Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும் ABUNDANT ACCOMPLISHMENT OF INFINITE DIMENSIONS  ஆகிய கட்டுரைகளை அடிப்படையாக கொண்டாலும், அவற்றில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு சற்று ஆழமான விளக்கங்களாக பலவற்றை தர இருக்கிறேன் .

உதாரணமாக  ஒரு கட்டுரையில் PARABOLIC CURVE ஐ  பற்றி விளக்கும் போது வாழ்க்கை பலத்தை மட்டுமே பார்த்து முதலில் பலனளிக்கிறது. பல பலவீனங்கள் 2%, 8%, 10%, 30% என்று இருந்தாலும் ஒரு பலம் 80% இருந்தால் அது தான் வாழ்க்கைக்கு பயன் அளிக்கும் என்பதாக இருக்கும். அப்படி என்றால் சுயநலவாதிகளுக்கு இருக்கும் பலம் ஜெயிக்கிறது. அவர்களுடைய பலவீனங்கள் அவர்களை பாதிப்பதில்லை என்று புரிகிறது. 

ஆனால் அதுவே நம் பண்புகளை வலிமை படுத்தினால், நம் மற்ற பலவீனங்களையும் தாண்டி பலிக்குமா என்ற கேள்வி எழும்போது நம்பிக்கையின்மையே  வருகிறது.  ஆனால் இதற்கான விளக்கங்களை P&P மற்றும் பல கட்டுரைகளில் ஆங்காங்கே விளக்கியிருக்கிறார். விரிவாக, ஆழமாக படிக்கும் போது மட்டுமே அது புரிகிறது. ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்று புரிகிறது. உதாரணமாக WHEN EVERYTHING FAILS, WHEN NOTHING MOVES – START FROM THE PHYSICAL என்பது -CONSCIOUSNESS APPROACH முறையில் அடிக்கடி கர்மயோகி சொல்லும் பண்பு. அதை பற்றி இதே வலைதளத்தில் கட்டுரை எழுதும் போது நமக்கு தெரிந்த அளவில், பொதுப்புத்தியில் அந்த செயலை செய்து அதற்கு தேவையான திறன், திறமை, ABILITY, CAPABILITY, TALENT, PERFECTION என்று வளரும் விதம் அதன் மூலம் பரிணாமத்தில் முன்னேறும் விதம் EVOLUTION  என்ற நோக்கில் எழுதியிருப்பேன்.

ஆனால் இதை TOKEN ACT என்னும் பார்வையில் பார்க்கும் போது RESPONSIBILITY IS THE FIRST MOVEMENT OF THE PHYSICAL என்கிறார்.  காரணம் வாழ்வு நகராத போது அது நகர தேவையான செயல், நம் முயற்சி, நமக்குத் தெரிந்த உயர்ந்த நிலையில், அதிக பட்சத் திறமையில் ஆரம்பிக்கும் ஒரு நிலை என்று தான் இது வரை நினைத்து இருந்தேன். ஆனால் அதற்கு முன் முதலில் எடுக்க வேண்டியது RESPONSIBILITY – பொறுப்பேற்றல். இது வரை நடந்தவற்றுக்கு காரணம் நானே என்பதே முதல் MOVEMENT. காரணம் வெளியே இருந்து உள்ளே செல்லும் முதல் இடம் அது. அதை ஆரம்பிக்காமல் வேறு எதுவும் பயன் தராது. செய்யும் செயல்கள் அனைத்தும் அதை கற்றுத்தரத்தான் பயன்படும். அது புரியாமல் வாழ்வு நமக்கான பலனை தரவில்லை என்று சொல்லிக் கொண்டு இருப்போம்.

பொறுப்பேற்றுக் கொள்ளுதல் என்றவுடன் நான் தான் காரணம் என்று அடக்கமாக நம்மை தாழ்த்திக் கொண்டு ஏற்றுக்கொள்வதில் ஒரு சந்தோஷம்  நமக்கு உண்டு. காரணம் ஆழ்மனதில் நாம் ஏதோ உயர்ந்தவர்கள், உயர் சித்தம் கொண்டவர்கள் என்ற அல்ப சந்தோஷத்தை எங்கோ கொடுப்பதால். ஆனால் RESPONSIBILITY அதற்கான சாரம், பொருள், மனப்பான்மையுடன் எடுக்கப்படவில்லையென்றால் அது மற்றவர்களுக்கு சேவை செய்வதாகவே அமையும். நம் வேலை எது, நம் பொறுப்பு எது என்பவற்றில் கூட வித்தியாசம், சாரம், பொருள், மனப்பான்மை புரியாமல், அறியாமையால் UNCONSCIOUS  ஆக இருக்கும் நாம், அது போன்ற உயர்ந்த பண்பை – பொறுப்பேற்றலை – எடுத்துக் கொள்ளும் போது, அது கொடுக்கும் பாடங்களை நம்மால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை.  ஆனால் புரியும் போது எத்தனை வருடங்கள் ஆனாலும் நாம் இழந்தது வருகிறது என்பதே உண்மை. சில விஷயங்கள் எனக்கு எட்டு வருடங்களுக்கு பிறகு நடந்து இருக்கிறது.

இதற்கு புரியும் உதாரணமாக கூறுவது – நாம் ஒரு ஆறு ஓடுவதைத்தான்  பார்க்கிறோம். ஆனால் அந்த நீர் ஓடுமுன், அதன் கீழ் உள்ள பல மண் நிலைகளை, LEAKAGE களை , அதன் தாக்கத்தை உறுஞ்சுதலை எல்லாம் SATURATE செய்த பின் தான் ஒரு நீர் ஆறாக தன் நோக்கத்தை நோக்கி ஓட முடிகிறது. அது போல நாம் தவறாக எடுக்கும் RESPONSIBILITY பலன் தரும் என்றாலும் அது சூழலின், மனிதர்களின், தடைகளை மீறி பலிக்க பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஆகலாம். ஆனால் பலிக்கும். ஆனால் அதுவே நோக்கம், பாதை, ஓடும் வேகம் ஆகியவற்றை கணக்கிட்டு CONCRETE இல் ஒரு கால்வாயாக, CULVERT ஆக CHANNEL ஆக  அதை செய்தால் அது அதன் நோக்கத்தை விரைவில் அடையும். அது போல எந்த ஒரு பண்புக்கும், அதன் சாரம், அதன் உண்மையான பொருள், அதற்கான மனப்பான்மை போன்றவைகள் இல்லாமல் பலிக்காது.

INTEGRATION OF THE BEING, ஆன்மா, மனம், உணர்வு, உடல் ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் கொண்டு வருவது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அது தான் வாழ்வின் அடிப்படை. வாழ்வில் ஏதாவது ஒரு பகுதியில், பரிணாமம், உயர்சித்தம், EVOLUTION AND HIGHER CONSCIOUSNESS கொண்டு வராமல் எந்த  பலனும் இன்று SUPERMIND இறங்க ஆரம்பித்த பிறகு கிடைப்பதில்லை என்பதே உண்மை.

இதை, அன்னையை பற்றி விளக்கும் போது கர்மயோகி கூறும் உதாரணம்:

முதல் நிலையில் எவர் நிலைக்கும், செயலுக்கும், அழைப்புக்கும்  திரும்பிப் பார்க்கும் அன்னை, அடுத்த அடுத்த நிலைகளில், ஒரு இழை உயர்வாவது சித்தத்தில் இல்லையென்றால் திரும்பிப் பார்ப்பதில்லை என்கிறார். உதாரணமாக ஆரம்பத்தில், பிரார்த்தனை, மலர் வைத்து வணங்கியவுடன் பல விஷயங்கள் நடந்தது. MIRACLE என்னும் அளவிற்கு கூட நடந்தது. ஆனால் அதோடு நின்றுவிட்டது.  காரணம் அந்த பிரார்த்தனையை, மலர் வைப்பதை அடுத்த நிலைக்கு உயர்த்தவில்லை. முதல் நிலையில் அன்னைபலித்தது –  தான் தெய்வமல்ல, ஒரு  சக்தி, படைப்பாற்றல் கொண்ட, பரிணாமத்தை உயர்த்த, வளர்க்க வந்த சக்தி-என்பதைக் காட்ட.  அந்த தெய்வம் என்ற CONCEPT டோடு நின்றுவிடுபவரை, வணங்குவதே போதும் என்று இருப்பவருக்கு அருள் தொடர்ந்து வருவதில்லை. அதை செய்பவர் அருளை பற்றி கவலைப்பட தேவையில்லை என்கிறார். (மலர்  வைப்பது, அதற்குப்  அடுத்த அடுத்த நிலைகள் பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறேன்).

