கர்மயோகி அவர்கள் இத்தகைய உடல் பெறும் அறிவு , அது அவரவர் நிலையில் பெருஞ்செல்வத்தை தரும் என்கிறார். அதற்கு வழியாக அவர் கூறுவது – முதலில் திறமை, திறனை, அறிவை, சம்பாதிக்க வேண்டும். அது ஆர்வம் என்னும் உணர்வின் மூலமே வரும். பின் சம்பாதித்தை நிர்வகிக்க இந்த ஆர்வம், கட்டுப்பாடு, நிதானம் ஆக வேண்டும். நிதானம் என்பது உடல் பெற்ற திறமை. அந்த நிலையில் தான் பெற்றதை காப்பாற்ற முடியும். அதுவே நுட்பம். அது செறிந்து sensitivity ஆக மாறுவது, அதுவே குறிக்கோளாக மாறுவது சொரணை. அது வேலையில், திறமையில், குடும்பத்தில், சமுதாயத்தில் உயர்வைத் தரும்.
இன்று ஒரு விஷயத்தை லட்சியமாக கருதுகிறோம். அதைப் பற்றி தவறாக யாரும் நினைக்கக் கூடாது, பேசி விட்டால் தாங்காது என்னும் நிலைகள் நமக்கு இருந்தால் நம் பண்புகள் உடலை அடைந்துவிட்டதாக பொருள். ஒரு பண்பை மீற முடியாது அதற்கு எதிரானதைச் செய்ய முடியாது என்று இருப்பது என்று அது சொரணை. அது இருக்கும் அளவிற்கு நம் வாழ்வு வளப்படும். ஒரு புத்தகத்தில் அன்னை படம் இருப்பது அல்லது ஒரு புத்தகத்தில் அன்னை பற்றி கூறியிருப்பது நமக்கு தொட்டவுடன் தெரிந்தால், நம் பக்தி உடலில் வெளிப்பட்டிருக்கிறது என்று பொருள். அது சொரணை. தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பது பாசம் உடலில் சேருவது. அது சொரணை.
இது வளரும் பாதையாக , idealism, will, அபிராட்டின் attachment, acceptance, understanding, sentiment, sensitivity என்னும் நிலைகளை குறிப்பிடுகிறார். இதற்கான சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாததால் அப்படியே தந்திருக்கிறேன். சொரணை என்பதை மட்டமானவற்றிற்கு குறிப்பிடுகிறோம். அது உயர்ந்ததை குறிக்க வார்த்தை உள்ளதா என்று தெரியவில்லை என்று கர்மயோகி அவர்களே குறிப்பிடுகிறார்கள்.
மனமும் உணர்வும் மறந்து உடல் மட்டும் ஞானம் பெறுவது என்றால் என்ன? மனமும் உணர்வும் அழிந்தது என்றால் என்ன? சிந்தித்தால் , நாம் மனத்தால் செயல்படுகிறோம். உணர்ந்தால், பிராணனிலிருந்து செயல்படுகிறோம். இரண்டும் நின்றால் நாம் மனதை, உணர்ச்சியை தாண்டுகிறோம். ஆரம்பத்தில் ஒவ்வொரு செயலையும் நினைத்து நினைத்து செயல்படுகிறோம். பின் பழக்கமாகி விட்டால், நம்மையறியாமல் செய்கிறோம். டைப்பிங், கார் ஓட்டுதல், —- அதாவது, மனம் செய்ததை உடலே செய்கிறது. அந்த செயலைப் பொறுத்தவரை மனம் அழிந்து விட்டது. இவை conscious ஆக செய்பவை. இது இல்லாமல், வீடு பூட்டினோமா, ஆபிசில் லைட், AC அனைத்தோமா, அடுப்பை அனைத்தோமா, கேஸ் சிலிண்டரை மூடினோமா என்பது போன்றவை சந்தேகங்கள். உடலில் பழக்கத்தை un-conscious ஆக செய்கிறோம் என்று பொருள். இது புரிந்தால் பயிற்சியாக செயல் முறைக்குக் கொண்டு வர முடியும்
இதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டுமென்றால், மனம், உணர்வு, சொல்வதை கேட்பதில்லை என்னும் போது அது உடலில் நிதானமாக மாறுகிறது. நாலைந்து முறை தோல்வியடைந்து, எண்ணத்தில் விவேகம் பெற்று, உணர்வில் விரக்தி இல்லாமல், முயல்வது உடலின் பொறுமை. அது உடல் பெரும் அறிவு. இது போல எனக்கு பொறுக்காது என்னும் எந்த நிலையிலிருந்தும் வெளியே வருவது உடல் பெற்ற அறிவு.அது ஆன்மாவில் ஞானமாகிறது. அல்லது ஆன்மாவை வெளிக் கொணர்ந்து அதனிடம் வாழ்வை ஒப்படைக்கிறது.
மனதில் செயல் எண்ணமாகி , மனம் புரிந்துக் கொள்ள ஆரம்பித்தால் , எண்ணம் எழுகிறது. நாம் புரிந்துக் கொள்ள முயலவில்லை என்றால், நம் முன் முடிவுகள், அபிப்ராயங்கள் , எதிர்பார்ப்புகள் வேலை செய்யாது . அது எண்ணத்தின், மைந்தன் மௌனமாக மாறுகிறது. அந்த நிலையில், நமக்கு அறிவுக்கு புரியாதது புரிய ஆரம்பிக்கிறது. அது மனம் பெறாமல் , ஆன்மா பெறுவது. மனதின் மௌனத்தால், உடலின் நிதானத்தால் வருவது. இப்படி எண்ணம், உணர்வு, தேவையில்லை என்னும் நிலையில் உடல் செயல்படும் போது அதன் அடிப்படை ஆர்வமாக இருக்கும். அது ஆன்மா செயல்படுவதற்கான அடையாளம். குறிப்பாக, அன்னை மேல் ஆர்வமாக , அதைத் தவிர அதனால் மற்ற எண்ணங்கள் எனக்குத் தேவையில்லை என்னும் நிலையாக இருந்தால் அது சமர்ப்பணமான செயலாக மாறுகிறது. உடல் பெறும் சமர்ப்பணம் அன்னை செய்த யோகம்.