Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 2

நான் company ஆரம்பிக்க வேண்டும், அதனால் நான் ஆனந்தமடைய வேண்டும் என்னும் என் விருப்பம், என் idea. அது என்னிலிருந்து பிரிந்து நிற்கும் ஒன்றல்ல.  அது என்னுடைய சித்தம் – consciousness . என்னுடைய creative consciousness என்று கூட சொல்லலாம்.  அல்லது consciousness with creative powers – அதாவது படைப்பாற்றல்  கொண்ட ஒரு எண்ணமாக வந்தது என்று சொல்லலாம்.  அதில் தான் ஆனந்தம் இருக்கிறது என்று நான் முடிவு செய்த பிறகு அதன் பின் அதுவே என் உலகமாகிறது. அந்த உலகம் வாழ்வாக செயல் பட – என்னிடம் கம்பெனியின் சட்டங்களாக , சூழல், சமுதாயம், மனநிலை, நோக்கம் என்று அனைத்தின் சட்டமாக வாழ்வில் எதிரொலிக்க எதிர்பார்க்கிறது.  இப்போது இந்த சட்டங்களுக்கு  ஒத்து வருபவர்களே என்னோடு வர முடியும். என்னை அடைய முடியும்.  என்னைத் தாண்டிச் செல்ல முடியும்.  என் business idea  என்பது கனவு போன்ற ஒரு illusion அல்ல.  form -ஐ உள்ளடக்கிய எனக்கான ஒரு ஆனந்தத்தை உள்ளடக்கிய ஒரு idea.  அந்த நோக்கத்தை ஒட்டி வருபவர்களே நான் அடையும் ஆனந்தத்தை அதன் பலனை பெற முடியும்.

இந்த உதாரணத்தின் concept -ஐ – லைஃப் டிவைன் சொல்லும் இறைவன் மனிதனாவதில், மனிதன் இறை வாழ்வை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பதில்  பொருத்திப்  பார்த்தால் எனக்கு ஓரளவு புரிகிறது. வாழ்வு சட்டங்களை ஒட்டியே நடக்கிறது. அதை ஒட்டி சென்றால் மட்டுமே ஆனந்தம் கிடைக்கிறது என்பதும் புரிகிறது.  ஆனால் சில இடங்களில்  செய்கிறேன். பல இடங்களில் செய்வதில்லை. அதன் பலன் தெரிந்தாலும் பல இடங்களில் செய்ய முடியவில்லை.  அல்லது செய்ய மறுக்கிறேன் என்பதே உண்மை.

உதாரணமாக December 2018 இல் இதை token act ஆக செய்து பார்க்க ஒரு வாரம் பாண்டியில் கர்மயோகி அவர்கள் தங்கச் சொன்னார்.  காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அவருடன் இருக்க வேண்டும்.  Mobile Phone உபயோக படுத்த கூடாது.  தொழில் சம்மந்தமாக எதையும் செய்ய கூடாது. செய்ய வேண்டியது எல்லாம் எனக்கு என் business -ஐ பற்றிய எண்ணம், பதட்டம், வரும் போதெல்லாம் அது எதனால் வருகிறது என்பதைக் கண்டறிவது மட்டும் தான்.  office -இல் , staff -இடம் , labour -ரிடம் வேறு காரணங்கள் சொல்லி விட்டு வந்தேன்.  என் பழக்கம் என்னவென்றால் அனைத்தையும் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து நானே பார்த்து, சரக்கை அனுப்புவேன்.  project முடிந்தவுடன்  நானே personal -ஆக site visit செய்த பிறகு, என் கண்ணில் பட்ட குறைகள் அனைத்தையும் சரி செய்த பிறகே, Bills submit செய்வோம்.  இந்த sincerity , dedication என்னும் நிலையை  கர்மயோகி அவர்கள் மிகவும் பாராட்டுவார்.  ஆனால் இது ஒரு நிலையே. அங்கேயே நிற்க வாழ்வு விடுவதில்லை. முன்னேற்றம் தடை படுகிறது. அதே நிலையில் நிற்பது சுகமாக இருக்கிறது.

ஆனால் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டுமானால், இதை விட வேண்டும் என்னும் போது என்னால் விட முடியவில்லை.  நான் இல்லாமல் கம்பெனி எப்படி நடக்கும் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.  அப்படி விடத்தான் இந்த token act முறையை பின் பற்றச்  சொன்னார்.  நான் இல்லாமல் என்ன நடக்குமோ, எப்படி செய்வார்களோ , என்னென்ன பிரச்சினைகள் வருமோ,  ஒரு வாரம் தொடர்பே இல்லாமல் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்குமோ என்று பயமாக, படபடப்பாக இருந்தது.  என்றாலும் கர்மயோகி சொன்னார் என்பதால் முயன்று பார்க்க சம்மதித்தேன்.  இரவு 9 மணி வெளியே வந்து நான் தங்கி இருந்த அறைக்கு போகும் போது மேனேஜரிடம் பேசுவேன். அவ்வளவு தான். கர்மயோகி அறிவுரைபடி, பெரிய திட்டமிடல், அறிவுரைகள், லாப நஷ்டம், மேற்பார்வை போன்றவற்றை பற்றி பேச வில்லை. 

அது பற்றிய நினைவு வரும் போதெல்லாம், படபடப்பு வரும்போதெல்லாம் ,  கவனித்தால் அதன் பின் உள்ள மனப்பான்மையை ஆராய்ந்தால் – என்னை தவிர வேறு யாரும் இதை சிறப்பாக செய்ய மாட்டார்கள், என் அளவு யாருக்கும்  பொறுப்பு இருக்காது , என்பது போன்ற விஷயங்கள் அதை ஒட்டிய  பயம், சந்தேகம், திறமை, திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எண்ணங்கள் என்று ஓடுவது தெரிந்தது.  அதை மேலும் பகுத்தறிந்து பார்த்த போது, என் பிடியை விடாதது என் அகந்தையே, என் முன் முடிவுகளே, அபிப்ராயங்களே என்று புரிந்து, அதிலிருந்து வெளியே வர முயற்சித்தேன்.

ஒரு வாரம் என்பது பத்து நாள் ஆனது. கர்மயோகி திரும்ப செல்லலாம்  என்றார். சென்னை  வந்து எல்லா வேலைகளையும் பார்த்த போது தலை  சுற்றியது.  நான் இருந்தால் எப்படி நடக்குமோ, அதை விட நன்றாகவே நடந்து இருந்தது. குறிப்பாக , சொல்வதை சரியாக செய்யாதவன் என்று நான் நினைத்து இருந்த  என் supervisor -ரிடம் இது வரை நான் அறியாத organising  திறமை வெளிப்பட்டது தெரிந்தது .  அது மட்டுமல்ல என் ஒரு வருட Turnover -க்கு இணையான order – பெரிய  மார்க்கெட்டிங் இல்லாமலேயே , என்னை போல technical ஆக பேச ஆள் இல்லாமலேயே – அந்த பத்து நாளில் வந்திருந்தது. 

அது மட்டுமல்ல, அதுவரை நான் இருந்த Chemical – பிசினஸ் -லிலிருந்து,  Electronics துறைக்கு மாறும் சூழலை உற்பத்தி செய்து மாற வைத்தது.  என் பெரிய  முயற்சி எதுவும் இல்லாமல் சிங்கப்பூரில் அலுவலகம் திறக்கும் அளவிற்கு வளர்ந்தது.  இது பிழைப்பு, வளர்ச்சி, முன்னேற்றம், பரிணாமம் என்று வளர்வதற்கான உதாரணம். 

இப்போது முன் சொன்ன நான்கு நிலைகளை மீண்டும் படித்து பார்த்தால் , இந்த நிலைகள் நன்றாக புரியும்   அதன் சாரம் என்னவென்றால் , நாமே இறைவன் விரும்பும் பண்புகள் வாழ்வில் வெளிப்பட உதவினால், நாம் பரிணாமத்தில் – அதாவது எண்ணத்தில், நோக்கத்தில், வளத்தில் முன்னேறுவோம் என்பதன் வெளிப்பாடு அது. ஒவ்வொரு Ascent -க்கும் இணையான Decent உள்ளது என்பதற்கு உதாரணம் , என் இந்த அனுபவம். சித்தத்தில், அது வெளிப்படும் பண்புகளில், மனிதன் மனப்பான்மையில்   உயர்ந்து செல்லும் நிலைகளில்  இறைவன் இறங்கி வரும் நிலையை, நம்மை ஒரு படி உயர்த்தும் நிலையை காணமுடியும்.

ஆனால் அந்த உண்மையை , வளர்ச்சியை , பார்த்த பிறகும், என்னால் அதை அதன் பிறகு தொடர முடியவில்லை.  systems and organisation என்று அடுத்த நிலை – அதாவது வளர்ச்சி நிலைக்காக காரணிகளை கொண்டு வந்து இருக்கிறேனே தவிர, அதையும் என் control லில் தான் வைத்து இருக்கிறேன்.  System என்ன சொன்னாலும், எவ்வளவு திட்டமிடல் இருந்தாலும்   கடைசியில் நான் சொல்வது தான் முடிவு என்ற நிலையிலேயே இருக்கிறது.

இது எதை காட்டுகிறது என்றால், என் சுபாவம், அபிப்பிராயம், எதிர்பார்ப்புகள்- இறை அருள் அல்லது   அன்னை செயல்பட தடையாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.  அப்படி அன்னை இஷ்டத்திற்கு விட்டால் நாம் விரும்பாதது நடந்து விட்டால் என்ன செய்வது என்னும் எண்ணம் அதற்கு தடையாக இருக்கிறது. அது மிக பெரிய கயமை என்றாலும் விட முடியவில்லை. இந்த 20 ஆண்டுகளில் நடந்தவை அனைத்தும் – கெட்டது என்று நினைத்தவை கூட – நன்மைக்கே என்று புரிந்தாலும் – அதை தொடர முடியவில்லை. 

அந்த அஞ்ஞானத்திலிருந்து வெளியே வந்து வாழ்வின், பிரபஞ்சத்தின், பிரம்மத்தின் நோக்கம் நிறைவேற அனுமதிப்பதே மனிதனின் வேலை.  அதற்கான விவேகம், பாகுபாடு, பண்புகள், பரிணாமத்தை பற்றிய ஞானம் எல்லாம் தான் நம்மை இறைவனின் பிரதிநிதியான ஆன்மாவுடன் ஒன்ற  வைக்கும்.  அது நம் மனதை, அறிவை, வரையறைக்கு உட்பட்ட விஷயங்களில் இருந்து வரையறையில்லாத விஷயங்களை வெளி வர வைக்கிறது.  ஆன்மாவும் வாழ்வையும் இணைக்க இது அடிப்படைத்  தேவை.  காரணம் நாம் உயர்ந்தவை பலவற்றை அறிந்து இருந்தால் கூட, அதை செய்ய வேண்டும் என்று விரும்பினால் கூட, நம் மனம் அதை, அதனால் நடக்கும் விஷயங்களை, பெறப் போகும் பலன்களை வைத்தே எடை போடுகிறது.  அதையும் நம்பிக்கையின் பேரில் இல்லாமல், அதை ஒட்டிய நம் பழைய அனுபவங்களை வைத்தே முடிவு செய்கிறோம்.  பல வெற்றிகள் இருந்தாலும், சில தோல்விகளே, அதன் அனுபவங்களே  அதை முடிவு செய்கிறது.  அதுவே நம் எண்ணத்தை, நோக்கை, நிர்ணயிக்கிறது.  Our Decisions are based on our mind categorising and organizing our experience என்கிறார் கர்மயோகி.

நமக்கு அடிப்படியாக இருக்க வேண்டிய தெளிவு என்னவென்றால் – இந்த உலகம் ஒரு சித்தத்தில் – இறைவனது சித்தத்தில்  – உருவாக்கப்பட்டது.  அது அதன் நோக்கத்திற்காக இயங்குகிறது. அதற்கான ஆற்றலே நம் அனைத்து செயல்களில் , வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இது நம் அனுபவத்தில் வரும் புரிதல். ஆனால் உண்மையில் ஆற்றல் வெளிப்பட தேவையான கருவிகளை பிரபஞ்சம் உற்பத்திச் செய்துக் கொள்கிறது என்பதே உண்மை. அதற்கான சூழலை கொண்டு வருகிறது. அதுவே நமக்கு வலியாக, துன்பமாக, முரண்பாடாக தெரிகிறது. காரணம் அது பற்றிய, அந்த ஆற்றல் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இல்லை. அருள் அதிகமாக வாழ்வில் செயல்பட இத்தகைய புரிதலும், அதனை ஒட்டிய மனமாற்றங்களும் தேவை. அதற்கு மனமாற்றத்தின் முக்கியத்துவமும், ஒவ்வொரு செயலுக்குப் பின்னால் அதனால் ஏற்படும் சாரமும், அந்த சாரத்தின் பின்னால் உள்ள இறைவன் அடையும் ஆனந்தமும் நமக்குத் புரிய வேண்டும். நம் செயல்களை அதற்கு ஏற்ப மாற்றிக் கொண்டால், வாழ்வில் ஆனந்தம் பொங்கும். வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் இது போன்று வரும் மனமாற்றம் நரகமான வீட்டை சொர்க்கமாக்கும். இந்த சட்டத்தில் நமக்கு தெளிவும் அதை ஒட்டிய நம்பிக்கையும் வர வேண்டும்.

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்க்கலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »