The supramental plane is the causal plane – அதிமனதளமே எந்த ஒரு செயலையும் நிர்ணயிக்கிறது. ஆனால் நடைமுறையில் அதை உணர்வதில் சிக்கல் உள்ளது.
ஆனால் concious ஆக அதைப்பார்த்தால் அதில் கவனமாக இருந்தால் நம்மால் நம் செயலை அதன் பலனைக் கட்டுப்படுத்த முடியும். பண்புகளே ஒரு செயலின் பலனை, வாழ்வின் மறுமொழியை முடிவு செய்கிறது என்பது புரிந்தால் எந்த பண்பை எப்படி தேர்ந்து எடுக்கிறோம் என்று கவனிக்க வேண்டும். பெரும்பாலும் நாம் அறிந்த உயர்ந்த கருத்துகள், மனசாட்சி என்று அறிவது, அன்னையின் பண்புகள், ஆன்மாவின் பண்புகள் என்று ஏதாவது ஒன்றில் தேடி அதில் சிறந்ததை எடுத்துக் கொள்கிறோம். அதாவது அன்னையின் பண்புகள், ஆன்மாவின் பண்புகள் வாழ்வில் செயல்பட நம் மனதில் இறங்குகிறது. ( spiritual plane descending to mental plane).
அப்படி இல்லாமல் ஆன்மாவின் மேலேயே , அன்னையின் மேலேயே நம் கவனம் இருந்தால் ( இடையறாத நினைவு) மனமே நம் செயல்களை ஆன்மீகத் தளத்தில் ஆரம்பிக்க வைக்கிறது.
இதற்கு வழிகளாக கர்மயோகி அவர்கள் கூறுவது: எப்போதும் இதயத்திற்குப் பின்னால் ஆன்மா இருப்பதாக கற்பனை செய்து , அல்லது அன்னை இருப்பதாக கற்பனை செய்து ஒவ்வொன்றையும் அவரிடம் சொல்லிவிட்டு, கேட்டு விட்டு செய்வது. அல்லது “causal plane” ஒன்றை வைத்து அதனிடம் கேட்டு செய்வது. (எனக்கு இதயத்திற்கு பின்னால் எனபது சற்று சிக்கலாக இருகிறது. அதனால் பாக்கெட் இல் இருக்கும் பிளெஸ்ஸிங் பாக்கெட் -ஐ நினைத்துக் கொள்வேன் ) அல்லது ஒவ்வொரு செயலுக்கு முன்னும் Mother என்று சொல்லிவிட்டு அது தரும் நிதானத்தில் உள்ளே பார்ப்பது . இது முதல் நிலை. இது “causal plane” ஐ திறக்கும் உருவாக்கும் மந்திரம். என்றாலும் இவை ஒரு நிலைக்கு பின் பிளெஸ்ஸிங் பாக்கெட் வெறும் காகிதமாக மதர் என்பது வெறும் வார்த்தையாக , ஜீவனற்ற நினைவாக ஜீவனற்ற முறையாக மாறிவிடும்.
என்றும் live ஆக , ever present ஆக அந்த மந்திரத்தை மாற்ற முடியும். அதற்கு Mother என்னும் வார்த்தை mental , vital , physical ஐ அடைய வேண்டும்.
Discovery of law of truth is the mental mantra.
சத்தியத்தின் சட்டங்கள் புரிவது மனதை அடைந்த மந்திரம்.
Changing attitude towards truth is vital mantra.
மன மாற்றமே பிரசினையை தீர்க்கும் என்று புரிவது உணர்வை அடைந்த மந்திரம்.
Exhibiting these through matter is physical mantra.
அறிந்த இந்த இரண்டு உண்மைகளையும் செயலில் வெளிப்படுத்துவது உடலை அடைந்த மந்திரம்.
அன்னையை ஏற்பது என்பது புரிவது அல்ல. கர்மயோகி அவர்கள் சொல்வது அன்னையை முழுவதுமாக உணர்ந்து புரிந்துக் கொள்ள வேண்டுமானால், அவர் பரிணாமத்தை முன்னேற்ற வந்த சக்தி, செயல் படும் சக்தி என்பது புரிய வேண்டும் என்றால் அன்னையை அதற்கான (plane) தளத்தில் செயல் படுத்திப் பார்க்க வேண்டும். அன்னையின் சக்தி அந்தந்த தளத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அருள் நம்மை தொடர்வதை உணர முடியும். அப்போதுதான் அன்னை பரிணாமத்தை முன்னேற்ற வந்த சக்தி என்பது புரியும்.
Causal plane – ஏ நம் வாழ்வை நடத்தும் விழிப்புணர்வு தளமாக, அன்னையின் தளமாக இருக்க வேண்டும், உடல், உணர்வு, அறிவு என்னும் தளங்கள் அதனுள் அடங்க வேண்டும். causal plane -ம், subtle plane -ம் எங்கோ இருப்பதாக நினைக்கிறோம். ஆனால் நாம் ஒரு இடத்தை உருவாக்கி அதை அன்னை இருக்கும் இடமாக மாற்றினால் அதை மீறிய சாதிக்கும் சக்தி வேறு எதுவும் கிடையாது. வாழ்வே சமர்ப்பணமான வாழ்வாக இருக்கும்.