ஒரு சேவை ஸ்தாபனம் வளருவதற்குக் காரணம் ஸ்தாபகரின் ஏதோ ஒரு உயர்ந்த நோக்கம் பண்பு. அந்த நோக்கமும் பண்பும் அவருக்கு பின் தொடரும் போது அந்த ஸ்தாபனம் வளரும்.
ஒரு ஸ்தாபனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் -தம் சௌகரியத்தைக் மட்டும் கருதுபவர், தன் சுயநலம் மற்றும் தம் அந்தஸ்தை , இருப்பை நிலைப்படுத்திகொள்ள மட்டுமிருந்தால் ஸ்தாபனம் வளராது. முதலில் பிணக்கு வரும். பின் வளர்ச்சி வருமானம் குறையும். அதனால் அவர்களுக்குக்கான வருமானத்திற்கு பங்கம், குறைவு வரும்போது வேறு
வழிகளில் அதை பெற / சுருட்ட ஆரம்பிப்பார்கள். பண்புகளின் வழியில் செயல்களை நடத்தாமல் குறுக்கு வழியில் ( லஞ்சம் -எமோஷனல் ப்ளாக் மெயில் போன்றவை) / நடத்த ஆரம்பிப்பார்கள். ஸ்தாபனம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் நோக்கத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும். பின் அழியும். ஒரு காலத்தில் பெயர் பெற்ற – இன்று இல்லாமல் போன எல்லா வியாபார , அரசியல், ஆன்மீக ஸ்தாபனங்களை , அதன் வரலாற்றை பார்த்தால் இது புரியும்.
அதனால் தான் அன்னை சேவையை நோக்கமாகக் கொண்ட ஸ்தாபனங்கள் – ஸ்தாபர்களுக்குப் பின் – அந்த நோக்கத்தை கொண்ட தலைமை இல்லையென்றால் மூடப்படவேண்டும் என்றார்.
இதை கர்மயோகி அவர்கள் – கீழ்க் கண்டவாறு கூறுகிறார்.
சேவையோ , வியாபாரமோ – ஒருவரால் அபரிமிதமாக வளரும்போது – அதனால் அவரைச் சுற்றியுள்ள குடும்பம் உறவுகள் சமுதாயம் வளரும்போது – அதை அவரது எண்ணத்தால் என்று நினைக்கிறோம். இல்லை. அது அவரின் குடும்பம் / பரம்பரை பல காலம் செய்த நல்லெண்ணத்தால் ஆர்வத்தால் அந்த குடும்பத்தில் ஒரு நல்ல ஆத்மா உருவாகும்படி செய்தது. அதை புரிந்து அடுத்தத் தலைமுறை அந்த பண்புகளை எடுத்துக்கொண்டால் அனைத்தும் வளரும். இல்லையென்றால் அடுத்து வரும் தலைமுறை அனைத்தையும் அழிக்கும். பெரிய குடும்பங்கள் அழிந்த விதத்தை கவனித்துப்பார்த்தால் இது புரியும்.
முழுமையான இறைவன் பகுதிகளிலான உலகைச் சிருஷ்டித்தான். பகுதி தன்னை வலியுறுத்தினால் மீண்டும் முழுமையை அடையமுடியாது. நோக்கமும், சுமுகமும், முழுமையும் மீண்டும் இறைவனையடைய உதவும் என்பது The Life Divineஇல் முக்கியக் கருத்து.
ஒரு மையத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் அதற்கான பண்புகளில் இருந்து விலக ஆர்மபித்த போது கர்மயோகி அவர்கள் பொதுவாக எழுதியது.
- வெவ்வேறு தன்மையான மனிதர்கள், வெவ்வேறு நோக்கத்தில் ஒரே ஸ்தாபனத்தில் வெவ்வேறு பலனுக்காக வேலை செய்தால், ஸ்தாபனத்தின் நோக்கத்தை விட்டு செய்தால் ஸ்தாபனம் தன் சக்திக்குக் குறைந்ததையே சாதிக்கும். மையத்தில் அது நடந்தால் மையத்திற்கு வருபவர்களுக்கு அருள் கிடைக்காது. அது முரண்பாடான சோழலைச் சரி செய்யவெ செலவாகும்.
- தலைவரின் அன்னை கட்டுப்பாட்டுக்குத் தானே உடன்படும் அளவில் ஸ்தாபனம் உருவாகிப் பலன் தரும்.
- ஒரு ஸ்தாபனத்திலுள்ளவரை, அன்னை கோட்பாடுகளை ஏற்க அழைப்பது, உழுவதன் முன் நடுவது போலாகும்.
- நடைமுறையில் சமூக ஸ்தாபனம், தலைவரின் அகவுணர்வின் உயர்வால், அன்னை ஸ்தாபனமாகும் முறை அது.
- செல்வம், அரசியல், ஸ்தாபனம் ஆகியவற்றில் இரண்டாம் தலைமுறை, அளவுகடந்த சௌகரியத்தை அனுபவிப்பது இயற்கை. அளவுகடந்த உயர்ந்த கட்டுப்பாட்டைத் தானே ஏற்பது முறை. இல்லையென்றால் மூன்றாம் தலைமுறை அழிக்கும்.
- கணவன், மனைவி இதே போன்ற மனமாற்றத்தை ஏற்றால் நரகமாக இன்றுள்ள வீடுகள் சுவர்க்கமாக மாறும். நாம் ஏற்க வேண்டியது அன்னையை. அன்னையை மட்டுமே. அவரின் பண்புகளை மட்டுமே.
- அவர் ஏற்படுத்திய ஸ்தாபனத்தை, அவருடன் இருந்தவர்களை, நாம் அன்னையாகக் கருதுவது தவறாகும். அன்னை வேறு, ஸ்தாபனம் வேறு.
- அன்னையை மட்டும் ஏற்றால் அருள் செயல்படும். ஸ்தாபனம் வேறு, அதன் போக்கு வேறு.
- ஆஸ்ரமத்தின் 30 KM சுற்றளவில் இருப்பதே புண்ணியம் என்றவர் – சமாதி பூவின் ஒரு இதழும் அன்னையே என்றவர் பின் சமாதிக்கு / ஆஸ்ரமத்திற்கு செல்பவர் துன்பத்தையே அனுபவிக்க நேரிடும் என்று கூறியதற்கு காரணம் இதுதான்.
இது போன்ற வித்தியாசங்களை நாமறிதல் அவசியம். இல்லையென்றால் நமக்கு வரும் பிரச்சினைகளின் காரணத்தை நாம் கவனிக்காமல் விட்டு விடுவோம். யாருடைய தொடர்பு நமக்கு பிரச்சினையை கொண்டு வருகிறது என்பதை கவனிக்காமல் விடுவோம்.