Personality is the Determinant of Accomplishment – Not Talents or Capacities or Endowments – Karmayogi said Education should develop the personality.
A thought on that for discussion.
நம் PERSONALITY என்று நாம் நினைப்பதை நாம் வளர்த்ததாக நாம் நினைக்கிறோம். உண்மையில் அது நமக்கு அமைந்த வாழ்வு, நமக்கு அமைந்த சூழல் அமைத்துக் கொடுத்தது. இன்றுள்ள நம் நிலை, நம் அனுபவங்களால் நமக்கு வந்தது. அந்த அனுபவங்களும் பெரும்பாலும் நாம் எடுத்த முடிவுகளால் என்றாலும் அதற்கு பின், சமுதாயம், குடும்பம், நண்பர்கள் என்று உண்டு. அதற்கு ஏற்றாற் போல நம் மனப்பான்மைகள் உருவாகிறது. அப்படி ஏற்றுக் கொண்ட மனப்பான்மைகள் நம் PERSONALITYஐ உருவாக்கி அதை ஒட்டிய அனுபவங்களைத் தருகிறது.
நம் திறமை, திறன், அனுபவம், அறிவு என்று இருந்தாலும் அவை எதுவும் சாதனைக்கு பெரும்பாலும் உதவுவதில்லை. சாதனை என்பது யாரோ ஒருவர் செய்ததை நாம் செய்தல் என்பதல்ல, ஒருவர் செய்ததை போல பல மடங்கு, உயர்ந்த நிலையில் செய்வது. அல்லது இது வரை யாரும் செய்யாததை செய்வது. அதுவே PERSONALITYயின் சாதனை.
உதாரணமாக இளமையில் வறுமையில் உள்ள ஒருவன், வீடு, வாகனம், சில அசையும், அசையா சொத்துக்கள் என்று வளரலாம். அது வளர்ச்சி தான் என்றாலும் அது போல ஆயிரம் பேர், லட்சம் பேர் செய்திருக்கிறார்கள். அதை சாதனை என்று கூற முடியாது. அதுவே அவன் ஒரு தொழிற்சாலைக்கு முதலாளியானால் அதை சாதனை என்று கூற முடியும். அது வெறும் அவனுடைய திறமை, உழைப்பு ஆகியவற்றால் வருவது அல்ல அதைத் தாண்டிய ஒன்றால் வருவது. நாம் பெரும்பாலும் PERSONALITY என்றால் குணம், நடத்தை என்ற அளவில் எடுத்துக் கொள்கிறோம். திறமைக்கும், நடத்தைக்கு, சுபாவத்திற்கும் (MANNER, BEHAVIOUR, CHARACTER) சாதனைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது நமக்குத் தெரியும். அவன் சார்ந்த சூழல், சமூகம், ஆகியவற்றுக்கு தேவையான MANNER, BEHAVIOUR, CHARACTER-ஐ அவன் பெறுகிறான். பிற இடங்களில் நாகரிகமாக நடப்பவன், நண்பர்கள் மத்தியில் அல்லது பார்ட்டிகளில் முழுவதும் வேறு விதமாக நடப்பது உண்டு. சுத்தம், ஒழுங்கு என்று வேலை செய்யும் இடத்தில் இருப்பவர் வீட்டில் எப்படி இருப்பார் என்பது தெரியாது. கோபம், நிதானம் பற்றி பேசுபவர் வீட்டில் எப்படி இருப்பார் என்பது தெரியாது. அதனால் இவையெல்லாம் சூழல் தந்தது. ஆனால் அவற்றை எல்லாம் நாம் நம் Personality ஆக நினைக்கிறோம் . சூழல் நம்மை செய்ய வைத்ததை நம் நல்ல குணமாக தவறாக புரிந்து கொள்கிறோம். ஆனால் அது நம் personality இல் இல்லாததால் பிறர் செய்யும் சிறு சாதனையை கூட நம்மால் செய்ய முடிவதில்லை.
PERSONALITY சாதிக்க வேண்டும் என்றால், மனப்பான்மையில், குணத்தில் வளர வேண்டும், இது வரை சாதிக்காததை சாதிக்க வேண்டும். சமுதாயம் வளர வேண்டும், தனி மனிதன் முன்னேற வேண்டும் என்ற பரந்த மனப்பான்மைக்கான குணங்கள் ஏற்படும் போது PERSONALITY சாதிக்கும். TATA IS A PERSONALITY. STEVE JOBS IS A PERSONALITY. GANDHI IS A PERSONALITY. அவர்களது ஆர்வம் சமுதாயம் உருவாக்கியது அல்ல. தனி மனிதனின் உயர்ந்த மனப்பான்மையில் வந்தது. அந்த மனப்பான்மை வரும் போது அது முதலில் INDIVIDUALITY ஆக வரும். பின் அதுவே அவரின் PERSONALITY யாக மாறும். அதுவே தன்னை பூர்த்தி செய்து கொள்ளும். அதுவே PERSONALITY சாதிப்பது.
EDISON இடைவிடாது எதையாவது மக்கள் வாழ்வை எளிமைப்படுத்தும் ஒரு கண்டுபிடிப்பை பற்றி முயற்சி செய்துக் கொண்டு இருந்தார். அது DISCOVERER என்னும் PERSONALITY யாக அவருள் மாறியது. அது பின்னால் தன்னைத்தானே பல கண்டுபிடிப்புகளாகி பூர்த்தி செய்து கொண்டது.
ஒருவர் ஏற்கனவே சாதித்தது போலவே சாதிக்க ATTITUDE AND CHARACTER போதும். அதைத் தாண்டி சாதிக்க சுபாவத்தில் ஊறிப்போன ஒரு PERSONALITY தேவை. அதாவது மனப்பான்மை மற்றும் சுபாவத்தின் சாரமாக PERSONALITY மாற வேண்டும். வேறு எதன் தாக்கமும் அதை மாற்றக் கூடாது. அப்போது தான் PERSONALITY DEVELOPS REQUIRED FACULTIES. அதற்கு தேவையான ஞானத்தை, அதை வெளிப்படுத்தும் சூழலை தானே ஏற்படுத்திக் கொள்ளும். ஓர் பள்ளி அத்தகைய PERSONALITY ஐ உருவாக்குவதாக அமைய வேண்டும்.
இன்னொரு உதாரணம் மூலம் விளக்க வேண்டும் என்றால் SALESMAN ஐ எடுத்துக் கொள்ளலாம். வெற்றிகரமான SALESMAN வருடா வருடம் TARGETஐ அடையும் SALESMAN, SALES MANAGER ஆக PROMOTE ஆகிறார். அங்கு அவர் தோல்வி அடைகிறார். அவரால் பல நல்ல SALESMAN ராஜினாமா செய்கிறார்கள். காரணம் SALESMANSHIP என்பது ஒரு கலை. அது அவருக்கு கை வந்துள்ளது. ஆனால் SALES MANAGER என்பது பல கலைகளை சேர்ந்த அறிவியல். அதை MANAGERக்கான அனுபவமோ CHARACTER-ஓ , BEHAVIOUR-ஓ தராது. அதையெல்லாம் உள்ளடிக்கிய அதை தாண்டிய ஒன்று தேவை. அதுவே PERSONALITY. அதுவே அவரது அல்லது அவர் சார்ந்த கம்பெனியின் சாதனையை நிர்ணயிக்கும். சிற்றூர் அல்லது கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருபவன் PERSONALITY கொண்டவனாக இருந்தால் விரிவடைவான். CHARACTER அல்லது BEHAVIOUR கொண்டவன் தன் நிலை பேசி எதிர்ப்பான்.
Personality என்பது உருவாக்கப்படாத, கட்டமைக்கப்படாத மனித ஆற்றல். அது – தான் வளர பரிணாமத்தில் முன்னேற , முரண்பாடுகளை , சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற ஆர்வமாக உள்ளது. மாணவ பருவத்தில் இது அதிகம் . அந்த ஆற்றலை, மனப்பான்மையை பள்ளி அல்லது கல்வி முறை படுத்தினால் , அதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தால் அதற்கான உந்துதல் மாணவனின் தனித்துவம் வெளிப்பட அடிப்படியாக இருக்கும்.
Character அல்லது Behaviour ஐ ஒரு கட்டுப்பாடு, உறுதியால் வளர்க்க முடியும். Character ஐ வளர்க்க வேண்டும் என்றால் அவனுக்கு ஒரு commitment to relation, society, atmosphere கொடுத்தால் போதும். உதாரணமாக ஊதாரி தந்தையின் மகன் பொறுப்புடன் இருப்பதை காண முடியும். கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவன் பொறுப்பாக படிப்பதை காண முடியும். ஆனால் personality என்பதை அவனின் தனிப்பட்ட ஆர்வம், அதை ஒட்டிய நோக்கம் , அதற்கான கொள்கை ,அடைய வேண்டிய இலக்கு ஆகியவையே தரும்.
Character வருவது ஒரு மனிதன் சூழலின் உண்மை தன்மையை புரிந்து கொள்வதால். Personality வளர்வது தன் தனித்தமையை புரிந்து கொள்வதால் – ( சாதிக்கவேண்டும், பரிணாமத்தில் முன்னேற வேண்டும் growth / evolve etc)., அதற்கான சந்தர்ப்பங்களை கல்வி , பள்ளி, ஆசிரியர்கள் வழங்க வேண்டும். Character திறமையை உருவாக்கி அதனளவில், அந்த நிலையில் சாதிக்கும். Personality பண்புகளை வளர்த்து சாதிக்கும். அதுவே தனித்துவத்துடன் சாதிக்கும். நம் கல்வி முறை இதைத் தர வேண்டும்.