சென்ற கூடலில் சமர்பணன் , காணிக்கை பற்றி பேசும் போது, கையாளுதல், கையாடல், என்றெல்லாம் பேசினார். அவர் பூடகமாக சொல்ல வந்ததை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. அதனால் ஒரு சிறு விளக்கம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன் மலர்ந்த ஜீவியத்தின் கடைசி பக்கத்தில் – இனி காணிக்கையை நேரடியாக MSS ACCOUNT க்கு செலுத்தவும் என்று வேண்டியும், தனிப்பட்ட யாருக்கும் தர வேண்டியதில்லை என்றும் ஒரு வேண்டுகோள் வெளியிடப்பட்டு இருந்தது. தியான மையம் NOTICE BOARD-களில் அதன் பெரிய வடிவத்தை ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டது. எத்தனை மையம் செய்தது என்று தெரியவில்லை. அதன் பொருள் காணிக்கை ஸ்தாபனத்திற்கு நேரடியாக வர வேண்டும், கர்மயோகி சொன்ன விஷயங்களுக்கு அதை செலவிட வேண்டும் என்பது தான்.
ஆனால் பழைய பழக்கத்தின் காரணமாக, அன்பர்கள் சிலரிடம் நேரடியாகக் கொடுக்கிறார்கள். (இப்படி சொல்வதால், எல்லோரும் குறிப்பாக ஒருவரை நினைக்கலாம். நான் அவரை சொல்லவில்லை. அவரிடம் கொடுப்பவர்கள் – அவரை விரும்பி அவருக்கு என்றே கொடுப்பவர்கள். நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை).
வேறு இருவர் அல்லது மூவரை சொல்கிறேன். அது தவறு என்று வாங்குபவர்களும் சொல்வதில்லை . கொடுப்பவருக்கும் அது தெரிவதில்லை. நல்ல அன்னை அன்பர், கர்மயோகியின் பக்தர் என்றால் – எனக்கு / என்னிடம் தர வேண்டாம், நேரடியாக MSS account இல் செலுத்துங்கள் என்று சொல்ல வேண்டும். அதுவே நேர்மை, உண்மை, சத்தியம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும்.
அவர்கள் நேரடியாக பெறுவதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது ஏற்றுக் கொள்ள முடியாததே. ஸ்தாபனம் இருக்கும் போது ஏன் தனிப்பட்ட முறையில் பெறவேண்டும் என்ற கேள்வி எழவே செய்கிறது. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது போல – “முக்கியஸ்தர்கள்” என்று நினைக்கப்படுபவர்கள் – அது யாராக இருந்தாலும்- சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அதோடு ஆரம்பத்தில் அமுத சுரபியில் கர்மயோகி எழுதும்போது பலரும் பிறரிடம் காணிக்கை கொடுத்து அனுப்புவார்கள். அது பற்றி எழுதும்போது – தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் கொடுக்கும் போது அது அவருடைய consciousness உடன்தான் செல்லும். அவர் அம்சம் , ராசி அதில் சேரும். அதனால் போஸ்ட் ஆபிஸ் நாமே சென்று money order செய்வது நல்லது என்று எழுதியிருக்கிறார். காரணம் போஸ்ட் மேன் ஒரு பொது சித்ததுடன் செல்வதால் அது அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்கிறார். இன்று அதையும் தாண்டி நாமே நேரடியாக செலுத்தும் online முறைகள் வந்துவிட்டது .
அதனால் காணிக்கை தரும் அன்பர்கள் நேரடியாக www.karmayogi.net இல் உள்ள link இல் சென்று நேரடியாக MSS க்கு செலுத்தலாம். அல்லது தியான மையங்களில் உள்ள காணிக்கை பெட்டியில் சேர்க்கலாம். அது இரண்டு பேர் முன்னிலையில் திறக்கப்படுவதால், அதிலும் சரி, BANK ஐ இரண்டு பேர் கையாள்வதால், இதிலும் சரி தவறு வர பெரும்பாலும் வாய்ப்பில்லை.
இது யாரையும் குறை சொல்வதற்கு அல்ல. நேரடியாக பெற வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதே கேள்வி.
அந்த கேள்வி சரி என்று பட்டால், இந்த வேண்டுகோளை circulate செய்யலாம். whatsapp telegram ஷேர் மேலே இடதுபுறம் தரப்படுகிறது.