சில நாட்களுக்கு முன் சமர்ப்பணன் , Telegram குழுமத்தில் ஒரு message பதிவிட்டு இருந்தார்.
Not to feel the challenge is one trait of equality என்பதே அது.
அதன் தமிழாக்கமான – நிதானம் சவாலுக்கும் நிதானமாக இருக்கும் என்னும் விளக்கம் எனக்கு சற்றே குழப்பமாக இருந்தது போல பலருக்கும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு முறை கர்மயோகியிடம் பேசும் போது நாம் சுபாவத்தின் challenge -களை , எதிர்ப்பை, அறைகூவலை எப்படி நாம் விவேகமாக ஏற்றுக் கொள்கிறோம். அதன் மூலம் அருளை எப்படித் தடை செய்கிறோம் என்பதை பற்றி சொல்லிக் கொண்டு இருந்தார். அந்த உரையாடலை இந்த செய்தியில் பொருத்தி பார்க்கும் போது எனக்கு வேறொரு கோணம் புரிகிறது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நான் 2007-இல் company ஆரம்பித்த போது எனக்கு ஏராளமான skills , capacity , capability , efficiency தேவைப்பட்டது. அவற்றை எல்லாம் முனைந்து பெற்ற போது அதற்கான life response, miracle என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. 2012 வரை அது தொடர்ந்தது. அதன் பிறகு அதற்கு அடுத்த கட்ட உயர்ந்த நிலைகளை அடைய வேண்டுமானால் – இந்த physical values -ஐ விட்டு வெளியே வரவேண்டிய கட்டாயம். அதன் அடிப்படை அனுபவங்கள்தான் என்பதால், – vital , mental -லிலிருந்தும் வர வேண்டிய கட்டாயம். ஆனால் அன்று நான் அடைந்த உயர்வை, என்னால் தான் காப்பாற்ற முடியும், சமுதாய அறிவின் மூலமே காப்பாற்ற முடியும் – அன்னை முறைகளை எடுத்துக் கொண்டால் – இழப்பதற்கும் வாய்ப்பு அதிகம் என்னும் எண்ணம் வந்த போது, நான் அன்னை வழிகளை விட்டு – என் சுபாவத்தை, என் அபிப்ராயத்தை, என் முன்முடிவுகளை, என் அனுபவங்களை பிடித்துக் கொண்டேன்.
அதன் பிறகு பெரிய வளைச்சி வரவில்லை என்றாலும் அந்த நிலை – levelling off என்று சொல்லப்படும் நிலை -எனக்குப் பிடித்து இருந்தது. அதுவே போதும் என்று இருந்தது. அதன் பிறகு 2015-2016-இல் இறங்குமுகமாக இருந்த போதும், அதை விட்டு வெளியே, அன்னை வழியில் வர மனமில்லாமல், சமுதாய அறிவின் மூலமே வர முயன்றேன். 2017-இல் கர்மயோகியைப் பார்த்த பிறகு 2018-இல் என் சுபாவத்தின் பலமான – ஒரு விஷயத்தை perfect ஆக செய்வது, no stones unturned என்னும் வகையில் ஒவ்வொன்றையும் நானே சரி பார்ப்பது என்பது என் சுபாவம். அது மிகச் சிறப்பானது. ஆனால் அதுவும் அடுத்த நிலைக்குச் செல்ல உதவாது. அந்த பிடியை விட வேண்டும் என்றார். அதுவே சுபாவத்தின் சம நிலை.
ஓரிரு மாதம் அதை பற்றி அறிவுரையாகக் கூறினார். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. யார் எப்படி செய்கிறார்கள், சரியாக செய்கிறார்களா, ஏமாற்றுகிறார்களா, நான் இல்லமல் எப்படி நடக்குமோ என்று மனம் படபடத்துக் கொண்டே இருந்தது . இதை விட நானே செய்து விடுவதே மேல் என்று இருந்தது. அது சரி வராததினால், கர்மயோகி December 2018-இல் ஒரு வாரம் தன்னுடன் இருக்க வேண்டும் , காலை 6 முதல் இரவு 9 மணி வரை, எந்த office matter , mail , mobile எதுவும் கூடாது என்றார். ஒரு வாரம் கிட்டத்தட்ட உலகத்தின் தொடர்பு இல்லாத நிலை. இரவு 9 மணிக்கு மனைவி மற்றும் Manager -ரிடம் பேசுவேன். அந்த நேரத்தில் அதிகமாக எதுவும் பேச முடியாது. ஒரு வாரம் கழித்து சென்னை திரும்பிய போது அந்த வாரம் மூன்று கோடிக்கு மேல் order வந்து இருந்தது. அது ஆறு மாத சேல்ஸ். நான் பார்ப்பதை விட என் supervisor , manager எல்லாவற்றையும் நன்றாகவே செய்து இருந்தார்கள். அந்த பிடியை விடும் நிலையே சமநிலை.
அந்த அனுபவம் இருந்தும், அதன் அபரிமிதமான பலன் தெரிந்தும், அதன் பிறகு – இன்று April 2022 வரை அதைச் செய்யவில்லை. காரணம் என் prosperity எனபது – என் involvement , என் திறமை, என் அறிவு, என் அபிப்ராயம் இல்லாமல் வருவது எனக்குப் பிடிக்கவில்லை. நான் விரும்பும் வழிகளில், நான் செய்வதன் மூலமே அன்னை தர வேண்டும் என்னும் ஆழ்மன ஆசை – என்பதைதான் நம் personality அன்னையை challenge செய்வது. அது இல்லாமல் செய்யும் சமர்ப்பணம் equality – சமநிலை.-
அது நமக்கு , குறிப்பாக எனக்குப் பிடிப்பதில்லை. நான் சாதித்ததாக இருக்க வேண்டும் என்பதே என் challenge. அதை உணராமல், தலை எடுக்க விடாமல், கண்காணிப்பதே சமநிலை. அது, இதே வழிகளில் இல்லையென்றாலும், அதை ஒட்டிய திருப்திக்காக வேறு வேலைகளை செய்து பலனைக் கெடுக்கும். உதாரணமாக வருவதற்கு முன்பே அதன் பலனை அனுபவிக்க நினைப்போம். அடைந்துவிட்டதாக காட்டிக் கொள்ள நினைப்போம். யாரிடம் சொல்லக்கூடாதோ, அவரிடம் பேச, சொல்லத் தோன்றும். அதற்கு உதவுபவரை எதிர்க்க தோன்றும். அல்லது அகந்தை தூண்டும் வழியில் – பச்சாதாபம், பரோபகாரம், சேவை செய்யத் தோன்றும். இவையெல்லாம் ஒரு பெரிய அருள் வரும் போது, நம் personality அன்னை முன் வைக்கும் challenge -கள் .
இதற்கு கர்மயோகி தரும் உதாரணம் – அபிமந்யுவை சக்கர வியூகத்தில் அனைவரும் சேர்ந்து கொள்ள முயன்றபோது போது அவனே இறக்கும் தருவாயில் இருக்கும் போது – அவனுக்கு மோட்சத்தை தருவதாக கூறி குத்திக் கொன்றான் கர்ணன் . அதாவது மரணத்திற்கான கர்மத்தை தான் ஏற்றுக் கொண்டான் – தான் நல்லவன், பிறர் துன்பத்தை பார்க்க சகிக்காதவன் என்பதைக் காட்டிக் கொள்ள. அதே போல கவச குண்டலங்களை இழந்தால், தான் கொண்டுள்ள மொத்த இறைவனின் பாதுகாப்பையும் இழப்போம் என்று தெரிந்தும் தன் personality விரும்பிய தானத்தை எடுத்துக் கொண்டு தந்து அனைத்து பாதுகாப்பையும் இழந்தான். குந்தி – அர்ஜுனனைத் தவிர எவரையும் தாக்கக் கூடாது என்ற வரம் பெற்ற போது, அதன் பொருள் அர்ஜுனனின் கையால் நீ சாக வேண்டும் என்பது புரிந்தாலும், தன்னை தூக்கி எறிந்த தாயிடம் நல்ல பெயர் எடுக்க செய்த சத்தியம் அவன் உயிரை எடுத்தது. இது போல தன் சுபாவத்தை- பிடியை விட்டு, அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும், சுபாவத்திற்கும், சமுதாயத்திற்கும் நல்லதாக இருந்தாலும் – ஒரு உயர் கொள்கைக்கு நம் உறுதிக்கு எதிராக எதையும் செய்யாமல் இருப்பது personality -இன் சமநிலை. கர்ணனின் உறுதியான துரியோதனனுக்கு துணை நிற்பேன் என்பதற்கு எதிரான விஷயங்கள் எதையும் அவன் செய்து இருக்கக் கூடாது என்பதே இங்கு கவனிக்க வேண்டியது. அதே நேரத்தில் சபையும், துரியோதனன், கர்ணன் போன்றோரும் – அர்ஜுனனை ஒற்றைக்கு ஒற்றை போரை ஏற்க சொன்ன போது, தான் சிறந்தவன் என்ற அகந்தைக்கு இடம் கொடுக்காமல் – கர்ணனின் பிறப்பு , கலை , திறமை தெரியும் வரை என் திறமைக்கு குறைவானவருடன் போட்டியிட மாட்டேன் என்ற அந்நிலை. தன் personality -க்கான challenges -ஐ சமநிலை மூலம் சாதித்த இடம்.
Unformed personality loves challenges – formed personality ever equally என்கிறார்.
என் வாழ்வில் நடந்த பல பிரச்சினைகளுக்கு காரணம் அல்ல பிரச்சினை வந்து தீர்வதற்கு காரணம் – எனக்கு challenges -கள் thrill-ளை கொடுக்கிறது. அது இல்லாமல் வருவது எனக்கு ‘சப்’ என்று இருக்கிறது. அந்த சுபாவத்தை விட்டு அந்த challenges -ஐ விட்டு நீ வெளியே வந்தால் உன்னால் சாதிக்க முடியாதது இல்லை என்கிறார் கர்மயோகி.
ஆனால் violence என் சுபாவத்திலேயே இருக்கிறது என்றாலும், இந்து வரை அதை செய்ய முடியவில்லை.