எது மனிதனுக்குத் தேவையோ அது அவன் கண்ணுக்குத் தெரியும். நம்மைச் சுற்றி உள்ள மனிதர்கள் – அவர்களுடனான நம் உறவு, மன நிலை, நோக்கம் ஆகியவற்றைக் கவனித்தால் – நம் நிலை நமக்குத் புரியும்.
மனித வாழ்வு முறைப்படுத்தப்பட்டு, அம்முறைகளுக்குரிய பண்புகளால் பாதுகாக்கப்படுகிறது. இவை உயர்ந்தவை தாழ்ந்தவை என்ற இரு நிலைகளிலுள்ளன. தாழ்ந்த நிலையில் மனிதன் கஷ்டப்படுகிறான். தெய்வீக வாழ்வு என்பது உயர்ந்த நிலைக்குரியது. அதிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற இரு நிலைகள் உள்ளன. தெய்வீக வாழ்வில் தாழ்ந்த நிலையிலிருந்தாலும் மனிதன் நஷ்டமடைவதில்லை. தண்டனை பெறுவதில்லை. அது செயலால் நிறைந்த நிலை. உணர்வால் நிறைந்த நிலையில் இக்குறைகள் மாறும் காலத்து மட்டுமிருக்கும்.
நம்முடைய உலகம் என்பது நம் உணர்வால் உருவானது. அவ்வுணர்வுகளை நிர்ணயிப்பது நம் பண்புகள். பண்புகள் ஒன்று முதல் நூறுவரை நூறு நிலைகளில் உள்ளன. நம் பண்புகள் எவை? அவை உள்ள நிலை எது? என அறிவது முன்னேற்றத்திற்கு உதவும்.
சக்தி, சுபாவம், பண்பு(Power, Character, Values) வேகம் நிறைந்த சக்தியின் (force) வெளி உருவம் சக்தி மனோசக்தி உருவம் பெற்றால் சுபாவமாகிறது. ஆன்மாவின் வெளிப்பாடு நம் வாழ்வில் பண்பெனும் உருவம் பெறுகிறது.
பண்புகள் மூலமே பிரபஞ்சத்தை நாம் அறிகிறோம் என்கிறார் பகவான். இன்று நம் உலகம் என நாம் அறிவது நம் பண்புகளால் நிர்ணயிக்கப்படுபவை. முழு பிரபஞ்சத்தை நாம் இன்று அறிவதில்லை. முழு பிரபஞ்சத்தை அறிய, அதற்குரிய பண்புகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். முதற்படியாக இன்றுள்ள பண்புகளுக்கு அடுத்த நிலை பண்புகளை ஏற்றுக் கொண்டால், நம் உலகம் சற்று விரிவடையும்.
பண்பு: நாம் ஏற்றுக் கொண்ட பண்புகளே நம் உலகம், நமக்கு அதுவே பிரபஞ்சம். அன்னையும் பண்புகளாகவே நம்மிடம் வருகிறார். அன்னையின் பண்புகளை முழுவதும் ஏற்றுக் கொண்டால் அன்னை முழுமையாக நம்மிடம் வருவார்.
நம்பிக்கை பரவும் அளவு வருமானம் வளரும். இதில் பெரிய அளவு என்னால் சாதிக்க முடியவில்லை என்பதால் அந்த நம்பிக்கையை பற்றி பேசாமல் அதன் பின் உள்ள கர்மயோகி அவர்கள் சொன்ன தத்துவத்தை தருகிறேன்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது ஒரு எண்ணம். அது மனதின் தேவையால் வந்தது என்பதால் மனமே பணத்தைப் படைக்கிறது. நாம் அதை எப்படி சம்பாதிக்க போகிறோம் , எந்த பண்பை வைத்து சம்பாதிக்க போகிறோம் என்பது உணர்வால் உணர்ச்சியால் நிர்ணயிக்கப்படுகிறது. ( உதாரணம் – சுத்தம் சரவணபவன், குறைந்த விலை – சரவணா ஸ்டோர்ஸ் ) அதைப்பற்றிய தெளிவான திட்டம் ஆர்கனிசிங் பவர் ஆகிறது. இவையெல்லாம் நம் உடலின் உழைப்பின் மூலம் வெளிப்படுகிறது. அதை சமூகம் ஏற்றுக்கொள்ளும் விதத்தை மனமும் உணர்வும் அறிந்து விலை நிர்ணைகிறது. பண்பு அதிகம் தரம் அதிகம் என்று நினைத்தால் அதிக விலை வைக்கிறோம் . அல்லது குறித்து வைக்கிறோம். இதற்கான நேரம் , முதலீடு, நம் எண்ணம், நம்பிக்கை என்று மேல சொன்ன அனைத்திற்கும் வரையறை உண்டு. ஆனால் பண்பு உயர்வதற்கு வரையறை இல்லை. ஆனால் இவற்றின் மேல் சூழலின் சமுதாயத்தின் நம்பிக்கை உயர்வதற்கு அளவே இல்லை. அது உயரும் அளவிற்கு வருமானம் உயரும். அது சட்டம்.
பண்பு என்றால் குணங்களை மட்டுமே நினைக்கிறோம். அப்படி அல்ல. work இன் பண்புகள் skill , capacity , ability, perfection . அது போல ஒவ்வொன்றுக்கும் உண்டு. aspiration, technology , evolutionary idea போன்றவையும் பண்புகளே. அதைத் தாண்டி strategy, accumen இருக்கிறது. உதாரணமாக குஜராத்தில் Balaji chips and wafers தரத்திற்கு புகழ் பெற்றது. இருபது வருடங்களாக இருந்தாலும் அது இரண்டு கோடி டர்ன் ஓவரைத் தாண்டவில்லை. 2016 இல் railways மற்றும் Bus stand களில் அவை மட்டுமே உண்டு என்னும் அளவில் எப்படியோ strategic plan செய்து கொண்டு வந்தார்கள் . இப்பொது 500 கோடி தாண்டி விட்டதாகச் சொல்கிறார்கள்.
அதே போல சூழல் ஒத்துழைக்க வேண்டும் . இந்த speed internet இல்லையென்றால் ola இந்த அளவு success ஆகியிருக்காது. என்னை எடுத்து கொண்டால் என் பண்பு தரம் மேல் நம்பிக்கை வைத்து மார்க்கெட் விலையை விட 20% அதிகம் வைத்தே விற்கிறேன். 3 வருட கியாரண்டி தருகிறேன். நோக்கியா , சீமன்ஸ் போன்ற தரத்தை விரும்பும் கம்பெனிகளே அதை பாராட்டுகிறது. ஆனால் என் தொழில் சூழல் எப்படி என்றால் ஆறு மாதம் வந்தால் போதும் விலை குறைவே தேவை என்னும்போது என்னால் அதிகம் சாதிக்க முடியவில்லை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக ISO வால் சூழல் மாறுவதால் வளர்ந்து கொண்டு இருக்கிறேன்.
பண்பை அதன் நிர்வாக முறையை மனம் உற்பத்தி செய்ய அளவில்லை. நாம் செய்யும் தொழிலில் இன்று அதிகபட்ச நுணுக்கங்கள் எவ்வளவு உள்ளதோ அத்தனையும் பின்பற்றினால் அறிவு பண்பாகச் செயல்படும். அது முடிவில்லாத நம்பிக்கையை சமூகத்திற்கு எழுப்ப முடியும். அது வாழ்வில் வருமானமாக எதிரொலிக்கும்.
நாம் நம் உள்ளத்திற்கேற்ற உலகத்தைத்தான் நாம் பார்ப்போம். உதாரணமாக நாம் அலுவலகத்தில் வேலை செய்பவரானால் – அடுத்த நிலை ப்ரோமோஷன் , அல்லது நமக்கு தெரிந்தவர் நல்ல வேலையில் இருந்தால் அது போல வேண்டும் என்று நினைப்போம். எத்தனை பேர் CEO / MD ஐ பார்த்து அது போல ஆக வேண்டும் என்று நினைத்து இருக்கிறோம். என்னை எடுத்து கொண்டால் நான் போட்டியாளர் என்று நினைப்பது 10 கோடி வரை பரிமாற்றம் உள்ளவரையே. இதே தொழிலில் 400 கோடி செய்யும் கம்பனியும் உள்ளது ஆனால் அவர்களைப்பற்றி நான் நினைப்பது கூட இல்லை. அந்த உலகமே என் கண்ணில் படவில்லை. அல்லது பார்க்க விருப்பமில்லை என்பதே உண்மை.