அடுத்த நமக்கு தேவைப்படும் பொதுப்புத்தி நாம் நம் ஆசைகளை எல்லாம் ambition , goal , aspiration என்று நினைக்கிறோம். அது தவறு என்று புரிவது.
இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு நமக்கு ஏதாவது இருந்தால், அதை compare செய்தால் நம் ambition அந்த அளவு நமக்கு இருக்க வேண்டும். அதுவே நம்மை ஓட வைக்க வேண்டும். நம் எண்ணம், சொல், நோக்கம் அனைத்தும் அதை ஒட்டியே இருக்க வேண்டும். அப்போது தான் அது ambtion . மாறிக் கொண்டே இருந்தால் , அதன் பேர் ஆசை. அது சாதிப்பது கடினம். Ambition -க்கான அந்த கவனம் தான் நம்மை சரியான சூழலில், சரியான விவேகத்துடன், பாகுபாட்டுடன் சரியான திசையில் வழி நடத்தும். வெற்றிகரமாக தொழில் செய்பவர்கள், ஆரம்பித்து நடத்துபவர்களிடம் இதை காண முடியும். ஆனால் நாம் பெரும்பாலும் சமுதாயம் சொல்லும் அல்லது, உறவு, நண்பர்கள் வட்டம் சொல்வதை நம் ambition என்று எடுத்துக் கொள்கிறோம். அவர்களின் சட்டம், பண்பே நமக்கும் சரி என்று படுகிறது. அவர்களின் organisation value நமக்குத் பொருந்தி விடுகிறது. உதாரணமாக, விலையை குறைத்தால் அதிகமாக விற்க முடியும், லஞ்சம் இல்லாமல் முடியாது, free , gift கொடுத்தால் தான் கூட்டம் வரும் என்று மற்றவர்கள் இருந்தால் நாமும் அப்படியே இருப்போம். நாம் ஒரு கம்பெனியில் இருந்து வெளியே வந்து ஆரம்பித்து இருந்தால், அதே போன்ற இன்னோர் கம்பெனியாக, அதே customer -ரிடம் செல்லும் ஒருவராகத் தான் இருப்போம். அது ambition அல்ல – காப்பி அடித்தல். Ambtion என்றால் ஒரு personal value வேண்டும். நமக்கான நோக்கம், கொள்கை, அதை அடையும் விதம் போன்றவற்றை பற்றிய தெளிவு வேண்டும்.
உதாரணமாக நான் ஒரு கம்பெனியில் வேலை செய்து விலகியபோது ஒரு முடிவு எடுத்தேன். எனக்கு தொழில் கற்று கொடுத்தவர் அவர். அவர் இருக்கும் site / project எதிலும் நான் செல்வதில்லை எண்டு முடிவு எடுத்தேன். அது முட்டாள் தனமான முடிவு என்று பலரும் கூறினார்கள். காரணமா அவர் இருபது ஆண்டு காலமாக தொழிலில் இருந்தார். அவருக்கு தெரியாதவர் இல்லை என்று கூறுமளவிற்கு முன்னணியில் இருந்தார். அண்ணல் அதை நான் பிடிவாதமாக கடை பிடித்தேன். அதனால் சில நல்ல ப்ராஜெக்ட் களை இழந்தாலும் கடை பிடித்தேன். கர்மயோகி கூறுவது போல – நம் தன்னம்பிக்கை – சமுதாயத்தின் நம்பிக்கையாக மாறும்போது அபரிமிதம் வரும் என்று கூறுவது போல- அந்த என் கொள்கை பரவி என் மேல் நம்பிக்கையாக மாறியதால் கேள்வி கேட்காமல் எவரும் எனக்கு எந்த அளவிற்கும் கிரெடிட் கொடுக்கும் மார்க்கெட் – இன் நம்பிக்கையாக மாறியது. என் தொழில் பல மடங்கு வளர்ந்தது.
அடுத்தது நான் வேலை செய்த அந்த கம்பெனி அரசு கான்ட்ராக்ட்களை எடுத்து செய்யும் கம்பனி . லஞ்சம் தவிர்க்க முடியாதது. அப்போது நோக்கியா பேக்டரி யின் மெயின் கான்ட்ராக்ட்டருக்கு சப் – காண்ட்ராக்ட் வேலை ஒன்று வந்தது. லஞ்சம் கொடுத்தே பெரும் லாபம் பார்த்த கம்பெனி என்பதால் அதில் அவர் விருப்பம் காட்டவில்லை.. ஆனால் அப்போதுதான் டோக்கன் ஆக்ட் பற்றி நான் படித்த புதிது. செய்து பார்க்கலாம் என்று போராடி அந்த வேலையை எடுக்க செய்தேன். நல்ல லாபம் வர உழைத்தேன். அந்த லாபம், நல்ல பெயர் ஆகியவற்றை அந்த கம்பெனி பார்த்த பிறகு – சிறிது சிறிதாக அரசு காண்ட்ராக்ட் லஞ்சம் போன்றவற்றில் இருந்து வெளியே வந்து நேர்மையாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தது.
முன்பு சொன்னது போல நம் priority என்னவென்ற தெளிவு வந்த பிறகு வளர்ச்சியா, உயர் சித்தமா, ஞானமா, காதலா, prosperity-யா , குடும்பமா , குழந்தைகளா என்று எதற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், அது நம் சொந்த பண்புகள் மேல் கட்டமைக்கபட வேண்டும். அப்போது தான் அதில் கிடைக்கும் ஒரு சிறு வெற்றியும் அதிக ஆனந்தத்தை தரும். அப்படி நாம் இருப்பது ever present என்னும் ஆன்மாவின் பண்பு. அது சிறுமுயற்சிக்கு பெரும் பலன் கொண்டு வரும். அந்த நிரந்தரமாக இருப்பது மட்டுமல்ல நம்மை சுற்றி உள்ளவர் இடமும் மாறுதலை கொண்டு வரும்.