Share on facebook
Share on telegram
Share on whatsapp

பக்தரில் இருந்து – சாதகருக்கு

அன்னை அன்பர்களை பக்தர், அன்பர், சாதகர் என்று மூன்று வகையாக பார்க்கலாம். சாதகர் – சமர்ப்பணம், சரணாகதி என்று இருக்கும் உயர்ந்த ஆத்மாக்கள், இறைவனாக மாறிக்கொண்டு இருப்பவர்கள்.  அவர்களை சேர்க்காமல் பார்த்தால் – நம்மில்  பெரும்பாலோர் என்னை போல இருப்பவர்களே.  

அன்னையிடம் வந்து பதினைந்து ஆண்டுகள்  ஆகியும் ஒவ்வொரு முறையும் – எந்த முறை சரி, எந்த பண்பு  சரி , என்னும் குழப்பம் வராமல் இல்லை. குடும்பம், சமுதாயம் , தொழில் , அன்னை  என்று எதையும்  ஒன்றுக்காக ஒன்றை விட முடியாமல் இந்த நான்கிற்கும் நடுவில் ஒரு இணக்கத்தீர்வு ( reconciliation) தேடும் பக்தர் , அன்பர்-களே அதிகம். அந்த போராட்டத்திற்கு  நடுவில் கண்டு கொண்ட ஒன்றிரண்டு வெற்றி பார்முலாக்களை பகிர்ந்து கொள்வதே என் பதிவுகள்.

தான் செய்யாததை பிறரைச்  செய்ய சொல்வது கயமை என்கிறார் அன்னை. நாம் செய்துப் பார்த்து  உணர்ந்தவை ஒரு உண்மையை உள்ளடக்கியவை. அவையே பிறரிடம்  அன்னையைத் தரும் என்கிறார் கர்மயோகி அவர்கள்.

அந்த வகையில் பக்தர் என்பவர் யார்?

ஏதோ ஒரு காரணத்திற்காக அன்னையை அறிந்து வந்து சில துன்பங்கள் தீர்க்க பெற்று அதன் மூலம் அன்னை மேல், தான் வழிபடும் மற்ற தெய்வங்களை காட்டிலும் அதிக பற்றும் நம்பிக்கையும் கொண்டவர். தன்  வேண்டுதலை அன்னையிடமே முதலில்  வைப்பவர். அன்னை ஒரு வித்தியாசமான தெய்வம் என்ற அளவிற்கு பக்தி கொண்டவர்.

அன்பர் என்பவர் யார்?

மேல உள்ளதைத்  தாண்டி நெருங்க முயல்பவர். தான் இதுவரை பெற்றதற்கு நன்றியும் அதைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டுமே என்ற ஆசையும் உள்ளவர். அன்னை பண்புகளை வாழ்வில் கடைபிடிக்க முயல்பவர். பல முறைகளைக் கடைப்பிடிக்கத் தீவிரமாக ஆரம்பித்துள்ளேன். எல்லாம் இரண்டு, மூன்று நாட்கள்தாம். பிறகு பழையபடி இறங்கிவிடுகின்றன-என்னும் கேள்வியும் வருத்தமும் உள்ளவர். ஓரளவு குடும்பம், சமுதாயம், சூழல் தடைகளை தாண்டி அன்னையிடம்  இருக்க முயல்பவர்.

அப்படிப்பட்டவர்களுக்கு, கர்மயோகி அவர்கள் பல முறைகளை பல கட்டுரைகளில் சொல்லி இருக்கிறார்.

அதன் சாராம்சமாக நான் பார்ப்பது. அன்னையை பற்றிய concentration முதலில் வேண்டும். அது ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு குறிப்பான உண்மையை காணப்  பயன்படவேண்டும். உதரணமாக புத்திசாலித்தனம் இல்லாமல் படிப்பு வாராது அல்லது எளிதல்ல.  புத்திசாலித்தனம் உள்ளவனுக்குப் படிப்பு தானே வரும் என்பது பொதுவான உண்மை. அதில் குறிப்பான உண்மை என்பது  முயற்சி, புத்திசாலித்தனத்தைப் பிரகாசிக்கச் செய்யும் என்பதே. புத்திசாலித்தனம் போதுமான அளவிருந்தும் அதன் முழுப்பலனை எல்லோரும் அடைவதில்லை. புத்திசாலி பலன்பெறுவது, அவன் முயற்சியின் அளவைப் பொறுத்தது.

