Share on facebook
Share on telegram
Share on whatsapp

டோக்கன் ஆக்ட் – ஒரு ஆயுத்தம்

டோக்கன் ஆக்ட் செய்து பார்க்க ஒரு விஷயத்தை  எடுத்து கொண்டால் – அது பற்றி கர்மயோகி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை முழுதுமாக புரிந்து செய்வது -நடக்கும் விஷயங்களின் பொருள் என்ன என்பதை புரிய வைக்கும். அதற்காக நான் ஆரம்பித்த  முறை கர்மயோகி அவர்களின் புத்தகங்களுக்கு ஒரு index போடலாம் என்னும் அளவிற்கு வளர்ந்தது.

நான் செய்தது: 2006இல் மாற  வேண்டும் என்று நினைத்தபோது – மாற வேண்டிய இடங்களை , பெற வேண்டிய  திறமைகளை பண்புகளைப் பற்றிய  குறிப்புகளை  சுமார் 50 தலைப்புகளாக பிரித்தேன்.  அன்றிலிருந்து நான் படிக்கும் புத்தகத்தில் அந்த  தலைப்பு  பற்றி வந்தால் புத்தகத்தின் பெயரையும் பக்க எண்ணயும்   எழுதி வைப்பேன். அது 2015 இல் அப்பாவின் புத்தகங்களுக்கு index ஆக வெளியிடலாம் என்னும் அளவிற்குச் சேர்ந்தது.  ஆனால் December 2015 சென்னை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்தேன். இப்போது எழுதுவது எல்லாம் நினைவில் இருந்தும் , மின் அஞ்சலில் அப்போது  சிலருக்கு  அனுப்பிய மீதியும் தான். ஒரு மாதிரியை கீழே கொடுத்துள்ளேன்.

ஆர்வம் மற்றும் அழைப்பு.

அருளமுதம் -5

அன்னை பராசக்தியின் அவதாரம் -38, 217.

அன்னையின்  அருள் -15

அன்னையின் வாழ்வில்  -13,93,184

பிரார்த்தனையும் சமர்பணமும்  -1

சிறியதும் பெரியதும்  -6

பிரார்த்தனை – நமக்காக, பிறருக்காக

அருளமுதம்  -81,205,314

ஆத்மசோதனை  -95,138,146,226

அயிரத்தில் ஒருவர் -58,95,96,100,105,108,245.

புஷ்பாஞ்சலி -66,197.

அன்னையின்  அருள் -34,61,218.

அமிர்தம் -231,241.

அதிர்ஷ்டம் -31,114,131.

ஸ்வரூபம் சுபாவம் -14.

உள்ளே  வேலை இருக்கிறது -1,11.

இதைத்  தொடங்குவதற்கு, ஒரு நோட்புக் எடுத்து நடைமுறை பயன்பாட்டிற்கு கொண்டு வர நினைக்கும் அல்லது நீங்கள் எதிர்கொள்ள நினைக்கும் தலைப்புகளை  எழுதுங்கள். உதாரணமாக, சுபிட்சம் அல்லது வருமானம் பொதுத் தலைப்பாக இருக்கும். அதில் வேலையின் மூலம் வருமானம், மனமாற்றத்தின் மூலம் வருமானம் , திறமை அறிவு மூலம் வருமானம் என்று  நீங்கள் செய்ய விரும்பும் தலைப்புகளை உப தலைப்புகளாக பிரித்து கொள்ளலாம்.

இதே போல health,non-reaction, philanthropy, helping others, human relationships etc…, என்று எவ்வளவு  தலைப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அவ்வளவு தலைப்புகளாகப்  பிரிக்கலாம். போகப்போக இதில் ஆர்வம் வரும்போது அது பல கிளை தலைப்புகளாக பிரிக்கத் தோன்றும்.

இதைச் செயல்படுத்த  ஒவ்வொரு மணிநேரமும் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் நீங்கள் என்ன செய்கிறீர்கள், – 8-10, 10-12, 12-1 போன்றவற்றை எழுதுங்கள், நீங்கள் எவ்வளவு சோம்பலாக இருக்கிறீர்கள்,  எவ்வளவு பண்பு , நடத்தை, மனப்பான்மை குறையாக  இருக்கிறது நீங்கள் எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறீர்கள், மற்றவர்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன, உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் விஷயங்கள் எவை, ஆட்கள் யார் என்று  அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். செய்கிறோமோ இல்லையோ நாம் யார் என்னும் விழிப்பு நிச்சயமாக வரும். அதை வைத்து உங்களுக்கு நீங்களே challenge set செய்யுங்கள். கர்மயோகி சொல்லும்- சிலர் சொற்பொழிவுகளில் சொல்லும்- க்ஷண நேரத்தில் முன்னேறலாம் என்று இல்லாவிட்டாலும் படிப்படியாக முன்னேறலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles