நாம் ஒரு செயலை செய்யும் காலத்தை குறைப்பது மனமாற்றம். பல வார்த்தைகளில் சொல்வதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடிவது அவற்றுள் ஒன்று. அதற்கு நமக்கு நம்மைப் பற்றிய consciousness நம் அறிவு, தெளிவு, உச்சரிப்பு, சொல், நயம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வு வேண்டும். அதையே வேலையில் பொருத்திப் பார்த்தால், அதையும் மேலே சொன்ன எந்த விழிப்புணர்வும் இல்லாமலேயே செய்கிறோம். காலத்தை கட்டுப்படுத்துவதற்கு சுருக்கமான வழி என்று கர்மயோகி கூறுவது. பழைய செயல்களை, அதன் பலன்களை, அனுபவங்களை நினைத்தாலும், எதிர்காலத்தை, வரப்போகும் பலனை நினைத்தாலும் நாம் காலத்திற்குள் கட்டுப்பட்டு இருக்கிறோம். இரண்டையும் நினைக்காமல் இருப்பது ever present என்பது காலத்தை கடந்த நிலை. நடைமுறையில் நிகழ்காலத்தில் நாம் செய்யும் செயல்களில் ஒன்றி, நாம் அறிந்த உயந்த பண்பு, செம்மை ஆகியவற்றை கொண்டு வருவதற்கு அல்லது அந்த செயலால் பயன் பெறப்போகிறவர்களுக்கான நல்லெண்ணம், அல்லது இந்த செயலைத் தந்த இறைவனுக்கான நன்றியறிதல் என்னும் ஆன்மாவின் பண்புகளில் ever present ஆக conscious ஆக செயல்படும் போது நாம் காலத்தை கடந்தவராகிறோம். அது மனமாற்றத்துடன் வரும் காலத்துடன் காலத்தை கடந்த நிலை. அது இறைவன் அடையும் ஆனந்த நிலை என்பதால் வாழ்வு பெரும் பலன் அபரிமிதமாக இருக்கும்.
இந்த உலகம் ஒரு சித்தத்தில் உருவாக்கப்பட்டது. அதன் நோக்கத்திற்காக இயங்குகிறது. அதற்கான ஆற்றலே நம் அனைத்து செயல்கள், வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இது நம் அனுபவத்தில் வரும் புரிதல். ஆனால் உண்மையில் ஆற்றல் வெளிப்பட தேவையான கருவிகளை பிரபஞ்சம் உற்பத்திச் செய்துக் கொள்கிறது என்பதே உண்மை. அதுவே நமக்கு வலியாக, துன்பமாக, முரண்பாடாக தெரிகிறது. காரணம் அது பற்றிய, அந்த ஆற்றல் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இல்லை. அருள் அதிகமாக வாழ்வில் செயல்பட இத்தகைய புரிதலும், அதனை ஒட்டிய மனமாற்றங்களும் தேவை. அதற்கு மனமாற்றத்தின் முக்கியத்துவமும், ஒவ்வொரு செயலுக்குப் பின்னால் அதனால் ஏற்படும் சாரமும், அந்த சாரத்தின் பின்னால் உள்ள இறைவன் அடையும் ஆனந்தமும் நமக்குத் புரிய வேண்டும். நம் செயல்களை அதற்கு ஏற்ப மாற்றிக் கொண்டால், வாழ்வில் ஆனந்தம் பொங்கும். வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் இது போன்று வரும் மனமாற்றம் நரகமான வீட்டை சொர்க்கமாக்கும் .
மரபை விட்டு அன்னையை ஏற்றுக்கொள்வதன் சிரமத்தை அனைவரும் அறிவர். அதைச் செய்து பலன் பெற்றவர் அநேகர். அன்னை கூறும் மனமாற்றம் மரபை விட்டு மாறுவது. சுபாவம் நாய் வால் போன்றது. எவராலும் மாற்ற முடியாது என்பது தெரியும். அம்மாற்றம் யோகத்திற்கு உரியது. மனம் நம் கையில் உள்ளது. அதை மாற்றலாம். தவறான கருத்தை விட்டு நல்ல கருத்தை ஏற்கலாம். போட்டியை விட்டு ஒத்துழைக்கலாம். பொறாமையை விட்டு நல்லவராக இருக்கலாம். இது போன்று மனம் மாற வேண்டிய இடங்கள் அநேகம். இது அனைவரும் அறிந்தது. அம்மாற்றத்தைத் தன்னுள் ஏற்படுத்துபவர் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்யலாம்.
நாம் ஏற்க வேண்டியது அன்னை விரும்பிய, அதிமனம் செயல்பட தேவையான பண்புகளுக்கான மாற்றங்களை மட்டுமே. அன்னைக்கு சேவை செய்யும் ஸ்தாபனம் என்றோ, அதில் வேலை செய்பவர்கள், சேவை செய்பவர்கள் என்றோ, ஸ்தாபன தலைவரிடம் விஸ்வாசமானவர்களாக இருந்தார்கள் ( நடித்தார்கள் ??) என்றோ, அவர்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த பதவியில் இருந்தாலும், வெளி நடத்தையைப் பார்த்து முடிவு செய்வது தவறு. அவர்களுக்கு சேவை செய்வது அதை விட பெரிய தவறு என்னும் மனமாற்றம் நமது இப்போதைய முக்கிய தேவை. ஸ்தாபனம் வேறு, அதன் போக்கு வேறு என்னும் பாகுபாடு, அதற்கான மனமாற்றம் தேவை.
இன்றைய சூழ்நிலையில் அன்னையை மட்டும் ஏற்றால் தான் அருள் செயல்படும்.
1. எந்த மாற்றம் வேண்டுமென்றாலும், அது முதலில் நம் மனதில் ஒரு தெளிவாக உருவாக வேண்டும்.
2. அதனால் நாம் பெறப் போகும் நன்மை நமக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.
3. அதை உணர்வு ஆர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
4. அறிவு அதை நாம் அறிந்த உயர்ந்த பண்பு மூலம் எப்படிச் செய்வது என்னும் கருத்தை பெற்று வழிகளை வகுக்க வேண்டும்.
5. மனம் அதை எதிர்ப்பில்லாமல் ஏற்க வேண்டும்.
6. அதுவே லட்சியமாகி ஆன்மாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும். அதாவது, உயர் சித்தத்தை பெரும் ஆனந்தமாக மாற வேண்டும்.
7. அந்த ஆனந்தம் உணர்வை ஆக்கிரமிக்க வேண்டும்.
8. அது உடலை energise செய்து, சோர்வில்லாமல் உழைக்க வைக்க வேண்டும்.
9. இந்த மாற்றமே, அது தரும் முன்னேற்றமே என் உயிர் மூச்சு என்னும் அளவிற்கு அது மாற வேண்டும்.
10. சாதனை என்பது மனமாற்றம் மட்டுமே என்னும் நம்பிக்கையாக அது மாற வேண்டும்.