Share on facebook
Share on telegram
Share on whatsapp

நன்றி அறிதல் – வேறு பார்வை

சென்னை வெள்ளத்திற்கு பிறகு  என்ன செய்வது என்று தெரியாத நிலையில், 37 கோடி turnover உள்ள கம்பனியொன்று என்னை பார்ட்னராக அழைத்தது. அவருக்கு வயது 75. அவர் மகன் வியாபாரத்தை பார்த்துக்  கொண்டாலும்  கம்பெனி வளர வேண்டிய அளவு வளரவில்லை என்பது அவர் குறை. 80 திற்குள்  100 கோடி ஆகவேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கு நான் உதவ முடியும் என்று அவர் நினைத்தார். 100 கோடி என்னும் வார்த்தை தான் நமக்கு attractive வார்த்தையாயிற்றே. கர்மயோகி அவர்களிடம்  கேட்டேன். discussion -ஐ மெயிலில் -விவரித்தேன்.  அவரே  அன்னை என்று நினை, அன்னைக்குச் செய்வதாக நினைத்துச் செய் , அவருக்காக  மட்டுமே செய், கூடி வரும் என்றார்.

அதற்கு ஏற்றாற்போல் மறுநாள்  நான் அவரை பார்த்த போது  நீ எனக்கு மட்டுமே ரிப்போர்ட் செய், என்னிடம் மட்டும் discuss செய் என்றார். அது அவர் மகனிடம் ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்பதை நான் யோசிக்கவில்லை.  25% பார்ட்னர் என்னும்  அளவில் பேசி ( அதாவது வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த எனக்கு 9.75 கோடி டர்ன் ஓவர் போல) இரண்டு நாளில் ஆடிட்டர் முன்னிலையில் அக்ரீமெண்ட்  என்று முடிவு செய்தோம். மறுநாள் மகன் அவர் தனியாக செய்து கொண்டு இருந்த வேறொரு  வியாபாரத்திற்கு ஒரு உதவி கேட்டார். பெரியவருக்கு தெரியாமல் செய்யலாமா என்று தோன்றினாலும் அதில் தவறொன்றும் தெரியாததால் வழி சொன்னேன். மறுநாள் ரெஜிஸ்டரேஷன்க்கு வரும் போது பெரியவர் மாரடைப்பில் காலமானார்.

இதற்கு கர்மயோகி அவர்கள்  சொன்னது எந்தக் காரியத்தை எவருக்கு செய்தால் வழிவிடும் என அறிதல் முக்கியம். Moral, Immoral என்பது அன்னையிடம் கிடையாது.  அன்னை AMORAL ( unconcerned with the rightness or wrongness of something). அவரை அன்னை என்று ஏற்றுக்கொண்ட பிறகு , அவருக்கு சரி என்பதை  மட்டுமே செய்ய வேண்டும். அவரிடம் தந்த வாக்கை  மட்டுமே காப்பாற்ற வேண்டும். மகனின் கெட்ட எண்ணம் பலித்து  விட்டது என்றார். 

இந்தியா விளக்க கர்மயோகி அவரகள் சொன்னது; சாஸ்திரி மீண்டும் பிரதமராக வாய்ப்பு இருந்த போது  காமராஜர் இந்திராகாந்தி பிரதமர் ஆக  விரும்பினார். சாஸ்திரி  அப்போது ஜெய்  ஜவான், ஜெய் கிசான் என்னும் முழக்கத்தாலும் இந்தியா  பாக்கிஸ்தான் போரை கையாண்ட விதத்தாலும்  சிறந்த பிரதமராக அறியப்பட்டார். இந்திராவை பற்றி அவருக்கு தெரிந்தாலும் காமராஜர் மேல் உள்ள நன்றி அறிதலால் அதற்கு  ஒத்து கொண்டார். சில நாட்களில் தாஸ்கண்ட்டில் சந்தேகத்திற்கு   இடமான முறையில் இறந்தார். அதேபோல காமராஜர் நேருவின் மேல் உள்ள நன்றி அறிதலால் இந்திராவை பற்றி தெரிந்தும் பிரதமராக்க விரும்பினார். பிற்காலத்தில் இந்திரா  அவரை கைது செய்ய துணிந்து வாரண்ட் அனுப்பினார்.

வாழ்வின் மறுமொழியை எதிர்பார்த்து ஒன்றைச் செய்யும்போது

•          சூழலை கவனிப்பது முக்கியம். தொடர்பை அறிவது அதைவிட முக்கியம்.

•          இல்லாத தொடர்பைக் கற்பனை செய்பவர் பலனைக் கண்டு நிலையை அறிய வேண்டும்.

•          பொதுப் புத்தி,  பகுத்தறிவு என்று பேசுபவர் இதுபோல் கவனித்தால் அவர்கள் அறிவுக்கும், வாழ்வின் அறிவுக்கும்   உள்ள தூரத்தைக் காண முடியும்.

•          சமர்ப்பணம் செய்து, அன்னை முறைகளை யோசித்தால் அனைத்தும் விளங்கும் – என்றார் கர்மயோகி அவர்கள்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles