Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும். 

உதாரணமாக முன் சொன்ன Token Act -இல் நான் எடுத்துக் கொண்ட பண்பு “பிடியை விடுதல்” .  நான் தான் எல்லாம் செய்கிறேன், வேறு யாருக்கும் அந்த perfection வராது, manager நல்லவர், திறமைசாலி தான் , ஆனால் பொதுப்  புத்தி, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் முடிவு எடுக்கும் திறமை கிடையாது ,  Supervisor -க்கெல்லாம் அவ்வளவு sincerity கிடையாது.  இந்த தலைமுறைக்கே  அது இல்லை, Whatsapp -வும் , facebook -க்கும் பார்ப் பதற்கே நேரம் சரியாக இருக்கிறது, குறிப்பாக நான் யார் என்பதை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் , இல்லையென்றால் தலையில் ஏறி கொள்வார்கள் என்பது போன்ற பல எண்ணங்கள்-அந்த பண்பை கடைபிடிக்க விடாமல் தடையாக இருக்கும் எண்ணங்கள்-அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, இது தவறு, என் அபிப்ராயம், என் பிடிவாதம், என் சந்தேகம், என் நம்பிக்கையின்மை , என் அகந்தை என்று புரிந்து அதை எடுத்த போது அபரிமிதமான வளர்ச்சி வந்தது. 

இப்போது மேல் சொன்ன இந்த பிடியை விடுதல் என்னும் உதாரணத்தை, ஆரம்பத்தில் சொன்ன – பிழைப்பு, வளர்ச்சி , முன்னேற்றம், பரிணாமம் என்பதில் பொருத்திப் பார்த்தால் எளிதில் புரியும் என்று நினைக்கிறேன். சுருக்கமாக கூறுகிறேன்.

முதல் நிலையில் அனைத்தையும் நானே எனக்குத் தோன்றியவாறு சமுதாயம் சொன்னவாறு செய்து, பிழைப்பு என்ற நிலையில் இருந்தேன்.  அதன் பிறகு, கர்மயோகி சொன்னபடி சுத்தம், ஒழுங்கு, அதிகப்பட்ச உபயோகம், விரயத்தை தவிர்த்தல் என்னும் பண்புகளில் கவனம் செலுத்திய போது, அந்த பண்புகள் தன்னை பூர்த்தி செய்துக் கொண்டது. அதாவது, அவை ஒரு SYSTEM ஆக, ஒரு PROCEEDURE ஆக, ஒரு PROTOCOL ஆக மாறியதால், என் நேரடி ஈடுபாடு பெரும் அளவு குறைந்தது.  தரம், வாடிக்கையாளர் பார்வை, செம்மை, CREATIVITY என்று என் பார்வையை விரிவுப்படுத்த இடம் கிடைத்தது.  இது வளர்ச்சியை நோக்கியது என்பதால், இது வளர்ச்சி என்னும் நிலை.  இங்கும் என் பங்கு அதிகம்.

இவை அனைத்தையும் நான் மட்டும் அல்ல என்னை சார்ந்தவர்கள், என் சூழல், அலுவலகம், தொழில், என்று அனைத்தும் தானே எடுத்துக் கொண்டு செய்யும் போது, வியாபார சூழல், அதன் TARGET, உற்பத்தி, வியாபாரம் மற்றும்  வாடிக்கையாளர்  சம்பந்தமான பிரச்சினைகள் இல்லாத நிலை, அரசு சட்டங்கள், சமுதாய வியாபார சூழல் நமக்கு சாதகமாக மாறும் நிலைகள், நாம் முன்னேற்றம் என்னும் நிலைக்கு சென்றதை காட்டும்.

இங்கு நம் ஈடுபாடு, பார்வையாளர் என்னும் அளவிலே மட்டும் இருக்கும். நாம் உருவாக்கிய SYSTEMS, PERSONS , DELEGATIONS அதை பூர்த்தி செய்துக் கொண்டுவிடும்.

இந்த மூன்று நிலைகளிலும் ஒரு படைப்பாற்றல் கொண்ட பண்பு, இறைவன் விரும்பும் ஒரு மனப்பான்மை அல்லது இறை நோக்கத்தை நிறைவேற்றும் ஆர்வம் ஒன்று உச்சத்தில் இருக்கும் போது, நீங்கள் நினைத்தும் பார்க்காத நீங்கள் சம்பந்தப்படாமலேயே அனைத்தும் நடக்கிறது.  இது பரிணாமம் என்னும் நிலை.  என் வாழ்வில் நடந்த உதாரணத்தில், ஒரு வருட வியாபாரம் ஒரு மாதத்தில் நடந்தது மட்டும் அல்ல, அது அறுபது கோடி ORDER  வரை செல்லும் வாய்ப்பையும் சிங்கப்பூரில் அலுவலகம் திறக்கும் வரை MIRACLE என்று சொல்லும் அளவில் நடந்தது. அதன் பின் CORONA மற்றும் கர்மயோகி மறைவால் அது தடைப்பட்டது ஏன் என்பது வேறு தலைப்பு.

இங்கு பிடியை விடுதல் பற்றி மேலும் தெரிந்துக்  கொள்ள வேண்டியது அவசியம். பிடியை விடுதல் என்னும் ஒரு பண்பே அடுத்த அடுத்த கட்டத்திற்கு எளிதில் எடுத்து செல்லும் என்கிறார் கர்மயோகி. பிடியை விடுதல் என்பது வாழ்வின் – உயர் சித்ததின் – தோல்வியே இல்லாத சட்டம் என்று தெரிந்தாலும்,  நாம் இருக்கும் நிலையே நமக்கு பிடித்து இருப்பதால், அதன் மீதுள்ள பிடியை நாம் விட மறுப்பதால், அதை தக்க வைப்பது நம் பொறுப்பே என்று நினைப்பதால், அதை விட்டால் நாம் எதிர்பாராதது நடந்து விடுமோ, அல்லது எதிர்பார்த்தது நடக்காதோ என்று நினைத்து, நம் வரையறை, அறியாமை போன்றவற்றை பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.

பிடியை விடுதலில்  நாம் கடக்க வேண்டிய முக்கியமான இடம் இது.  காரணம், உயர்ந்த ஆன்மீக அனுபவங்களை பெற நாம் பயப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.  காரணம்,  அதற்காக , இதுவரை அறிந்தவற்றிலிருந்து முழுமையாக வெளியே வர வேண்டி இருக்கிறது. ஆனால் மனதிற்கு தெரிந்த உயர்ந்ததைக் கூட நம்மால் செயல்படுத்த முடியவில்லை என்னும் இடமே அதி இருள். சாதாரண விஷயங்களில்  கூட நமக்குத் தெரிந்த உயர்ந்த பண்பை நாம் வெளிப்படுத்த மாட்டோம், உயர்ந்த திறமையை, ஆற்றலை வெளிப்படுத்த மாட்டோம். அதை வெளிப்படுத்தினால் இன்னும் அதிகம் பெறலாம், ஏற்புத்தன்மையை  அதிகப்படுத்தலாம் என்று தெரிந்தும் கூட அதை செய்வதில்லை  போன்ற இடங்களை கவனித்தால் நாம்  எந்த அளவு இறுக்கமான பிடிக்குள் இருக்கிறோம் என்பது புரியும்.நாம் என்னதான் அறிவை, அனுபவத்தை பெற்றாலும் – விவேகம் , பக்குவம் அடைந்து விட்டதாக  நினைத்தாலும்- குறிப்பான நேரத்தில் – நாம் பெரும்பாலும் உணர்ச்சியின் பிடியிலேயே இருப்பதைக் காணலாம்.  குறைந்த பட்சம் அதன் பிடியில் இருந்து வெளியே வந்து உயர் சித்தத்தின் அடிப்படைக்குச் செல்ல வேண்டும்.

இதுவே  ஒவ்வொரு ascent -டிலும்  decent -ஐ கொண்டு வருகிறது.  இது ஒரே நேரத்தில் simultaneous ஆக நடக்கிறது.  அந்த மாதிரி நேரங்களில் அது காலம், பகுத்தறிவு ஆகியவற்றை கடந்து நிற்கிறது.  Braman thinks – to become, want to create, makes a soul, and experience Ananda – பிரம்மம் நினைப்பது, உருவாக்குவது, வெளிப்படுத்துவது, ஆனந்தமடைவது  என்பதெல்லாம் எப்படி வெவ்வேறாக இல்லாமல் ஒரே இறைவனின் நான்கு பகுதிகளாக இருக்கிறதோ அதே போல முன்னேற்றம், வளம்  என்பது பிரம்ம நோக்கத்தின்  பல முகங்கள்.  Solar power , wind power , போன்றவை பிரபஞ்சம் எங்கும் பரவி கிடக்கிறது.  இலவசமாக கிடைக்கிறது.  alternate , sustainble ஆற்றல் என்பது பற்றி உலகம் இருபது ஆண்டுகளாக பேசி வருகிறது.  ஆனால் அதற்கு நாம் எவ்வளவு இடம் கொடுக்கிறோம்.  எந்த அளவிற்கு நம் வசதிக்கு, முன்னேற்றத்திற்கு, பயன் படுத்துகிறோம் என்று பார்த்தால், சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்பதே உண்மை. 

அதே போல அன்னையின் பிரபஞ்ச சக்தி பற்றி வாய் வலிக்க பேசினாலும்  நம் வாழ்வில் நாம் அதற்கு எவ்வளவு இடம் கொடுக்கிறோம் என்று பார்த்தால், நம்மை பார்த்து நாமே வெட்கப்பட வேண்டிய நிலையே உள்ளது.  நம் எண்ணம் எல்லாம் கடந்த காலத்திலும் அதை ஒட்டிய எதிர் கால எதிர்பாப்புகளிலுமே இருப்பதால் நாம் காலத்திலும், இடத்திலும் கட்டுப்பட்டு இருக்கிறோம். அதை விட்டு வெளியே வந்து அதற்கான பண்பை எடுத்துக் கொள்ளும் போது, அது காலத்தை, அதாவது ஒரு நிகழ்வு நடக்க வேண்டிய காலத்தை சுருக்கி, அல்லது அதை கடந்து பலிக்கிறது.  நான் இதற்கு முன் சொன்ன ஒரு வருட வியாபாரம் ஒரு மாதத்தில் வந்தது என்பது அப்படிப்  பட்டது. அது வாழ்வின் சட்டங்களுக்கு உட்படாதது  – பரிணாமத்திற்கான ஆர்வத்திற்கு சூழலை உற்பத்தி செய்து செய்யக் கூடியது.

எனக்கு MBA seat கிடைத்த உதாரணத்தை ஏற்கனவே பலமுறை கூறி இருக்கிறேன்.  நான் BA வும், MBA வும் distance education -னில் படித்ததால் regular part time -இல் சேர தகுதி பெறவில்லை.  distance education -னில் படித்தவர்கள் regular -இல் சேர முடியாது என்ற நிலை இருந்தது.  அது தெரியாமல் நான் apply செய்த போது, அந்த Rule -ஐ எதிர்த்து ஒருவர் case போட்டார்.  அப்படி என்றால் ஏன் அனைத்து பல்கலைக் கழகங்களும் தொலைதூர கல்வி நடத்துகிறது என்று கேட்டார்.  court தற்காலிகமாக stary order கொடுத்தது.  அந்த சில நாட்களில் என் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  படிக்க வேண்டும், படித்தால் தான் முன்னேற முடியும் என்னும் என் ஆர்வத்திற்கு சூழல் இல்லாததை உற்பத்தி செய்து வழி விட்டது என்றே நினைக்கிறேன். 

