தன்னைத் தருதல் என்பது ஒரு பண்பல்ல. அது நல்லெண்ணம், பெருந்தன்மை, பரந்த மனப்பான்மை, பிறர் நிலை பார்வை என்னும் பல பண்புகளை உள்ளடக்கியது என்பதால் அதிக பலன் தருகிறது.
தன்னைத் தருதல் என்னும்போது நாம் ஏதோ பெரிய செயல் என்று நினைக்கிறோம். ஆனால் கர்மயோகி அவர்கள் சுயநலத்தில் இருந்து வெளியே வரும் , குறுகிய மனப்பான்மையில் இருந்து வெளியே வரும் எந்த செயலையும் தன்னைத் தருதல் என்கிறார்.
அதற்கு முதல் படி வேலை, உறவு, சமூகத்துக்கான அனைத்து கடமைகளுக்கும் உங்களை உங்க திறமையை, மனப்பான்மையை 100% கொடுப்பது .
மற்றவர்கள் உங்களுக்குச் செய்ய விரும்பாத எதையும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருப்பது.
அவர் தரும் மேலும் சில உதாரணங்கள்;
சம்பளம் வாங்கியதும், நண்பர்கள், பார்ட்டி என்று இருப்பவர் தன் சுகம் என்று வீட்டிற்கே பணம் தராமல் இருப்பவர் , தன் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை முதலில் வீட்டிற்கு சென்று கொடுப்பவன் உயர்ந்தவன் . வேலையை கூலிக்காக செய்வதை கடமைக்காக முழு மனதோடு செய்வதைத் தன்னைத் தருவது என்கிறார். இது போல் சிறு செயல்களும் பல மடங்கு வளத்தை கொண்டு வரும் என்கிறார்.
தன் சுயநலத்திற்காக வேலை செய்வதை – வாடிக்கையாளருக்காக – கம்பெனிக்காக , நாட்டுக்காக என்று மாற்றுவது.
ஒரு கருத்து வேறுபாடு வரும்போது பிறர் நிலைப்பார்வையில் அவரது உண்மையை அங்கேகரிப்பது தன்னைத்தருதல்.
நாம் பிறருக்கு ஒரு பெரிய உதவியைச் செய்தோம் என்பதை நினைவில் கொள்ளாதது போல் சாதாரணமாக பிறருடன் உறவாடுவது.
பிறர் கணிசமான ஒன்றை சாதித்திருப்பதைக் காணும்போது, பொறாமைப் படாமல், கெட்ட எண்ணம் இல்லாமல் மனமார பாராட்டுவது.
குறிப்பாக கீழ்க்கண்ட இடங்களில் நம் மனப்பான்மையை விட்டு வெளியே வருவது- தன்னைத் தருதல் .
-தான் வெற்றி அடைந்த வழிமுறைகளை பிறர்க்கு சொல்ல முடியாதது
-அன்னையை மற்றவர்களுக்கு தராதது.
-மற்றவர்களின் கருத்தை ஏற்க முடியாதது..
-தன் சொந்த சுயநலம் பதிக்க படும்போது அதற்கு மற்றவரை காரணமாக்குவது
தொழிலதிபர் ஆவதும் ஒரு self-giving தான் என்கிறார்.
எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் ஒரு தொழிலதிபரின் ஏதோ ஒரு பரந்த மனப்பான்மையின் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். . ரூ.100 சட்டை, ரூ.10000 டிவி முதலிவற்றை நாமே தயாரிப்பதாக இருந்தால் என்ன ஆகும். வியாபார நோக்கம் இருந்தாலும் அது ஒரு இழை சுயநலத்தை மீறியது என்கிறார். அதனிலேயே அன்னை அன்பர்கள் அனைவரும் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்கிறார்.
முழுதுமாக வெளிக்காட்ட முடியாத இடங்களில் மனத்தளவிலாவாது அதைப் பின்பற்ற முடியுமா என்று பாக்க சொல்கிரார். உதாரணமாக நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை. ஆனால் அதில் இருந்து வெளி வர நினைக்கிறோம். நம் அகந்தை தடுக்கிறது. இந்த நிலையில் அவரைப் பார்த்தால் வெளியில் புன்னகைக்க முடியவில்லை என்றால் கூட மனதுள் ஒரு அகன்ற புன்னகை அல்லது சிரிப்பைக் கொண்டு வருவது ஒரு ஆரம்பமாக இருக்கும் என்கிறார்.