Daily Messages -இல் கர்மயோகி அவர்கள், “சிறியதில் முழுமை சமர்ப்பணத்தை முழுமையாக்கும்”-என்கிறார்.
எப்போது ஒரு தவறை நம்மால் முழுமையாக விளக்க முடிகிறதோ , ஒரு வேலையை (perfect) எந்த கணம் சிறப்பாக செய்ய முடிகிறதோ அந்த கணம் நாம் அவர் அடுத்த உயர்ந்த நிலைக்குச் சென்று விடுவோம்.
Daily Messages -இல் சிறியதில் முழுமை பெறாமல் பெரியதை எட்ட முடியாது – என்றும் கூறுகிறார். . .
நாம் இதைச் செய்தாலும் அரைகுறையாகச் செய்கிறோம். இந்த வேலைக்கு இது போதும் , இந்த சம்பளத்திற்கு இது போதும் , இவருக்கு இது போதும் என்று செய்கிறோம். வேலைக்காக வேலை செய்தால்
எந்த வேலையானாலும் 90% முதல் 95% வரை செய்ய முடியும். அந்த பகுதிகளில் perfection கொண்டு வந்தால் 100% முழுவதும் சிறப்பாகச் செய்தால் அடுத்த உயர்ந்த நிலைக்குப் போகமுடியும். எதுவரை இந்த சிறப்பை அவரால் நம்மால் கடை பிடிக்க முடிகிறதோ அதுவரை நம் உயர்வு தடையின்றித் தொடரும்.
முறை முழுமை பெறும்பொழுது பலன் முழுமை பெறும்.
பலன் முழுமை பெறும்பொழுது பக்குவம் வரும்.
பக்குவம் வாராமல் பவித்திரம் வாராது.
முறையும், பலனும், முழுமையும், பக்குவமும், பவித்திரமும் நம்மால் இதுவரை செய்ய முடியாதவற்றைச் செய்யும்.
முழுமையான இறைவன் பகுதிகளிலான உலகைச் சிருஷ்டித்தான். பகுதி தன்னை வலியுறுத்தினால் மீண்டும் முழுமையை அடையமுடியாது. நோக்கமும், சுமுகமும், முழுமையும் மீண்டும் இறைவனையடைய உதவும் என்பது The Life Divineஇல் முக்கியக் கருத்து.