இடையறாத நினைவு என்றால் அன்னையை நினைப்பது மட்டுமே என்று நினைக்கிறோம். பக்தி வேண்டுமானால் வளரலாம். அன்னை விரும்பும் பண்புகள் வளருமா?
இடையறாத நினைவு தரும் பலனை அன்னைக்குச் செய்யும் அனைத்தும் தரும் என்கிறார் கர்மயோகி.
அப்படி செய்து பார்க்க கூடிய சில வழிகள்.
- பொய்யையும் , பொய்யின் வடிவங்களையும், பொய்யான செயல்களையும் , நண்பர்கள் ,உறவுகள் உருவில் பாசம் என்ற பெயரில், சமுதாய பண்பு என்ற பெயரில் ஏற்று கொள்ளாமல் இருப்பது எப்படி என்று இடையறாது நினைப்பது.
- அன்னைக்கு தேவை குறைந்த பட்ச தேவையான நல்ல ஒழுக்கம், நல்லெண்ணம், சுத்தம், ஒழுங்கு, தணிவான குரல், சுயநலமும் கீழான எண்ணங்களும் அழிந்த நிலை ஆகியவற்றைப் பெறுவது எப்படி என்று இடையறாது நினைப்பது.
- சுயநலம், கர்வம், பொறாமை, மடமை, கோபம், நான் என்னும் உணர்வு, மரியாதை உணர்வு, சந்தேகம் ஆகியவை அகந்தையின் வடிவங்கள் என்பதால் உயர்மனப்பான்மைக்கு, பரிணாம வளர்ச்சிக்கு அவை தடை என்பதால் அன்னை அவற்றை தனக்கு எதிரானவை என்கிறார். அதை எப்படி விலக்குவது என்று இடையறாது நினைப்பது.
- அன்னையின் கருத்துகளையும் அன்னைக்கு ஏற்ற உணர்வுகளையும் அன்னை ஏற்று கொள்ளும் பழக்கங்களையும் , அவர் விரும்பும் பண்புகள், அவர் சட்டங்கள் ஆகியவற்றை புரிந்து தெளிந்து பின்பற்றி மேலும் மேலும் அன்னையை ஏற்று கொள்வது எப்படி என்று இடையறாது நினைப்பது.
- அவர் நம்மை ஏற்று கொள்ள வேண்டும். நாம் அவரின் கருவியாக வேண்டும் என்று இடையறாது நினைப்பது.
- அன்னை விரும்பும் பண்புகளை நடைமுறை படுத்த முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் பற்றிய விழிப்புணர்வும் இடையறாத நினைவே.
எந்த சூழ்நிலையிலும் நாம் எப்போதுமே Past experience, prejudice, opinions, comforts ஒட்டியே செயல் படுகிறோம் என்று புரிவது.
திட்டமிட்டு ஏற்கனவே செய்த தவறுகளைத் திருத்தும் வழிகளை அல்லது எதிர்காலத்திற்குத் தேவையானதை செய்வதில்லை என்று புரிவது.
பரிணாமத்தையும் வளத்தையும் ( Evolution & Prosperity) கொண்டுவரும் விஷயங்கள் எவை, அவை இரண்டுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை அறிவது
நம் personality falsehood கு தரும் ஆதரவு, அதன் பின் உள்ள இயலாமை – அதனால் நாம் மாற வேண்டிய இடங்கள் எது என்று புரிவது .
நம் உள்ளே உள்ள மனநிலையே வெளியே நடக்கும் விஷயங்கள் என்னும் பார்வை.
நம் உடலை , உணர்வை அறிவை எப்படி organize செய்கிறோம் என்பதில் கவனம்.
பிரச்சினை வந்த அதே தளத்தில் நின்று அந்த பிரச்சினையை த் தீர்க்க முடியாது.the problems cannot be solved at the same level it is created.
நாம் அன்னையை நோக்கிப் போவது அல்ல , அன்னையை நம்மை நோக்கி வரவைப்பது அந்த அளவிற்கு அன்னை விரும்பும் பண்புகளை பின்பற்றுவது.
நமக்கு முன் ஒவ்வொரு கணமும் உள்ள choice குறித்த அறிவு (what is my choice , what is mothers choice )
நம்முடைய மிகப்பெரிய பலம் நம் ஆன்மா மற்றும் அது வெளிப்பட உதவும் சூழல் என்னும் ஞானம்.