அன்னையை பற்றி விளக்கும் போது, அவர் வேறொன்றையும் கூறுகிறார்.  அன்னை நமக்காக – தான் செய்வதில்லை. நம்மோடு சேர்ந்து தான் செய்வார். அப்போது சாதாரணமாக வாழ்க்கை தரும் பலனை விட அதிக பட்ச பலனாக இருக்கும். அதற்கும் உதாரணம் தருகிறார். அது அரசு பள்ளியில் படித்தால், ‘PASS ‘ ‘FAIL ‘ என்பது உண்டு.  ஆனால் அப்போது இருந்த நாமக்கல், ஈரோடு போன்றவற்றில் இருந்த SYSTEMATIC ஆக TRAINING கொடுக்கும் பள்ளிகளில் ‘PASS ‘ ‘FAIL ‘  என்பது கிடையாது. 90 ஆ 100 ஆ என்பதே பிரச்சினையாக இருக்கும். அதுவே வாழ்க்கையோடு நாம் செய்வதற்கும் அன்னையோடு நாம் செய்வதற்கும் இருக்கும் வித்தியாசம்.  நான் அடிக்கடி சொல்லும் உதாரணம் தினம் ஒரு ஆங்கில வாக்கியம் படி – என்று சொன்னதை எடுத்துக் கொண்டு செய்த போது , ஒரு வருடத்தில் கர்மயோகியே பாராட்டும் அளவுக்கும் கட்டுரை எழுதவும், பேசவும் வந்தது, இது வாழ்க்கையின் அதிர்ஷ்டம் அல்ல அன்னையின் அருள். 

இது போன்ற ஏராளமான உதாரணங்களை ஏற்கனவே எழுதியுள்ளேன்.  அதற்கு பின்னால் இருந்தது இதற்கு மேல் நான் வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால், எனக்கு ஆங்கிலம் அவசியம் தேவை என்ற தெளிவு, அது என் பொறுப்பு என்று நான் எடுத்துக் கொண்ட RESPONSIBILITY . அதற்காக நான் காட்டிய உயர் சித்தம், SINCERITY .அது அளித்த பயனே அது.   ஆனால் இதை சமர்ப்பணம் என்ற பெயரில் அன்னையை அனுப்புதல் என்ற பெயரில் அர்த்தமில்லாமல், சாரம் புரியாமல், நம் பங்கை செய்யாமல் இருப்பதால்,  அது அதற்குரிய பலனை அளிப்பதில்லை. தேர்வுக்கு செல்லும் பிள்ளைகளை அன்னைக்கு சமர்ப்பணம் செய், பிரார்த்தனை செய் என்று சொல்கிறோம். சமர்ப்பணம் செய்து விட்டாயே, நீ படிக்கத் தேவையில்லை என்று சொல்வதில்லை .  ஆனால் நம் வாழ்வில் மட்டும் சமர்ப்பணம் செய்தல், மலர் வைத்தல் , அன்னையை அனுப்புதல் என்று மட்டுமே வழிகளை சொல்லும் பலர், அதற்காக நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி, இதன் சாரம் எதையுமே புரிய வைக்க முயன்றதில்லை.

அது போல நாம் எடுக்கும் ஒவ்வொரு பண்புகள், செயல்களுக்கும் அதற்கான அடுத்த நிலை என்ன என்று தெரிந்து ஒரு இழை, ஒரு நூலளவு உயர்த்தினால் பலன் தானே வரும். அதற்கு அதன் சாரம், அது எதற்கு இருக்கிறது, அது எங்கே முடிகிறது என்று புரியும் போது, அங்கே ஒரு படைப்பாற்றல் உருவாகிறது. உதாரணமாக சமநிலை – EQUALITY என்பது படைப்பாற்றல் கொண்ட ஒரு உயர்ந்த பண்பு என்று அன்னை கூறுகிறார். SYMBOL லில் பன்னிரண்டு பண்புகளில் அதை வைத்து இருக்கிறார். அந்த படைப்பாற்றல் கொண்ட நிலையை  அடைய வேண்டுமானால்,  அதன் முந்தைய நிலைகள் நமக்கு தெரிய வேண்டும். அதை TOKEN ACT ஆக எடுக்க வேண்டும். அதுவே நமக்கான THY WILL-ஐ அடையும். உதாரணமாக சமநிலையை எடுத்துக் கொள்வோம். அதன் முதல் ஆரம்பம் – நாம் இதுவரை பத்து வார்த்தையில் அல்லது வரிகளில் பேசியதை, நான்கு வார்த்தைகளில் அல்லது சில வரிகளில் பேசுவது, எதிரில் பேசுவோரை முழுதும் பேசவிட்டு பிறகு நாம் பேசுவது, STOP LISTENING TO INTERFERE OR REACT, START LISTENING TO UNDERSTAND OTHER MAN’S POINT OF VIEW, அது வரை பேச்சில் குறுக்கிடாமல் இருப்பது, ஒரு சில வினாடிகள், நிதானித்து பேசுவது, NON-REACTION, SILENT WILL, PATIENCE, நிதானம், அமைதி, அமைதிக்கு பின்னால் உள்ள அமைதி (SILENT BEHIND SILENCE – WITHOUT ATTRICULATION IN MIND) பலனில் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்தல் , பற்றற்று இருத்தல், ஒவ்வொரு கணமும் உயர்சித்த பார்வை, சிந்தனையற்ற நிலை, சமநிலை என்று பத்து அல்லது இருபது நிலைகளாக பிரித்து அந்த நிலையை  அடைய முடியும். இங்கு சாரம் CONSCIOUS ஆக,  சித்த பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே.

இப்படி பலன் தேடுவது சுயநலமே.  அன்னை விரும்பும் பண்புகளை நமக்கு ஏற்றார் போல வளைப்பது சரியல்ல.  ஆனால் கர்மயோகி கூறுவது அன்னையும், சுயநலமும் ஒன்று சேராது என்றாலும் இத்தகைய உயர்சித்தம், படைப்பாற்றல், பரிணாமம் பற்றிய சித்தம் அன்னையின் வேலையை, மனிதனை திருவுருமாற்றும் வேலையை குறைக்கிறது என்பதால் அதை அன்னையின் சேவையாக நான் ஏற்றுக்  கொள்கிறேன் என்கிறார்.

பல பொருட்களை விற்பனை  செய்பவனாக இருந்த நான் CREATIVE ELEMENT என்னும் நிலையை  அடைய தேவையான TOKEN ACT களை எடுத்துக் கொண்ட போது, ஒரே வருடத்தில் என்னுடைய சொந்த தயாரிப்பாக சொந்த BRAND இல் கொண்டு வர முடிந்தது. கடந்த எட்டு ஆண்டுகளாக INDUSTRIAL APPLICATION களில் ஒரு குற்ப்பிடதக்க பெயராக இருக்கிறது. குறிப்பாக, APPLE MANUFACTURING இல் என்னுடையதும் ஒரு APPROVED BRAND என்பதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்.

இதையெல்லாம் செய்வது பெரிய யோக நிலைகள் அல்ல. மனித மனதின் – MENTALலின் உயர்ந்த நிலைகள், சாதாரணமாக நாம் தொடாத நிலைகள் அவ்வளவே. தான் அந்த நிலையையே அடைந்துள்ளதாகவும் அதை யார் வேண்டுமானாலும் முயன்றால் அடைய முடியும் என்று கர்மயோகி கூறியிருக்கிறார்.

RESPONSIBILITY பற்றி ஆரம்பித்து கட்டுரை எங்கோ சென்றுவிட்டது. நான் முன்னுரையில் கூறியது போல இது பல முறை இந்த கட்டுரை முடியும் முன் நிகழும். காரணம் அவர் கடலளவு எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அதில் இறங்கி முத்துக்களை மட்டும் தேடி எடுப்பது பெரிய செயல். அப்படி தேடும் போது வேறு பல VALUABLE க்கும் கிடைக்கும் போது, உதாரணங்களாக அவற்றை பகிர நேரிடுகிறது. இப்போது TOKEN ACT க்கு முதல் தேவையான RESPONSIBILITY க்கு வருகிறேன் – பொறுப்பேற்றல் என்று அதை கூறுகிறோம். அதற்கான உண்மையான விளக்கத்தை தந்து விட்டு, அதற்கு அடுத்து அவர் சொல்லும் உன் வாழ்க்கை பொறுப்பை பிறர் கையில் தராதே, என்று கூறுவதை விளக்க இருக்கிறேன்.

அதன் அடிப்டையாகவே இப்போதெல்லாம் அடிக்கடி நான் நமக்கும் அன்னைக்கும் இடையில் இடை தரகர்கள் எவரும் தேவையில்லை என்று கூறுகிறேன்.  அதுவும் எதையும் செய்து பார்க்காமல், அதன் சாரம் அல்லது உள்ளர்த்தம் சொல்லாமல், கர்மயோகியின் வார்த்தையின் படி, FIELD OF EXPRESSION (சொல்வதை செய்யாதவர்கள், அல்லது செய்து பார்க்காதவர்கள், அதற்கான சந்தர்ப்பமோ, அனுபவமோ இல்லாதவர்கள் ) இல்லாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதால்,  நம் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் வராது. இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்க்கலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »

TOKEN ACT TO THY WILL – 2

TOKEN ACT TO THY WILL – என்னும்போது இப்போதைக்கு அதன் சாரமாக- நம் வாழ்வு எதை நோக்கிச் செல்கிறது? நான் செய்தேன், நான் செய்தேன் என்று சொன்ன இடங்களையெல்லாம் இன்று நினைத்துப் பார்த்தால்

Read More »

More Articles

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »

TOKEN ACT TO THY WILL – 2

TOKEN ACT TO THY WILL – என்னும்போது இப்போதைக்கு அதன் சாரமாக- நம் வாழ்வு எதை நோக்கிச் செல்கிறது? நான் செய்தேன், நான் செய்தேன் என்று சொன்ன இடங்களையெல்லாம் இன்று நினைத்துப் பார்த்தால்

Read More »