Share on facebook
Share on telegram
Share on whatsapp

சிந்தனை மூலம் பரிணாமம் – 2

  • அது pre-occupation என்ற நிலைக்கு மீண்டும்  கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல்   மிகப் பெரிய முன்னேற்றங்களிலிருந்து நம்மைத் தடுக்கிறது. குறிப்பாக நம் ஆன்மா பெற விரும்பும் உயர் ஞானத்தை பெறாமல் தடுக்கிறது.
  • சிறு விஷயங்களிலும் அதை செய்யலாம். உங்களின் ஓய்வு மற்றும் மந்தமான தருணங்கள் , நேரம் போகவில்லை அல்லது செயலாற்ற ஒன்றும் இல்லை என்று தேவையில்லாததை  செய்வது, பார்ப்பது, படிப்பது என்று இருக்கும் நேரங்களை சுவாரஸ்யமாக மாற்ற , முன்னேற்றத்திற்கான நேரமாக மாற்ற சிந்தியுங்கள் . செய்ய வேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பது புரியும்.
  • உங்களைச் சுற்றியுள்ள உறவுகள்,, நபர்கள், உடன் உழைப்பவர்கள் , மற்றும்  சுற்றுச் சமுதாயத்துடனான உங்கள் மன நிலையை அதிலுள்ள, சிறுபிள்ளைத்தனம்,  எரிச்சல், பொறாமை, கெட்ட எண்ணங்கள், கயமை, ஏமாற்று வேலைகள்   என்று அத்தனையும் மனக்கண் கொண்டுவந்து மன நிலையை சற்று உயர்த்துவது அதன் மூலம் நம்மைச்  சுற்றி ஒரு சுமுகம் வர சிந்திப்பது.
  • குறிப்பிட்ட காலத்தில் சிலர் சாதிப்பதை நாம் சாதிக்க ஏன் அதிக நாட்கள், வருடங்கள் எடுத்துக் கொள்கிறோம் ,அவரால் முடிந்தது ஏன் நம்மால் முடியவில்லை, நமக்கே  கூட சில விஷயங்கள் முன்னால்  நடந்தது  இப்போது நடக்கவில்லை  காரணம் என்ன. எங்கே தவறினோம், எங்கே குறை என்று சிந்திப்பது.
  • இன்னும் முன்னேற தேவையான அறிவு, திறன், நேர்த்தி, மனப்பான்மை, பேச்சாற்றால், சொற்களஞ்சியம் (vocabulary ) போன்றவற்றில் உள்ள முன்னேற்றத்திற்கான கருவை நாம்  எப்போதும் சிந்திப்பது. அதை வளர்த்து கொள்வது
  • உங்கள் பொறுப்புகளை, கடமைகளை, வேலைகளை எப்படி அலட்சியமாக செய்தீர்கள், தவிர்த்தீர்கள் அல்லது தள்ளி வைத்தீர்கள் என்பது பற்றி சிந்தியுங்கள். அதற்காக நீங்கள் சொல்லும் புத்திசாலித்தனமான காரணங்களைக் கண்டு வெட்கப்படுங்கள். உங்கள் முன்னேற்றம் 10 மடங்கு இருக்கும். அதற்கு எதிரான நிலை என்னவென்று சிந்தித்து அதை நடைமுறை படுத்துங்கள். உங்கள் முன்னேற்றம் 100 மடங்கு இருக்கும்.
  • உங்கள் சிந்தனை என்பது உங்கள் லட்சியம், ஆர்வம்  நோக்கம் ஆகியவற்றை நோக்கியே எப்போதும் இருக்கவேண்டும். அப்போதுதான் எந்தத்  திறமையை நம்பி உங்கள்  லட்சியத்தை ஏற்று கொண்டீர்களோ  அது அதிக பட்சமாக வெளியே வரும்.
  • உங்கள் personality பற்றி உங்களுக்கு ஒரு அபிப்ராயம் இருந்தால் அதைப் பற்றி சிந்திப்பது நல்லது. உதாரணமாக நீங்கள் கடின உழைப்பாளி, நேர்மையானவர் ( straight forward ), விட்டுக்  கொடுப்பவர், உறவுகள், நண்பர்கள், உடனுழைப்பவர் ஆகியோருடன், சுமுகமாக, அன்பாக இருப்பவர், முதலாளிக்கு, கம்பெனிக்கு  விசுவாசமானவர்  என்றெல்லாம் உங்களைப் பற்றி நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தைப் பற்றி சிந்தித்தால், உண்மையில் அதற்கு  எதிரானது தான் உண்மை என்னும் நிலை இருக்கலாம்.
  • இவையெல்லாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்று கர்மயோகி  அவர்கள் கூறும் சில உதாரணங்கள். 
  • குறைந்த பட்சம் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யாமல் இருப்பது, அதைச் செய்ததற்கு அடிப்படையான அறிவுக்குறைவு எது , அதற்கு எதிராக நாம் பெற வேண்டிய அறிவு எது என்பது பற்றியாவது நாம் சிந்திக்க வேண்டும் என்கிறார்.
  • இதையெல்லம் சொல்லும் அவர் இதை எல்லாம் செய்யத் தேவைப்படாத பரிணாம வளர்ச்சி பெற்ற நிலை ஒன்று அனைத்து அன்பர்களுக்கும் உண்டு  என்று சொல்கிறார்.
  • அது அன்னைக்கு பிடிக்காதது எதையும் செய்ய மாட்டேன் என்று இருப்பது.
Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles