ஒரு வேலையை பிரித்துப் பார்க்கும்போது – அதை நம் உடல், உணர்வு, மனம், ஆன்மா என்று பிரித்துப் பார்க்கும் போதுதான் நாம் இருக்கும் நிலை நமக்கு புரியும். நாம் செய்ய வேண்டுமே என்று செய்வது, ஜடமாக செய்வது, உடல் உழைப்பு. அதையே வாங்கும் சம்பளத்திற்காக அல்லது வேலைக்காக சற்று ஈடுபாடோடு செய்பவர்கள் உணர்வுடன் அதாவது உணர்வில் வேலை செய்பவர்கள். அதை வைத்து எப்படி முன்னேறலாம் என்று சிந்தித்து செயல்படுபவர்கள் மனதின் மூலம் செயல்படுபவர்கள். அதில் ஆக்கபூர்வமான பொது நோக்கில் செய்வது போன்றவை இருக்கும். (கிரியேட்டிவிட்டி & இன்னோவேஷன்). அதை ஒரு பொது நோக்கில் செய்வது, இந்த அனுபவம், என் திறமையை வளர்த்து நான் தொழிலதிபர் ஆக வேண்டும் என்று நினைத்து செய்வது அல்லது இந்த கம்பெனி பலமடங்கு வளர வேண்டும் என்று நினைத்து செய்வது அல்லது அதை பயன்படுத்துவோரின் முன்னேற்றத்திற்காக என்று பிறர் நோக்கில் செய்வது அனைத்தும் ஆன்மாவின் மூலம் வேலை செய்யும் வகைகள்.
கடின உழைப்பு அதிக வருமானம் தரும் என்றால் மூட்டை தூக்குவதும் கடின உழைப்பு தான். அந்த வருமானத்தில் வரையறை லிமிடேஷன் நமக்குத் தெரியும். வருமானப் பற்றாக்குறை என்பது நம்மை சுற்றியுள்ள வளத்தை பார்க்க முடியாத பழக்கம் என்கிறார் ( Scarcity in income is the habit of not seeing abundance around). மேலே சொன்ன தொழில்சாலைக்கு வெளியே மூட்டை தூக்கும் தொழிலாளி, உள்ளே உள்ளவாய்ப்பை பார்க்காதது போல நாம் நம் உள்ளே உள்ள வாய்ப்பைப் பார்ப்பதில்லை. வருமானம் அதிகரிப்பு என்பது அன்பர் எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவதை பொருத்தது. அதற்கான (ஸ்கில் அண்ட் கெப்பாசிட்டி) திறமை மற்றும் திறன் ஆகியவற்றை வளர்க்க விரும்புவது, அப்படி பெற்றதை எந்த அளவுக்கு கொடுக்க தயாராக இருப்பது என்பதை பொறுத்தது. அந்த ஸ்கில் மற்றும் கெப்பாசிட்டி தான் நமக்குத் தேவையான தெளிவைக் கொடுக்கும். தன்னம்பிக்கை கொடுக்கும். முதலில் நம் கெப்பாசிட்டியை நம்புவோம். பின் மார்க்கெட் கெபாசிட்டியை நம்புவோம். அதன்பின்தான் அன்னையின் கெப்பாசிட்டி மாற முடியும். இல்லையென்றால் நேரடியாக அன்னையின் வழிகளுக்கு சென்றால் – அது மூட நம்பிக்கையாக மாற வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக – non -initiative சோம்பேறித்தனமாக மாறிவிடும்.
வருமானம் ஈட்டுவது என்பது பரிட்சையில் தீர்வு ஆவது போல, தேர்தலில் ஜெயிப்பது போல ஒரு செயல் தான் என்கிறார். அந்த திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்கிறார் கர்மயோகி. நம் நோக்கம் நமக்கு தெளிவாக இருக்கவேண்டும், அதை அடைவோம் என்ற நம்பிக்கை வேண்டும், அதற்கு சக்தி தரும் அளவிற்கு பேரார்வம் வேண்டும், அதற்கான முறை, வழி தெரிய வேண்டும், அதை செயல்படுத்த வேண்டும். இவை அனைத்திற்கும் தேவையான சக்தி, திறமை, ஆற்றல் ஆகியவற்றை நாம் முழுமையாக தரவேண்டும். இந்தப் பகுதிகள் எல்லாம் தனித்தனியாக வருமானத்தின் அளவை நிர்ணயிக்க கூடியவை ( each component decides the quantum of money earned) .இந்த பகுதிகள் அனைத்தும் சுமுகமாக ஒன்றிணைந்து செயல்பட்டால் அபரிமிதமான வருமானம் நிச்சயம் என்கிறார் கர்மயோகி. இந்தப் பகுதிகள் அனைத்தும் அன்னையின் பண்புகளால் நிரப்பப்பட்டால் அன்பர் சம்பாதிக்க முடியாத அளவு இல்லை என்கிறார்.
நாம் இன்றுள்ள நிலை, நம் திறமை, ஆற்றல், சமூகம், சூழல், நம் விருப்பு, வெறுப்பு ஆகியவற்றிற்கு உட்பட்ட நிலை என்பதை அமைதியாக சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஆசை இருக்கும், ஆனால் நம்பிக்கை இருக்காது, அல்லது அதற்கான திறமையை, திறனை, உயர்த்த முயற்சி எடுக்க மாட்டோம். வசதிகளை விட்டுத் தரத் தயாராக இருக்க மாட்டோம். சுருக்கமாக சொன்னால் உடல் வளையாது, உணர்ச்சிகளில் இருந்து, நம் வசதிகளில் இருந்து நாம் வெளியே வரமாட்டோம். மனம் முன் முடிவுகளிலிருந்து. அபிப்ராயங்களில் விருப்பு வெறுப்புகள் இருந்து வெளியே வராது. உதாரணமாக மாதம் எட்டாயிரம் ரூபாய்க்கு 12 மணி நேரம் வேலை பார்த்த டீச்சர் அன்னையிடம் வந்தபிறகு, மாதம் 30 ஆயிரத்திற்கு ஆறு மணி நேரம் வேலை பார்த்தால் போதும் என்று கல்கத்தாவில் இருந்து அழைப்பு வந்தபோது, அங்கு தென்னிந்திய வகை உணவுகள் கிடைக்காது என்பதால் அதை ஏற்கவில்லை. அதுபோன்ற நிலையிலேயே நாம் பெரும்பாலும் இருக்கிறோம். நம்மை சுற்றி Higher Resources அபரிமிதமாக இருந்தாலும், அவை நம்மை அழைத்தாலும், நாம் அவற்றை கண்டுகொள்வதில்லை. அவையெல்லாம் நம் நிலைக்கு உட்பட்டு வர வேண்டும் என்றே நினைக்கிறோம்.
தினம் தினம் நூறு கோடி, ஐநூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று காதுகளில் விழுந்தாலும், நம்மை சுற்றி அவ்வளவு பணம் இருக்கிறது, யாரோ இதையெல்லாம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் அப்பா சொல்லும் குறைந்தபட்சம் 100 கோடி கூட நம் நம்பிக்கை தொடுவதில்லை. மூட்டை தூக்க முயல்வோமே இது தவிர நூறு கோடிக்கு அப்பா சொல்லும் முறையை மனநிலையை கொடுக்கத் தயாராக இல்லை என்பதே உண்மை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நமக்குத் தெரியாத ரகசியம் இல்லை. ஆனால் பின்பற்றுவதில்லை என்பது தெரிகிறது. தெரிந்த விஷயத்தை சின்ன வேலையில் செய்ய முடியாதவன், பெரிய வேலை செய்ய முடியாது, சின்ன வேலை செய்பவனால் பெரிய வேலையையும் செய்ய முடியும். வருமானம் உயரும்போது, அதற்கான அடிப்படையும் வளர வேண்டும் அல்லது அடிப்படைகள் வளர்ந்தால் வருமானம் உயரும் என்பது வருமானத்தின் ரகசியம் என்கிறார் கர்மயோகி. வருமானம் அதிகமாக வரும் போது அதற்கான பண்புகள் வரவில்லை என்றால் பவுண்டேஷன் இல்லாமல் உயரமாக போகும் கட்டிடம் போல. என்று வேண்டுமானாலும் விழுந்து விடலாம். அதுவே உயரத்திற்கேற்ற அகலமான பவுண்டேஷன் அந்த உயரத்தை தாங்கும் அல்லது ஆழமான பவுண்டேஷன் அந்த உயரத்தை தாங்கும். நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள், மனிதர்கள் ஆகியவற்றை பார்த்தாலே இது புரியும்.
வருமானம் குறைவு அல்லது எவ்வளவு வந்தாலும் செலவு என்பதை எதைக் காட்டுகிறது என்றால் அது சரியான முறையில் வரவில்லை அல்லது சரியாக உபயோகப் படுத்தவில்லை என்பதை காட்டுகிறது. (Scarcity of money is to induce awareness that it is not earned rightly or spent rightly to make to progress from vital to mental to spiritual).அன்னை தரும் வருமானத்தை அன்னையின் பண்புகளே அபரிமிதமாக பெற முடியும். அந்த வகையில் அன்னையின் சிம்பலில் இருக்கும் 12 பண்புகளும் எந்தவிதத்தில் செயலில் வெளிப்பட்டாலும் அவை அவரின் அருளை பெற்றுத் தரக் கூடியவை. ( it is an expansive movement to be accomplished by expansive heart).
சில அன்பர்கள் – அதன் வெளிப்பாடுகளை கடைபிடித்து- பலன் அடைந்த ஒரு சில முறைகளைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்
முதலில் சொல்வது அதிகபட்ச வருமானத்திற்கு, அதிகபட்ச எனர்ஜி தேவை. அதை சேகரிப்பது நான் ரியாக்ஷன். எந்த விதத்திலும் எதிர்வினை செய்யாமல் இருப்பது அதற்கு காரணமாக கர்மயோகி சொல்வது வாழ்க்கை உன்னை முன்னேற்ற வரும்போது அது சில அவமதிப்பை அதாவது நீங்கள் மதிப்புமிக்கதாக போற்றும் சிலவற்றை அது தரும் பாதுகாப்பு சிலவற்றை விட்டு வெளியே வர வர வைக்கிறது.. ( during progress life wants you to observe humiliation). அதாவது comfort zone, prestige, status போன்றவைகளில் இருந்து வெளியே வர வைக்கிறது. இது நாமறிந்த புராண கதைகளிலும். தத்துவவாதிகளின். வாழ்க்கையிலும். விஞ்ஞானிகளின் வாழ்க்கையிலும். ஏன் பகவானின் வாழ்க்கையிலும் கூட நடந்திருக்கிறது. நம்மை தூண்டிவிடும், கோபப்படுத்தும், இகழும் எதற்கும் நாம் ரியாக்ஷன் காட்டாமல் இருப்பது நாம் நம் அத்தனை எனர்ஜியையும் சேமிப்பது. அதாவது நெகட்டிவ் விஷயங்களில் நம் எனர்ஜி செலவிடப்பட வில்லை அல்லது எதிராளியை, எதிர் நிலைகளை, பாதகமான சூழலை நாம் வலுப்படுத்த வில்லை என்று பொருள். அதேபோல எதிர்மறையான எண்ணங்கள், பிறருக்குத் தீங்கு இழைக்கும் எண்ணங்கள், உருவங்கள், உணர்வின் சந்தோஷங்கள் ஆகியவற்றை அடக்குவது மற்றும் துணிவான பேச்சு ஆகியவை இத்தகைய பாசிட்டிவ் எனர்ஜியை சேமிக்கும் விஷயமாகும். நம் பழைய நினைவுகளை அசை போடுவது கூட cheap and childish mentatly that diispates energy என்கிறார் அன்னை. எரிச்சல், பிடிவாதம், ஒத்துழையாமை ஆகியவையெல்லாம் ரியாக்ஷனின் வெவ்வேறு பரிமாணங்கள். எல்லாம் போனாலும் வன்மம் மிச்சமிருக்கும். அதுவும் போகும்போது வருமானம் அதிகபட்சமாகும்.
அடுத்தது சுயநலமான நிலையை குறைந்தபட்சம் நம்மால் முடிந்த அளவிற்கு பரநலமாக்குவது. செய்யும் ஒவ்வொரு செயலிலும் சுயநலத்தோடு குறைந்தபட்சம் ஒரு பாரா நலத்தையோ அல்லது பொது நலத்தையோ கருத்தில் கொள்வது. ஒரு சிறு அளவு மன விசாலமும், பிறர் நிலை பார்வையும் வருமானத்தை அதிகப்படுத்தும்.
அடுத்தது பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல். தவறு என்று நாம் நினைக்கும் விஷயங்களில் உள்ள inner outer correspondence , life response, low consciousness , falsehood ஆகியவற்றுக்கும் அதற்கு மூல காரணமான நம் செயல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து. யார் தவறு செய்தாலும் அதற்கு மூலம் நானே என்று ஏற்றுக் கொள்ளுதல். அதற்கு ஆன்மீக முறையில் கடந்தகால சமர்ப்பணம், உணர்வில் பிறர் மீது உள்ள குற்றம் சம்பத்தப்பட்ட விஷயங்களை, மறப்பது, முடிந்தால் முயற்சி செய்து உடலால் அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுவது – என்பது போன்றவை பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதலின் சில வகைகள். .
குறைந்தபட்சம் அன்னையின் பண்புகளாக இந்த மூன்றையும் நம் வாழ்வில் கொண்டு வரும்போது அதிர்ஷ்டம் உள்ளே வருவதை காணலாம். சூழல் உயரும். சந்தோஷம் வரும். இதுவரை நகராத விஷயம் நகர ஆரம்பிக்கும். மாறாத மனிதர்கள் மாற ஆரம்பிப்பார்கள். அல்லது தடையாக உள்ளவர் விலகுவார். முன்னேற்றத்திற்கான அத்தனை விஷயங்களும் தானே தேடிவரும். நம் நெகடிவ் எல்லாம் பாசிடிவாக மாறும்.இதெல்லாம் நடக்கும் போது நம் விவேகத்தை பயன்படுத்தி நற்பண்புகளின் அளவை நிலையை உயர்த்த வேண்டும் அதற்கு ஏற்றவாறு வருமானம் அதிகமாகும்.