இன்று Daily Message -இல் ஒரு அன்பர் கேட்ட கேள்வியின் சாராம்சம் – வாழ்வு, அன்னை காட்டும் indications-ஐ – எப்படித் தெரிந்துக் கொள்வது அல்லது புரிந்துக் கொள்வது?
சமர்ப்பணம், சரணாகதி, non -initiative என்பது போன்ற பெரிய விஷயங்களை செய்வதாக, அதை பற்றி சிலாகித்து சொற்பொழிவுகள் பேசுபவர்கள் பலரும் நான் கவனித்தவரை impulsive ஆனவர்களே . நான் சொல்லும் முறைகளை mental முறைகள் என்று கேலி செய்பவர்கள், சரி எப்படி செய்ய வேண்டும் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டால், சொன்னதேயில்லை. மழுப்பலாக நீயே தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். அதனால் எனக்கான பார்வையை நானே வளர்த்துக் கொண்டேன். இதுவே சரி என்று கிடையாது. எனக்கு புரிந்தது இது. இதை உதாரணமாக எடுத்துக் கொண்டு அவரவருக்கான முறைகளை அவர்களே formulate செய்யலாம். என் அடிப்படை என்றும் simple . அன்னைக்காக, சித்த உயர்வுக்காக என்று நாம் செய்யும் அனைத்தும் – அது தவறு என்றாலும் – முடிவில் அது சரியான பாதையிலேயே சேர்க்கும் என்பது தான். நான் சுபிட்சத்தின் பார்வையில் ஒரு சராசரி வளர்ச்சி தான் பெற்றுருக்கிறேன் என்றாலும் – personality என்ற பார்வையில் கர்மயோகியே பாராட்டும் அளவிற்கு அபரிமிதமான மாற்றங்களை பெற்று இருக்கிறேன்.
இன்றைய கேள்வியின் சாராம்சம் – வாழ்வு, அன்னை காட்டும் indications-ஐ – எப்படித் தெரிந்துக் கொள்வது அல்லது புரிந்துக் கொள்வது?
1) முதல் Thumb Rule – இந்த யோகம் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அடக்கி செய்யும் யோகம் அல்ல. அதற்கான காரணத்தை அறிந்து திருவுருமாற்றும் யோகம். அதற்கு நாம் மேல் மனதில் இருந்து, அதிலேயே மூழ்கி இருப்பதில் இருந்து, வெளியே வந்து subliminal , subconscious வரை சென்று ஒரு வினைக்கான, அதன் , விளைவுக்கான காரணத்தை கண்டு பிடிப்பது, அதை விலக்குவது, திருவுருமாற்றுவது அல்லது முன்னேறுவது .
எல்லாம் நன்றாக போய்க் கொண்டு இருக்கும் போது நாம் எதையும் கவனிப்பது இல்லை. பிரச்சினை, தடை, இதை எடுத்துக் கொள்வதா , அதை எடுத்துக் கொள்வதா என்று இருக்கும் நிலைகளில் தான் முதலில் நமக்கு இந்த conscious வரும். அதில் முதலில் செய்து பார்த்து பயின்று அனுபவம் பெற்றால் பின்னால் positive ஆன விஷயங்களிலும் கூட உள்ள life initiatives -ஐ கவனிக்க முடியும்.
2) உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பார்க்கும் விதத்தை பற்றி 14th May 2022, கூடலில் விரிவாகப் பேசினேன். அதன் அடிப்படை நமக்கு வரும் அனைத்தும் எதையோ ஒன்றை சொல்ல, அல்லது கற்றுக் கொடுத்து முன்னுக்கு கொண்டு வரவே அது வருகிறது என்பதை நம்ப வேண்டும்.
3) அன்னை அல்லது வாழ்வு செய்யும் initiative falsehood உடன் வராது. உதாரணமாக மதுரை கிளையை நான் திறந்த போது முதல் order -ஏ பெரிய order ஆக வரவேண்டும், கர்மயோகியிடம் அதை சொல்லி பெருமைப்பட வேண்டும் என்று நினைத்தேன்.அதற்காக பிரார்த்தனை செய்தேன். அப்போது 2 கோடி வருட turnover கம்பெனியாக இருந்த போது 9 கோடிக்கு order வந்தது. அது government project . 20% லஞ்சம் தர வேண்டி வரும் என்றாலும், நாம் தான் கயமையாக வேறு principle -களை எடுத்துக் கொள்வோமே , அது போல நான் லஞ்சத்தை விரும்புகிறேன், அதனால் என் உள் இல்லாமல் இப்படி வராது என்று எடுத்துக் கொண்டு prosperity ,prosperity தான். இதுவும் அன்னை தந்தது தான் என்று நினைத்து கர்மயோகிக்கு Blessing -குக்காக எழுதினேன். அவர் சொன்னது – இது அன்னை தந்தது அல்ல. அன்னை தருவது falsehood -டுடன் வராது. அதாவது இப்படி லஞ்சம் தந்து, தரத்தை குறைத்து அல்லது தரமாக நம் லாபத்தை குறைத்து செய்யுமாறு வராது என்றார். நல்ல காலேஜில் seat கிடைக்கிறது என்றால் லஞ்சம் தர முன் வருவது, அரசியல்வாதியின் பொய்மையின் பலத்தை நம்புவது, உறவில் நல்ல வரன் இருந்தால், அதற்கு தகுதியாக உறவில் வேறு ஒரு வரன் இருந்தாலும் ஆயிரம் பொய் சொல்லி திருமணம் நடத்தலாம் என்று சால்சாப்பு சொல்லி நம் வீட்டு பெண்ணுக்கு முடிப்பது, சமுதாயம் சூழல் மேல் பழி போட்டு செய்யும் வேலைகள் என்று எதுவும் அன்னை அல்லது life எடுக்கும் initiative களாக இருக்காது. அதன் பின் உள்ள தடத்துவம் என்னவென்றால் – சத்தியம், சத்தியசித்தம் மிக உயர்ந்தது. அது தவறு என்று falsehood ஆல் சொல்ல முடியாது. அதாவது அன்னையின் பண்புகள் வாழ்வுக்கு ஒத்து வராது என்று அவற்றால் சொல்ல முடியாது. லஞ்சம் கொடுத்தால் எளிதாக பெற முடியும். சமுதாயமே அப்படி தான் இருக்கிறது. சமுதாயத்தை எதிர்த்து நாம் என்ன செய்ய முடியும். ஊரோடு ஒத்து வாழ் என்றே அவற்றால் சொல்ல முடியும். அதாவது அவற்றால் கெட்டதே , falsehood முறைகளே சரி என்று மட்டுமே சொல்ல முடியும். அதாவது, சத்தியத்தின் வழியில் செல்லாதே என்று அவற்றால் கூற முடியாது. அதனால் ஒரு விஷயத்தை தவறான வழியில் , குறுக்கு வழியில், திறமைக்குறைவு, அறிவுக்குறைவு, குணக் குறைவு இருந்தாலும் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வரும் இடங்கள் எல்லாம் அன்னை, வாழ்வு எடுக்கும் initiative அல்ல. அவை எல்லாம் நம் ஆசை, அகந்தை எடுக்கும் initiative .