வீடு தோறும் தியான மையம் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. இனி நான் தியான மையம் செல்ல வேண்டியது அவசியம் இல்லையா?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் subconscious பழக்கப்பட்டுவிட்டதால் , வழிபட ஒரு இடம் நம் மனதிற்கு, psychological experience -க்கு தேவைப்படுகிறது என்னும் அளவில் மையங்களை ஏற்றுக் கொள்கிறேன்.
அது ஒரு method , முறைகளுக்குள் அடங்கி விட்டதால், ஜீவனில்லாமல் செய்வதாகப் படுகிறது. ஆனால் பழக்கம் சுகமாக இருக்கிறது என்னும் அளவில் அதை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் வீடு தோறும் தியான மையம் என்னும் பேச்சு வந்ததற்கு காரணம் – நான் அறிந்த வரையில், புரிந்துக் கொண்ட வரையில், கர்மயோகி தியான மையங்களை consciousness for transformation , திருவுருமாற்றத்திற்கான, சித்தம், கனத்த சூழல் இருக்கும் இடமாக மாற வேண்டும், அதற்கு ஒரு தனி இடம் இருப்பது நல்லது என்று நினைத்து தியான மையங்கள் நடத்த அனுமதி கொடுத்தார். அதற்கு பல அடிப்படை நோக்கம், சட்டம், நடத்தை, முறைகள் ,என்று பலவற்றை பட்டியலிட்டு தந்தார். அதற்கு அடிப்படை அன்பர்கள் அன்னை சக்தி பலிக்க, அது பலருக்கும் கொண்டு செல்ல கருவியாக இருக்க வேண்டும் என்று தான். குறைந்த பட்சம் , ஒரு அன்பர் அன்னை அருளை முழுதும் பெறும் அளவிற்காவது சித்த உயர்வு பெறக் கூடிய இடமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதன் சுருக்கம் தான் causal plane என்று நான் சில நாட்களுக்கு முன் குழுமத்தில் எழுதியது. அது சமர்பணத்திற்கு, சரணாகதிக்கு கொண்டு செல்லும் என்று நினைத்தார். அதுவும் கடினமான பிறகு, தன் சித்தத்தை, தியான மையங்களில் நிலை நிறுத்த முயன்றார். My consciousness will be there today என்றோ, I am watching it in my mind என்றெல்லாம் mail-யில் எழுதியிருக்கிறார். அவர் நினைத்த அளவு முறையில் த்யானமயங்கள் இல்லை என்பதையே அது குறித்தது என்று நினைக்கிறேன். அதன் உண்மையான பொருளை கேட்க வேண்டும் என்று அவருடன் இருந்த போது எனக்குத் தோன்றவில்லை, நினைவும் இல்லை. அவர் அனுப்பிய mail -களை மீண்டும் இப்போது படிக்கும் போது தான், எவ்வளவு ஞானத்தை நான் தவிர்த்திருக்கிறேன் என்று புரிகிறது. அதுவும் சரி வராத போது, பூசலார் நாயனார் கதைகளை சொல்லி, உள்ளத்திருக்கோயில் என்னும் முறையை அன்னையை மனதில் வழிபடும் முறையை சொன்னார். சொன்னார். அதன் பிறகே ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தியான மைய சூழல் இருந்தால், குறைந்த பட்சம் ஒரு அறையிலாவது இருந்தால், வீட்டிலேயே அன்னை சூழல் இருந்தால் அதற்காகவாவது சற்றே உயர் மனப்பான்மையை பின்பற்றுவோமா , அவர் நினைப்பது நடக்குமா, அன்னை சக்தி இன்னும் அதிகமாக பரவுமா, என்பதற்காகவே அதை சொன்னார். நாமெல்லாம் இவற்றை ஒரு வழிப்படும் முறையாகவே பார்ப்பதால், அன்னை பட shelf -இல் ஒரு screen -ஐ போட்டு விட்டால், எது வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற நிலையிலேயே இருக்கிறோம். அன்னை ஒரு பரிணாமத்தை துரிதப்படுத்த வந்த சக்தி, அதற்கு இடம் கொடுப்பது நாம் அவருக்கு செய்யும் சேவை, என்பது புரியாத வரை தியான மையம் மட்டுமல்ல, வீடுதோறும் தியான மையம் என்பதற்கும் பொருள் இருக்கப் போவதில்லை. அதுவரை என்னை பொறுத்தவரை மரபில் கோயில் போல நமக்கு தியான எனக்கு மயம். தரிசன நாளில் செல்வது என்பது ஒரு பழக்கம் அதனால் செல்கிறேன்.