நமக்கு வரும் குழப்பம் – நம் முன்னேற்றத்தைக் காட்டுமிடம் என்கிறார் கர்மயோகி அவர்கள்.
இரவும் பகலும் உடல் வளர்வதுபோல் உணர்வும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதேபோல் நம்மை அறியாமல் நம் ஜீவியமும் consciousness தடையின்றி வளர்ச்சியை நாடுகிறது. எந்த வளர்ச்சியும் விரும்பாதவர், தானே முயன்று பெறாதவர் வாழ்வில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. பெரும்பாலோர் முடிவே அவன் முடிவு என்பதால் அவனுக்கு குழப்பம் இல்லை.
மன வளர்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற விழைபவனுக்குச் சிரமம், தடை, சிக்கல், பிரச்சினை, குழப்பம் அதிகம் வரும். தன் நிறை குறைகளை அறிந்து, தன் திறனை, செயலைக் குறைஇன்றி அறிந்து, மன நிலையை அறிந்து ஒரு விஷயத்தைச் செய்வதே இன்றைய வாழ்வின் அஸ்திவாரம் என்பது புரியாமல், அந்த புரிதலை நிலையாகப் பெறாதவர் வாழ்வு தொடர்ந்து ஆட்டம் காண்பதால், அவர்களுக்கு முன்னேற்றத்தால் வரும் பிரச்சினையை விட, இருப்பதே நிலையாக இருக்குமா என்னும் குழப்பமான நிலைக்கே எடுத்துச் செல்கிறது. அத்தகைய . வாழ்வை அறிந்து, அதன் சூழ்நிலைக்கேற்பவும், நம் மனநிலைக்கேற்பவும், முறைப்படுத்த முடியாததால் நிலையற்ற நிலை ஏற்படுகிறது. அது முடிவு எடுக்க முடியாத குழப்பமாக வருகிறது.
குழப்பம்,நிற்க வேண்டுமானால் எண்ணம் தெளிவாக இருக்க வேண்டும். தெளிந்த எண்ணமே நல்ல பண்பை அனுமதிக்கும். நல்ல முடிவை எடுக்க வைக்கும். உயர்சித்ததை ஏற்க வைக்கும்.
அறிவே அறியாமையாகி மறைந்தது என்பதால் குழப்பம் பரிணாமம். அறிவு வெளியே வர தயாராகி விட்டதற்கான அடையாளம் அது. வாழ்வு முன்னேற்றத்திற்க்கான சூழலை உருவாக்கி கொண்டு இருப்பதற்கான அடையாளம் அது.
குழப்பம் மூன்று வித முன்னேற்றம் தருவதாக கர்மயோகி அவர்கள் கூறுகிறார். அதாவது முதலாவது மனிதன் தனித்தன்மை பெறுவது. இரண்டாவது இந்தத் தனித்தன்மையை அன்னைக்கு அர்ப்பணிப்பது. மூன்றாவது அன்னை அவனை தன்னுடைமையாக்கிக் கொண்டு தன் கருவியாய் அவனை மாற்றுவது.
நம் வழக்கமாக செய்யும் எதிலும் (habitual) குழப்பம் வராது. மாற்றி செய்யும் போது தான் (அது முன்னேற்றமாகவும் இருக்கலாம் , பின் தள்ளுவதாகவும் இருக்கலாம், ஒரு இயலாமை, ஒரு பயம், ஒரு சந்தேகம் இருக்கலாம்). அதை மாற்றுவது எளிது, பெரும்பாலும் நமக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும் , தெரியாது என்று சொல்ல முடியாது- நம்மைப் பற்றி நமக்கு முழுதும் தெரியும். ஆனால் நமக்கு தேவையான சுயநலமான result வருமா என்று தெரியாததால் அதை செய்வதில்லை.
அதற்குச் சுருக்கமான வழி நம் சாய்ஸ் எது மதர்ஸ் சாய்ஸ் எது என்று பார்ப்பது. அது அன்னைக்கு பிடிக்காத , முன்னேற்றத்தை ஏற்க முடியாத எண்ணங்கள் ஏன் வந்தது, எப்படி வந்தது, அதையெல்லாம் ஏன் இழுத்து பிடித்து கொண்டு இருக்கிறோம் என்னும் பார்வையில் – குழப்பத்தில் வரும் எண்ணங்களை கவனமாக பார்த்தால் புரியும். மாற முடியாததற்கு மனம் சொல்லும் காரணங்களை பார்த்தாலும் அது புரியும்.
அப்படி நம்மால் மதர்ஸ் சாய்ஸ்க் கு மாற முடியாமல் இருப்பதற்கு உதாரணமாக சில எண்ணங்கள்:
• நமக்கு நம் திறமை , நம் பதவி, நம் நம்பிக்கை, நம் சக்தி, நம் அதிகாரம், நம் செல்வாக்கு மேல் இருக்கும் நம்பிக்கையை ஒட்டிய எண்ணங்கள்.
• வாழ்க்கை அல்லது புது ப்ராஜெக்ட்-இல் முன்னேற்றத்திற்கு என்று தெரிந்தாலும் புது வழியை பின்பற்ற தேவையான உறுதி இல்லாதது, திறமை குறைவு, தகுதி குறைவு, அன்னை பலிக்க வில்லை என்றால் என்ன செய்வது போன்ற எண்ணங்கள்.
• உடன் வேலை செய்பவர்கள் , ஊர் என்ன சொல்லும், குடும்பம் என்ன சொல்லும், சமுதாயம் என்ன சொல்லும் என்பது போன்ற எண்ணங்கள்
• பொது புத்தியை தாண்டி புது விதமாக செய்து தோற்று விடுவோமோ , அவமான படுவோமோ போன்ற எண்ணங்கள்.
• தேவையான ஒரு புது திறமை , திறன், மனப்பான்மையை ஏற்றுக்கொள்ள தயங்கும் சோம்பேறித்தனமான எண்ணங்கள் .
• நம் முட்டாள்தனம் , அறியாமை, limitations வெளிப்பட்டு விடுமோ என்னும் தயக்கம் தரும் எண்ணங்கள் .
இவையனைத்தும் நம் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிடிவாதங்கள் – அதை தக்க வைத்து கொள்ளும் எண்ணங்களே – குழப்பமாக வருகிறது என்று புரிந்தால் – அது என்ன வகையான முன்னேற்றத்தை தரப்போகிறது என்றுபுரியும்ம். குழப்பம் – வளர்ச்சியின் மறுமுகம் என்பது புரியும்.