பண விஷயத்தில் வாழ்வின் மறுமொழியை உருவாக்குவது எப்படி?
சுத்தம், ஒழுங்கு போன்றவை தரும் மறுமொழிகளை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம். திறமை, திறன், தரும் மறுமொழிகளைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். மனா மாற்றங்கள் தந்த மறுமொழிகளைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். அதனால் அவற்றுக்குள் திரும்ப செல்லாமல் – பணம் என்பது நம்பிக்கை,. பணம் வாழ்வின் மறுமொழியை நம்பிக்கையின் அளவிற்கே தருகிறது என்னும் கர்மயோகியின் இன்னொரு சட்டத்தை எடுத்துக்கொள்கிறேன்.
பணம் என்பது நம்பிக்கை என்றால் யார் மீது நம்பிக்கை. காகித பணம் என்னும் போது அது அரசு மேல் I Promise to pay to the bearer என்று இருக்கும் வார்த்தைகள் மேல் நம்பிக்கை. சமூகம் அதன் மேல் கொண்ட பொது நம்பிக்கை, பணத்தின் மேல் உள்ள நம் நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. அரசு தன் உறுதியை மாற்றும்போது ( உதாரணமாக -demonitization) சமூகமும் நாமும் நம்பிக்கை இழக்கிறோம். வேறு நாட்டிற்கு போனாலும் நம் நம்பிக்கை அந்த காகிதத்தின் மேல் இருப்பதில்லை. எந்த அரசு இந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கிறார்களோ அவர்கள் கரன்சிக்கு உலகளவில் மதிப்புண்டு. ( உதாரணம் டாலர்). ஒரு பேப்பருக்கு மதிப்பு வந்தது நம் நம்பிக்கையால். அது பலரின் நம்பிக்கையாக இருக்கும் . அது பரந்தது என்பதால் அந்த அளவிற்கு பணம் ஈட்டும் வாய்ப்பும் வளர்கிறது. கிரிப்டோ கரன்சி மீது நம்பிக்கை உலகளாவிய வாய்ப்பைத் தருகிறது.
இதற்கு மாற்றாக தங்கம் மேல் உள்ள மதிப்பை பார்ப்போம். அது யாருடைய நம்பிக்கையை ஓட்டியதல்ல. தங்கத்தை மேல் நமக்கு உள்ள நம்பிக்கை. அதே போல நம்பிக்கை உள்ளவர்களிடம் அது செல்லும். அதனால் அது குறுகிய வாய்ப்பையேத் தருகிறது.
அதாவது collective நம்பிக்கை அதிகமாக அதிகமாக பணம் பெரும் வாய்ப்பு அதிகம். சில கம்பெனி பெற்ற நம்பிக்கை சம்மந்தமே இல்லாத ஷேர் விலை பார்த்தால் அதன் மூலம் அது பெரும் வருமானதைப் பார்த்தால் ( example – byju , nyka ) இது புரியும். அந்த நம்பிக்கைக்குப் பின் உள்ள பண்பு என்ன என்று கவனித்தால் இது புரியும்.
பணத்துக்குத் தேவையானப் பண்பைத் தருவது நம்பிக்கையைத் தருவது. அது வாழ்வில் அபரிமிதமான வளத்தை வர வைக்கும்.
நான் கம்பெனி ஆரம்பித்தபோது – என் வாழ்க்கை வரலாறு சற்று குழப்பானது என்பதால் – கர்மயோகி அவர்கள் கொடுத்த ஒரே advice – keep your word – that will develop your strength என்றார். அதன் பொருள் அப்போது புரியவில்லை என்றாலும் அதை கடைபிடித்தேன். மார்க்கெட்டில் வார்த்தை மாறமாட்டேன் என்னும் பெயர் வந்தது. குறிப்பாக பண விஷயத்தில் நான் சொன்ன தேதி தவற மாட்டேன் என்னும் பெயர் வந்தது. சென்னை வெள்ளத்தில் என்னுடைய எந்திரங்கள் முற்றிலும் வீணானபோது அதை வாங்கவே என்னிடம் பணம் இருந்தது. ஒரு பெரிய ப்ராஜெக்ட் வந்தபோது அதற்கான முதலீடு இல்லையே என்ன செய்வது என்னும் கவலை வந்தது. அது வரை நான் யாரிடமும் கடன் பெற்றதில்லை. அப்போது ஒரு கம்பெனி நாங்கள் 75 லட்சம் வரை உங்களுக்கு கிரெடிட் தருகிறோம் , ப்ரொஃஜெக்ட் லிருந்து வந்த பிறகு தந்தால் போதும் என்றார்கள். keep your word – that will develop your strength என்பது ஒரு பண்பு என்பது அப்போதுதான் புரிந்தது. அந்த பண்பு மார்க்கெட்டுக்கு தந்த நம்பிக்கை 75 லட்சம். சில நாட்களுக்கு முன் ஒரு புது கம்பெனியிடம் பொருள் வாங்க வேண்டி இருந்தது. அட்வான்ஸ் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளுங்கள் என்றேன். அவர் உடனே இல்லை உங்களுக்கு எத்தனை கோடி கேட்டாலும் கிரெடிட் கொடுங்கள் என்று கம்பெனியில் சொல்லி விட்டார்கள் என்றனர். இத்தனைக்கும் அந்த கம்பெனிக்கும் எனக்கும் ஓரிரு மாதம் பழக்கமே.
இதைத்தான் பணம் என்பது நம்பிக்கை . நம்பிக்கை தருபவனுக்கு பணம் புரளும் என்கிறார். அது பண்பாக இருக்கலாம். டெக்னாலஜியாக இருக்கலாம், மக்களின் தேவையாக இருக்கலாம் ( example – microsoft , apple ).
ஆனால் மனிதன் மேல் நம்பிக்கை இவை எல்லாவற்றையும் தாண்டியது. அதற்கு ஆரம்பம் மனிதன் தன்னை நம்புவது – தன்னம்பிக்கை . அவன் அவனுடைய பண்புகள் மேல் வைக்கும் நம்பிக்கை எந்த அளவிற்கு சமூகத்தின் நம்பிக்கையாக மாறுகிறதோ அந்த அளவிற்கு வாழ்வு முன்னேற சூழல் அமையும். நாம் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடமே பணத்தை கொடுத்து வைப்போம். அது போலவே இது.
நம்மைச் சுற்றி உள்ள சிறு வேலை செய்யும் மனிதர்கள், (என் வீட்டருகில் உள்ள கணித டியூஷன் டீச்சர் ஒருவர் மாதம் 5 லட்சம் சம்பாதிப்பதாக சொல்கிறார்கள்) தொழிலாளிகள் , வியாபாரம் , banks , insurance போன்றவற்றை கவனித்தால் அதிக நம்பிக்கை பெற்றவர்களே அதிகம் சம்பாதிப்பது தெரியும். CONSCIOUSNESS APPROACH TO BUSINESS MANAGEMENT – இது போன்ற 10 முறைகளை சொல்லிருக்கிறார். அதை பின்பற்றிய அனைவருக்கும் வாழ்வுய் சரியான வளமான மறுமொழியையே தந்து இருக்கிறது.