சமர்ப்பணம் பற்றி பல கோணங்களில் அறிய விரும்புகிறேன்.
சமர்ப்பணம் என்று சொல்லும் போது பிரார்த்தனையை தான் நாம் சமர்ப்பணமாக நினைக்கிறோம். Prayer as Consecration என்று பல கட்டுரைகளில் அதைப் பற்றி எழுதியிருக்கிறார் கர்மயோகி. அதில் நம் சுயநலம், தேவை, அதையும் அன்னை எப்படி யார் மூலம் செய்ய வேண்டும் என்று மொத்த list -உம் இருக்கும் என்பதால் அதை எந்த விதத்திலும் சமர்ப்பணம் என்ற வார்த்தைக்குள் கொண்டு வர முடியாது. அன்னையை விட நமக்கு அதிகம் தெரியும் என்னும் நிலை அது.
சமர்ப்பணம் என்பதின் dictionary பொருளை எடுத்துக் கொண்டால் கூட, அல்லது கோவில் கும்பாபிஷேகம் என்று குறிப்பிடப்படும் consecration என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டால் கூட, அதன் பொருள் இறைவன் வந்து தங்கும் அளவிற்கு ஒரு இடத்தை. செயலை புனிதப்படுத்துவது என்பதே. சமர்பணத்திற்கும் அடிப்படை பொருள் அதுவே. அன்னை வந்து செயல்படத் தேவையான, நம் ஏற்புத்திறனை அதிகரிக்ககூடிய ஏதாவது ஒன்று நம் ஒவ்வொரு செயலிலும் தேவை. அதில் பத்து அல்லது இருபது நிலைகள் இருப்பதாக கர்மயோகி பொதுவாக எழுதியிருப்பார் என்றாலும் நான் படித்து புரிந்து கொண்டதில் இருந்து அதை ஐந்து நிலைகளாக பிரிக்கிறேன்.
அன்னையிடம் சொல்லிவிட்டு அன்னை முறைகள் பொங்கி வழியும் படி செய்வது. அன்னையிடம் செய்யப் போவதை சொல்லி விட்டு அப்படியே மாற்றம் இல்லாமல், நமக்குத் தெரிந்த உயர்ந்த பண்புகளைக் கொண்டு செய்வது. இதற்கான உதாரணத்தை ஒரு கூடலில் விளக்கமாக கூறியிருக்கிறேன். இப்போது சுருக்கமாகக் கூறுகிறேன்.
நான் வழக்கமாக OMR-றில் இருக்கும் site visit -க்கோ, meeting -குக்கோ presentation -னுக்கோ செல்வதானால், TNagar -றில் ஆரம்பித்து கிண்டி, ஆலந்தூர், துரைப்பாக்கம் வழியாகச் செல்வது வழக்கம். ஆலந்தூர் junction-நில் , வழக்கமாக நிற்கும் நண்பர்களுடன் டீ, வடை சாப்பிடும் கடையில் நின்று சற்று கதை பேசி விட்டுச் செல்வேன். ஆனால் இதை அன்னையிடம் சொல்லி விட்டு செல்வதானால், மதர் -துரைப்பாக்கம் site visit செல்கிறேன் மதர். வழியில் நண்பர்களைப் பார்த்து டீ , மசால் வடை சாப்பிட்டு, சினிமா, அரசியல், பேசி விட்டுப் போகிறேன் என்று சொல்ல முடியாது. வீட்டிலிருந்து site -டுக்கு போவதைப் பற்றி அங்கு பார்க்க, பேச வேண்டியது மட்டுமே கூற முடியும். அதில் எந்த அளவு punctuality , பொய் இல்லாதது, client point of view என்று கொண்டு வர முடிகிறதோ, அந்த அளவிற்கு சமர்ப்பணமான செயலாக இருக்கும். அன்னை செயல்படுவது நன்றாக தெரியும். அதன் அடிப்படை அன்னையின் பண்புகள் நிறைந்த புறச் செயல்கள்.
இரண்டாவது, அன்னைக்கு செய்வது போல செய்வது. நாம் அன்னைக்கு செய்வதாக இருந்தால் எப்படி செய்வோம், அப்படி செய்வது. இதற்கு உதாரணம் – கம்பெனி ஆடிட்டிங் டைம் அல்லது office inspection time அந்த நேரத்தில் நாம் எப்படி இருப்போம், peak alert -இல், peak performance -சில் இருப்போம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி ஆடிட் இன்ஸ்பெக்சன் கம்பெனி சட்டம் ஆகியவற்றின் நோக்கத்தில் மட்டுமே செய்வோம். அதாவது நாம் அறிந்த உயர்ந்த பண்புகளில் நிற்போம். அதை நாமறிந்த உச்சத்தில் செய்வோம்.
