இதயத்தின் ஏக்கத்தை ஏற்பது இங்கிதம் –To emotionally respond to another’s yearning is benevolence – இதை மேலும் விளக்க சொல்லி கேட்ட அன்பர்களுக்கான இது.
Indian Express-இல் Sprituality & Prosperity கட்டுரைகளை எழுதுவதற்கு முன் கர்மயோகி முன்னுரையாக எழுதியதில் ஆன்மாவை கண்டறிய சுமார் நூறு கட்டுரைகள் எழுதப் போகிறேன், அது குறைந்த பட்சம் இறைவனின் benevolence- ஐ தரும் முறைகள் என்றார். ஆனந்தமாக வாழ ஸ்ரீ அரவிந்தர் தரும் முறை அது என்று கூறி அன்னையைத் தவிர வேறு எந்த கடவுளும் அதை தருவதாக தெரியவில்லை என்கிறார்.
இந்த messge-இல் Benevolance -க்கு இங்கிதம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், தமிழ் அகராதிகள் பரோபகாரம் என்று கூறினாலும், கர்மயோகி எல்லாவற்றிற்கும் ஒரு வித்தியாசமான விளக்கத்தை தருவது போல இதற்கும் தருகிறார். “பிறரின் உணர்வுக்கு நல்லெண்ணத்தோடு உதவுவது” – என்பது அதன் பொருள் என்கிறார். அதற்கு பிறரின் கர்மத்தையும் அழிக்கும் சக்தி இருக்கிறது என்கிறார். பிறர் உணர்வுக்கு உதவி, கர்மத்தை அழிப்பது என்பது அன்னையால் மட்டும் தான் முடியும் என்று கர்மயோகி கூறினாலும் என் விஷயத்தில் அவரும் அதை செய்திருக்கிறார்.
என் வாழ்வில் 25 வயது முதல் 35 வயது வரை, சமூகத்தின் பார்வையில், தவறு என்று சொல்லப்படும் விஷயங்கள் பல நடந்திருக்கிறது. குடும்பத்தை எதிர்த்தது, படிக்க மாட்டேன் என்று ஊர் சுற்றியது, அடிதடிகள் என்று எல்லாவற்றிற்கும் பின்னால் இருந்தது வேறு காரணங்கள் என்று சொல்ல முடிந்தாலும், ஒரு அடிப்படை சாரமாக இருந்தது ஒரு அங்கீகாரத்திற்கான (recognition -க்கான) ஒரு உணர்வு. அதை ஒட்டிய போராட்டங்களே அவை. அதற்கு காரணமாக சிறு வயதில் என்னை எதற்கும் லாயக்கில்லை என்று ஒதுக்கியது முதல் ஜாதகம், கர்மம் என்று எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் 2004-இல் அன்னையிடம் வந்த பிறகு, கர்மயோகியிடம் வந்த பிறகு, வாழ்வு மாற ஆரம்பித்த பிறகு, என் அனுபவங்களை மலர்ந்த ஜீவியத்தில் கதைகளாக எழுதினேன். Token Act என்னும் கதையை பார்த்து, கர்மயோகியின் மனைவி கூப்பிட்டு, கர்மயோகி தந்தாகத் தந்ததை பெற்றுக் கொண்ட போது, சொன்னதாக சொன்னதை கேட்டுக் கொண்ட போது, என் வாழ்வில் நான் எதிர்பாராத மிக உயர்ந்த recognition கிடைத்ததை உணர்ந்தேன். அன்று நான் அடைந்த ஆனந்தம் Benevolence -க்கு ஒரு உதாரணம். அது – என் கர்மம் சமுதாயம் உதாசீனப்படுத்துவது தான் என்றால், அதிலிருந்து என்னை முற்றிலும் வெளியே கொண்டு வந்து விட்டது. 2008-லிருந்து இன்று வரை ஏதோ ஒரு விதத்தில் என்னை சுற்றி உள்ள சமூகம் என்னை recognize செய்தே வருகிறது.
இதையே நாமும் செய்யலாம் என்றால், நல்லதையே செய்தாலும், நல்லெண்ணத்தோடு செய்தாலும், அதை எப்படி ஆராய்ந்து பார்த்தாலும், பிறரின் தேவைக்கு அல்லது நம் ஆர்வம், எதிர்பார்ப்பு, அபிப்ராயங்களுக்கு உட்பட்டு தான் எதுவும் செய்ய முடிகிறது. அவையெல்லாம் நம் recognition-க்கு நாமே செய்வதாகத் தான் இருக்கிறது. அதனால் தான் அவை பிறர் கர்மத்தை அழிப்பதில்லை, முடிந்தால் நமக்கு extra கர்மத்தை கொண்டு வருகிறது.