Share on facebook
Share on telegram
Share on whatsapp

துன்பமும் விழிப்புணர்வும்

விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு விழிப்புணர்வு வருவதற்கு வலி தேவைப் படுகிறது. நம்முடைய விழிப்புணர்வு அதிகரிக்கும் வரையில் வாழ்க்கை காத்திருக்கிறது. அந்த விழிப்பு வாராவிட்டால் ஒரு தோல்வியைத் தந்து, அவ்விழிப்பை வரவழைக்கிறது.  அப்படிப் பார்த்தால் துன்பங்களும் அருளின் வெளிப்பாடுகளே  ஆகும். ஏனென்றால் அது நமக்கு விழிப்புணர்வு இல்லாத இடங்களில் விழிப்புணர்வை வரவழைக்கிறது. இப்படி விழிப்புணர்வு வரும்பொழுது நம் பர்ஸனாலிட்டியில் தாழ்ந்துபோயிருக்கிற இடங்கள் விழிப்புணர்வுள்ள உயர்ந்த இடங்களோடு ஒன்று சேர்கிறது.

துன்பத்தில் இருந்து விழிப்புணர்வு பெற வேண்டிய தேவை இல்லாமல் நேரடியாக பெற கர்மயோகி கூறும் சில வழிகள்:

எந்த சூழ்நிலையிலும் நாம்  எப்போதுமே Past experience, prejudice,  opinions, comforts ஒட்டியே செயல் படுகிறோம் என்று து புரிவது. 

திட்டமிட்டு ஏற்கனவே செய்த தவறுகளைத் திருத்தும் வழிகளை அல்லது  எதிர்காலத்திற்குத்  தேவையானதை செய்வதில்லை என்று புரிவது.

பரிணாமத்தையும் வளத்தையும் ( Evolution & Prosperity) கொண்டுவரும் விஷயங்கள் எவை, அவை இரண்டுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை அறிவது 

நம் personality falsehood கு தரும் ஆதரவு, அதன் பின் உள்ள  இயலாமை – அதனால் நாம் மாற வேண்டிய இடங்கள் எது என்று புரிவது  .

நம் உள்ளே உள்ள மனநிலையே வெளியே நடக்கும்  விஷயங்கள் iஎன்னும் பார்வை.

நம் உடலை , உணர்வை அறிவை எப்படி organize செய்கிறோம் என்பதில் கவனம்.

பிரச்சினை வந்த அதே தளத்தில் நின்று அந்த பிரச்சினையை த் தீர்க்க முடியாது.the problems cannot be solved at the same level it is created.

நாம் அன்னையை நோக்கிப் போவது அல்ல , அன்னையை  நம்மை நோக்கி வரவைப்பது அந்த அளவிற்கு அன்னை விரும்பும் பண்புகளை  பின்பற்றுவது.

நமக்கு முன் ஒவ்வொரு கணமும் உள்ள choice  குறித்த அறிவு  ( what is my choice , what is mothers choice ) .

நம்முடைய மிகப்பெரிய பலம் நம் ஆன்மா மற்றும் அது வெளிப்பட உதவும் சூழல் என்னும் ஞானம்.

வாழ்க்கை முரண்பாடான இரட்டைகளை, எப்போதும் நம் முன் வைத்து கொண்டே இருக்கிறது. அறிவுடைமை, அறியாமை, இன்பம், துன்பம், சுதந்திரம், கட்டுப்பாடு, ஒற்றுமை, வேற்றுமை, இலாபம், நட்டம் என்ற பல இரட்டைகள் இருப்பதைப் போல வாய்ப்புகளும் துன்பங்களும்  ஒரு முக்கியமான இரட்டையாக நம் வாழ்க்கையில் இருக்கின்றன. வாழ்க்கையில் சிரமங்கள் மட்டுமேயிருக்கின்றன, வாய்ப்புகளே இல்லை என்றிருந்தால் வாழ்க்கை பொறுக்க முடியாத அளவிற்குப் பாரமாகிவிடும். மாறாக, வாய்ப்புகள் மட்டுமேயுள்ளன, சிரமங்களோ தடைகளோ இல்லை என்றாலும் போராடி வெற்றி பெறுவதிலுள்ள இன்பமும் போய்விடும். மனிதன் தமஸ் நிறைந்த ஜடமாகவும்  விழிப்புணர்வற்றவனாகவும் என்பதால் அந்த நிலை கரைய வேண்டும் என்றால் கடுமையாக உழைத் , அல்லது உணர்வில் அடிபட்டு   துன்பத்தை அனுபவித்தால் தான் அது கரையும்.

அது போல  மனிதனுக்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் தொடர்ந்து சிரமங்களைக் கொடுத்து நெருக்கடியை உண்டுபண்ணிக் கொண்டிருந்தால்தான் சிரமங்களிலிருந்து விடுபடுவதற்காகவாவது முன்னேற வேண்டும் என்ற விழிப்புணர்வே மனிதனுக்கு வரும் என்று இயற்கை புரிந்து கொண்டிருப்பதால் இப்படி ஒன்றன்பின் ஒன்றாகச் சிரமங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்படிபட்ட அறியாமையில் இருந்து விடுபட்டு விழிப்புணர்வு பெறவும் அவனைச் சாதிக்க வைக்கவும், அவனை முன்னேற்றவும் ஒரு அழுத்தத்தை  உண்டுபண்ணுகின்ற கருவிகளாக சிரமங்களும், நெருக்கடிகளும் மனித வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »

More Articles

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »