வியாதிகளை சமர்ப்பணம் செய்வது பற்றி சில கேள்விகள் DM மிலும் வந்துள்ளது.
கர்மயோகியின் புத்தகங்கள், AGENDA ஆகியவற்றை படித்ததில் நான் புரிந்துக் கொண்டது – பல காரணங்களுக்காக வியாதிகளை நாம் விரும்பி பிடித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது தான். ஒவ்வொரு வியாதிக்கும் ஏராளமான காரணங்கள் அவர் சொல்லியிருந்தாலும், பொதுவான கருத்துக்களாகச் சொல்வது:
இந்தியர்களுக்கு ஏழ்மை, அறியாமை, நோய் அதிகமாக இருப்பதற்கு காரணம் – எளிமைக்கான விஷயம் மூடநம்பிக்கையாக மாறியது தான். அகந்தை இல்லாமல் இருப்பது என்பது எளிமை என்று புரிந்துக்கொண்டு, வரையறையுடன் இருப்பது என்று இறங்கி, போதுமென்ற மனமே என்பது போன்ற சொல்லாடல்களில் அகப்பட்டு எளிமை என்பதன் பொருள் புரியாததால் ஏழ்மை அதிகமாகி விட்டது. ஞானம் மூட நம்பிக்கை ஆனதால் அறியாமை ஆகிவிட்டது. நமக்கானது எது என்று தெரியாமல் மற்ற நாட்டு பழக்கம், வழக்கம், அவற்றின் தாக்கம் நம் வியாதிக்கு காரணமாகி விட்டது. மற்ற நாட்டு மக்களின் சாராசசி அளவுக்கு கூட நம்மிடம் அறிவு, வளம் , உடல் நலம் இல்லாமல் போனதற்கு காரணம் அதுவே. இன்று Supramental Force இறங்கி கொண்டு இருக்கும் போது, அதன் மாற்றம் அதிகமாக இருக்கிறது என்பது ஒரு ஆறுதல்.
அடுத்தது வியாதியே – மரபால் உடல் தாழ்ந்தது என்று நினைக்கும் உடல் – வியாதி தன்னை விட்டு போய்விட்டால் தான் பெரும் முக்கியத்துவம் போய் விடுமோ என்ற பயத்தில் ஆன்மீக சக்திக்கும் ஒத்துழைக்காதது. Supramental Force முதலில் உலகில் இறங்கிய போது ஜடம் எழுந்து – இருள் எழுந்து அதை பெற்று அழித்தது அதற்கு ஒரு உதாரணம். நாம் சாதாரணமாக பார்த்தல் கூட ஏதாவது வியாதி என்று சென்று CT ,MRI என்று எழுதி கொடுக்கவில்லை என்றால் கூட கேட்டு எழுதி, check செய்த பிறகு ஒன்றும் இல்லையென்றால் ‘சப்’ என்று இருக்கிறது. Second opinion கேட்போமா என்றே இருக்கிறது என்பது அதற்கு உதாரணம்.
அடுத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருந்துகள் மேல் மனம் கொண்ட நம்பிக்கை – உணர்வு, உடலை த்தாண்டி செல்கள் வரை செல்களின் சித்தம் வரை ஊடுருவி விட்டதால், அதை உடைக்கும் அளவிற்கு நம் நம்பிக்கை உயர வேண்டும். அல்லது அதை தாண்டி வேறு ஒரு ஆர்வம் செல்களுக்கு வர வேண்டும். சுக்கு நூறாக எலும்பு உடைந்த கார் ரெஸ் வீரர்கள் மற்ற விளையாட்டு வீரர்கள் அடுத்த போட்டிக்குள் எழுவது என்பது மருத்துவத்தால் அல்ல. உடல் சொல்வதை, physiology -ஐ நம்பாததால் வந்த அதிசயம். அந்த அளவிற்கு நம் நம்பிக்கையை, அன்னை மேல் நம்பிக்கையை,, உயர்த்த வேண்டும், முடியுமா?
அன்னையும் , கர்மயோகியுமே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டவர்கள். அதற்கு பல யோக காரணம் சொல்லலாம் , என்றாலும் உடல் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாதது என்பது என்னை பொறுத்தவரை நடைமுறை உண்மை.
அடுத்தது, உயர்சித்ததில் தன்னை organize செய்ய முடியாதவர்களுக்கு, அல்லது சில சூழல்கள், மனிதர்கள், வேலையை சமாளிக்க முடியாதவர்களுக்கு அதிலிருந்து தப்பிக்க ஒரு சால்ஜாப்பாக நோய் வருகிறது. அது தரும் சுய பச்சாதாபம், சுய முக்கியத்துவம் பிடித்து இருப்பதால், அது தொடர்ந்து இருக்கிறது. மனம் விரும்பி பிரார்த்தனை செய்தாலும், உடல் அதை விரும்பாததால், அது போகாது. ஒரு அன்பருக்கு எப்போதும், படபடப்பு வந்து மயங்கி விழுந்து மருத்துவமணையில் சேர்க்கும் அளவிற்கு செல்லும். அனைவரும் மாமியார் தான் காரணம் என்றனர். கர்மயோகி அவர் கணவரைக் கூப்பிட்டு இனி அவள் admit ஆனால், போய் பார்க்காதே என்றார். அதன் பிறகு அவருக்கு admit ஆகும் சூழல் வரவில்லை. இந்த மாதிரி சமயங்களில் கணவர் தன் மேல் காட்டும் அக்கறை ஆழ் மனதில் அவருக்கு தன் மாமியாரை பழி வாங்கும் திருப்தியைத தருவதால், உடல் அதை அடிக்கடி செய்கிறது. வியாதியை உருவாக்குகிறது என்பது பொருள். பரீட்சை நேரத்தில் குழந்தைகளுக்கு வரும் ஜுரம் இன்னொரு உதாரணம்.
எல்லாவற்றிற்கும் மேலாக சமர்ப்பணம் செய்தாலும் மனம் வியாதியையே நினைப்பதால், சமர்ப்பணம் வியாதியை அதிகப்படுத்தவே செய்கிறது. என்னிடம் கேட்பவர்களுக்கு நான் சொல்வது – வியாதியை பொறுத்தவரை உடலில் எத்தனையோ குப்பைகள் இருக்கிறது, அது போல இதுவும் இருக்கிறது என்று எடுத்துக் கொண்டு, அதற்கு நமக்கு தெரிந்த உயர்ந்த தீர்வை செய்வது தான். மருந்துகள் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி செய்வது என்று இருப்பதுடன், இதற்காக பிரார்த்தனை செய்யாமல் இருப்பதே நல்லது என்றே சொல்வேன்.
நான் விளையாட்டு வீரர்களுக்கு என்று மேலே சொன்னது போல , ஒரு PASSION, ASPIRATION ஐ , வளர்க்கும் போது, இந்த வியாதிகள் போய் விடுவது அல்லது கட்டுக்குள் வருவதை பார்த்து இருக்கிறேன். அல்லது வெறும் பிரார்த்தனையாக இல்லாமல், நப்பாசையாக இல்லாமல், அன்னை சரி செய்வார் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த ஒருவர் SUGARஆல் ஏராளமாக துன்பப்பட்டார். ஒரு CUP தான் சாப்பாடு, ஒரு CUP மருந்து என்ற அளவில் இருந்தார். பின் ஏதோ ஒரு மருத்துவர் YOUTUBE இல் SUGAR என்று ஒன்று கிடையாது என்று சொல்வதை நம்ப ஆரம்பித்தார். மாத்திரைகளை தைரியமாக நிறுத்தி விட்டார். இன்று அவருக்கு SUGAR இல்லை. இது நம்பிக்கையால் வந்த தீர்வு. அந்த அளவு நம்மால் அன்னையை நம்ப முடிந்தால், அது நடக்கும்.
இது ஒரு புறம் இருக்க, CANCER குணமானது, நாளை அல்லது அடுத்த வாரம் OPERATION என்பது இருந்து இன்று அன்னையிடம் சொன்னதால், மருத்துவர் ஆச்சரியப்படும் அளவிற்கு அதற்கான அடையாளமே இல்லாமல் போனது எல்லாம் நான் சில அன்பர்கள் வாழ்வில் நடந்து இருக்கிறதை பார்த்திருக்கிறேன். இது எப்படி நடக்கிறது. இது “தோற்ற போதே வென்றாய்” என்னும் நேரம். பல நாள் பிரார்த்தனை. அவர் மனம் விலகிய போது, வேறு வழியில்லாமல் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்ட போது, நிறைவேறி விட்டது என்றே நினைக்கிறேன். அதனால் நம் மனம் தான் நம் வியாதியை பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறது. அதற்கான தீர்வு எதையும் முழுதாக செய்ய விடாமல் செய்கிறது என்பது தான் உண்மை.
நேற்று என் சமாதி அனுபவத்தை சொன்னேன். அது அப்படி “தோற்றேன்” என்று சென்று விழுந்த இடம். போதையில் மனம் விலகிய இடம். பிரார்த்தனை கூட செய்யத் தெரியாத இடம். அன்னை யாரென்று கூட அப்போது தெரியாத இடம். என்றாலும் அத்தனை, நரை, குடிப்பழக்கம், புகைப்பழக்கம் என்று அனைத்தும் மூன்றே நாளில் சென்றது.
