வாழ்வில் வெற்றிப் பெற்றவர்களை கவனித்தால், உதாரணமாக 50,000 முதலீட்டில் ஆரம்பித்து , 500 கோடியாக வளர்ந்தவர்கள், ஒரு துணிக் கடை ஆரம்பித்து 10 அல்லது 20 கடைகளை ஏற்படுத்தியவர், ஒரு auto ஒட்டி ஆரம்பித்து 20 பேருந்துகளுக்கு -க்கு உரிமையாளரானவர்கள் என்று பலரை பார்க்கிறோம். அல்லது கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த சூழல், அந்த சந்தர்ப்பம் அந்த கால கட்டத்தில் எல்லோருக்கும் இருந்திருக்கும். அதே போன்று தொழில் ஆரம்பித்தவர் இருந்திருப்பார்கள். அனைவருக்கும் அதே பலன் வருவதில்லை. வெற்றிப் பெற்றவர்கள் எங்கே வித்தியாசப்பட்டு இருக்கிறார்கள் என்று பார்த்த்தால், அவர் மனம், மனப்பான்மை, வழக்கமாக ஒரு செயலை செய்யும் விதத்தில் இருந்து மாறுபட்டு இருக்கும். (இதன் அடுத்த நிலைகளை Change -Shift -Transformation என்று கட்டுரை எழுதியிருக்கிறேன். Search Box -இல் தேடி படிக்கலாம்).
இதைத் தான் Life Divine -ன் Chapter 11 பற்றி விளக்கும் போது ஒரு வரி விளக்கமாக “செயல் என்பது மனம். வாழ்வு என்பது மனப்பான்மை”. அது புரியாததால் தான் நம்மால் உயர் வளத்தையோ உயர் ஆனந்தத்தையோ, பெற முடியவில்லை என்கிறார். நாம் செயலில் நம் மனப்பான்மை கொண்டு வந்து பழக்கத்திற்கு அடிமையாகிறோம். வாழ்வில் மனத்தைக் கொண்டு வந்து கஷ்டப் படுகிறோம். அதாவது உணர்வுக்கு மனம் கட்டுப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டையும் அதனதன் இடத்துக்கு மாற்றுவது மனமாற்றம்.
நம் உடலில் ஏராளமான பாகங்கள் உள்ளது. அவற்றுள் குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே செயல்பட்டால் எப்படி இருக்கும். ஒரு இக்கட்டான நேரத்தில், உடல், கண், காது, மூக்கு, நரம்புகள், தோல் என்று அனைத்தும் பரபரப்பாக வேலை செய்கின்றன. அந்த அளவிற்கு கூட நம்மால் நாம் பெற்ற அனுபவம், அதன் மூலம் வந்த ஞானம் ஆகியவற்றை குறிப்பான நேரங்களில், மிகவும் தேவையான நேரங்களில் கூட பயன்படுத்துவதில்லை. அதே போல நம் Being உடல், உணர்வு, மனம் ( அறிவு), ஆன்மா என்று நான்கு பகுதிகளைக் கொண்டு இருந்தாலும் – அது ஏற்படுத்தும் வித்தியாசங்கள் நம்மக்கு நன்றாக தெறிந்து இருந்தாலும் 90% விகிதம் பழக்கம், அபிப்ராயம், முன்முடிவுகள், விருப்பு வெறுப்புகள் என்று உடல், உணர்வு, உணர்ச்சி, ஆசை, எதிர்பார்ப்பு என்று அந்நிலையிலேயே நின்று விடுகிறோம். அனைத்து பகுதிகளை பயன்படுத்துவதேயில்லை. நம்மால் அவற்றையெல்லாம் அதிகபட்சம் பயன்படுத்த முடியும் என்று நினைப்பது மனமாற்றம்.
உதாரணமாக ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதையே நோக்கமாக கொள்ளும் போது, இந்த நான்கு பாகங்களுமே உயர்நிலையில், தொடர்ந்து செயல்படுவதைக் காணலாம். அது மனமாற்றத்தின் ஆற்றல். Conscious Force என்று சொல்வது போல நாம் சித்த பூர்வமாக, வளர்வதற்காக இருக்கும் இடையறாத நினைவு. அது உச்சக்கட்ட வளர்ச்சிக்கு நம்மை கொண்டு செல்லும். ஒரு லட்சியத்தை ஏற்றுக் கொண்டு சாதிக்க ஆரம்பித்த நேரத்தில், திருமணம் செய்துக் கொண்டு அதை இழந்தவர்களை கவனித்தால் இந்த வித்தியாசம் புரியும். நாம் செய்யும் எந்த வேலையும் தடையில்லாமல் சென்றுக் கொண்டிருந்தால், நாம் அதை பற்றி சிந்திப்பதில்லை. அதன் பொருள் நாம் அதே நிலையில் இருக்கிறோம் என்பதே. அது நம் கண்ணில் படுவதேயில்லை. தடை ஏற்படும் போது அல்லது நம் எதிர்பார்ப்புக்கு மாறாக நடக்கும் போது, நாம் சிந்திக்கிறோம். பத்து அல்லது இருபது விஷயங்கள் பிடிபடுகிறது. தடை வருவதற்கு முன்பாகவே அவற்றை சிந்திப்பது மனமாற்றம். வாழ்க்கையையே மாற்ற உதவும் மாற்றம் அது.
பிறருக்கு உழைப்பது சேவை. அல்லது நம் உழைப்பின் பலனை பிறருக்குக் கொடுப்பது சேவை. அது காணிக்கை என்றும் அழைக்கப்படுகிறது. அவ்விரண்டையும் தகுதியில்லாதவருக்கு செய்வது, கேட்டு, மிரட்டி, பெறுபவருக்கு செய்வது, தன்மையான பேச்சுக்கு பின்னால் கயமையும், சாதுவான முகத்திற்கு பின்னால் கபடதாரியாகவும் இருப்பவருக்கு சேவை செய்து, அதிலும் பெருமை கொள்பவர்கள் வலிமையற்றவர்கள், இயலாமை நிறைந்த உணர்ச்சிக்கு, சிந்திக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். அங்கு வளத்தைப் பெற போராட வேண்டி இருக்கும். சற்றே யோசனை செய்து, இது நமக்குத் தேவையில்லை என்று நினைத்தால், நேரம், பணம், வேலை, ஏமாற்றம், குழப்பம், பிரச்சினைகள் மிச்சம். இதில் சேகரமாகும் energy வாழ்வில் வளத்திற்கு உபயோகப்படுவதால் தான் நாம் ஒரு தாழ்ந்த மனநிலை நபரிடமிருந்து விலகும் போது உடனடியாக ஒரு prosperity வருகிறது.