நமக்கு எவ்வளவோ தெரிந்து இருக்கும். ஆனால் அவற்றிலிருந்து எதோ ஒன்றுதான் பலனாக மாறுகிறது. அப்படி என்றால் பலனாக மாறுவது மட்டுமே திறமை என்று கூறலாம். ஒரு செயல் ஒரு பலனை தந்தால் மட்டுமே அதில் நமக்கு திறமை இருக்கிறது. படித்தால் நல்ல மார்க் வாங்க வேண்டும். துணி துவைத்தால் நல்ல வெளுப்பாக இருக்கவேண்டும். வீட்டை கவனிக்கிறோம் என்றால் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு விசேக்ஷம் நடத்தினால் எல்லாம் கூடி வரவேண்டும், குழப்பில்லாமல் முடியவேண்டும். இப்படி ஒவ்வொரு சிறு விஷயமும் ஒரு நல்ல பலனில், ஒரு முன்னேற்றத்தில் முடிந்தால் மட்டுமே அதில் நமக்கு திறமை இருக்கிறது என்று கொள்ளலாம்.
அந்தத் திறமை முதலில் ஆர்வத்தில் இருந்தே வரும். ஆர்வம் தரும் எனர்ஜியாக வரும். ஆர்வம் இல்லாமல் செயல்களில் திறமை வராது. அந்த எனர்ஜி குறிப்பிட்ட செயலில் அதிகமாக செயல் படும்போது அது திறமை
( skill) . அந்த skill இன் சாரம் புரியும்போது அது திறன் (capacity) ஆகிறது. ஒரு விஷயத்தில் புரிந்த சாரம் அனைத்து விஷயங்களுக்கும் பயன் படுமானால் அது செயல் வல்லமை (capability) ஆகிறது. இந்த process ஐ organized action என்று சொல்லலாம்.
உதாரணமாக நான் ஒரு தொழிலை கற்று கொள்ள ஆர்வம் கொண்டேன். அது தந்த எனர்ஜியில் ஏராளமாக ஆராய்ந்து கெமிக்கல்ஸ் இல் epoxy என்பது பற்றி சற்று தெரிந்து கொண்டேன். அது வருமானத்தை தந்ததால் அது என் திறமை என்று எடுத்து கொள்ளலாம். அதன் கெமிஸ்ட்ரி – சாரம் புரிந்த போது மற்ற கெமிக்கல்ஸ் இன் செயல்பாடு புரிய ஆரம்பித்தது. அதாவது ஒரு அறிவு மற்றைய பகுதிகளுக்கும் உபயோகமானது. அப்போது அது என் capacity ஆகிறது. அது வேலையில் அதிக பலன் கொடுப்பதற்கு அதன் செயல் முறைகளையும் , அது சம்பந் தப்பட்ட அனைத்தையும் முறைபடுத்துவது, அதில் ஈடுபடும் ஆட்களை கட்டுப்படுத்துவது, செயலுக்கான மனநிலை, நோக்கம், உறுதி என்று பலவும் சேரும் போது -அதாவது organize ஆகும்போது – அது என் செயல் வல்லமை ( capability) ஆகிறது.
இந்த capability வந்து விட்டால் ஒரு விஷயம் தான் என்றில்லை – எல்லாவற்றின் சாரமும் புரிவதால் நாம் பல விஷயங்களிலும் அதை செயலை படுத்த முடியும். உதாரணமாக கெமிஸ்ட்ரியில் எனக்கு புரிந்ததை – சிவில் இன்ஜினியரிங் , எலக்ட்ரோனிக்ஸ் போன்ற தொழில்களில் என்னால் அப்ளை செய்ய முடிந்தது.
இப்படித்தான் நம் ஒரு செயல் – நம் திறமையை ஒரு organized action ஆக மாற்றுகிறது.
உழைப்பு ஒரு திறமையின் அடிப்படையில் இருக்கும். அதனால் உழைப்பவனிடம் செல்வம் சேர்ந்தால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. ஆனால் பழிவாங்கும், பொறாமைகொள்ளும், மற்ற கெட்ட எண்ணங்கள் கொண்ட கடின உழைப்பாளிக்கு செல்வம் சேரவில்லை என்றால் அது நமக்குப் புரிவதில்லை. இவற்றிக்கு இடையே உள்ள தொடர்பு புரிந்தால் வாழ்வில் திறமை, திறன் ஆகிறது. வாழ்வின் மறுமொழி தத்துவம் முழுதும் புரிந்தால் எதையும் புரிந்து கொள்ளும் அறிவு திறன் வருகிறது ( ability). அப்போது வாழ்வை நம் வழிக்கு கொண்டு வரும் செயல் வல்லமை (capability ) நமக்கு வருகிறது. அப்போது அது பரிணாம முன்னேற்றத்திற்கான organized action ஆகிறது.
அன்னையை நாம் கருணையுள்ளம் கொண்ட தாயாராக மட்டுமே பார்க்கிறோம். அது அவருடைய ஒரு அம்சம்தான். அவருக்கு தனக்கு தானே போட்டி போடுபவர்களைப் பிடிக்கும் என்கிறார். வாழ்க்கை வழங்கும் challengeகளை விரும்பி எதிர்கொள்பவர்களை – சாதகராக இருப்பதற்கு தகுதியானவர்கள் என்று கூறுகிறார். courage என்பது ஒரு manifesting aspect என்கிறார். அன்னையை அடிக்கடி நேரில் பார்த்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள முடிந்ததால் பல ஆசிரமவாசிகள் சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள். அப்படி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த அன்பர்களிடம் ஒரு நாள் அன்னை அவர்கள் என்னை நேரில் பார்த்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதில் என்ன challenge இருக்கிறது? ஒன்றுமில்லை. நான் உங்களின் ஜீவனின் ஆழத்திலிருக்கிறேன். அந்த ஆழத்தில் என்னைக் கண்டுபிடித்து அந்த நிலையில் நீங்கள் என்னுடன் உறவாட வேண்டும். அதுதான் எனக்கு சந்தோஷம் கொடுக்கும் என்றார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலும் அத்தகைய challenge என்று நினைத்தால் – அதில் உள்ள அன்னையை காண வேண்டும் என்று நினைத்தால் அத்தகைய நிலை நமக்கு நம் திறமைகளை organise செய்யும் வாய்ப்பை தரும். அது ஆன்மாவின் பண்புகளாக திறன் பெரும்.