கர்மயோகி அவர்கள் ஒரு “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம் வாழ்வின் சாரம் , இறைவன் திருவுள்ளம் வெளிப்படுமிடம் என்பார்.
நாம் அது புரியாமல் சமர்ப்பணம், சரணாகதி என்ற பெயரில் , அன்னை எல்லாம் செய்வார் என்று காத்திருக்கிறோம். ஆனால் அதற்கும் விளக்கமாக ” முதல் நிலையில் எவர் குரலுக்கும் ஓடி வரும் அன்னை – அடுத்த அடுத்த நிலைகளில் நம் மன நிலையில் – ஒரு இழையாவது மற்றம் இல்லையென்றால் – திருப்பி பார்ப்பதே இல்லை என்கிறார். அதை நம் வாழ்வில் பார்த்து இருக்கிறோம்அகந்தையின் சுபாவங்களில் இருந்து விடுபட்டு பரிணாமத்தில் , சித்தத்தில் உயருவதே மாற்றம் – THY WILL.
நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் திரும்பத் திரும்ப வந்திருக்கும். ஒரே மாதிரியான பிரச்சினைகள் வந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட character கொண்ட மனிதர்களால் பெரும்பலும் பிரிச்சினைகள் வந்திருக்கும் . ஆனால் அதை எல்லாம் பிறர் குறையாக பார்க்காமல் அதன் பின்னால் உள்ள நம் எந்த குணத்தால் இதை எல்லாம் வரவழைத்து கொண்டோம் என்று பார்த்தால் நம் பெரும்பாலான வாழ்க்கையை நம் எந்த சுபாவம் நடத்துகிறது என்று புரியும். நம் வாழ்வில் இரண்டு மூன்று சுபாவங்கள் மட்டுமே dominant ஆக இருப்பது தெரியும். அது நம் வாழ்வின் சாராம்சத்தை அறிவது . “act repeats”, “life repeats ” என்னும் நோக்கில் கர்மயோகி அவர்கள் நிறைய எழுதி இருக்கிறார்கள். அது பற்றிய விளக்கங்களை நானும் கட்டுரைகளாக எழுதி இருக்கிறேன்.
பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் அளிப்பதன் மூலம் நமது low consciousness பற்றிய நிலையான விழிப்புணர்வைக் கொடுக்க வாழ்க்கை முயற்சிக்கிறது, இதன் மூலம் higher consciousnessக்கு விவேகம் மற்றும் பாகுபாடு தந்து நிரந்தரமாக உயர்த்துகிறது.
நாம் ஒரு பிறவியில் சில அனுபவங்களின் சாரத்தை பெறவே ஆன்மா விரும்புகிறது என்பதை அடிப்படியாக கொண்டது இது. வாழ்க்கையில் நிகழ்பவை ஒரு குறிப்பிட்ட சட்டத்தை ஒட்டி அதன் எனர்ஜி / நோக்கம் இருக்கும்வரை நடக்கிறது – கர்மா என்று கூட சொல்லலாம். ஒன்று அதை அனுபவித்து அதன் சாரம் (essence) புரிந்தால் அது வராது அல்லது அது திருவுருமாறினால் வராது. இதைத்தான் கர்மம் சுபாவத்தின் மூலமே பலிக்க முடியும் என்கிறார்.
அந்த சாரம் புரியாமல் வாழ்க்கையுடன் போராடுவது தோல்வியில் முடியும் அல்லது வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் என்னும் விரக்தியில் முடியும். ஒரு செயலை செய்யாமல் avoid செய்தாலும், அது வாழ்க்கையில் வளரும். ஒரு செயலை விதியே என்று செய்தலும், அனுபவித்து தீர்த்து விடுவோம் என்று செய்தாலும் தற்காலிகமாக ஜெயித்த உணர்வு வரலாம். ஆனால் புது சாதனை, வளர்ச்சி எதுவும் இருக்காது. ஆனால் அது வந்ததற்க்கான காரணத்தை புரிந்து செய்தால் அடுத்த நிலைக்கான அறிவு, திறமை, விவேகம் வரும். வாழ்க்கை அடுத்த நிலைக்கான வெகுமதியைத் தரும்.
ஆன்மாவின் பண்புகளை பலன் தரும் விஷயங்களாக நினைக்காமல் – வாழ்வின் நோக்கம் , வாழ்வின் தேவை அதுதான் என்பது புரிந்தால் – அது வெளிப்பட வாழ்வை கருவி ஆக்கினால் அது அனைத்து வளத்தையும் தரும். மனிதன் தானே ஒரு இறைசக்தியாக மாற முடியும். இப்போது அவன் இல்லாத அனைத்தாகவும் அவனால் ஆக முடியும். ஆனால் அதற்காக அவன் தன்னைத் தானே கடந்து செல்ல வேண்டும் , தன்னை என்பது தன் அறியாமையை , அதன் கருவியாக இருக்கும் அகந்தையை , அவனுள்ளிருக்கும் ஞானத்தின் கருவியாக மற்ற வேண்டும். அகந்தை விரும்பும் பண்புகளில் இருந்து, ஆன்மா விரும்பும் பண்புகளுக்கு மாறும்போது ,நமக்கு தேவையானதை பெரும் ஆற்றல் வந்து விடுகிறது.
இதை ஒரு முயற்சியால், பயிற்சியால் செய்ய முடியும். தனிப்பட்ட முயற்சி படிப்படியாகத் ஆன்மாவின் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். எல்லா செயல்களையும் அன்னையின் செயலாக மாற்றவும், அந்தச் சக்தியை மேலும் மேலும் ஏற்கும் அளவிற்கு நம் மனம் , உடல், உணர்வுகளை மாற்றவேண்டும். இந்த மாற்றம் திடீரென்று முழுமையடையாமல், படிப்படியாக நிகழும். அதன் மூலம் நாம் அன்னையின் கருவியாக முடியும். நம்மில் இறைவன் விரும்பிய ஆனந்தம் Thy Will நிறைவேறும். [Sri Aurobindo: Letters on Yoga] – II: Surrender] இல் கூறுகிறார். அதனால் இதை நாமே ஒரு initiative எடுத்து செய்ய முடியும் என்று புரிந்து கொள்ளலாம்.
இதற்கான விளக்கமாக கர்மயோகி தருவது : பிரம்மத்திலிருந்து தொடங்கி சடப்பொருள் வரை செல்கிறது. அது, 1) பிரம்மம், 2) சத், 3) சித், 4) ஆனந்தம், 5) அதிமனம், 6) இறைமனம் 7) உள்ளுணர்வு மனம், 8) ஒளிர் மனம், 9) உயர் மனம், 10) மனித மனம், 11) உயிர், 12) உடல், 13) சடப்பொருள் என அமைகிறது.The spiritual hierarchy starts from the Absolute Brahman and goes down to Matter. It is, 1) Brahman, 2) Sat, 3) Chit, 4) Ananda, 5) Supermind, 6) Overmind, 7) Intuitive Mind, 8) Illumined Mind, 9) Higher Mind, 10) Human Mind, 11) Life, 12) Body, 13) Matter. என்று தன்னை மறைத்து கொண்டதே subconcient inheritance , சுபாவமாக தாமஸமாக மாறி நம் முன்னேற்றத்தை தடை செய்கிறது.
ஆனால் ஓரளவாவது அறிவு என்றால் என்ன என்பதைஉணரும் நிலைக்கு நாம் வந்து விட்டதால் அது கான்சியஸ் ஆக செய்யும் செயல் மூலம் நம்மால் அறிவின் பல நிலைகளை 7,8,9 நிலைகளை அடைய முடியும். அதன் மூலம் வாழ்வின் துன்பம் என்பதே இல்லாத அனந்த மயமான வாழ்வாக மற்ற முடியும்.
அது வெளி ப்படும் விதமாக கர்மயோகி கூறுவது: கடந்த கால அனுபவத்தை நிகழ்கால செயல்களில் பொருத்தி பார்த்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை துல்லியமாக சொல்ல முடிபவன் ஞானி என்கிறார். இந்த முறையில் INSIGHT – உட்பார்வை, INTUITION – உள்ளுணர்வு போன்ற யோகிக்கான நிலைகளையும் நாம் பெற முடியும் என்கிறார்.
