சத் புருஷன் என்னும் நிலையை – இடமும் காலமும் உளவியல் நிலைதான் உண்மையில் அதைக் கடக்க முடியும் என்பதை வாழ்வில் செய்து பார்த்து உணர்வில் மனதில் உணர – அடிப்படை சட்டமாக சிலவற்றை சென்ற கூடலில் சொன்னேன். அதனால் பொதுவாக இங்கே பதிவிடுகிறேன்.
1). It must be infinitely important to us, as we are to it. To do this, we have to know it integrally.
லட்சியம் , உயர்சித்தம் மட்டுமே நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும். இவை இரண்டும் இது இல்லை என்றால் எனக்கு வாழ்வு இல்லை, ஆனந்தம் இல்லை, என்னும் அளவிற்கு இருக்க வேண்டும். அந்த அளவிற்கு அதன் முக்கியத்துவம் புரிய வேண்டும் அதன் முழுமை புரிய வேண்டும்.
2).It should be infinite – as reason, logic, experience has a point of end.
அந்த செயலுக்கு வரையறை இல்லாமல் இருக்க வேண்டும். அதன் மூலம் பெறக்கூடிய ஞானம், அனுபவத்துக்கு அளவே இல்லாமல் இருக்க வேண்டும். நம் பகுத்தறிவு, தர்க்கம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
3).It should be defendable. Even when it cannot be justified by mind.
நியாயப்படுத்த முடியாவிட்டாலும், இல்லை என்று சொல்ல முடியாததாக இருக்க வேண்டும்.
4) It should unite all parts of our being.
நாம் அறிந்த நம் பாகங்கள் அனைத்தையும் ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும்.
இது போன்ற கருத்துகள் – உயர்ந்த சட்டங்களை தாழ்ந்த நிலையில் ( lower parts of the being ) பொருத்தி பார்ப்பது தவறு என்று பத்தாண்டுகளுக்கு முன்பே சில ” உயர் நிலைகளுக்கு சென்றுவிட்டவர்கள்” எதிர்த்தார்கள். உண்மைதான். தங்களுக்கு சேவை செய்ய – காணிக்கையை, துணி, மணிகளை தான் பெற்றுக்கொள்ள , சமைத்து போட , துவைத்து போட – தகுதியே இல்லாமல் பயபக்தியை அடிப்படையாக்கி – லைப் ரெஸ்பான்ஸ் ஐ தவறாகச் சொல்லி, அப்படிப்பட்ட ஒரு சிலருக்கு நம்மை பாதிக்கும் ஆழ்மன சக்தி இருப்பதாக சொல்லி, ஒரு பயத்திலேயே வைத்து, தங்களுக்கான கூட்டத்தை சேர்த்தவர்கள் நிலை அது. இந்த முறை -அது சரியே – என்பவர்களுக்கு அல்ல.
50 வருடங்கள் உணர்வாலேயே வாழ்வை நடத்தி அதை அறிவால் நடத்துவதாக நினைத்து பெருமைப் பட்டு கொண்டதைவிட – விழிப்போடு மனதின் நிலையில் நின்று – ஆன்மீக விவேகம், பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படியில் வாழ்வை அமைத்துக்கொள்வது பெரிது என்று நினைக்கிறேன்.
என்னிடம் உள்ள நான் அறிந்த உயர்ந்த பாகம் -என் மனம் தான் – அதன் மூலம் நான் அடைய கூடிய உயரங்களை அடைய வேண்டும் – அதுவும் பரிணாமத்தின் ஒரு பகுதியே. அதற்கு வரையறை இருக்கிறது என்றால் அந்த எல்லை எது – அதுவரை செல்லலாமே என்பதே என் சிந்தனையின் நோக்கம். மனதின் மூலம் ஜடத்தை நகர்த்தலாம் என்னும் தத்துவத்தை வாழ்வில் ஒரு ஆரம்பப் புள்ளியாக பார்க்க முயலும் ஒரு முயற்சி இது.
இதை அகந்தை – தன் முனைப்பு – என்று ஒரு விளக்கம் தருவார்கள். லைப் டிவைனை தங்கள் இஷ்டத்திற்கு அவர்கள் வளைப்பது போல நானும் என் இஷ்டத்திற்கு என் முன்னேற்றத்தின் நோக்கில் புரிந்துகொள்கிறேன்.
மனதை, அதன் வழிகளைத் தாண்டுவது என்பது ஓரளவில் அகந்தை அழிவது. நாம் சிருஷ்டியில் அதன் ஆனந்தத்தை அதற்கான ஆன்மாவை அடைகிறோம். அறியாமை தெய்வ மனத்தில் எழுகிறது. அதனால் சிருஷ்டி வருகிறது. அதாவது நம் வாழ்வில் அறியாமை, அறிவு தன்னுள் தானே மறைவதால் எழுவது. அதனால் தான் நாமறிந்த உயர் சட்டங்களில் அதன் நிலைகளில் நின்று – எல்லா நல்லதும் / உயர்ந்ததும் தெரிந்தாலும் -நம்மால் செயல் பட முடியவில்லை.
அகந்தையின் வெளிப்பாடு சுயநலம். இதுவும் சுயநலமே. ஆனால் அகந்தை என்பது சிருஷ்டியில் ஒரு சக்தி . ஆனால் சுயநலம் என்பது அதன் நோக்கம். நம்மால் சக்தியை மற்ற முடியாது. ஆனால் திசை மாற்ற முடியும்.
நோக்கம் மாறினால் – அகந்தையில் இருந்து வெளிவரும் நோக்கமாக இருந்தால் – அது தவறில்லை. பகவான் , அன்னை, கர்மயோகி ஆகியோரின் நோக்கத்தை ஒட்டிய – மனதின் பரிணாம வளர்ச்சியை ஒட்டிய – சுயநலம் என்பதால் – எதுவும் செய்யாமல் இருப்பதை விட, இது மேலானது என்பது என் கருத்து.
நம் மனதின் தற்போதைய நிலைகளை அறிந்து – உணர்விலிருந்து விழிப்பாக பிரித்து – நாம் செயல்படுத்தும் நிலைகளுக்கு ஏற்ப அது நம் வாழ்வில் எதிரொலிப்பதைக் காணலாம்.
ஜடத்தில் அது வளமாக வருகிறது. உணர்வில் புகழாக வருகிறது . மனதில் ஞானமாக வருகிறது. ஆன்மாவிற்கு அருளாக வருகிறது . அது இந்த மூன்றையும் உள்ளட க்கிய முழுமையைத் தருகிறது. இவை அனைத்தும் பரிணாமத்தின் வடிவங்களே என்பது என் கருத்து.