அது போல நமக்கு அன்னையைப் பற்றி எவ்வளவோ தெரிந்து இருந்தாலும் அதில் ஏதாவது ஒன்றை  concentrate செய்து அடுத்த அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது அதற்கு  ஏற்ற பலனை  அளிக்கும். உதாரணமாக நாம் அன்னைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில்  concentrate  செய்ய வேண்டும்.

அது முதலில் கீழ்ப்படிதலாக organize ஆக  வேண்டும். பின் அன்னைக்கான கட்டுப்பாடாக மாறவேண்டும்.   பின் அது சுய கட்டுப்பாடாக மாறவேண்டும். அந்த சுய கட்டுப்பாடு அதை உங்கள் சுபாவமாக மாற்ற வேண்டும். இதுவரை  இதை mind-ஏ செய்ய முடியும். இது ஒரு ஆர்வமாக மாறினால் -aspiration – அப்போது முதல் அது ஆன்மாவின் பண்பாக மாறுகிறது. being true to the highest ideals to which we are awakened and organized. 

நம் வாழ்வு முறையே அதை ஒட்டி  மாறும்போது, அதுவே முதல் அதுவே முடிவு என்று இருக்கும்போது நாம் சாதகர் ஆகிறோம்.

அத்தகைய concentration கு அடிப்படியாக தேவைப்படுவது அன்னைக்கு எதிரான  நம் சுபாவத்தைப்பற்றிய விழிப்புணர்வு. அன்னை முறைகளை எடுத்து கொள்ள முடியாததற்கு காரணம்:

  • எந்த சூழ்நிலையிலும் நாம்  எப்போதுமே Past experience, prejudice,  opinions, comforts ஒட்டியே செயல் படுகிறோம் என்று புரிவது. 
  • திட்டமிட்டு ஏற்கனவே செய்த தவறுகளைத் திருத்தும் வழிகளை அல்லது  எதிர்காலத்திற்குத்  தேவையானதை செய்வதில்லை என்று புரிவது.
  • பரிணாமத்தையும் வளத்தையும் ( Evolution & Prosperity) கொண்டுவரும் விஷயங்கள் எவை, அவை இரண்டுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை அறியாமல் இருப்பது.
  • நம் personality falsehood கு தரும் ஆதரவு, அதன் பின் உள்ள  இயலாமை – அதனால் நாம் மாற வேண்டிய இடங்கள் எது என்று புரியாமல் இருப்பது.
  • நம் உள்ளே உள்ள மனநிலையே வெளியே நடக்கும்  விஷயங்கள் எனபதால் இன்னும் நம்பிக்கை வராதது.
  • நம் உடலை , உணர்வை அறிவை எப்படி organize செய்கிறோம் என்பதில் கவனம் இல்லாதது .
  • நாம் அன்னையை நோக்கிப் போவது அல்ல , அன்னையை  நம்மை நோக்கி வரவைப்பது அந்த அளவிற்கு அன்னை விரும்பும் பண்புகளை பின்பற்றுவது முக்கியம் என்று புரியாதது..
  • நமக்கு முன் ஒவ்வொரு கணமும் உள்ள தேர்வு  குறித்த அறிவு இல்லாதது   ( what is my choice , what is  Mothers choice ) .
  • நம்முடைய மிகப்பெரிய பலம் நம் ஆன்மா மற்றும் அது வெளிப்பட உதவும் சூழல் என்னும் ஞானம் வராதது.
  • இவற்றை கவனமாக பார்த்து களைய முற்பட்டாலே நாம் அன்னையின் கருவியாகலாம். சாதகர் ஆகலாம்.
Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »