You have said: “By Yoga the inner transformation that is in slow constant process in the creation is rendered more intense and rapid, but the pace of the outer transformation remains almost the same as in ordinary life. As a result, the disharmony between the inner and the outer being in one who is doing Yoga tends to be all the greater, unless precautions are taken….” [Questions and Answers 1929 (16 June)]. What are these precautions?
MOTHER: That depends upon people. Each case is different. Individual precautions would be different according to individual reactions, difficulties, resistances. For each one there is a programme to follow which is good only for him.
முன்பு சொன்னது போல , வாழ்வின் அடிப்படை தத்துவம் புரிய ஒரு முன்னுரை – preperation to token act என்னும் கட்டுரையை அடிப்படியாக கொண்டு அதற்கு முதலில் தேவையான மனப்பான்மைகள், பின் அதை செயலை படுத்தும் விதம் – நான் செய்து பார்த்து பெற்ற பலன் என்று இந்த கட்டுரை தொடரை கண்டு செல்லலாம் என்று இருக்கிறேன்.
உடல் உழைப்பே முன்னற்றம் என்னும் நிலையிலிருந்து அறிவால் உழைப்பதே முன்னேற்றம், internet போன்ற சமுதாய நிலைகளின் தொடர்புடன் இருப்பதே முன்னேற்றம், எல்லாவற்றிலும் transparency -வெளிப்படை, human value – தனிமனித மதிப்புக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆகியவை இல்லையென்றால் இன்று முன்னேற முடியாது, உலகத்தோடு குறிப்பாக வியாபார உலகத்தோடு ஒன்ற முடியாது என்று இருக்கிறது. அதுவே இன்றைய சூழலின் தத்துவம். வாழ்வின் சட்டங்கள் பல இருந்தாலும் அவை எக்காலத்திற்கும் பொது என்றாலும் இன்று உடனே பலிப்பது அந்த ஊற்றின் தொடர்பிலிருப்பவர்கள்தான். இது பற்றி மேலும் அறிய சமூகம் அதிருஷ்ட சாகரம் என்னும் புத்தகத்தை படிக்கலாம். அன்னை அன்பர்களாக நாம் இதை எப்படி பார்ப்பது.?. அதுபோல முன்பு வாழ்வை நடத்துவது எளிதாக இருந்தது . ஒரு சட்டத்தை வேறு ஒன்றுக்கு பொருத்தி பார்க்க முடிந்தது. நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்ற ஒன்றே எல்லாவகையான liferesponse க்கும் போதுமனதாக இருந்தது. இன்று அப்படி உள்ளதா? ஏன் மாறி விட்டது? தீயவை ஏன் எளிதாக ஜெயிக்கிறது. வாழ்வு இன்று Supermind வந்தவுடன் நம்மிடம் எதிர்பார்ப்பது பரிணாமம் . Evolution.
உதாரணமாக, பழைய ambasidor காரை எடுத்துக் கொள்வோம். அதன் ஆரம்ப கட்ட, எளிமையான மெக்கானிசத்தால், அதை எவர் வேண்டுமானாலும் எந்த mechanic -க்கும் காரை பற்றிய அறிவு இருந்தால் சரி செய்ய முடியும், two-wheeler, tractor போன்றவற்றின் அறிவு இருந்தாலும் அதை சரி செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அதன் பிறகு technology வளர, வசதிகள் மாற, அது தரும் சக்திகள் புரிய, சமுதாய சூழலும், வாழ்வும் அதற்கு ஏற்றார் போல் மாறுகிறது. தேவைகள், அதற்கான மனநிலை, சூழல் மாறுகிறது. அதைப் பெறுகிறோம். ஒரு உயர்ந்த வகை காரை பெறுகிறோம். அதன் பின் அதன் service -க்கோ, பிரச்சனைக்கோ எந்த mechanic -டமும் செல்லலாம் என்ற நிலை இல்லை. Authorized service Centre -க்கே செல்கிறோம். அதாவது அதன் தயாரிப்பாளர் சொல்லும் வழிகளுக்குச் செல்கிறோம். அப்படி செல்லவில்லையென்றால் அந்த கார் சரியாக இருக்காது.
இதைப் புரிந்துக் கொள்ளும் நாம், நம்மை தயாரித்தவன் இறைவன், அவன் வழிகளுக்குச் சென்றால் , அவன் நோக்கத்திற்கு சென்றால் தான் நம்மால் சரியாக, விபத்து இல்லாமல், பிரச்சினையில்லாமல் வாழ்வில் செல்ல முடியும் என்பதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. இன்று high end கார்களுக்கு Relationship Manager மட்டுமல்ல – dedicated service manager -ம் தருகிறார்கள். அவர் இன்னும் அதிக நல்ல வழிகளை, அந்த காரை, அதிலிருந்து அதன் அதிகபட்சம் பெறுவது எப்படி என்று நமக்கு ஏற்றவாறு கூறுவார். குறிப்பாக Hybrid வாகனங்களுக்கு electrical மற்றும் petrol இரண்டிலும் ஒரே நேரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு அத்தகையோர் அவசியம் தேவை. அதை புரிந்துக் கொள்ளும் நாம் – நம் வாழ்விற்கு Relationship manager – கர்மயோகி அவர்கள், Manufacturer – அன்னை – அதனால் அவர்கள் சொல்வதைக் கேட்டால் அதிகம் பெற முடியும் என்பதை நம்ப முடியவில்லை.
குறிப்பாக உண்மையையும் பொய்யையும் balance செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாம், பெரும்பாலும் அத்தகை சூழலில், மனிதர்கள் நடுவில் இருக்கும் நாம் – ஒரு உயர் சித்தத்தின் தேவையை புரிந்துக் கொள்ளவில்லை.. காரின் முழு மதிப்பை பெற நாம் அதன் தயாரிப்பாளரிடம் செல்வதே சிறந்தது என்பது போல, வாழ்வின் முழு மதிப்பை பெற அதை உருவாக்கிய இறைவனிடம் செல்வதே நல்லது. இது ஏதோ விளையாட்டாக கூறவில்லை. Maruthi Suzuki கார் வைத்திருப்பவர்கள் கவனித்தால் இது தெரியும். அதன் high end service centre ஆன Nexa விற்கு செல்பவர்களுக்கு இந்த வித்தியாசம் புரியும். உண்மையில் அங்கே poster -இல் இருக்கும் வாசகங்களை, அவர்கள் website -இல் இருக்கும் வாசகங்களை கவனித்தால், இது பொட்டில் அடித்தார் போல் இருக்கும். Touch the innovator, influencer , explorer , experimenter in you என்று இருக்கும். அப்போது தான் maruthi கார் -கள் தரும் ஆனந்தத்தை முழுமையாக அனுபவிக்க முடியும் என்று இருக்கும்.
காருக்கே அப்படி என்றால், நம்முள் உள்ள ஆன்மா, இறைவன், அன்னை, ஆகியோரை explore செய்தால், தொட்டால் எப்படி இருக்கும், அவர்களுடைய தாக்கத்தை – influence -ஐ ஏற்றுக் கொண்டால் எப்படி இருக்கும், என்ன வகையான ஆனந்தத்தைப் பெற முடியும் என்று புரிந்துக் கொள்வதும், அதன் படி நடப்பதுமே நம் விதி. தனி மனிதனின் விதி. அதுவே THYWILL . (நாம் தொடும் நிலைக்கேற்ற அருளை நாம் பெறுகிறோம் என்பதை அருள், அன்னை அருள், பேரருள் என்னும் தலைப்பில் இந்த வலைத்தளத்தில் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்).
