நம் மனம் என்பது இறைவன் படைத்தது என்றாலும் அது இப்போது ஆன்மாவின் சக்தி பெறாமல் அகந்தையின் சக்தி பெற்றே வாழ்வை நடத்துகிறது. அதன் நோக்கம் சுயநலம். நம் சுயநலம் நமக்கு எனெர்ஜி தருகிறது. அதை மாற்ற முடியாது. ஆனால் அதன் திசையை மாற்ற முடியும். நம் மனநிலைகளுக்கு ஏற்ப, மனப்பான்மை பரந்து விரிவதற்கு ஏற்ப, வாழ்வில் பலன் வருவதைக் காணலாம். அதுவே தான் அனைவருக்கும் இருக்கிறது என்பது புரிவது அடுத்த பொதுப்புத்தி. அதனால் எல்லோரும் சுயநலத்தின் அடிப்படையில் தான் செய்கிறார்கள் என்பது புரிந்தால், நம் எதிர்பார்ப்பு குறையும். அதன் மூலம் வரும் ஏமாற்றம், சோகம், துன்பம், வலி குறையும்.
எதிர்பார்ப்பு இல்லாத உறவு என்பதே கிடையாது என்னும் நடைமுறை ஞானத்தை நாம் பெற வேண்டும். கீழே விழுந்த கர்சீப்பை எடுத்து கொடுத்தால் வாங்கியவர் Thanks சொல்லாமல் சென்றால் கூட நம் மனம் கத்தும். ஒரு Thanks கூட சொல்லாமல் போகிறார் பார் என்று உடனே மனதுக்கு ஒரு comment -ஐ அறிவு அனுப்பும். இப்படித் தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்தால் நாம் உயர்ந்த பண்பான பிறர் நிலை பார்வை, other man point of view , correspondence , ஒப்புமை ஆகியவற்றிக்கு வருகிறோம். அப்போது ஒருமை என்னும் தத்துவம் unity , oneness என்னும் தத்துவம் புரியும். நமக்குள் அவர் இருக்கிறார். நாம் அவருள் இருக்கிறோம் என்று அன்னை சொல்வதன் பொருள் புரியும். அதாவது நாம் செய்யும் செயல்கள் நம்மில் ஒரு பகுதியே. நாம் இறைவன் அம்சத்தை கொண்டவர்கள் என்பதால் நம் செயல்களில் அந்த அம்சமும் பரவி விடுகிறது. அதிலிருந்து வெளிப்படத் துடிக்கிறது. அதாவது நாம் ஒரு இறை பண்பை, நல்ல பண்பை, உயர் பண்பை வெளிப்படுத்தாமல் நம்மால் ஒரு விஷயத்தில் ஆனந்தம் அடைய முடியாது. உதாரணமாக விட்டுக் கொடுத்தல் என்பதை ஒரு இடத்தில கடைபிடிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது ஆரம்பத்தில் அகந்தைக்குத் தோல்வியாகத் தெரியும். ஆனால் காலப்போக்கில் அது மிகப் பெரிய பலனைத்தரும். ஜடத்தில் அதாவது அது prosperity ஆக வரும். உணர்வுக்கு புகழாக வரும், அறிவுக்கு ஞானமாக வரும். பிடியை விடுதல் எனபது மிகப் பெரிய யோகம் என்கிறார் கர்மயோகி. குறைந்த பட்சம் மற்றவர்கள் எதிர்பார்ப்பு என்ன என்று புரிந்து நடந்துக்கொண்டால், அல்லது உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதை அவரக்ளுக்கு புரிய வைத்தால், நம் சுயநலம், நிதானம் என்னும் பண்பாக மாறும்.
நீங்கள் சொல்வதை மற்றவர்கள் முழுதும் ஏற்றுக் கொள்ள உங்களின் நேர்மை, மற்றவர்களை உற்சாகப்படுத்தும் motivate செய்யும் அனுபவங்களை நீங்கள் நிறைய அடைந்து இருக்க வேண்டும். அதை சொல்லி தரும் திறமை, திறன், skill and intelligence உங்களுக்கு இருக்க வேண்டும். அப்போது தான் உங்களால், மனிதர்களை, சூழலை, செயலை உங்கள் வசப்படுத்த முடியும்.
உதாரணமாக கர்மயோகி – முதலில் மாதம் ஒரு லட்சம் என்றார், பின் பத்து லட்சம் என்றார் பின் 100 கோடி, என்றார். ஆயிரம் கோடி, கூட அவர் சொல்லி இருக்கலாம் . ஆனால் கூறவில்லை காரணம் எதையும் செய்து பார்த்தே கூறினார். தான் நூறு கோடிக்காண சொத்தை அடித்து விட்டதாக நினைத்த பிறகே அதை கூறினார். அதனால் தான் இவ்வளவு பேர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அல்லது அவரது ஆசியை, அருளை மட்டுமே எதிர்பார்த்து அவரிடம் இருந்தார்கள்.
ஒரு மதத்தின் புனித புத்தகத்தில் – You don’t believe the message if you do not believe the messenger என்று குறிப்பிட்டு இருப்பதாக சொல்வார்கள். விஷயத்தை சொல்பவரிடம் உண்மை இருந்தால் தான் அவர் சொல்லும் விஷயத்தின் மேல் நம்பிக்கை வரும் என்று பொருள். இந்த அடிப்படையான பொதுப்புத்தி நமக்கு வேண்டும்.