Negative Attention – எதிர்மறை கவனம்
Negative Attention என்பது ஒரு விஷயத்தை எதிர் மறை மூலமாக புரிந்துக் கொள்வது. ஒரு நல்லதைக் கூட அதற்கு எதிரான கெட்டதை வைத்தே புரிந்துக் கொள்கிறோம். நல்லவன் என்றால் – கெட்டவை இல்லாதவன் நல்லவன் என்றெய் இருக்கிறோம். வேலையை சரியாக செய்வது என்றால் எதை செய்யக்கூடாது என்பதை வைத்தே புரிந்து கொள்கிறோம்.
இப்பொழுது ஒருவருக்கு ஏராளமான கடன் இருக்கிறது, சொத்துக்கு மேலே இரண்டு மடங்கு கடன் இருக்கிறது, அல்லது ஒரு ஏழைப் பெண்ணுக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகவில்லை, பத்து வருடமாக உழைத்தும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை. 40 வயதாகியும் நல்ல வேலை இல்லை. 50 வயதாகியும் ஒரு சொந்த வீடு இல்லை என்று இருப்பவர்களின் மனநிலையை நினைத்துப் பாருங்கள். எப்போதும் நாம் என்ன ஆகப் போகிறோமோ என்று negative -ஆகவே நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு கணம் கூட positive -ஆக நினைக்க முடியாதவர்கள். அது துரதிருஷ்டத்தில் விரும்பி வாழும் மனம் என்கிறார் கர்மயோகி அவர்கள்.
சில பேர் இப்படி சாதாரண நேரத்தில் கூட இருப்பார்கள். Negative attention -ஐ கொடுத்து அதை வளர்க்கும் refractory character அதிர்ஷ்டத்தோடு முரண்டு பிடிக்கும் சுபாவம் negative attention என்று சொல்கிறார். அப்படி கொடுத்து கொடுத்து negative -ஐ வரவழைப்பவர்கள்.
மனிதனுக்கு சோகம் பிடிக்கிறது. காரணம் சோகம் நம்மை engage -ஆக வைத்திருக்கும். சுய பச்சாதாபம் என்பது நம் அகந்தை மேல் நம் கவனத்தை செலுத்துவது. அது நமக்குத் பிடித்திருக்கிறது. Serial, Cinema -க்களில் சோக காட்சிகளில் தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுபவர்கள் சந்தோஷ காட்சிகளில் அப்படி ஒன்றுவதில்லை. நான் அப்படி இல்லை என்று சொல்பவர்கள், சில உதாரணத்தை நினைத்துப் பார்க்கலாம்.
தினமும் சரியான நேரத்திற்கு வரும் பெண் ஒரு நாள் நேரத்திற்கு வரவில்லை என்றால், உடனே மனம் எப்படி நினைக்கிறது – பதட்டமடைகிறது. ஏதாவது ஆகியிருக்குமோ, காலம் கெட்டுக் கிடக்கிறது, எதையாவது மறைக்கிறாளா, என்று தான் எண்ணம் முதலில் வரும். காதல், கீதல் இருக்குமோ என்று நினைத்து , பின் இல்லை, என் பெண் அப்படி இல்லை என்று சமாதானத்திலும் negative சமாதானத்திற்கு வருவோம்.
கடன் அதிகம் இருப்பவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தாலே கடன்காரன் தானோ என்றும், எடுத்தால் என்னவெல்லாம் பேசுவார்களோ, என்ன action எடுப்பார்களோ , என்றே தோன்றும். Sales Executive கொஞ்சம் அதிகம் order போட்டு stock வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் விற்குமோ, விற்காதோ என்று நினைப்பவர்கள் தான் 90% வியாபாரிகள். நல்ல உருளைக்கிழங்கு மசாலா அல்லது junk food சாப்பிட்டு வாயு ஏறி நெஞ்சு பிடித்தால் கூட மாரடைப்பாக இருக்குமோ என்று நினைப்பவர்கள், அதனுடைய தொடர்ச்சியாக என் மனைவி, குழந்தைகள், என்ன ஆவார்களோ என்று நினைப்பவர்களை எனக்குத் தெரியும். BP, Sugar இல்லையென்பதை சோகமாக சொல்பவர்களும் உண்டு. நெகடிவ் ஆகவே நினைத்து ACD obsessive compulsive syndrome உளப் பிறழ்ச்சி அடைந்தவர்கள் சிலரைப் பார்த்து இருக்கிறேன்.
அது போல பயம் மற்றும் சந்தேகத்தின் அத்தனை பரிமாணங்களும் negative attention. நம் ஒவ்வொரு எதிர்கால ச் சிந்தனையும் பெரும்பாலும் இதை உள்ளடிக்கியதாகவே இருக்கும். இதையெல்லாம் யோசித்தால் ஒவ்வொரு கணமும் நாம் negative விஷயத்திற்குத் தான் attention கொடுக்கிறோம் என்பது தெரியும். அதை அதற்கு எதிரான விஷயமாக மாற்றுவது positive attention. பெரும்பாலும் negative – positive attention-னின் விளக்கம் ஒன்று தான் என்று கர்மயோகி அவர்கள் சொல்கிறார்.
உதாரணமாக பயத்திற்கு விளக்கம் – நமக்கு வேண்டாதது நடந்து விடுமோ என்னும் எண்ணம். அதற்கு எதிரான positive ஆன நம்பிக்கை என்பது நம் மனதுக்கு பிடித்தது நடந்து விடும் என்பது. நாம் நம்பிக்கை, உற்சாகத்துடன் இருக்கும் போது positive attention -னும், பயம், மனச்சோர்வு இருக்கும் போது negative attention-னும் தருகிறோம்.
அதே போல நாம் பிரார்த்தனை செய்யும் போது கூட, நமக்கு அது வந்துவிடக்கூடாது, இது நடந்து விடக்கூடாது என்றே வேண்டுவோம். அல்லது அதை மனதில் வைத்து அதற்கு எதிரான நல்லதை வேண்டுவோம். உதாரணமாக என்னுடைய உடம்பு சரியில்லாமல் போய் விடக்கூடாது, எனக்கு கொரோனா வந்து விடக் கூடாது, இன்று நான் என் மனைவியோடு, பிள்ளைகளோடு சண்டை போடக்கூடாது . இந்த நாள் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக செல்ல வேண்டும், சோம்பேறியாக இருக்கக்கூடாது, இந்த வேலையைத் தள்ளிப் போடக்கூடாது, weight போடக் கூடாது, sugar ,BP வந்து விடக்கூடாது, யாரிடமும் ஏமாந்து விடக்கூடாது, என்று நாள் முழுவதும் நம் மனதில் ஓடும் எண்ணங்களை கவனித்தால் – நாம் செய்வதெல்லாம் negative -ஐ தேடித் தேடி பிடித்து அதற்கு எதிரான நல்லதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தீவிரம் intensity என்று பார்த்தால் நமக்கு எது வேண்டாமோ அதன் மேல் கவனம் அதிகமாக இருக்கும்.
இந்த மாதிரி மனநிலையோடு பிரார்த்தனை செய்தால் கூட அந்த force அனைத்தையும் ஒன்றாக கருதும் force என்பதால் அது இரண்டையுமே வலுப்படுத்துகிறது. பயிருக்கு போடும் உரம் களையையும் வளர்ப்பது போல. அதனால் நம்முடைய அந்த இயற்கையான மனித சுபாவத்தை புரிந்துக் கொண்டு pure positive thoughts-க்கு நம்மை பழக்கப் படுத்த வேண்டும்.
நான் கடனை அடைப்பேன் , என்பதற்கு பதிலாக நான் இப்போது சம்பாதிப்பது போல இரண்டு மூன்று மடங்கு அதிகம் சம்பாதிப்பேன். நான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று pure positive ஆக எண்ணங்கள் இருப்பது positive attention . அதுவே வளத்தை, சுபீட்சத்தை வரவைக்கும். அல்லது எந்த negative ஞாபகம் வந்தாலும் இது எனக்கு வேண்டாம் Mother என்று சொல்லச் சொல்வார்கள். அப்படி சொல்லாமல் – உடனடியாக அன்னை முகத்தை நினைவுக்கு கொண்டு வரவேண்டும் என்கிறார். அது மிகப் பெரிய positive attention. நம் நம்பிக்கை வளரும். நம் நம்பிக்கை, உற்சாகம், சக்தி எப்போது அதிகம் இருக்கும் என்றால் நமக்கு பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும் போது தான். வேறு வகையில் சொல்வதானால் நம்பிக்கை அதிகமானால் பிரச்சனைகள் தீரும்.
இதில் என்ன வேடிக்கை என்றால் நாம் உயர்ந்தது என்று நினைக்கின்ற சில விஷயங்கள் கூட negative attention தான் என்று சொல்கிறார். உதாரணமாக அடக்கம் negative attention. other man point – positive attention . பாசம் – negative attention . அன்பு – positive attention; கட்டுப்பாடு – negative attention, சுய கட்டுப்பாடு – Self-discipline – positive attention . கீழ்ப்படிதல் – negative attention, உடன்பாடு, பணி இணக்கம் – positive attention. மரபு – negative attention , பகுத்தறிவு (rational, reasoning ) – positive attention , தாமதத்தை தவிர்ப்பது – negative attention , வேகத்தை அதிகப்படுத்துவது – positive attention , விரயத்தை தடுப்பது – negative attention , அதிகபட்ச பயன்பாடு maximum utilization – positive attention . ambition – negative attention , aspiration – positive attention .
இது மட்டுமல்ல நாம் கவனம் செலுத்துபவர்கள் நம்மை exploit செய்தால் negative attention, முன்னேறினால் positive attention . பிள்ளைக்கு கொடுக்கும் attention அவர் பண்பு தவறினால் அது negative attention . நல்ல பண்புகளுடன் வளர்ந்தால் positive attention . அது போல சூழலில், இடிப்பது, current போவது, தும்மல் என்று சகுனங்களை கவனிப்பது – negative attention – அது போல positive சகுனங்களை உடனே கவனிக்க முடிந்தால் positive attention .
எதற்கு இவ்வளவு கூறினேன் என்றால் கர்மயோகி அவர்கள் அந்த அளவிற்கு நம் மேல் அக்கறை எடுத்துக் கொண்டு பட்டியலிட்டிருக்கிறார் என்று காட்டத்தான். இது கொஞ்சம் தான் இன்னும் நிறைய இருக்கிறது. positive thinking -ஐ பற்றி auto suggestion பற்றியும் நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது தொடர்புடைய எண்ணங்களை இந்த அளவிற்கு யாராவது சொல்லி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.