கடந்தகாலத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும். We have to think about the past and consecrate. Never go back to past. Iet it come seeking you purified. How to understand or reconsile these two statements? இன்றிய தினசரி செய்திகள் தொடர்பாக ஒரு அன்பர் கேட்கும் கேள்வி.
அன்னையிடம் வந்த ஒருவர் அபரிமிதமாக, 10 மடங்கு அதிகமான வருமானம், செல்வம் பெற்ற பிறகு – அதில் ஒரு பகுதியை அன்னைக்கு அளிக்க விரும்பினார். மனைவி எதிர்த்தார். அதை மீறி அன்னைக்கு தர முன் வந்து அன்னையிடம் சொன்னார். அன்னை சிரித்தார். ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் மனைவிக்கு இனி பிழைக்க முடியாது என்னும் அளவிற்கு பிரச்சினை வந்தது. அன்னை Blessing Packet கொடுத்தனுப்பினார். ஒரு சிறு operation நடத்தப்பட்டு பிழைத்து எழுந்தார் . இந்த முறை அன்னையிடம் தர முன்வந்த போது மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆதரிக்கவும் இல்லை. ஆனால் அன்னை அதே போல சிரித்தார். எதுவும் சொல்லவில்லை. அடுத்த சில நாட்களில் அவரின் உறவினர்கள் அவரின் சொத்தை உரிமை கொண்டாடி வந்தனர். கை விட்டு போய் விட்டது என்னும் அளவிற்கு அவை அவர்களிடம் போய் விட்டது. அதை அன்னையிடம் சொன்ன போது அதற்கும் சிரித்தார் அன்னை. அடுத்த சில நாட்களில் அந்த சொத்தை எடுத்துக் கொண்டதால் ஏராளமான பிரச்சினைகள் வந்ததாக கூறி, ராசி இல்லாத சொத்து என்று இவரிடமே திருப்பி கொடுத்து விட்டனர் உறவினர்கள். பிறகு அன்னை அதை தானே கேட்டுப் பெற்றுக் கொண்டார். ஆசிரமத்தில் நடந்த ஒரு பெரிய கதையின் சுருக்கமாக கர்மயோகி கூறியது இது.
சராசரி மனிதனில் பல ஆண்டுகள், ஏன் 3000 அல்லது 30,000 ஆண்டுகளில் நடக்க வேண்டிய திருவுருமாற்றத்தை அன்னை ஒரு தனி மனிதனில் ஏற்படுத்துவது, குறிப்பாக அவர் சேவைக்கு பயன்படுபவராக இருந்தால், அந்த மாற்றத்தை அவரில் கொண்டு வருவது surface mind -இல் மட்டுமல்ல subconscious mind-இல் அவருக்கு , அவர் மனைவிக்கு, உறவினர்களுக்கு இருக்கும் எதிர்ப்பு, negativity , ill will என்று அனைத்தையும் போக செய்து, தூய்மைப்படுத்தி எடுத்துக் கொண்டார்.
அன்று அன்னை இருக்கும் போது அன்னையிடம் நேரடியாக சொன்னது இன்று நாம் சமர்ப்பணம் என்பதற்கு சமம். ஆனால் நாம் சமர்ப்பணம் என்றாலே அன்னையிடம் சொல்லிய பிறகு நாம் விரும்பியது, தெரிந்தது எல்லாம் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்போம். அது prayer என்னும் மனப்பான்மையில் வருவதால் அதற்கான பலனே கிடைக்கிறது. சமர்பணத்திற்கான தூய்மை கிடைப்பதில்லை. Concecration என்பதன் பொருள் இறைவன் வந்து செயல்படும் அளவிற்கு ஒரு இடத்தை, செயலை தூய்மைப்படுத்துவதே.
