நம்மிடம் படிக்கும் பழக்கம் என்பது பரீட்சைக்கு மட்டும் படிக்கும் பழக்கம். அல்லது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து படிக்கும் பழக்கம். லைப் டிவைனையோ, மலர்ந்த ஜீவியத்தையோ படித்தால் கூட, உலகம் மோட்சம் ஸ்ரீ அரவிந்தம் படித்தால் கூட – prosperity – என்னும் ஒரு நினைவு பெரும்பாலும் இருக்கும் அல்லது சற்றே மனவளர்ச்சி என்னும் நிலையிலேயே படிக்கிறோம். அதுவே ஒரு நிர்ப்பந்தத்தைத் தருகிறது. நம் அபிப்ராயங்களுக்கு ஏற்பப் புரிந்துக் கொள்கிறோம். அல்லது நம் மனதில் எழும் முக்கியமான கேள்விக்களுக்கு பதில் தேடுகிறோம். அதாவது முடிவு செய்து விட்டே எதையும் படிக்கிறோம். நமக்கு அதற்கு உரிய பதிலே கிடைக்கிறது அப்படி இல்லாமல் படிக்கும் போது – எழுதியவரின் எண்ணம் மனநிலை பற்றி கவனமாக இருந்தால் – நமக்கு அந்த நேரத்தில் தோன்றுபவற்றை அப்படியே குறிப்பு எடுத்தால் அல்லது நம் concentration கெடாத அளவிற்கு அடிக்கோடிட்டு குறிக்க முடிந்தால் – அது ஏதோ ஒரு சாரத்தை புரிந்து கொண்டதால் ஒரு முறை கையால் எழுதியது என்பதால் உடல் மறக்காது.
எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது என்றாலும் – தமிழைவிட ஆங்கில கட்டுரைகள் தெளிவாக இருப்பததாகச் சிலர் சொல்வதற்குக் காரணம் – கர்மயோகி அவர்களின் ஆங்கில கட்டுரைகளை அத்தகைய முறையோடு அணுகியதே. சாரம் புரிந்தால் தான் அதை குறிப்பு எடுக்க முடியும் . புரிந்ததை எழுதும் பொது தெளிவு வரும். அல்லது தெளிவு பெற்றதையே எழுத முடியும்.
ஆனால் தமிழில் படிக்கும்போது – இதுதான் எனக்குத் தெரியுமே – என்னும் எண்ணம் அல்லது ஏற்கனவே பலர் சொல்லி புரிந்து கொண்டது , வஸ்வில் பெட்ரா அனுபவங்கள் அதன் சாரமாக இது இப்படித்தான் என்னும் முன் முடிவுகளுடனேயே படிப்பதால் புரிந்து கொண்டது முன்னே ஓடுகிறது என்பதால் நம் ஞானம் அறிகுறியா ஞானமாகி விடுகிறது.