அதே போல ஆர்வம் எழுந்தாலும் தீரும் என்றேன். DECEMBER 2019இல் 8ம் தேதி எனக்கு ஒரு ACCIDENT நடந்தது. வலப்புறத் தாடையில் அடிப்பட்டு பற்கள் உள்நோக்கி திரும்பிவிட்டன. வயதின் காரணமாக வேறு எதுவும் செய்ய முடியாது என்றார்கள். முகம் மாறிவிடும், விகாரமாகி விடும். ஆதார் card முதல் அனைத்தையும் மாற்ற நேரிடும் என்றெல்லாம் சொன்னார்கள். முற்றிலும் சரியாக மூன்று மாதம் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. கர்மயோகி DECEMBER 2019 , 21 முதல் 27 வரை ஒரு முக்கியமான விஷயத்தை கூறுகிறேன் என்று கூறி வரச் சொல்லியிருந்தார். அதற்கு எப்படியாவது போய் விட வேண்டும் என்பதே என் குறியாக இருந்தது. அதற்கு எந்த தடையும் வரக்கூடாது, வரமுடியாது என்று நம்பினேன். அன்னை கை விட மாட்டார் என்று சொன்னேன். அதற்கு ஏற்றாற்போல் 20ம் தேதி சரியாகி கர்மயோகியை 21ம் தேதி பார்த்தேன்.இன்னும் சொல்லப்போனால் முன்பை விட இப்போது முகம் சற்று பரவாயில்லை என்று ஆனது போல படுகிறது.
மற்ற கருத்துக்கள்:
- சில நேரம் இதுவரை குணமானது போதும் என்று மனம் முடிவு செய்தால், அந்த முடிவே பலிக்கும். மீதியும் போக வேண்டுமானால், அறிவு தன் முடிவை மாற்றி, மீதியும் அறவே போகவேண்டும்; அதை ஒழிக்க முடியும் என்று புது முடிவை எடுக்க வேண்டும்.
- ஆஸ்த்மா மூச்சு சம்பந்தப்பட்டதானதால் தினமும் முடிந்த அளவு மூச்சு உள்ளே போகும்பொழுதும், வெளியே வரும்பொழுதும் அன்னை ஒளியாக இருப்பதாக கற்பனை செய்தல் வேண்டும். (Lungs) முழுவதும் அன்னை ஒளியால் நிரப்பப்பட்டதாக கற்பனை செய்தல் நலம். தினமும் பல முறையும் நினைக்கலாம். மூச்சுக்குரிய சூட்சுமச் சக்கரம் நாபிக்குப் பின்னால் முதுகு எலும்பில் இருப்பதால், அந்தச் சக்கரத்தில் ஒளியைக் கற்பனை செய்ய வேண்டும். இது மூச்சைத் தூய்மைப்படுத்தும்.
- நோயின் வேர் மூலாதாரத்தில் இருப்பதாக கற்பனை செய்ய வேண்டும் அது உண்மையும் கூட. மூலாதாரம் ஒளியால் நிரம்புவதாகக் கற்பனை செய்தால் உடலின் சூட்சுமப் பாகங்கள் ஒளியால் நிரம்பி, வியாதியின் வேர் உடலின் சூட்சுமத்தில் அற்றுப்போகும். பரம்பரை வியாதிகள் தடுக்கப்படும்.
- ஹிருதயத்திற்குப் பின் உள்ள ஆன்மாவில் ஒளியை நிரப்பினால் ஆன்மீக ஒளி பெருகும்போது, அந்த வியாதி கர்மபலனால் ஏற்பட்டிருந்தால், கர்மத்தின் வேரை அழிக்கும்.
- இந்தப் பல்வேறு இடங்களில் ஒளியை நிரப்புவதற்குப் பதிலாக, அன்னையின் உருவத்தைக் கற்பனை செய்தால் அதிகப் பலன் உண்டு.
வியாதி என்பது உடலைப் பற்றியதானாலும், உணர்வுக்கும், அறிவுக்கும் வியாதியுடன் தொடர்புண்டு. போன தலைமுறையிருலிந்து தொடர்பு வந்து, அடுத்த தலைமுறைக்குப் போகிறதென்றால், அது உடலைப் பொருத்தது. உடற்கூறு அப்படி (constitutional defect) இருக்கிறது என்றுதான் பொருள். மேலும் உடலிலுள்ள வியாதிக்கு வேர் சூட்சும உடலிலிருக்கும். சூட்சும உடலில் வியாதியின் வேர் அழிந்தால்தான் உடலிலிருந்து நோய் அறவே விலகும். சூட்சும உடலில் பல பகுதிகள் உள. மனதிற்கும், உணர்வுக்கும் சூட்சுமம் உண்டு. அதுபோல் உடலில் (physical body) சூட்சுமம் மூலாதாரத்தில் இருக்கிறது. அந்தச் சக்கரத்தில் வியாதி அழிந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும்.
கடைசியாக சமர்ப்பணண் சொல்லும் AUTO SUGGESTION முறையில் தங்கள் நோய் சரியானதாக ஏழு, எட்டு பேர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அதையும் பின்பற்றி பார்க்கலாம்.
நோய் பற்றி கர்மயோகி, சொல்வதை எழுவதானால் நூறு பக்கங்கள் வரலாம். அது முடியாது என்பதால், இது வரை நான் சொன்னவற்றில் உள்ளதை தன்னில் பொருத்தி பார்த்த்து நமக்குத் சரிவரும் முறையை பின்பற்றலாம்.