அதற்கு முதலில் எதிர்பார்ப்பு, எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும். நாம் சமர்ப்பணம் செய்த விஷயத்தில் உயர் சித்தத்தை மட்டுமே பெற்று பரிணாமத்தில் முன்னேற வேண்டும். Getting higher consciousness to evolve in nature . இது அன்னையிடம் சொல்வதில் வரும் தூய்மை நிலை. இந்த நிலை purified mind acting through purified nature that attains perfection to attract Supremental Force என்கிறார்.
இந்த நிகழ்வை கர்மயோகி சொன்னதற்கு காரணம் – நான் ஒருவருக்கு ஜாமின் கொடுக்க போய் கடன் என் மேல் வந்து, அதனால் அது பல மடங்கு வளர்ந்து பல பிரச்சினைகளில் சிக்கி, ரௌடி, அரசியல்வாதி என்று தஞ்சம் புகுந்ததால் என் nature -ஏ மாறி விட்டது. அன்னையிடம் வந்து அது மாறி சற்றே செல்வம் வந்த பிறகு – எல்லா கடனையும் அடைத்தேன். ஒரு சிலர் மட்டும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதை கர்மயோகிக்கு mail அனுப்பிக் கேட்ட போது, அன்னை விலக்கியதை தேடித் போய் தொடத்தேவையில்லை . தரவேண்டும் என்னும் மனப்பான்மையையும் சமர்ப்பணம் செய்து விடு. அதை பற்றி மறந்து விடு என்றார். அது எப்படி தூய்மைப்படுத்தப்பட்டது என்று தெரியாது. ஆனால் தூய்மை அடைந்து இருக்கும் என்று தெரியும்.
காரணம் இதே போல வேறு ஒரு சம்பவம். 1992-இல் வீட்டை விட்டு வெளியேறிய நான் 2010-இல் தங்கைக்காக உறவினர்களின் அழுத்தத்தால் மீண்டும் அங்கே போக வேண்டி வந்தது. அப்போது என் பங்குக்கு வீட்டின் ஒரு பகுதியை தருவதாகச் சொன்னார்கள். அது குடும்ப சொத்து என்றாலும் அது எனக்கு தேவையில்லை என்று நினைத்ததால் அதை ஒரு ஆன்மீக ஸ்தாபனத்தின் பதிப்பக பிரிவுக்கு கொடுக்கலாம் என்று நினைத்து ஸ்தாபகருக்கு எழுதினேன். அவரும் ஒருவரை அனுப்பி பார்க்கச் சொன்னார். அவர் சூழல் சரியில்லை என்று report கொடுத்ததால் அதை ஏற்கவில்லை. வேறு எதுவும் செய்யத் தெரியாதலால், அதை சமர்ப்பணம் செய்தேன். மறந்தும் விட்டேன். ஆறு மாதம் கழித்து அந்த ஸ்தாபனத்திடமிருந்து அழைப்பு வந்தது. ஸ்தாபனத்தின் மற்றோரு library proect க்கு பொறுப்பு ஏற்க முடியுமா என்று. அதை ஏற்றேன். சமீபத்தில் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பார்க்க சந்தோஷமாக இருந்தது. அதன் highlight என்னவென்றால் சூழல் சரியில்லை என்றவர் என் மேல் இருந்த தனிப்பட்ட காழ்புணர்ச்சில் சொல்லியிருக்கிறார் என்பது பிறகு தெரிந்தது. அப்போது அவர் ஸ்தாபனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். நான் இன்று அந்த ஸ்தாபனத்தின் ஒரு முக்கிய பொறுப்புக்கு வந்து விட்டேன்.
கர்மயோகி, அன்னை ஒருவருக்கு அருள் தர முடிவு செய்துவிட்டால், அவரிடமிருந்து காணிக்கையை திருடியாவது அதை செய்வார் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். அது போல ஒரு சம்பவமும் என் வாழ்வில் நடந்தது. காணிக்கைக்காக வைத்திருந்த ஒரு தொகையை எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளான ஒரு நண்பருக்கு உதவுவதற்காக எடுக்க வேண்டி வந்தது. அது வருத்தமாகவும், காணிக்கை தடைபடுகிறதே என்னும் குழப்பமும் இருந்தது. அதை கர்மயோகிக்கு எழுதி கேட்ட போது, சரியாகவே நடந்திருக்கிறது. உனக்கு நடக்க வேண்டிய விபத்தை அன்னை இப்படி காணிக்கையை மாற்றி தடுத்திருக்கிறார் என்றார். அதன் பின்னணியை விளக்கினார்.
இது போல வேறு ஒருவருக்கு உதவப் போய் நஷ்டமானது பிறகு அந்த பணம் வந்த விதம், என் மதுரை மேனேஜர் செய்தவை, அதன் பிறகு இன்று அவர் எனக்கு நல்ல நண்பராக, ஒவ்வொரு முறை Business dull அடிக்கும் போதும் ஒரு lead தருபவராக மாறியது, வெள்ளத்திற்கு பிறகு நான் திரும்ப அனைத்தையும் பெற்ற விதம், அது சேவைக்கு அதிகபட்சம் உபயோகமான விதம், கர்மயோகிக்கு நெருக்கமானவனாக மாறிய பாதை என்று வாழ்வில் புனிதப்படுத்தப்பட்ட விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன.அன்னையிடம் வந்து சமர்ப்பணம் செய்த பிறகு முதல் மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றதும், பின் இரண்டாவது மனைவி அமைந்ததும் கூட அந்த ஸ்தானத்திற்கான தூய்மை படுத்துதல் என்றே நினைக்கிறேன்.
நாம் அன்னையை நெருங்க நெருங்க எதிர்பார்ப்பு இல்லாமல், அன்னைக்காக, அவரது பண்புகளுக்காக, உயர் சித்தம் பெற மட்டுமே சமர்ப்பணம் செய்தால், உறவு, உரிமை, உடைமை, பழைய நிலையை இழந்து புனிதம் பெறும் . வரும் அனைத்தும் அந்த corresponse உடனான stamp வுடன் வரும் என்பதே அதன் சிறப்பு.
நாம் அன்னை அன்பர் என்று ஆனபிறகு, நம் நிலை இருளுக்கு உரியதானால், அதிலும் சுயநலத்திற்காக அன்னை கோட்பாடுகளை ஏற்று வேலை செய்தால், வேலையில் தொந்திரவு வரும், வேலையே போகும், பொருளை இழப்போம். இவையெல்லாம் நடந்தால் இருள் போனதாக அறிய வேண்டும். மனம் மாறினால், நம் தவறை உணர்ந்தால், உயர்சித்தத்தின் சத்தியத்தின் மதிப்பறிந்து மாறினால் அனைத்தும் அடுத்த உயர்ந்த நிலையில் திரும்பி வரும். அதுவே தூய்மை படுத்தி தருவது எனப்படும்.
என்னை பொறுத்தவரை கடந்ததை நாடாதே என்பது – ஒரு தவறை, falsehood -ஐ உணர்ந்த பிறகு அதை அன்னையிடம் சமர்ப்பணம் செய்வது, அதை மீண்டும் செய்யாமல் இருப்பது, அதை பற்றி நினைவும் எதிர்பார்ப்பும் கூட இல்லாமல் இருப்பது. அது என்னை பொறுத்த வரை அவருக்கு, அவர் நோக்கமான பரிணாமம், என்பதற்கு நான் செய்யும் சேவை. அது நடைமுறை.
அதை அவர் ஏற்றுக் கொண்டால், அதன் பலன் அடுத்த உயர்ந்த நிலையில், சுபிட்சமாக, சேவையாக என்னை தானே நாடும் என்பது தத்துவம்.
நான் சமர்ப்பணம் செய்கிறேன் அதனால் இதை தா என்பதோ, ஒரு positive life response -ஐ எதிர்பார்த்து செய்வதோ என்னை பொறுத்தவரை ஒரு வியாபாரமே. பண்டமாற்று. அன்னை முறையை அன்னைக்காக செய்வதே பக்தி, சேவை, நன்றியறிதல்.