நாம் முன்னேற்றம் என்றால் சமுதாய முன்னேற்றம், மனநிலையில் முன்னேற்றம், ஆன்மீக முன்னேற்றம் என்பதை நினைக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் எல்லாவற்றுக்கும் நாம் நம்மைச் சுற்றி உள்ள விஷயங்களுக்கு , நடப்பவர்களுக்கு, மனிதர்களுக்கு – எப்படி எதிர் வினையாற்றுகிறோம் – react செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. அப்படி என்றால் அதன் விளைவுகளை உணரப் போவதும் நாமே, தனி மனிதனே. அதற்கு வாழ்வு தளமாக இருக்கிறது என்பதும் அங்கு தான் நாம் இறைவனை, அவன் தன்மையை, அவன் விருப்பங்களை உணர முடியும் என்பதும் – எதைக் காட்டுகிறது என்றால் மனிதன் இறைவன் தேவை என்பது போல, இறைவனுக்கும் தன்னை வெளிப்படுத்த மனிதன் தேவை என்பதையே காட்டுகிறது. நம்மை விட சக்தி ஆற்றல் அதிகம் பெற்றவன் இறைவன் என்னும் போது அவன் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் நடப்பதே புத்திசாலித்தனம். அதுவே THYWILL . அதை படிப்படியாக ரிந்து கொள்ள உதவுவது Token Act.
ஒவ்வொரு வெற்றிக்கும், முன்னேற்றத்திற்கும் தேவையான வாய்ப்பை, சூழலை, வாழ்வே தருகிறது. தோல்வி என்றால் – வெற்றியின் வேறு உருவம், முரண்பட்ட உருவம் என்று Supermind பார்வையில் பார்க்கும் போது , அது தன் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் போது , தனிமனிதனாக உணர்வில் ஆனந்தமடைகிறோம். அப்படி என்றால், இதைத் தவிர மனிதனுக்கு வேறு வேலை என்னவாக இருக்க முடியும், அப்படிச் செய்யும் போது அது நம் சுபாவத்தில் இருந்து வெளியே வர வைக்கும் விதமாக இருப்பதால், அது பரிணாமத்தில் முன்னேறுவதாகிறது.
வழியில் வெற்றி பெற்றவர்கள், சாதித்தவர்கள் போல சராசரி மனிதர்கள் வாழ்வை, சூழலை நாம் நம் முன்னேற்றத்திற்கான உச்சபட்ச களமாக பார்ப்பதில்லை. அதற்காக அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்தார்கள், என்னென்ன பண்புகளை பின்பற்றினார்கள், எவ்வளவு உயர்ந்த நிலையில் சிந்தித்தார்கள், அதற்காக என்னென்ன தியாகத்தைச் செய்தார்கள் என்பதைப் பொறுத்தே இறைவனும் அதன் சக்தியும் , ஆற்றலும் அவர்களுக்கு உதவி உள்ளதை நாம் சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும்.
இதுவெல்லாம் நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்கள் தான். ஆனாலும் செய்ய முடிவதில்லை. காரணம் நமக்கும், ஒலிம்பிக்கில் வெல்லும் விளையாட்டு வீரருக்கும், வியாபாரத்தை பெருக்குவோருக்கும், வாழ்வில் சாதனை படை த்தோருக்கும் உள்ள வித்தியாசம். உதாரணமாக – விளையாட்டு வீரர் பதக்கத்தை குறிக்கோளாக வைத்து செய்யும் செயல்கள் , பயிற்சிகள் அனைத்தையும் அதை மனதில் கொண்டே அந்த நோக்கத்திற்காக அதன் சட்டங்கள் சூழல்களை, மனதில் வைத்தே , concious ஆக செய்கிறார். ஒரு வாய் தண்ணீர் கூட அதற்கான விவேகம், பாகுபாடு, உஷார்த்தனம் இல்லாமல் குடிப்பதில்லை. அதே போல வியாபாரி தன் நோக்கம், சட்டம், சூழல், மார்கெட் , போட்டியாளர் ஆகியவற்றை மனதில் வைத்தே செய்கிறார். அதாவது , அவர்கள் நோக்கத்தை அதை படைக்கும் சூழலை , ஆற்றலை பற்றி நன்றாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல அமைத்து கொண்டுள்ளார்கள். ஆனால் நம்மில் பெரும்பாலோர் , பிறர் சட்டங்களை அவர்கள் சொல்லும் விதத்தில் அர்த்தமற்று புரிந்து கொண்ட விதத்தில் , அவர்கள் வாழ்வில் செய்தே பார்த்திராத ஒன்றை நம்மை செய்ய சொல்லி , நாம் அடிமைகளாக, பணம் காய்ச்சி மரமாக தங்கள் பிடியில் வைக்க செய்யும் செயல்களை ஒட்டி – எல்லாவற்றையும் செய்து விட்டு அதுவே சமர்ப்பணம் என்று நினைக்கிறோம். அதுவே சுதந்திரம் என்று நினைக்கிறோம்.
ஊன்றி கவனித்தால் மேல சொன்ன விளையாட்டு வீரர் , வியாபாரி, சாதனை யாளர் ஆகியோரை கவனித்தால் நோக்கம் அதை ஒட்டிய அவர்கள் செயல்கள் – தங்கள் வாழ்வை , தங்கள் நோக்கத்தை – அதற்கு சூழல் தரும் life response- அவர்களுக்கு அபரிமிதமாக சுதந்திரத்தை கொடுப்பதைக் காணலாம். அது அவரது ஆன்மாவிற்கு தளமாகிறது. அதன் aspiratin , Thywill வெளியே வர சமுதாயம், சூழல், அரசு , நாடு ஒத்துழைக்கிறது.
ஆனால் நாம் போடும் திட்டங்கள் நமக்கு விலங்காக இருக்கிறது. காரணம் நாம் நோக்கத்திற்கான சட்டங்களை எடுத்துக் கொள்வதில்லை. நமக்குத் தெரிந்த சட்டங்களுக்கு உட்பட்ட நோக்கத்தை எடுத்துக் கொள்கிறோம். அல்லது அன்னைக்கும் நமக்கும் நடுவில் இருக்கும் பூசாரிகளின் அறிவுரையே இறு தியானது என்று எடுத்து கொள்கிறோம். அதற்கு நம் முன் முடிவு, அபிப்ராயம், அனுபவம், இயலாமை , அறியாமை காரணமாக இருக்கிறது. அது வெளிப்படும் தளமாக ஆன்மா இல்லாமல், அறிவே அதை வெளிப்படுத்தும் தளமாக இருக்கிறது. அது கூட முழுமையாக இல்லாமல், அதை வெளிப்படுத்த அதை விட கீழ் தளமான emotions-ஸே கருவியாக இருக்கிறது.
ஒரு சாதனை படைக்கும் individuality வர வேண்டும் என்றால் அதை ஆரம்பிக்கும் இடமாக சில கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகியவற்றைக் கூறுகிறார். அதை படிப்படியாக Token Act மூலமே பெறமுடியும். ஒவ்வொன்றின் பின்னும், ஒவ்வொன்றுக்கும் தேவையான நோக்கம், மனப்பான்மை, நமக்குத் தெரியும். உயர்ந்தது எது தாழ்ந்தது எது என்று நமக்குத் தெரியும். நம் சுபாவத்தை விட்டு அந்த உயர்ந்ததை , அதன் சட்டங்களை பின்பற்றுவது நம் வாழ்வில் ஒரு தனித்தன்மை , individuality பெரும் வழி. அதை பெற்ற பிறகே அதை இழக்க முடியும்.
உதாரணமாக முதல் நிலையில் கடின உழைப்பு, அறிவு, விவேகம், பாகுபாடு ஆகியவற்றை முயன்று பெற்ற போது – அன்னைக்காக, கர்மயோகி அவர்களுக்காக- யாரையும் நம்பாமல் எனக்கு தெரிந்த அளவில் நான் பெற்ற போது – அது ஒரு தனித்தன்மை ஆகிறது. அதனால் நான் சாதித்தது அதிகம் – என்பது இங்கு பலருக்கும் தெரியும்.
ஆனால் company ஆரம்பித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகும் அதையே நான் பின் பற்றுவது சரியல்ல. அதை விட வேண்டுமானால் அந்த தனித்துவத்தை இழக்க வேண்டும். அதற்கு அடுத்த உயர்ந்த மனநிலையில் , உயர்சித்தத்தை எடுக்க வேண்டும். அந்த நிலை non -initiative அல்லது silence. அதன் முதல் நிலை வெளிப்பாடாக கொண்டு வர வேண்டிய கட்டுப்பாடு – Stopping the reliance on thought as an instrument of knowledge அதாவது இப்போது non -initiative அல்லது silence என்பது அறிவை என் முன்னேற்றத்திற்கான கருவியாக நான் நினைப்பதில் இருந்து வெளியே வருவது. அது கட்டுப்பாடு. அப்போது வரும் எண்ணங்களை, அது ஏன் வருகிறது என்பதைப் பார்த்து, எந்த பிரிவினைக்கான, அகந்தைக்கான வெளிப்பாடு அப்படி வருகிறது என்பதைப் பார்த்து, அதை ஒழுங்கு படுத்துவது என்று ஒரு முறையை எடுக்கும் போது, இது வரை நம் சிறப்பு, நம் தனித்தன்மை என்று நினைத்தவற்றிலிருந்து வெளியே வருகிறோம். பரிணாமத்தில் வளருகிறோம். அதற்கு ஏற்ப பலன் கிடைக்கிறது.
Token Act மூலம், வாழ்வில் நடக்கும் பல விஷயங்களுக்கு வேறு வகையான விளக்கத்தை புரிந்து கொள்ள முடியும் .
உதாரணமாக சுதந்திரம் என்னும் போது அதை நம் சுபாவத்தின் சுதந்திரம் என்று நினைக்கிறோம். அந்த சுபாவத்தை கட்டுப்படுத்தும் சுதந்திரமே நம் சுதந்திரம் அதுவே முன்னேற்றம், அதுவே ஆனந்தம் என்பது என்பது டோக்கன் ஆக்ட் மூலமே புரிந்து கொள்ள முடியும் . சுதந்திரமாக பறக்கும் பட்டத்தை , அதன் ஆனந்தத்தை உண்மையில் கட்டுப்படுத்துவது கட்டைவிரலின் dicipline என்பதை நம்மால் கவனிக்க முடியுமா ? இல்லையென்றல் கண்ட படி சுற்றி எங்காவது சிக்கி சின்னாபின்னாமாகி விடும்.- அதேபோல ஆன்மா வின் Thywilll தான் நம்மை சுந்திரமாக பறக்க வைக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியுமா.
உதாரணமாக வேலை கற்றுக் கொள்ள ஒரு கட்டுப்பாடு தேவை அது skill -அக வருகிறது. அது உடல் தன் சுதந்திரத்தை இழப்பது.
மனம் நல்ல நோக்கம் பெற கட்டுப்பாடு தேவை. அது attitude -ஆக மாறுகிறது. அது மனதின் கட்டுப்பாடு.
இவை போன்றவை வாழ்வின் அதிக பட்சத்தை பெற்றுத் தரும். அதாவது வாழ்வு அதன் தளமாக இருக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் இவை அனைத்திற்கும் கட்டுப்பாடு தேவை. வாழ்வு செயலின் பிடியிலிருந்து, சிந்தனையின் பிடியிலுருந்து விடு படவேண்டும். நிதானம், சமநிலை, சமர்ப்பணம் பெற வேண்டும் அது பிரபஞ்சம் வெளிப்பட இடமளிப்பது. அதன் மூலம் வெளிப்படுவது Thywill . இதுவே தனி மனிதனின் வேலை. இது அகம் புறத்தை ஆள்வது என்று நடைமுறையில் கூறலாம். அதற்கு, உடல், உணர்வு, மனதில் வலிமை போதாது. ஆன்மாவின் வலிமை தேவை. அந்த வலிமை பெற பண்புகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
இதற்கு உதாரணமாக கூற வேண்டுமென்றால், வீட்டு உபயோக பொருட்களை இயக்க, சாதாரண மின்னழுத்தத்துடன் தொடர்பு போதும். ஆனால் ஒரு தொழிற்சாலையை இயக்க உயர்ந்த மின்னழுத்தம் வேண்டும். அது மட்டுமல்லாமல், அதை தாங்கும், வெளிப்படுத்தும் சக்தியும் அதை தொடும் கருவிக்கு இருக்க வேண்டும். அதனால், உயர் நோக்கத்தை தொட அதற்கு தேவையான பண்புகளின் வலிமை நமக்கு இருக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் புரியவைப்பது Token Act.