ஒரு முதலமைச்சருக்கு நெருக்கமான இரு அமைச்சர்கள் முதலமைச்சரின் அறிவுரையின் பேரில் கல்லூரி தொடங்கினார்கள். அவர்களது அரசியல் செல்வாக்கு, நிலங்களை வளைப்பது அதற்கான சட்ட விரோதப் பணம் என்று falsehool -ன் பரிமாணங்கள், அந்த கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்தது. அது சொந்த திறமை, திறன், சொந்த ஆளுமை போன்றது. அது அந்த கல்லூரிகளுக்கு initial expansion -ஐக் கொடுத்தது. அதை Horizontal expansion எனலாம். முதலாமவர் அந்த முதல் நிலைக்கு பிறகு அரசியலை விட்டு விலகி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடாமல், சரியான கணக்கு, systems , standard organization tie up என்று ஒரு கல்லூரிக்குத் தேவையான பண்புகள், மாணவர்களின் பார்வையில் அவர்களுக்கு தேவையான பண்புகள் என்று நிறைய கடை பிடிக்க ஆரம்பித்தார். குறுகிய காலத்தில் அது உலகப் பிரசித்தி பெற்றது. அதாவது அவருடைய ஆளுமை horizontal expansion -ஐத் தந்தது. அதற்கு அன்னை அன்பராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதோடு அன்னை விரும்பும் பண்புகள் சேரும் போது அது உச்சத்திற்கு கொண்டுச் செல்கிறது. அது vertical expansion . மற்ற பல்கலைக்கழகங்கள் 40 அல்லது 50 ஆண்டுகளில் பெற்ற புகழ், செல்வாக்கு, அந்தஸ்தை இந்த கல்லூரி 10 ஆண்டுகளில் பெற்றது. அது பண்புகள் காலத்தைச் சுருக்குவது.
இரண்டாவது நபர் கல்லூரி தொடங்கினாலும், சட்ட விரோத செயல்களை விடவில்லை. கல்லூரி ஸ்தாபகர், என்ற நற்பெயருக்கு பின் பல சட்ட விரோத செயல்களை செய்தார். Central fund -களை வாங்க மாணவர், ஆசிரியர், infrastructure முதலியவற்றில் அவர் செய்த innovative பித்தலாட்டங்களை investigation team பார்த்து அசந்தது. முதல் ஐந்து வருடம் அந்த கல்லூரி அந்த மாவட்டத்தில் வளர்ந்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த இரண்டு வருடத்தில் பெயரை இழந்து வளத்தை இழந்தது. அந்த கல்லூரியில் ஏற்பட்ட சில மர்ம மரணங்களால் அவர் கைதானார். அவர் மனைவி கடன் பிரச்சனையில் கைதானார். கல்லூரி மூடப்பட்டது. இன்று அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
அதாவது அந்தஸ்து செல்வாக்கு, ஆளுமை முதல் நிலை வளர்ச்சியை க் கொடுத்தாலும் அதற்கு அடுத்த நிலைக்கு உயர, உயரத்திற்கு செல்ல செல்ல, அதற்கான பண்பு தேவை. அது காலத்தைச் சுருக்கும். அல்லது குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சியைக் கொடுக்கும். நம் திறமை – horizontal – தன்னம்பிக்கை vertical . தன்னம்பிக்கை இல்லாத திறமை உயரத்தை தராது. வேலையில் திறமை வளத்தை தரலாம். ஆனால் தன்னம்பிக்கை அடுத்த கட்டத்திற்கு – வேலையை விட்டு தொழில் தொடங்க – அடுத்த கட்ட உயர்வுக்கு வழி வகுக்கும். அதில் அன்னை பண்புகள் சேர்ந்தால், பல மாதங்களில் நடக்க வேண்டியது சில நாட்களில் நடக்கும்.
வேலையில் perfection ஒருவருக்கு horizontal வளர்ச்சியைத் தரும். அது உடல். அதில் அதற்கு அடுத்த நிலையான உணர்வு சேரும் போது , creativity innovation என்று அடுத்த கட்ட உயரத்திற்கு செல்லும். அதை, product point, customer point , client point, Mother’s point என்று அதற்கு அடுத்த உயர்ந்த ஆன்மா செய்யும் போது , அந்த வேலை செய்யும் கம்பெனிக்கே அதிபராகிறோம் அல்லது அதே போன்று ஒரு கம்பெனி தொடங்குகின்றோம். இது vertical development . உண்மையில், இது vertical horizontal என்பதை விட, piramid என்றே கூற வேண்டும். காரணம், மேலே செல்லச் செல்ல, காலத்தை சுருக்க , அன்னை பண்புகளுக்கான focus அதிகமாக இருக்க வேண்டும். நல்ல teacher என்பதற்கு subject knowledge வும், சொல்லிக் கொடுக்கும் திறமையும் போதும். அது அவரே principal ஆக வேண்டுமென்றால், மாணவர் முன்னேற்றத்தில் ஆர்வம், நல்லெண்ணம், சமுதாய முன்னேற்றத்திற்கான உணர்வு, நாட்டு பற்று, போன்றவை இருக்கும் அளவிற்கு ஏற்ப குறைந்த காலத்தில் பிரின்சிபால் ஆகவோ, தாளாளராகவோ உயரலாம்.
நாம் அன்னையிடம் வந்த பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் ஒரு வளர்ச்சியைப் பெற்று இருப்போம் . அது கிடை வளர்ச்சி. ஆனால் அது நிலைக்க வேண்டும் என்றால் , மேலும் வளர வேண்டும் என்றால் அதற்கான பண்புகள் அவர் விரும்பும் பண்புகள் நம்மிடம் அதிகம் வர வேண்டும். வருமானம் என்ற காண்ணோட்டத்தில் இதைப் பார்ப்போம். வருமானம் சற்றே அதிகமான பிறகு , சுயநலத்திற்கு, ஆடம்பரத்திற்கு, அந்தஸ்திற்கு , தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள என்று சம்பாதிப்பவன் physical personality .
வேலையை தன் திருப்திக்காக செய்பவர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் vital personality. பணம் சம்பாதிப்பது வாழ்வின் முன்னேற்றத்திற்கு சித்தத்தின் முன்னேற்றத்திற்கு என்று புரிந்து செய்பவன் mental personality. இறைவனின் சேவைக்காக அல்லது இறைவனின் விருப்பம் நிறைவேற என்ற செய்பவன் spritual personality. நம் வாழ்வில் வளர்ச்சி என்பதும் அதை ஒட்டியே இருக்கும்.
அதை புரிந்து கொள்வதற்காக வாழ்வில் நான்கு நிலைகளை பார்க்க முடியும். அன்றாட வாழ்வு, வளர்ச்சி முன்னேற்றம், பரிணாமம் என்று வாழ்வின் வளர்ச்சி அவர்கள் பின்பற்றும், பண்பு, மனநிலை ஆகியவற்றிக்கு ஏற்றார்போல இருப்பதை பார்க்க முடியும்.
ஒவ்வொரு நாளும் நாம் திட்டமிட வேண்டியிருக்கிறது, நாமே வேலை செய்யவேண்டியிருக்கிறது, நம் விருப்பப்படி இருக்க முடியவில்லை, செய்ய முடியவில்லை என்ற நிலையில் இருந்தால் அது சர்வைவல் என்னும் அன்றாட வாழ்வு நிலை.
நம் நிலை நம் கையில் இல்லை சுற்றமும் சூழலும் நம் வாழ்வை நிர்ணயிக்கிறது என்றாலும் சற்றே வளர்ச்சி இருக்கிறது என்ற நிலை அடுத்த நிலை. என்றாலும் அது ஒரு குறிக்கோளை நோக்கி ஒரு கொள்கையை நோக்கி ஒரு இலக்கை நோக்கி என்றால் ( உதாரணமாக வீடு கல்யாணம் குழந்தைகளின் படிப்பு ஆகியவற்றில் மற்றவர்களின் கூறிவந்த பட்ச குறுக்கீடு) அதை வளர்ச்சி என்று சொல்லாம்.
அடுத்தது கொள்கையும் குறிக்கோளும் முக்கியமாக மற்றதெல்லாம் அதன் பிறகுதான் என்று சமுதாயம், சூழல் , உறவுகள், வசதிகள், விருப்பு வெறுப்புகள் அபிப்பிராயங்கள் என்று பலவற்றையும் தாண்டி வர முடியும் என்ற நிலை இருந்தால் அது முன்னேற்றம். அது வாழ்விலும், மனநிலையிலும் முன்னேற்றம் என்னும் நிலை.
இந்த மூன்று நிலைகளுக்கும் மீண்டும் போக தேவையில்லாத அளவிற்கு அதனால் பாதிக்கப்படாத அளவிற்கு ஆன்மாவின் பண்புகள் மட்டுமே முக்கியம் என்னும் நிலை பரிணாம வளர்ச்சி நிலை. அது இறைவனுக்கு கருவியாகும் நிலை அது அவன் விரும்பும் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.