இன்னொரு உதாரணம் – வீடு அல்லது மையத்தை பொதுவாக சுத்தமாக வைத்திருப்போம். Prosperity Day அன்று எப்படி இருக்கிறது. Dharshan day அன்று எப்படி இருக்கிறது. ஸ்தாபன முக்கியஸ்தர்கள் வந்தால் எப்படி இருக்கிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியும். எல்லாவற்றிலும் சுத்தம், ஒழுங்கு ஒரு இழை அதிகரிக்கும்.
கற்பனைக்காக கர்மயோகி வருவதாக எடுத்துக் கொள்வோம். அப்போது எப்படி இருக்கும், வீடு, மையம் மட்டுமல்ல, அந்த தெருவையே சுத்தமாக ஒழுங்காக்க முயலுவோம். அப்போது அது சமர்ப்பனமான செயல் ஆகிறது. அதன் அடிப்படை அன்னையின் பண்புகள் நிறைந்த அக உணர்வுகள். அது வெளிப்படும் செயல்கள்.
மூன்றாவது, அன்னையே செய்வது போல செய்வது. இதற்கு எந்த அளவிற்கு உடலுக்கான பண்புகள், உணர்வுக்கான பண்புகள், எண்ணம், மனத்திற்கான பண்புகள் தேவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதை விட உயர்வு ஒன்று இல்லை என்னும் அளவிற்கு உடல், உணர்வு, மனம் ஆகியவை ஒன்றி ஒன்றை செய்வது. இறைவனுக்காக, இறைவன் விரும்பிய வகையில் எதிர்பார்ப்பு, அபிப்ராயம் இல்லாமல் செய்வது. இதன் அடிப்படை அன்னையின் பண்புகள் நிறைந்த எண்ணங்கள், உணர்வில் இறங்கி , செயலில் வெளிப்படுவது.
நான்காவது, அன்னையின் அவதார நோக்கத்தை புரிந்து ஏற்றுக் கொண்டு ,அதை ஒட்டிய வாழ்வை மட்டுமே வாழ்வது. அன்னை ஒரு பரிணாம சக்தி. அவர் நோக்கம் மனிதனை பரிணாமத்தில் உயர்த்துவது. அதிமனசக்தியை வெளிப்பட வைப்பது என்பது நமக்குத் தெரியும். அதை மட்டும் மனதில் கொண்டு வாழ்வை நடத்துவது. அதற்கான செயல் வடிவம், உணர்வு, மனப்பாண்மை கொண்டு வருவது. அவர் விரும்பிய மனிதனாக மாறுவது சமர்ப்பனமான வாழ்க்கை. சரணாகதிக்கு அழைத்து செல்வது.
ஐந்தாவது, நாமே இறைவன், நாமே அன்னை என்னும் நம் அவதார நோக்கத்தை வெளிப்படுத்தி அதற்கான பண்பை வெளிப்படுத்தி, அன்னை நம்மை ஏற்க வைப்பது அல்லது அன்னையை நம்முடன் ஒன்ற வைத்து அவர் கருவியாக நம்மை ஆக்குவது. அவருடைய சக்தி பரவ நாம் கருவியாக இருப்பது. இது சரணடைந்த வாழ்க்கை. நம் வாழ்வை அன்னை ஏற்று நடத்துவது.
இந்த ஐந்து நிலைகளும் மனிதன் செய்யக் கூடியவை. அதன் பிறகு, இதை தொடர வேண்டியது அன்னை. அங்கே சமர்பணத்திற்கோ, சரணாகதிக்கோ வேலை இல்லை. மேலே சொன்ன எல்லாவற்றிலும் இடையறாத அன்னை நினைவு இணைந்தே இருக்கும். காரணம் அப்படி இல்லை என்றால் இவற்றில் எதையும் செய்ய முடியாது என்பதால் இடையறாத நினைவு, மணிக்கொரு சமர்ப்பணம் போன்றவற்றை உள்ளடக்கியது இது.
சமர்ப்பணம் என்ற பெயரில் எதைச் செய்தாலும் அதில் நம் எதிர்பார்ப்பு, அபிப்பிராயம், முன்முடிவுகள், விருப்பங்கள், சவுகரியங்கள், குறிப்பாக இது இப்படித்தான், இவர் மூலம் தான், இங்கு தான், நடக்க வேண்டும் என்னும் எண்ணம் உணர்வு இருக்கவே கூடாது. இருந்தால் அதை முதலில் சமர்ப்பணம் செய்தே மேலே செல்ல வேண்டும். அகந்தையின் எந்த வடிவமும், உணர்வும், எண்ணமும், அதில் இருக்கக் கூடாது என்பது அடிப்படை.
ஏற்கனவே சொன்ன உதாரணம் என்றாலும் மீண்டும் சொல்வதால் அதிகம் புரியும் என்று நினைக்கிறேன். வெள்ளம் வந்த பிறகு ஏராளமான நஷ்டத்திற்கு பிறகு பணப் புழக்கத்தின் தேவை அதிகமாக இருந்தது. அதனால் அப்போது வந்த ஒரு project -டை அன்னையிடம் சொல்லிவிட்டு ,அதாவது மற்றவர்கள் ஐம்பதிலிருந்து அறுபது நாள் ஆகும் என்று சொன்னதை நான் 40 அல்லது 45 நாட்களில் முடிக்கிறேன் என்று ரிஸ்க் எடுத்து சொல்லி எடுத்தேன். நான் நினைத்ததை போல வேகமாக செய்ய வேண்டும் என்றால் எனக்கு ஒரு மிஷின் தேவைப்பட்டது. அதன் விலை 7 அல்லது 8 லட்சம் ஆகும். அப்போது அவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் நிலையில் நான் இல்லை. அதனால் அந்த நினைவை சமர்ப்பணம் செய்தேன். மறுநாள் நான் அந்த ஆர்டரை எடுப்பதை தெரிந்து கொண்டு அதன் distributor ஹைதெராபாதிலிருந்து அழைத்தார். இப்போது scheme-இல் இருப்பதால் இப்போது வாங்கினால் 30% டிஸ்கவுண்ட் தருவதாக சொன்னார். ஆனால் அது ஜெர்மனியிலிருந்து வரவேண்டும் என்பதால் 4 முதல் 6 வாரம் ஆகும் என்றார். அதையும் சமர்ப்பணம் செய்தேன். பின் அதன் பாம்பே டிஸ்ட்ரிபியூட்டர் போன் செய்து ஓரிரு முறையே பயன்படுத்திய டெமோ மெஷின் இருக்கிறது 50% டிஸ்கவுண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். என்றார். நான் அதையும் சமர்ப்பணம் செய்தேன். இங்கே கவனிக்க வேண்டியது. நான் இதையெல்லாம் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. அவ்வளவு பணம் இல்லாததால் வேறு வழியில்லாததால் செய்தது அது. மறுநாள் அந்த கம்பெனியின் சேல்ஸ் எக்சிகியூடிவ் அழைத்து நீங்கள் இவர்கள் பின்னால் எல்லாம் செல்லாதீர்கள் பாலக்காட்டில் ஒருவர் வாங்கி விட்டு உபயோகப்படுத்த தெரியாமல் இருக்கிறார். 2 லட்சம் வந்தாலும் கொடுத்து விடுவதாகச் சொன்னார். அவரைப் பாருங்கள் என்று நம்பர் கொடுத்தார். அதையும் சமர்ப்பணம் செய்தேன். சற்று நேரத்தில் கோயம்புத்தூரில் இருந்து ஒரு கால் – நாளை ஒரு site inspection -க்கு வர முடியுமா என்று. அதை அன்னை தந்த sanction-ஆக எடுத்துக்கொண்டு கோவை சென்று அங்கிருந்து பாலக்காடு சென்று அந்த மிஷினை பார்த்தேன். நன்றாக இருந்தது.
2 லட்சம் பேசி மறுநாள் அரேஞ்ச் செய்து தருவதாக சொல்லி விட்டு மறுநாள் மதியம் பணத்துடன் சென்றேன். ஆனால் அவர் இல்லை. அவருடைய பால்ய பள்ளி நண்பர்கள் திடீரென வந்ததால், அவர்களுடன் அவர் trekking சென்றிருப்பதாகவும் office assistant-டிடம் கொடுத்து விட்டு செல்லுமாறும், மீதியை மறுநாள் பேசிக் கொள்ளலாம் என்றும் சொல்லி சென்றிருக்கிறார். நான் செய்த call-களையும் எடுக்கவில்லை. இங்கு தான் சமர்ப்பணத்தை பற்றிய குழப்பம் வந்தது. மேலும், இதையும் அன்னை செயல் என்று எடுத்துக்கொண்டு கொடுத்துவிட்டு வருவோமா என்னும் குழப்பமாக வந்தது. காரணம் இது போன்று மிஷின்களுக்கு தேவை குறைவு. அதுவும் பழைய மெஷினை என்னைப் போல ஒரு சிலரே வாங்க முடியும். அப்படி இருக்கும் போது இவ்வளவு அலட்சியம் ஏன் என்று தோன்றியது. அதாவது இந்த ஒரு வாரத்தில், முதல் முறையாக, நான் என் அபிப்பிராயம், என் அனுபவம், என் முன்முடிவுகள் முன்னே வருகிறது – பணத்தைத் தராமல் திரும்ப வந்து விட்டேன். அத்துடன் அந்த சமர்ப்பணம் முடிந்தது. என் பொதுப்புத்தியில் ஒட்டிய என் முடிவு சரியா அல்லது தந்திருக்க வேண்டுமா என்பதை இன்று வரை முடிவு செய்ய முடியவில்லை. பண விஷயங்களில் – பண்புகளை தாண்டிய தாக்கம் சமர்பணத்தில் இருக்கவே செய்கிறது. அது இல்லாமல், அன்னையிடம் கொடுத்த வாக்கு முக்கியம். வருவது அவர் விருப்பம் மட்டுமே என்று முழுவதும் எடுத்துக் கொள்ள முடிந்தால் அது முழுமையான சமர்ப்பணம்.
இது மட்டுமல்ல எந்த நிலை வரை சமர்ப்பணத்தை எடுத்துச் செல்லலாம்- உதாரணமாக கர்மயோகி இருக்கும் நிலைகளில் நாம் எடுக்க முடியாது. சமர்ப்பணத்தால் வருபவை falsehood -டுடன் வராது. உதாரணமாக 2011 இல் சுமார் 3 கோடி வருட turnover-ராக இருந்தபோது ஒன்பது கோடி single ஆர்டர் வந்தது .அதற்கு 30% கமிஷனாக கேட்டார்கள். அதை கர்மயோகிக்கு எழுதிய போது, அன்னை தருவது falsehood , லஞ்சம் போன்றவற்றுடன் வராது. அதனால் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை என்றார். அதே போல முன்பு சொன்ன ஐந்தாம் நிலை சமர்ப்பணத்தின் ஒரு வழியாக pulling -unlearning பற்றி பேசும் போது, அதையெல்லாம் நாம் நினைக்கவும் கூடாது. நம்மால் தாங்க முடியாது. அன்னையும் பகவானும் மட்டுமே செய்ய முடியும் என்றார்.
சமர்ப்பணம் சில நேரங்களில் opposite-ஐ energy செய்வது ஏன் என்பது போன்றவற்றை பற்றியும் சொல்லி இருக்கிறார். அதனால் சமர்ப்பணம் செய்தாலும் அதில் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
சொல்லி விட்டு, மறந்து விடு, என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒரு வகையான escapism , தப்பித்தல், நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது. அதையும் அன்னையே செய்ய வேண்டும் என்னும் கயமை அது. இழை இழையாக நாம் முயல வேண்டும் என்பதை half an hour with Mother என்னும் கட்டுரையிலும் Spiritual Oppulence preparation for token act என்பதிலும் விளக்கி இருப்பார். அதில் அவர் கொடுத்திருக்கும் parabolic curve பற்றி சில முறை குறிப்பிட்டு இருக்கிறேன்.
இந்தக் கட்டுரைகளில், நேற்றை விட இன்று ஒரு இழை முன்னேற்றம் போதும் என்கிறார். நேற்று செய்த best -இல் ஒரு இழை அதிகமாகவும், நேற்று செய்த தவறில் ஒரு இழை குறைவாகவும் இன்று செய்தால், அபரிமிதமான முன்னேற்றம் வரும் என்கிறார்.
அதன் கணித formula -க்களில் ஒன்றில் பொருத்திப் பார்த்த போது ஒரு ஆச்சரியமான உண்மை வெளிப்பட்டது. நாம் 1% பண்புகளை அதிகப் படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணிதப் படி அது ஒரு வருடத்தில் 1.0E365 என்றாகிறது.
அதாவது 37% முன்னேற்றம் ஒரு வருடத்தில் – செயலில், உணர்வில், மனப்பான்மையில் வருவதாக இருக்கும். ஆனால் உண்மையில் அது முழு மாற்றமாக கிட்டத்தட்ட 1000 மடங்கு மாற்றமாக இருக்கும். காரணம் அன்னைக்கு எதிரானது ஒரு இழை 1% குறைக்கும் போது, அதாவது 0.99E365 அதாவது 3% அதாவது நம் அகந்தையில் 3% குறைத்தால் கூட, அதில் இருந்து வெளியே வருவது 37% என்றால், அது ஒரு வருடத்தில் வருவது 1000 மடங்காக பலிக்கிறது. என் குணங்கள், திறன்கள் சிலவற்றில் ஏற்பட்ட மாற்றத்தில் அதை நான் பார்த்திருக்கிறேன். அதுவே power of consecration . சமர்பணத்தின் சக்தி.
இதற்கான விளக்கம் மேலும் தேவை என்றால் நாம் செய்து பார்த்து, அனுபவித்து, உணர்ந்து தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்த யோகத்திற்கு நாமே குரு என்பதால் நமக்கான சமர்பணத்தின் முறை எது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். படிப்படியாக உயர்த்த வேண்டும். அதோடு கர்மயோகி இது பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தலைப்பு வாரியாக குறிப்பு எடுத்து எழுதி படித்தாலும் இதை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள முடியும்.