அதற்கு முதலில் நம் நிலை நமக்கு புரிய வேண்டும். நாம் பெற்ற அறிவு, ஞானம், ஆகியவற்றைப் பற்றிய சித்தப்பூர்வமாக – conscious ஆக இல்லாததால் தான் நம்மால் தொடர் வெற்றிகளைப் பெற முடியவில்லை. முன்னேற முடியவில்லை என்பது புரிய முடியும். பிறருக்கு சிறந்த அறிவுரை கூறும் நாம் நம்மில் அதில் ஒரு இழையை கூட ஏன் பின் பற்ற முடியவில்லை என்பது தெரிய வேண்டும்.
அதை பொதுவாக conscious ஆக நினைவுக்கு கொண்டு வரும் போது தான் நம்மால் , நம்மில் உள்ள தடை ஏற்படுத்தும் ஸ்வபாவத்தை அறிய முடியும். மாற்ற முடியும். half an hour with Mother என்ற முறை போல , தினமும் அல்லது அடிக்கடி – நமக்கு இதுவரை நடந்த நல்லது எப்படி நடந்தது, பிறருக்கு நடந்தது நமக்கு ஏன் நடக்கவில்லை, நமக்கே கூட முன்பு நடந்தது, இப்போது ஏன் நடக்கவில்லை, சில விஷயங்களில் நடக்கிறது, நமக்கு நடந்தது பிறருக்கு ஏன் நடக்கவில்லை – வாழ்வில் நடக்கும் விஷயங்களை ஆராய்ந்து பார்ப்பது, நாம் பெற்ற அறிவை, ஞானமாக, செயல்படுத்தும் விவேகமாக மாற்றும். அந்த முதல் படியே – உள்ளுணர்வாக்கு, உட்பார்வை கொண்ட ஞானியாக மற்றும்.
அதன் பிறகு அதை நம் வாழ்வில் பொருத்தி பார்க்க வேண்டும். நம் வாழ்வு நமக்கு தந்த மறுமொழிகளை அதன் மூலம் அறிந்து எந்த தத்துவம் நமக்கு வேலை செய்கிறது என்பதை புரிந்து கொண்டால் , எதை நோக்கி நம் வாழ்வு செல்கிறது , நமக்கான Thy Will என்ன என்பது புரியும். (சட்டம் – தத்துவம் – வித்தியாசம் புரிய மீண்டும் இந்த கட்டுரையின் முன்னுரையை பார்க்கவும் அதில் தெளிவு அவசியம்).
நான் எழுதிய கட்டுரைகளில் கொடுத்துள்ள உதாரணங்கள் அனைத்தும் அப்படி ஆராய்ந்து பார்த்து புரிந்து கொண்டு – பெரும்பாலான விஷயங்களில் – நடந்ததை மாற்றியும் இருக்கிறேன்.
பொருத்திப்பார்ப்பதற்கு உதாரணமாக ஒரு சட்டத்தை எடுத்து கொள்கிறேன். Life Divine Chapter -6 Man in the Universe ஐ டிப்படையாக கொண்டது இது. பிரபஞ்சத்தின் செறிந்த நிலையில், காலத்தாலும் , இடத்தாலும் கட்டுப்பட்டு இருப்பவன் மனிதன். அதில் அவன் சுபாவம் மூலம் மட்டுமே எல்லாம் நடக்கிறது. அதனால் பிரபஞ்சம் தனி மனிதனிடம் வாழ்வாக வருகிறது என்னும் சட்டத்தை எடுத்துக் கொள்கிறேன்.. Thy Will புரிய வேண்டுமானால் – மனிதன், பிரபஞ்சம், பிரம்மம் என்னும் மூன்றும் தனித்தனியானவை அல்ல . ஒரே விஷயத்தின் பல பரிமாணங்கள் என்று புரிய வேண்டும்.
அப்படி பார்க்கும் போது பரிணாம வளர்ச்சியில், உயிரின் பிராணனின் வளர்ச்சி, சமூக வளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி என்று மூன்று நிலைகள் இருப்பது தெரிகிறது. அதாவது Biological evolution, social evolution , spiritual evolution என்று மூன்று நிலைகளில் இருக்கிறது. பரிணாம முன்னேற்றத்தில் இந்த மூன்று நிலைகளை சொன்னாலும், சிந்தித்துப் பார்த்தால், involution -ஸ்ருஷ்டியிலும் இது இருப்பதைக் காணலாம். அதன் பொருள் நம் வாழ்வு- அனைத்தையும் வெளிப்படுத்தும் இடமாக இதற்கு நடுவே இருக்கிறது.
உதாரணமாக நாம் மாற வேண்டிய இடங்கள் நமக்குத் தெரியும் போது, சுமுகம், வளம், அமைதி போன்றவற்றை விரும்பி அதற்கான உயர் மனப்பான்மையை, உயர் சித்தத்தை எடுத்துக் கொள்ளும் போது நாம் மனித பரிணாமத்தில் முன்னேறுகிறோம். அதுவே, சுயநலமே முக்கியம் என்னும் போது மனதை சுருக்குகிறோம். அதாவது பரிணாமத்தில் பின்னோக்கிச் செல்கிறோம். சமுதாயம் முன்னேறும் இடங்களில் அதைப் பார்த்து அதனுடன் ஒட்டி நாமும் முன்னேறினால் வளர்கிறோம். அதோடு ஒட்டாதவர்கள் பின் தங்குகிறார்கள். இதை பல பழைய கம்பெனிகளில் பார்த்திருக்கிறேன். தான் இருக்கும் இடத்தை, வியாபாரத்தை, தரத்தை, சில நிறுவனங்கள் பல ஆண்டுகளாக காப்பாற்றிக் கொண்டு இருக்கும். ஆனால் சமுதாய மாற்றத்திற்கு தகுந்தாற் போல systems -ஐ , நடைமுறைகளை கொண்டு வராத போது – அது அதே இடத்தில் இருந்தாலும் , மற்றவர்கள் எல்லாம் தாண்டிச் சென்று விடுவதால், அவர்கள் பின்னோக்கிப் போவது அல்லது பின்தங்கி இருப்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
இந்த இரண்டுக்கும் தேவையான சத்தியத்தின் பண்புகளை, அதற்கான மனப்பான்மையை எடுத்துக் கொள்வது ஆன்மீக முன்னேற்றம்- Spiritual evolution. இவையெல்லாம் வாழ்வு என்னும் தளத்திலும் , அதன் கருவியான தனி மனிதனிலும் நடக்கிறது. அதனால் தான்- அனைத்திற்கும்- இறைவன் உட்பட அனைத்திற்கும் மனிதன் தேவை.
மேலே சொன்ன விஷயங்களில் இவற்றுக்கு இடையே நடக்கும் வினை பரிமாற்றங்களை – interaction -ஐ கவனித்தால் இது புரியும். எந்த அளவிற்கு உயர்ந்த விஷயங்களை முரண்பாடு இல்லாமல் செய்கிறோமோ, நம்மை விட உயர்ந்த நிலையில் உள்ளவைகளுக்கு மனதில் முரண்பாடு without conflict இல்லாமல் செல்கிறோமோ, அந்த அளவு, சுமுகம், அமைதி, முன்னேற்றம் கிடைக்கிறது. அப்படி என்றால் அத்தகைய reconciliation of attitude , மனநிலையின் இணக்கத்தீர்வு தான் மனிதனின் வேலை என்று புரிகிறது. பிரபஞ்ச நோக்கத்தை, பிரம்ம நோக்கத்தை Thy Will ஐ வெளிப்படுத்துவதாக இருந்தால் அது நல்ல முன்னேற்றத்தை தருகிறது என்று புரிகிறது.
இதை எடுத்தவுடன் எல்லா இடங்களிலும் நடைமுறையில் செய்ய முடிவதில்லை. ஆனால் அத்தகைய உயர்ந்த மனப்பான்மையை சிறு இடங்களில் செய்து அதை புரிந்துக் கொள்வது token act . அது பிரம்ம நோக்கத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் செயல் பட அனுமதிப்பது. அது அன்னை சக்தி செயல்படுத்த இடமளிப்பது. Intention of the Force -க்கு இடமளிப்பது. அதை நம் வாழ்வில் ஒரு இணக்கத்தீர்வாக எடுத்துக் கொண்டால் அது தரும் நம்பிக்கை, சுமுகம், வளம், முன்னேற்றம் போன்ற காரணங்களால், அதை மேலும் பல இடங்களில் செயல்படுத்த அனுமதிப்போம்.
என் வாழ்வில் பண்புகளை எல்லா இடங்களிலும் கடைபிடிக்க முடிவதில்லை, ஆனால் என் தனிப்பட்ட விஷயம் சம்பத்தப்பட்ட, அதனால் வேறு யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்னும் இடங்களில், தனி மனித மாற்றமாக கொண்டு வர முயல்கிறேன். குறிப்பாக quality, perfection , punctuality , creativeness , பிறர் நிலைப் பார்வை போன்றவற்றை கொண்டு வருகிறேன். நான்கு project -கள் இருந்தால் ஒன்றை மட்டும் அந்த விதத்தில் செய்யும் போது அதில் வரும் ஒரு முழுமையான முன்னேற்றம், உடலில், உணர்வில், மனதில், ஆன்மாவில், தரும் முன்னேற்றம் – பொருள்களில், வருமானத்தில் வரும் முன்னேற்றத்தை விட அதிக ஆனந்தம் தருவதால், அதை இன்னும் அதிக இடங்களில் பின்பற்ற முடிகிறது. அது -இழப்பதற்கு என்ன இருக்கிறது – அனைத்து பண்புகளையும் கடைப்பிடிக்கலாமே என்னும் தைரியத்தை, ஆர்வத்தை, உறுதியைத் தருகிறது.
ஒவ்வொரு கணமும் நம் முன் இந்த மன நிலையில் முன்னேற்றம், சமூக முன்னேற்றம், ஆன்மீக முன்னேற்றத்திற்கான தருணங்கள் நம் முன் உள்ளது. நம் வாழ்வை, நம் முன்னேற்றத்தை, இவையே முடிவு செய்கின்றன. எடுத்தவுடன் பிரம்ம நோக்கத்தை Thy WILL எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், அன்னை நோக்கத்தை எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், எல்லாவற்றுக்கும் பண்பால் ஆன ஒரு இணக்கத்தீர்வு தேவை என்பதன் கட்டாயம் நம் வாழ்வில் சட்டங்களி பொருத்தி பார்க்கும் பொது புரியும்.
நம்மை சுற்றியுள்ளவர், தெரிந்தவரின் வாழ்வை கவனித்தால், இது புரியும். பண்பு நிறைந்த வாழ்வை நடத்தியவர்கள், முன்னேற பல காலங்கள் ஆனாலும் ஒரு நிதானமான, திடமான, முன்னேற்றம் பெறுகின்றனர். அப்படி இல்லாமல், பண்பு இல்லாமல், பொய்மையின் பரிமாணங்ககளை வைத்து வாழ்க்கையை நடத்தியவர்கள், கடைசியில் சரிவை சந்திப்பதையும், அல்லது குறைந்த பட்சம் அவரது சந்ததியினர் அதை அழிப்பதையுமே பார்க்கிறேன். 1985 முதல் 2004 வரை, இருபது ஆண்டுகள் பல்வேறு ஹோட்டல்களில் , லாட்ஜில், மதுபான உணவகங்களில், பெரிய இடத்து பார்ட்டிகளில் waiter ஆக பணியாற்றியவன் நான். அப்போதெல்லாம் நான் அதிகம் பார்த்தது சமுக விரோதிகள், அரசியல்வாதிகள் அல்லது முழு பொய்மையின் வெளிப்பாடாக வியாபாரத்தை நடத்தியவர்களையே. அப்போதெல்லாம் வாழ்க்கையில் முன்னேற இது தான் வழி போல இருக்கிறது என்றே நினைத்து இருக்கிறேன். ஆனால் அதன் பிறகு அடுத்த 15 ஆண்டுகளில் அவர்கள் வாழ்வை பார்க்கும் போது அவர்களது வீழ்ச்சியை, பிரச்சனைகளை, சொத்தை, குடும்பத்தை இழந்த விதத்தை பார்க்கும் போது , இன்று Life Divine தத்துவத்தில் அதை பொறுத்திப் பார்க்கும் போது அதன் பொருள் நன்றாக புரிகிறது.
இதைத் தான் நம் மொழியில் life response என்கிறோம். அதிசயம், அதிர்ஷ்டம் என்று கூறும் வகையில் நடப்பதும், எல்லாம் அல்லது சேர்ந்து வரும் நேரத்தில் மொத்த காரியம் கெடுவதும் அது வாழ்வில் வெளிப்படும் விதம் ஆகியவற்றைப் பார்த்தால், அதில் நம் வேலை, அறிவு மட்டுமல்ல – பல விஷயங்கள், மனநிலை, நாம் எடுத்த முடிவுகள், அதன் பின் உள்ள அபிப்ராயங்கள், அனுபவங்கள் என்று பலவும் அந்த நிகழ்வில் தங்கள் தாக்கத்தை வைத்து இருப்பதைக் காணலாம். அதைத் தாண்டி, சூழலின், சமுதாயத்தின் தாக்கம் இருக்கும். அதையும் தாண்டி இறைவனின் விருப்பம், Thy Will இருக்கும். எந்த விதத்தில் வாழ்வு, பிரபஞ்சம், பிரம்மம் என்று மேலே உள்ளதின் தாக்கத்தின் கீழ் வருகிறோமோ அந்த அளவு நமக்கு ஒரு முழுமையான முன்னேற்றம் கிடைக்கும். முன்னேற்றம் வேண்டும் என்று நினைக்கும் உயர்ந்ததுடன், அது விரும்பும் மனநிலை, பண்புகளுடன் தொடர்பு கொள்வதே நம் வேலை என்று இதன் மூலம் தெளிவாகத் தெரியும். அதி மனம்,super mind அல்லது supramental force வேலை செய்ய ஆரம்பித்த பிறகு, இந்த தேவை அதிகமாகிவிட்டது. இனி வரும் காலங்களில் இதை செய்தே ஆக வேண்டும் என்னும் நிலையே வரும் . internet ஆல் வந்த வெளிப்படை தன்மை – உண்மையை , சாரத்தை, technology ஐ எல்லோரும் எளிதில் அறிந்து கொள்ள உள்ள நிலை அதன் ஒரு அடையாளம் என்கிறார்.
Note : மெயில் வரவில்லை என்று சொல்பவர்கள் , தங்கள் எண்ணை 8014422222 கு அனுப்பினால் நான் save செய்து கொண்டால் / நீங்களும் save செய்து கொண்டால் – நான் போடும் ஸ்டேட்டஸ்கள் உங்களுக்கு தெரியும். வாட்ஸ்சப் குரூப் / கம்ம்யூனிட்டி ஆரம்பித்தேன் ஆனால் நிறைய பேர் தங்கள் பெயர் மற்ற “குரூப்” கு தெரியும் என்பதால் – என்னுடன் தொடர்பில் இருந்தாலும் – சற்று சங்கடமாக உணர்ந்தார்கள். அதனால் அதை செய்யவில்லை. அதே போல தனிப்பட்ட மெயில் அனுப்புபவர்கள் rameshposts@gmail.com – என்னும் மெயில் ID கு அனுபவம். – www. lifenext.in இல் type செய்து அனுப்பினால் அதன் ஒரு copy admin கும் செல்லும். அதனால் பாதிப்பு இல்லை என்றாலும் அனுப்புபவரின் பிரைவசி போவதாக நினைப்பதால் கூறுகிறேன்.