சுபாவத்தை மாற்றும் முயற்சியை சுபாவத்தை ஒட்டியே செய்யவேண்டுமே தவிர அதை எதிர்த்துச் செய்ய முடியாது என்கிறார் கர்மயோகி அவர்கள். அதற்கு பொருள் அந்த சுபாவத்தை அப்படியே வைத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல . அதை திரு உருமாற்ற வேண்டும் என்பது. அகவளர்ச்சி மூலம் ஆன்மீக வளர்ச்சி பெறுவது மனித சுபாவம் இறைவன் விரும்பும் சுபாவமாக மாறுவது.
சிலர் – silent will, non- reaction, non-initiative consecration என்று சுபாவத்தை மாற்றும் வழிகளாகக் கூறுவது அவர்களை போன்ற “சாதகர்களுக்கு” எளிதாக இருக்கலாம். skill, power, knowledge, authority, responsibility, circumstances என்று எல்லாம் இருந்து நம்மால் எளிதாக செய்ய முடிந்ததை செய்யாமல் இருப்பது தான் silent will, non- reaction, non-initiative.
என்னை போன்ற சராசரி அன்னை பக்தர்களுக்கு ( அன்பர்கள் என்று கூட சொல்ல மாட்டேன்) அப்படி இருக்க முடியாதவர்களுக்கு – சுபாவத்தை ஒட்டி மாறுவது என்பது என்ன. நம் பெரும்பாலோர் நிலை – அறிவு ஏற்றுக் கொண்டால் செய்து விடுவோம் என்பதே.
silent will ஐ எடுத்து கொண்டால் அதன் அடிப்படை பொறுமை. நாம் அவசரப்படுவோர் என்றால் (impulsive person) முதலில் பொறுமை நமக்கு ஏன் தேவை என்பது புரிய வேண்டும் . இப்படி அவசரப்பட்டு இழந்தது நினைவுக்கு வர வேண்டும். அது நினைவுக்கு வந்தவுடன் பொறுமையின் அவசியத்தை பற்றி எல்லோரிடமும் பேசுவோம். அப்படி பேசி பேசியே நாம் பொறுமைசாலி என்று நினைக்க ஆரம்பித்து விடுவோம். சுபாவம் மாறுவது என்பது இந்த குணம் மாறுவது. நம் மனம் பொறுமையின் அவசியத்தை உணரவேண்டும்.
இந்த அவசரம் உணர்ச்சியில் எழுவதைக் காணவேண்டும். அந்த அளவிற்கு unconscious ஆக இருக்கிறோம் என்று தெரிய வேண்டும். அதனை பின் உள்ள ஆசை , எதிர்ப்பார்ப்பு தெரிய வேண்டும்.உண்மையில் உடலில் அது ஆரம்பத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். இது conscious process ஆனால் -அடுத்த முறை அவசரப்பட்டாலும் அது வீரியம் குறைந்து இருப்பதையும் – அவசரப்படாதே என்று இன்னொரு குரல் சொல்வதைக்காணலாம் ( mind “s ‘sensor ). நம் சுபாவத்திலுள்ள அவசரம் புரியும். வெளியே புறப்படுவது, சாப்பிடுவது போன்ற எளிய காரியங்களிலும் நமக்கு அவசரம் இருப்பது தெரியும். இது தெரிவது பெரிய விஷயம். மனம் ஏற்றுக்கொள்வது அதைவிட முக்கியம். எனக்கு எல்லா விஷயங்களிலும் அவசரம் இருக்கின்றது. இது மாறி பொறுமையாகவேண்டும் என்ற முடிவு எடுக்கவேண்டும். அதுவே சுபாவத்தை ஒட்டி மாறுவது.
நமக்கு எவ்வளவோ பண்புகள் தெரியும் . கடைபிடிக்கவும் விரும்புகிறோம். சில இடங்களில் கடைபிடிக்கவும் செய்கிறோம் . ஆனால் consisitency இருப்பதில்லை. காரணம் நாம் unconcious ஆக இருப்பதால்.
நாம் பண்புகளின் தேவையை உணரும் தருணங்கள் உணர்விலிருந்து வருபவை என்பதால் அவை உணர்வு நிலையிலேயே organise ஆகும். அது personality -இல் நடத்தையாக ( behaviour ) வருகிறது. அது சூழலுக்குக் கட்டுப்பட்டது. ( example: தியானமையத்தில் இருப்பதுபோல நாம் வெளியே இருக்க முடிவதில்லை. சிங்கப்பூருக்கு சென்றால் வரும் சுத்தம் ஒழுங்கு இந்தியாவில் கால் வைத்தவுடன் மாறிவிடுகிறது.)
ஆனால் பண்புகளின் முக்கியத்துவத்தை அறிவு ஏற்றுக்கொண்டால், பண்பு மனதில் organize ஆகிறது.அது personality -இல் இயல்பாக (character) வருகிறது. இயல்பு என்பது நாம்மை பொறுத்தது. சூழலுக்குக் கட்டுப்பட்டதல்ல. எங்கு இருந்தாலும் ஒரே மாதிரி இருப்போம். என்றாலும் அதில் நம் அபிப்பிராயங்களின் தாக்கம் இருக்கும்.
இந்த இரண்டுக்கும் ஒரு நோக்கம் (goal or direction) இருந்தால் அது concious ஆக இருக்க வைக்கிறது. உதாரணமாக முன்னேற்றத்திற்காகச் செய்யவேண்டும், அன்னைக்காகச் செய்யவேண்டும் என்று இருந்தால் அது ஆழ் மனது வரை சென்று நம் சுபாவமாகிறது. சுபாவ மாற்றம் திருவுருமாற்றம் என்பதால் அது ஆன்மாவில் organsie ஆகிறது என்று புரிவதற்குச் சொல்லலாம் . உண்மையில் அது ஆன்மாவை வெளி வர வைக்கிறோம் என்பது பொருள். அதன் பிறகு அது நம் personality ன் பகுதி ஆகிவிடும்.
organsie ஆகும் விதம் பற்றி ஒரு அடிப்படை புரிதலுக்குக்காக இதை தருகிறேன். அப்படி மாறுவதற்கும் மாறாமல் இருப்பதற்கும் இன்னும் நிறைய காரணிகள் உள்ளது . நம்மை நாமே concious ஆகப் பார்த்துக் கொண்டால் அது புரிய ஆரம்பிக்கும்.