இதை தத்துவமாக – மனிதன், பிரபஞ்சம், பிரம்மம் என்று பார்த்தால் குழப்பம் வருவதாக நினைக்கலாம்.  அதையே சற்றே எளிமையாக நடைமுறையில் – நாம், குடும்பம், ஊர் அல்லது சமூகம் என்று பார்க்கலாம்.  இந்த மூன்றும் தனித் தனியாக நமக்குத் தோன்றினாலும் நன்றாக யோசித்துப் பார்த்தால் மூன்றும் ஒன்றே, ஒன்றின் பகுதியே, ஒன்றில்லாமல் ஒன்றில்லை.  முன்னேற வேண்டுமென்றால் இந்த மூன்றின் தொடர்பும் தேவை. மூன்றுக்குமான சுமுகம் , இணக்கம் தேவை.  ஆனால் மனிதன் தன்னை தனியானவன் என்று நினைக்கிறான்.  ‘நான்’ என்ற எண்ணத்துடனேயே வாழ்கிறான்.  சமூகமும் தனக்கு சேவை செய்வதாக, அல்லது சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறான்.  தேவை, கடமை என்று வரும் போது குடும்பத்திக்கு  பணிவான்.  அதே போல வேறு ஒரு தேவை, கடமைக்கு ஊருக்கு பணிவான்.  மற்ற நேரமெல்லாம் சுயநலத்தின் சின்னமாக, அகந்தையின் பரிமாணமாகவே இருப்பான். 

அது போலத்தான் பிரபஞ்சம், பிரம்மம், அதன் வெளிப்பாடாக, வாழ்வு. ஆன்மா, என்பதை எல்லாம் நினைவில் கொள்ளாமல், பிரம்மம், பிரபஞ்சம் வழியாக அகந்தையாக மாறியிருக்கிறது என்பதைக் கூட அறியாமல் வாழ்கிறான்.  நடைமுறையில் சுயநலமான ஒருவன், தான் தன் சுகம் என்பதை விட்டு, தான் தன் குடும்பத்தின் பகுதி என்று நினைத்து ஒட்டு மொத்த குடும்பத்தையும்  மனதில் வைத்து வேலை செய்பவன் பெறும் முன்னேற்றம் அந்த குடும்பம் பெறும் முன்னேற்றம் அதன் பின் கண் கூடாகத் தெரியும்.  அதைத் தாண்டி தன்னை சுற்றி உள்ள, சமூக சூழல் உள்ள மனிதர்களையும் மனதில் கொண்டு உழைப்பவர் அடையும் புகழ், முன்னேற்றம் நமக்குத் தெரியும்.

இதை வேறு விதமாகப் பார்த்தால், குடும்பம் அவனை விரும்பும், சமூகம் அவனை விரும்பும், அவன் முன்னேற குடும்பமும், சமூகமும் உதவும்.  தன்னை தன் குடும்பத்துடன் இணைத்தவன்   குடும்பத்திற்கு பெரியவனாகிறான் .  தன்னை தான் சார்ந்த சமூகத்துடன்  இணைத்தவன்   சமூகத்தில்  பெரியவனாகிறான்.  Apartment secretary முதல் பிரதமர் வரை வளர்ந்தவர்களை கவனித்தால் இது புரியும்.  இதிலிருந்து மனிதன் சுயநலமின்றி குடும்பத்திற்கு உழைப்பதும், சமூகத்திற்கு  சேவை செய்வதும் அல்லது அதை தாண்டி இறைவனுக்கு சேவை செய்வதும் அதன் மூலம் வரும் முன்னேற்றத்தை பார்க்கும் போது, சுயநலமான தேவைகள், தனக்குத் தானே செய்து கொள்ளும் சேவைகள் பெரிதில்லை. கீழ்தரமானவையே என்று தெரிகிறது.

இங்கு முன்னேற்றம் என்பது – பரிணாமத்தில் முன்னேற்றம் என்பது – நோக்கம் – motive -இல் மாற்றம் – மனநிலை – attitude -இல் மாற்றம்.  அது மாறினால்  நிகழ்வுகளின் தோற்றமும், அது தரும் பலனும் மாறுகிறது. இதற்கு உதாரணமாக கர்மயோகி அவர்கள் கூறுவது – இது வரை நாம் குடியிருந்த வாடகை வீட்டை, நாமே விலைக்கு வாங்கி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்,  இன்று எதுவும் மாறப் போவதில்லை.  ஆனால் சொந்த வீடு ஆன பின் நம் கவனம் அதில் அதிகமாக இருக்கும். முன்பு சாதாரணமாக ஆணி அடித்தால் இன்று சற்று யோசிப்போம். முன்பை விட அதிகமாக வீட்டை maintain செய்வோம்.  நான் அதன் பகுதி அல்லது அது எனக்குரியது என்னும் எண்ணம் இருக்கும். இந்த நிலை , நாம் இறைவனின் பகுதி அல்லது இறைவன் என்னுடையவன், என்னுடனே இருக்கிறான் என்னும் மன  நிலைக்கு நாம் மாறுவதை உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.

இவை அனைத்தும் பிரம்மத்தில், சூட்சமத்தில் செய்யும் வேலைகளை நாம் அறிவதில்லை.  அது தரும் ஆனந்தத்தை நாம் கவனிப்பதில்லை. வாடகை வீட்டில் இருந்ததை விட  சொந்த வீடு தந்த சுதந்திரம், ஆனந்தம், திருப்தி, நிம்மதியை நாம் கவனிப்பதில்லை.  அது போலத்தான் நாம் வாழ்வை, இறைவனை நம்மை விட்டு பிரிந்து இருப்பதாக நினைத்துக்  செய்கிறோம்.  நாம் அதன் பகுதி என்று நினைத்து செய்யும் போது அது தரும் சுதந்திரம், ஆனந்தம் அலாதியானது.  அதை நாம் கவனிப்பதில்லை. இதை சாதாரண உறவுகளில் கூட பார்க்க முடியும்.  இருபது  ஆண்டுகளுக்கு முன் என்னை பார்த்த என் நண்பர்கள், உறவுகள், அன்பர்கள் பார்வை வேறு. இன்று பார்க்கும் பார்வை வேறு.  அதே உறவு தான், நண்பர்கள்  தான், அன்பர்கள் தான்.  ஆனால் அதில் ஒரு புத்துணர்வு இருக்கிறது.  உறவு புதிதாகி இருக்கிறது.  எண்ணமும், நோக்கமும் பரந்து இருக்கிறது.  அனைவரும் சேர்ந்து வளர்கிறோம்.

தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்க்கலாம். வெள்ளி தோறும் மெயில் வராதவர்கள் 80144 22222 – எண்ணை save செய்து உங்கள் பெயரை எனக்கு மெசேஜ் செய்தால் WhatsApp – இல் லிங்க் அனுப்புகிறேன். ஸ்டேட்டஸ்-இல் நான் வைக்கும் link களையும் பார்க்க முடியும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 2

நான் company ஆரம்பிக்க வேண்டும், அதனால் நான் ஆனந்தமடைய வேண்டும் என்னும் என் விருப்பம், என் idea. அது என்னிலிருந்து பிரிந்து நிற்கும் ஒன்றல்ல.  அது என்னுடைய சித்தம் – consciousness . என்னுடைய

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 2

நான் company ஆரம்பிக்க வேண்டும், அதனால் நான் ஆனந்தமடைய வேண்டும் என்னும் என் விருப்பம், என் idea. அது என்னிலிருந்து பிரிந்து நிற்கும் ஒன்றல்ல.  அது என்னுடைய சித்தம் – consciousness . என்னுடைய

Read More »