Share on facebook
Share on telegram
Share on whatsapp

பற்றறுத்தல் – Detachment -1

Nishkaamya  Karma – கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது நமக்குத் தெரியும்.  அதற்கு கர்மயோகி அவர்கள் தரும் விளக்கமாக இந்த முதல்  point  – accomplishment is decided by detachment . நம் சாதனை என்பது நம் பற்றற்ற நிலையை  பொறுத்தது engirar.

நாம் செய்யும் அத்தனை வேலைகளிலும்  ஒரு நிலையில் ஒரு தேக்கம் வருகிறது. ஒரே மாதிரி செய்கிறோம். ஜீவனில்லாமல் செய்கிறோம்.  காரணம் ஒரு நிலைக்கு மேல் நம் ஆர்வம் அதே அளவு இருப்பதில்லை.  அதனால் சாதிக்க வேண்டிய அந்த energy -யும் அதே அளவு இருப்பதில்லை.  நான் அப்படி இல்லை எப்போதும் போல்தான் ஆர்வமாக, திறமையுடன் செய்கிறேன் என்பார்கள்.  அந்த வேலையிலிருந்து மனத்தால் வெளியே வந்து பார்க்கும்போது தான் அது தெரியும்.  அதைப் புரிந்துக் கொள்வது முதல் வகையான பற்றறுத்தல் .

Detachment என்பதை அவர் – capacity to function in a plane without being part of it – ஒரு தளத்தில், அதன் பகுதியாக இல்லாமல் இயங்கும் தன்மை என்கிறார் கர்மயோகி அவர்கள்.  அப்படி செயல்பட முடிந்த பகுதி அறிவோ, உணர்வோ, உடலோ அல்ல.  ஆன்மா மட்டுமே அப்படி செயல் பட முடியும்.  குறிப்பாக அன்னை அன்பர்களுக்கு அப்படி செயல்படுவது என்பது அதாவது ஆன்மா மூலம்  செயல்படுவது என்பது mental , vital , physical -களின் தாக்கத்திலிருந்து, அதன் பழக்கங்கள், அபிப்ராயங்கள், முன் முடிவுகள், அனுபவங்களிலிருந்து வெளியே வருவது.  அது வெளியே வரும் போது, செயலின் மேல் பற்றில்லாததால், மனதில் மௌனமாகவும், vital -லில் அமைதியாகவும், physical -லில் நிதானமாகவும் வெளிப்படும்.  அதன் மூலம் ஆன்மா அதிகமாக செயல் பட முடியும்.

இந்த பொருள் என்னுடையது.  இதை விட அடுத்த நிலைக்கான பொருள் வேண்டும், வேலையில் எப்படி குறைவு வராமல் செய்வது, நன்றாக செய்வது, அல்லது எப்படி அங்கீகாரம் பெறலாம் என்று செய்வது, உறவுகளை திருப்தி படுத்த, அவர்கள் தொடர்பு, சமுதாய சூழல் கெடாமல் இருக்க என்ன செய்வது போன்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும்.  அது அகந்தையின் பற்று.  அது நம் திறமையை ஒட்டிய பற்றாகவே இருக்கும்.  அதுவே செய்யும் வேலையை யாருக்காக செய்கிறோமோ – customer, family , friends , society  என்று அவர்கள் பெற வேண்டிய பலனை நினைத்துச் செய்தால், நாம் நம் பழக்கத்திலிருந்து, நம் திறமையிலிருந்து வெளியே வருகிறோம்.

நாமெல்லாம் ஒரு வேலையைச் செய்யும் போது பலனின் மேல் உள்ள எதிர்பார்ப்பிலேயே செய்வோம்.  சமர்ப்பணம் செய்து விட்டதாக சொன்னால் கூட சமர்ப்பணம் பலிக்கிறதா என்னும் கவனமே இருக்கும், அல்லது பலிக்க வேண்டும் என்னும் ஆசையே உணர்வில் இருக்கும். அல்லது இந்த வேலை நன்றாக வர வேண்டும், பிறர் பாராட்ட வேண்டும், அல்லது திருப்திக்காக செய்ய வேண்டும் என்றெல்லாம் இருக்கும்.  அது தான் நம்மை அதே நிலையில் இருக்க வைக்கிறது.  ஒரே பலனை கிடைக்க வைக்கிறது.  நமக்குத் தேவை உயர் சித்தம், ஞானம் அவை இரண்டையும் கண்டுக்கொள்ளும் விவேகம்.  அது தான் இடைவிடாத முனேற்றத்தைத் தரும். அதற்கு மேலே சொன்ன நினைவுகள், உணர்வுகளில் இருந்து வெளியே வர வேண்டும்.

அப்படி வெளியே வந்தால் மனம் நம் சுபாவத்தை அறியும். பிராணன் தன்  உணர்வுகளை அறியும்.  உடல் தன்  பழக்கங்களை அறியும்.  அந்த ஒரு வரையறைக்குள்ளே நின்று வேலை செய்வது தெரியும். அதிலிருந்து வெளியே வருவதை பற்றறுத்தல் என்கிறார் கர்மயோகி அவர்கள்.

அந்த detachment  – ஒரு வெற்றிடத்தை, வெறுமையை ஏற்படுத்தாமல் அடுத்த உயர்ந்த நிலைக்கான ஆர்வமாக மாறும்.  ஆர்வம் ஆன்மாவின் பண்பு என்பதால் அது அடுத்த நிலையைப் பற்றிய ஞானத்தைத் தரும்.  உணர்விற்கு தேவையான சக்தியைத் தரும்.  நம்முடைய weak points  பற்றிய விழிப்புணர்வை தந்து உயர் பண்புகளை, திறமையை, திறனை ஏற்றுக் கொள்ள செய்யும்.

இது ஒருவகையாக பற்றின்மையை பழகுதல்.  இதை சிறுது சிறிதாக உயர்த்தி எதிலும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத நிலைக்கு உயர்த்தினால் ,  அது ஆன்மா தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவும்.  இத்தகைய பற்றின்மை நம்மை தற்போதைய limitation -னிலிருந்து வெளி வரவைத்து உயர் ஞானம், உயர் திறன் கொடுப்பதால், நாம் இதற்கு முந்தைய வாழ்வு நிலையை விட்டு விட்டோம் என்றாகிறது.  ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக பற்றின்மையால் ஏற்படும் வெற்றிடம் அதை விட உயர்ந்ததாலேயே நிரப்பப்படும்.  அது அடுத்த உயர்ந்த நிலையை அடைய ஆர்வத்தை, அறிவை, விழிப்பை தரும்.  அதனால் நம் உடல், பிராணன், மனம், ஆன்மா, ஆகியவை ஏற்ற தாழ்வு இல்லாமல், முரண்பாடு இல்லாமல்  (disharmony  of parts of the being ) உயர் சித்தத்திற்கு முன்னேறுகிறோம்

அது எப்படி detach ஆவது என்று புரியவில்லை என்று சொல்பவர்களுக்கு கர்மயோகி அவர்கள் இரண்டு பயிற்சி செய்து பார்க்க சொல்கிறார்.  ஒன்று உங்களுக்கு பிடித்த உணவு இருக்கும்போது, நல்ல பசியில் இருக்கும் போது உணவு தட்டின் முன் அமர்ந்த பின் 10 அல்லது 15 நிமிடம் சாப்பிடக் கூடாது என்றால் அந்த மனநிலை எப்படி இருக்கும்.  அந்த நேரத்தில் உணவு என்பது வயிற்றை நிரப்ப அல்ல அடுத்த வேலை செய்வதற்கான energy -க்கு மட்டும் தேவை என்னும்  அன்னையின் பண்புகளை எடுத்துக் கொள்வதானால் மனம் எப்படி செயல்படும் என்பதை கவனித்தால் நாம் படும் பாடு தெரியும்.  அன்னை சொல்வதே முக்கியம் என்று எடுத்துக் கொள்வதானால் நாம் அதை எப்படி  செயல்படுத்துவோம். அதை கவனித்தால் அந்த process புரிந்தால் நாம் detachment கொண்டு  வர முடியும்.

இரண்டாவது இடமாகச் சொல்வது – ஒரு பெரிய காணிக்கை கொடுக்கும் போதும், ஒரு சிறிய காணிக்கை கொடுக்கும் போதும் நம் உணர்வு, மனதை கவனித்தால் நாம் கொடுத்த காணிக்கையின்  அளவிற்கு ஏற்ப நம் கவனம் இருக்கும்.  காணிக்கையின்  மேலும் இருக்கும்.  அதன் தொடர்புடைய எதிர்பார்ப்புகள் மேலும் இருக்கும்.  காணிக்கையை அப்படி நினைக்கக்கூடாது என்று நினைத்து அதிலிருந்து வெளியே வரும் process  புரிந்தால் detachment  வரும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »