Share on facebook
Share on telegram
Share on whatsapp

உதவி செய்தல்

தினசரி செய்திகளில் கர்மயோகி அவர்கள் கேட்காவிட்டாலும் செய், கேட்டால் செய், கேட்டாலும் செய்யாதே என்று அனுபவம் கற்றுக் கொடுக்கிறது என்கிறார்.  அதை படித்த போது பிறருக்கு உதவி செய்யாமல் எப்படி இருப்பது?  எனக்குப்  பலர் உதவியதால் தான் நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன்.  கேட்டாலும் உதவாதே என்றால் என்ன பொருள்? ஏன் அப்படி சொல்கிறார் என்று புரிந்துக் கொள்ள, அது பற்றி அவர் சொன்ன கருத்துக்களைப்  படித்தேன்.  அதன் சாரமாக நான் புரிந்துக் கொண்டது : உதாரணமாக, அவர் முதலில் கூறுவது மேலை நாடுகளில் இருக்கும் ஒரு சொற்றொடர்.  யாராவது துரோகம் செய்தால் அவனுக்கு நான் உதவியே செய்யவில்லையே, அவன் ஏன் எனக்கு துரோகம் செய்தான் என்று நகைச்சுவையாக கேட்பார்கள்.  ஆனால் அதன் பின் உள்ளது மிகப் பெரிய ஞானம் என்கிறார்.  அது  “unregenerate vital does not like to be under obligation” என்னும் Life Divine வரியை ஒட்டிய ஞானம் என்கிறார்.

மனிதனின் இயல்பு அகந்தை.  பிறருக்கு கட்டுப்பட விரும்பாதது.  பெறும் நிலையை விரும்பாதது. தரும் நிலையையே அது விரும்புகிறது.  அதனால், அது பெரும்பாலும் துரோகமாக குறைந்த பட்சம் நன்றியில்லாத்  தனமாக வெளிப்படுகிறது என்கிறார்.  பெற்றுக் கொள்பவரின் தகுதி, திறமை, மனப்பான்மை, ஆகியவற்றிக்கு ஏற்ப, உதவி செய்தால் அந்த வரையறை அறிந்து உதவி செய்தால், ஓரளவு வரை அது இருவருக்கும் பலனளிக்கும்.  அதை தாண்டி, உதவி செய்ய முனைந்தால், அவர் நமக்கு தீங்கு, துரோகம், இழைக்க முயல்வார் என்பது சட்டம்.  குறைந்த பட்சம் வெறுப்பார்.  நன்றிகெட்ட தனமாக நடந்துக் கொள்வார்.  தனக்கு நடக்கும் நல்லதை மறைப்பார்.  விலகுவார் . 

காரணம், ஒவ்வொரு மனிதனும் தான் கொடுக்கும் நிலையிலிருக்கும் தன்னிறைவையே விரும்புகிறான்.  பிறர் கொடுத்து தான் பெறும் நிலையை இழிவாக, தன்மானப் பிரச்சனையாக, பார்க்கிறான்.  மேல்மனதில், சமூக சூழலில், அவை இல்லாததைப் போல தோன்றினாலும், ஆழ் மனம் அப்படியே நினைக்கும்.  தன் உயர்வை காட்ட , அவன் மனம் துரோகம், வெறுப்பு, நன்றியின்மையை கருவியாக எடுக்கிறது. இதுவே மனித சுபாவம் என்பதால், நமக்கு நம் வாழ்வில் உதவியவர்களுக்கு நாம் செய்தது என்ன? நம் மனப்பான்மை என்ன என்று கவனித்தால், அதே போல அன்னையிடம் நாம் பெற்றுக்கொண்டதற்கு நம் மனப்பான்மை என்ன என்று கவனித்தால் இது புரியும். நாம் செய்யும் உதவி அனுதாபத்தால், பரிதாபத்தால் தான் , பெரும்பாலும் நடக்கிறது.  அது அகந்தையின் வடிவம்.  நான் உனக்கு உதவி செய்யும் நிலையில் இருக்கிறேன் என்னும் ஆழ் மனதின் வெளிப்பாடு.  அதனால், பரிதாபம், பச்சாதாபம் என்று செய்பவையெல்லாம் அவர்களை அதே நிலையிலேயே வைக்கும்.  பிச்சை, தர்மம், என்பவை, அதை பெறுபவரை அதே நிலையில் இருக்க வைக்கும்.  அத்தகைய கூட்டத்தை, அதன் சூழலை, falsehood ஆன தமஸை , சோம்பேறித்தனத்தை வளர்க்கும்.

அதனால் முதல் நிலையில், பிரார்த்தனை மூலம் பிறருக்கு உதவுவது சிறந்தது.  காரணம், அதை பெறுபவருக்கு தெரியாமல் செய்ய முடியும்.  அதை நாம் தீவிரமாக ஏற்றுக்கொள்ளலாமா என்றால் அது நம் னப்பான்மையையும், ஆன்மீக திறனையும் பொறுத்தது. பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என்பது நல்லெண்ணமா, என்னால் அவர்களுக்கு நல்லது நடந்தே தீர வேண்டும் என்ற மனப்பான்மையா, நான் நினைக்கும் வழியிலேயே அது நடக்க வேண்டும் என்னும் நப்பாசையா என்பதைப் பொறுத்தது.  அளவுக்கு மீறி, பொது புத்திக்கு பொருத்தமில்லாத காரியங்களை செய்து, அதனால், கர்மத்தை அனுபவிப்பவர்கள், அதனால் வறுமையை அடைந்தவர்கள், வாய்ப்பு, திறமை இருந்தும் அதிலிருந்து நல்ல முறையில் வெளிவர விரும்பாதவர்கள், எது நல்லது, எது சரி, என்று தெரிந்தும் செய்யாமல், குறுக்கு வழியில் சிந்திப்பவர்கள், போன்றவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்தால், உதவி செய்தால், அவர் கர்மத்தை நாம் ஏற்க வேண்டி வரும்.  ஊதாரி நண்பனுக்கு, கடனுக்கு உத்திரவாத கையெழுத்து போடுவது  உதவியில்லை . அதனால் அவன் கர்மத்தை நாம் ஏற்று நம் சொத்து பறிபோகும்.  உணர்வால் உந்தப்பட்டு, நமக்கு நாமே போட்டுக் கொண்ட அபராதம் அது. நாமே தேடிய படிப்பினை.  அதே போல, சுபாவத்தில் எப்போதும் தவறு செய்பவருக்கு, தான் செய்வதே சரி என்று இருப்பவருக்கு, அந்த சுபாவத்தை நம்மிடம் கொண்டு வரும்.  உதாரணமாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று காரியங்கள் செய்து மாட்டிக் கொள்பவருக்கு உதவுவது, அவசரக்காரனுக்கு உதவுவது, நிதானமில்லாத முன்கோபக்காரனுக்கு உதவுவது, அந்த சுபாவம் நமக்கு வரும் படி வாழ்க்கை நிகழ்வுகள் அமையும்.  இவை அனைத்தும், ” புத்திக் கொள்முதல்” என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.

கேட்கும்பொழுது இல்லை என்று சொல்ல முடியாமல் மருமகனுக்கு ரிடையரான பொழுது வந்த எல்லாத் தொகையையும் கொடுத்துவிட்டு நிர்கதியானவர் ஒருவர்.  பரீட்சை கேள்வித்தாளில் உள்ள கேள்வி எது என்று கேட்ட நண்பரிடம் முகம் சுளிக்கக் கூடாது எனச் சொல்லி கல்லூரியில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு போனவர் ஒருவர்.

பிறருக்கு வலியப்  போய் உதவி செய்யும் உரிமை நமக்கு இல்லை.  கேட்பவருக்கு செய்யலாம்.  ஆனால், அதிலும் கர்மம் பாதிக்காத அளவிற்கு செய்ய வேண்டுமானால், கீழ்கண்டவற்றை ஆராய்ந்து செய்வது நல்லது:

–  உதவி செய்வதற்கு முன், அன்னை விரும்பும் எந்த ஒரு அம்சம், நல்லெண்ணம், பரந்த மனப்பாண்மை, பிறர் நிலை பார்வை, சுமுகம், நன்றியுணர்வு என்று ஏதாவது ஒரு அம்சம் முழுமையாக இருக்கிறதா என்று பார்ப்பது.

–  வாழ்க்கை எப்போதும் ஒரு சமநிலையை ஏற்படுத்த பார்க்கும்.  அனுதாபத்தால், பரிதாபத்தால், உறவுகள், நண்பர்கள் என்னும் உணர்வுக்காக உதவி செய்தால், பண உதவி செய்தால், திரும்ப வேறு சந்தர்ப்பத்தில் நாம் அதே போல பெற வேண்டிய அனுதாப நிலையில் இருப்போம்.. வாழ்க்கை சமன் படுத்தும் முறை அது.  அதை ஆழ்ந்து பார்த்து உதவி செய்வது நல்லது. நீங்கள் தருவது, சமநிலை அல்லது நீங்கள் பெறுவதை நிர்ணயிக்கும்.

-மேலே சொன்ன அன்னை விரும்பும் பண்புகளின் அடிப்படையில் கொடுத்தால், அதுவே திரும்ப வரும்.

– ஒருவரது வாழ்வு, வளமாக , அறிவு வளர, சுபிட்சம் வளர , சித்தம் வளர என்று ஒரு உதவி செய்தால், அது அகந்தை உதவுவது அல்ல.  அது ஆன்மாவும், ஆன்மாவும் பரிணாம நோக்கத்தை பரிமாறிக் கொள்வது.  ஒரு ஊனமுற்றோருக்கு உதவுவது அவர் வாழ்வில் முன்னேறுவதற்காக , தற்சார்பு கொண்டவராக இருப்பதற்கு உதவ வேண்டும்.  பிச்சை, தர்மம் போன்றவை, அவர்களை அதே நிலையில் இருக்கவே செய்யும்.  திருடனுக்கு, சமூக விரோதிக்கு, ஊழல்வாதிக்கு, உதவுவது அவற்றை அதிகப் படுத்தவே உதவும்.  நாம் செய்யும் உதவி, ஒரு திறமை, பண்பு, உயர உதவினால், நம் வாழ்வில் அது துன்பமாக எதிரொளிக்கும் நிலை வராது.

– லட்சியவாதிக்கும், நிறுவனத்திற்கும் உள்ள வேறுபாடு பார்த்து உதவ வேண்டும். நான் catering -இல் இருந்த போது , நிகழ்ச்சியில் வீணாகும் உணவு அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட , புகழ்பெற்ற அனாதை இல்லங்களுக்கே சென்று விநியோகிப்பார்கள்.  அவர்கள் அனைவரும் சமூக சேவையில் உள்ள celebrity கள் .  பதினைந்து வருடமாக அங்கு இருப்போர், அதே நிலையில் இருக்க, அவர்கள் வாழும் சூழலும் அதே நிலையில் இருக்க, ஸ்தாபகர்கள் Audi , BMW  காரில் செல்கின்றனர்.  ஸ்தாபகர் இருக்கும்போது இருப்பது போல – அவருக்குப் பிறகு அந்த ஸ்தாபனம் இருக்காது. அந்த லட்சியமில்லாத , எதிரான லட்சியமோ,  சுயநலமோ கொண்ட ஸ்டபணமாகவே மாறும். அந்த வித்தியாசத்தை சாரம் முக்கியம் என்று சிந்தித்து பார்த்து செய்யும் உதவி, தொந்தரவு தராது. 

–  இந்த உதவி செய்யும் எண்ணத்திற்கு பின்னால், அகந்தை, சுயநலம், புண்ணியம், போன்ற ஆதாய மனப்பான்மை இருக்கிறதா என்று பார்ப்பது.  மரியாதைக்காக, உறவுகள், சமூக சூழல் ஆகிய நிர்பந்தத்திற்காக உதவுகிறோமா என்று பார்ப்பது,

– நம் உதவும் மனதை பிறர் exploit செய்கிறார்களா என்று பார்ப்பது,

–  நம் லட்சியம், குறிக்கோள், நோக்கம், முன்னேற்றம், நாம் பெற விரும்பும் பண்புகள் ஆகியவற்றை ஒட்டி இருக்கிறதா என்று பார்ப்பது.

 –  நீங்கள் செய்யும் உதவி, உங்களிடமோ, உதவி பெறுபவரிடமோ, ஒரு உயர்ந்த பண்பை, ஒரு உயர்ந்த அம்சத்தை வெளிக்கொணர்கிறதா என்று பார்ப்பது,

–  உங்களுக்கு அது ஆன்மீக முன்னேற்றத்தை தருமா என்று பார்ப்பது,

–  எல்லாவற்றிற்கும் மேலாக, NO, இல்லை, முடியாது, என்று சரியான நேரத்தில் சொல்ல முடிவது ஒரு மிகப் பெரிய கலை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.  அதை பின்பற்ற வேண்டும்.  அந்த நிதானம், பெரும்பாலான  தொந்தரவுகளை தவிர்க்கும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »