Share on facebook
Share on telegram
Share on whatsapp

துறை அறிஞரும் , துறை நெறிஞரும். Professionals & Professionalism.


Professionals earn. Professionalism Achieves – என்கிறார் கர்மயோகி அவர்கள்.

Professional என்றால் என்ன? மற்றவர்கள் அனுபவத்தில் பெற்ற உயர்ந்த அறிவை அந்த நிலைக்கு உரிய படிப்பால் பெற்றவர்கள்.

Professionalism என்றால் என்ன? Organized, systematic படிப்பாலும் அதன் மூலம் வந்த சாரமான  அறிவாலும் அது வெளிப்படும்போது அதற்கு தேவைப்படும் உயர்ந்த பண்புகளோடு வெளிப்படுவதுபவர் .

உதாரணமாக, B.Ed., படித்து 10-ம் வகுப்பு எடுப்பவர் ஆசிரியர் என்று அறிய படுகிறார். அவரே மாணவர்கள் வாழ்வில் உயரவேண்டும் என்று உளமார விரும்பி அதை ஒட்டி அந்த வேலையை செய்யும்போது நல்லாசிரியர் ஆகிறார். ஆசிரியர்-proffesional. நல்லாசிரியர்-proffesionalism.

Professionals -Professionalism- கொண்டு வருவது சாதனைக்கு குறுக்கு வழி என்கிறார்.

தொழிலில் எது professionalism என்றால்- அதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலனுக்கும், முன்னேற்றதிற்கும் செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய முறைப்படி செய்வது, முன் முடிவுகள், அப்பிராயங்கள், பாரபட்சம், விருப்பங்கள், சுகச் சார்புகள், சுயநலம் இல்லாமல் இருப்பது ,    குறைந்த பட்சம் காதலன் / காதலியின் குறையை காதலிக்கும்போது காணாதது போல , முதலாளியின் குறையை வருமானத்திற்காக காணாதது போல, நம் குறையை நாம் காணாதது போல-பிறர் குறையை எண்ணாமல் கடமை அதற்குரிய பண்புகளோடு வெளிப்படுவது Professionalism.

Professionalism தொடங்குவது  non-reaction -இல். Professionalism த்தின் உச்சம் சமநிலை. மேலே வளர வளர இந்த அடிப்படை தத்துவம் புரிய வேண்டும். மரத்தின் மேல் பகுதி மட்டும் வளர்ந்து அடிப்படையான வேர் வளர வில்லை என்றால் ஊன்ற முடியாது, பலருக்கும் பலன் தர முடியாது. உதாரணமாக, விளையாட்டில் ஒரு professional விளையாட்டு வீரர் -professionalism-ஐ கொண்டு வரும்போது  அந்த மனப்பான்மைக்கு ஏற்றாற்போல் எதிர் காலத்தில் அவர் coach, commentator, board member என்று உயர்கிறார்.

எனவே professionals – professionalism கொண்டு வரும்போது முன்னோடியாகவும் தலைமைத்துவம் கொண்டவராகவும் உடனடியாக உயர்வர். (leadership and pioneer ).  வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் professionalism கொண்டுவருவதன் மூலம்- மனிதனின் தெய்வீக மையத்துடன் – ஆன்மாவுடன் தொடர்பு  கோள்கிறோம் . அதனால், அவருக்கு இருக்கும் சிறந்த  பண்பு, திறமை, திறன் ஆகியவை அதிக பட்சம் வெளி வந்து கொடுக்கப்பட்ட பொறுப்பை செம்மையாகச் செய்வதால் – அந்த செயலே சாதனையாக மாறுகிறது.

எந்த ஒரு மனிதரையும் , செயலையும் நம் professionalism துடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது – குறிப்பாக வெளியே நடப்பதை எந்த உள்  மனப்பான்மை நிர்ணயித்தது என்பதைப்பார்ப்பது, செயலின் சூழலுக்கும், அது தந்த முடிவுக்கும் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்வது . தொழில்முறை மூலம் இன்னொருவருடன் தொடர்பு கொள்வது என்பது professionalism தின் முக்கிய நிலை. காரணம் அது மற்றவர்களின் குறையை பார்ப்பதில்லை. மறுக்கப்பட்ட  பிறரின் திறமையை மறைக்கப்பட்ட திறன்களை இதன் மூலம் வெளி வருவதால்  நம் ஆளுமை மேலும் மேலும் வளர்ந்து  தலைமைத்துவத்திற்கு கொண்டு செல்கிறது. தொழிலில் சாதித்தவர்கள் அனைவரிடமும் இந்த professionalism  இயல்பாகவே இருப்பதைக் காண முடியும்.

Professionalism ஆரம்பிக்க நமக்கு புரிய வேண்டியது – அதிர்ஷ்டம் பூர்த்தியாவது வேலையால். வேலை பூர்த்தியாவது உழைப்பால். தேவையான பண்புகளுடன் உழைக்க நாம் நம்மை வற்புறுத்த வேண்டும்  விரும்பிய வேலையை செய்யாமல் 100% கடமையை விரும்ப வேண்டும். எவரையும் திருப்தி படுத்த உழைக்க கூடாது. செயலை செம்மைப்படுத்த உழைக்க வேண்டும்.  தினமும் உங்களுடைய இன்றைய  சிறந்த திறன், பண்புகளுடன் நீங்களே போட்டிப்  போடவேண்டும். ஒரு இழையாவது ஜெயிக்க வேண்டும் . தொழில், கடமை அறிவு  ஆகியவற்றில் இடைவிடாத முயற்சி, முன்னேற்றம்  அதிர்ஷ்டம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »