேற்றத்தை, ஆனந்தத்தை மட்டுமே நினைத்து focused ஆக ஏற்பது ஆழ் மனதிற்கு செல்வது. அப்போது அந்த முடிவின் பெயர் determination தீர்மானம். அந்த தீர்மானம் இந்த எட்டு பொதுபுத்தியையும் நமக்கு பிடிபட வைக்கும்.
===========