கர்மயோகியின் பார்வையில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி கர்மயோகியின் பிறந்த தினத்தன்று கல்வி பற்றி, அது கற்றுக் கொடுக்கப்படும் முறை பற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தோடு அதற்கு ஆரம்பமாக ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அவர் விரும்பிய முறை இந்தியா முழுதும் பரவ வேண்டும் என்று ஒரு சிலராவது பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டு இருந்தேன்.

இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள ஒரு அன்பர் தனது பள்ளியில் இதை TOKEN ACT என்னும் முறையில் ஆசிரியர்களிடம் விளக்கி மாணவர்களுக்கு பயில சொல்லிக் கொடுக்க சொன்னார்.  அதன் பிறகு அதை பின்பற்றியவர்கள் பெற்ற சித்தமும், பண்பும், பாராட்டுகளும் அகில தமிழ்நாடு, சில அகில இந்திய அளவிலும் இருந்தது. அதன் பிறகு அதை ஒரு முறையாக புத்தகமாக வெளியிட்டு அன்னை பிறந்த தினமான FEBRUARY 21 2025 அன்று வெளியிட நினைத்து முதல் பிரதியை என்னிடம் கொடுத்தார்.

ஏறத்தாழ அதே நேரத்தில் பிரதமர் மோடி SOUL என்ற அமைப்பை தொடங்கி பேசினார்.  கர்மயோகியின் தலைமைத்துவம், தனித்துவம் பற்றிய கருத்துகள் அதில் அதிகமாக இருந்தது. தலைமைத்துவம் – LEADERSHIP பற்றி கர்மயோகியின் கருத்துக்களை நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் என்னும் கட்டுரையில் பல இடங்களில் கொடுத்துள்ளேன். அதில் சில கருத்துக்களை பிரதமர் மோடி பேசியது கர்மயோகி நமக்களித்த SANCTION , BLESSINGS  என்று தோன்றுகிறது.  அந்த உரையின் LINK ஐயும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பின் LINK ஐயும் கீழே கொடுத்துள்ளேன்.

இதை மேலும் சில மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொண்டு செல்லலாம் என்று இருக்கிறேன்.  கர்மயோகியின் பார்வை, கொள்கை, ஆசை பரவ வேண்டும் என்று விரும்பும் ஆசிரியர்கள் இந்த வலைத்தளத்தில் SUBSCRIBER ஆகி இருந்தால், எனக்கு 80144-22222 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.  ஒரு சிறு உரையாடல், உங்கள் புரிதல், ஆகியவற்றை பொறுத்து அந்த புத்தகத்தின் PDF VERSION ஐ தரலாம் என்று இருக்கிறேன். AUGUST 15, 2025 வரை இது தொடரும் பொழுது என்ன நிகழ்கிறது என்று பார்க்கலாம்.

https://www.pmindia.gov.in/en/news_updates/pms-speech-at-inauguration-of-the-soul-leadership-conclave-in-new-delhi/?comment=disable

https://soul-india.org/about-us/

Leave a Reply

Your email address will not be published.