Share on facebook
Share on telegram
Share on whatsapp

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 8

நம் பலம், STRENGTH, நம் வரையறை LIMITATION நமக்குத் தெரிய வேண்டும். வாழ்வில் வளர, பரிணாமத்தில் வளர, உயர் மனப்பான்மைகள் தேவை என்றவுடன், எடுத்தவுடன் அன்னையின் உயர்ந்த சட்டங்களை உயர்ந்த நிலையில் எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் முன்பு சொன்னது போல சுண்ணாம்பு காளவாயில் போட்டால் கூட அதை ஆனந்தமாக பார்க்க வேண்டும் என்னும் நிலையை நம்மால் ஏற்க முடியுமா? முடிந்தவர்கள் செய்யலாம். நிச்சயம் அபரிமிதமான பலன் வரும். அதை ஏற்க  புரிந்துக் கொள்ளும் விவேகம், பாகுபாடு நமக்குத் தெரிய வேண்டும் . அதுவே பொதுப்புத்தி.

உதாரணமாக நான் லஞ்சம் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்து  TAX RELATED FILINGகளை செய்யும் போது DESPATCH CLERK முதல் உயர் அதிகாரி வரை மாதம்தோறும் தர வேண்டிய மாமூல் என்று ஒன்று உண்டு.  அதை நான் தருவதில்லை என்று முடிவெடுத்த போது, சில பிரச்சினைகள் எழுந்தது. அந்த நிலையில் அதை என்னால் தைரியமாக எதிர்க்கொள்ள முடிந்தது.  ஜெயிக்க முடிந்தது.

ஒரு முறை அமைச்சர் அளவில் தரவேண்டிய நிலை வந்த போது என்னால் எதிர் கொள்ள முடியவில்லை. காரணம் முந்தைய நிலைக்கான தைரியமும், தீரமும் தான் என்னிடம் இருந்தது. இந்த நிலையில் என்னத் தான் சமர்ப்பணம் செய்தாலும் படபடப்பு, குழப்பம், பயம் இருக்கத்தான் செய்தது.  முழு தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியவில்லை. அதற்கேற்ப பிரச்சினையும் அதிகமாக வந்து பின் முடிந்தது.

இதே போல வேறு ஒரு அனுபவம்.  ஒருவர் எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தரவேண்டும்.  வெகு நாட்களாக தரவில்லை.  கேட்டுப் பார்த்தும், எனக்குத் தெரிந்த கடந்த கால சமர்ப்பணம், பிறர் நிலை பார்வை, ஒப்புமை என்று ஆன்மீக கோட்பாடுகளை பயன்படுத்தி பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. கர்மயோகியிடம் கேட்ட போது – உன் சுபாவப்படி செய். இன்று மாலைக்குள் பணம் தரவில்லை என்றால் நடப்பதே வேறு என்று கூறு என்றார். எனக்கு ஆச்சரியம். ஆனந்தம். காரணம்  இது எனக்கு பிடித்த வேலை. ஆனால் ஒரு நிபந்தனை – இந்த பணம் எனக்குரியது இது எனக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்க வேண்டுமே தவிர, சுபாவத்திற்கான ஆனந்தம்,  அகந்தைக்கான ஆனந்தம் எந்த வகையிலும் வரக்கூடாது என்று கூறினார். அந்த நிலைக்கு மனது வந்து நடுநிலை, சமத்துவம் பெரும் போது இதை செய் என்றார். இதை  சொன்னது காலை சுமார் ஏழு மணி அளவில். எனக்கு பணம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, மிரட்டலுக்கான ஆனந்தமே முக்கியமாகப் பட்டது. அந்த நிலையில் இருந்து வெளியே வர, பணம் பெற வேண்டியதே முக்கியம் என்னும் மனநிலைக்கு வர ஏறத்தாழ மூன்று மணி நேரம் பிடித்தது. சுமார் 10.30 மணிக்கு சமநிலை அடைந்ததாக நினைத்து அந்த நபரை தொலைபேசியில் அழைத்து பேச எடுத்த போது, அவர் பணத்தை என் கணக்கில் கட்டிய SMS வந்தது.

இந்த இரண்டு சம்பவங்களும் ஆன்மீக முறைகளால் வெற்றி பெறக்கூடிய, தளம், விவேகம், பாகுபாடு ஆகியவற்றை புரியவைத்தது.

இதை பரிணாமத்தில் PSYCHOLOGICAL PERFECTION FOR THE DIVINE, இறைவனுக்கான மனச்செம்மை என்கிறார். அந்த நிலை தான் உண்மையான பரிணாமம்  என்பதால் அபரிமிதம், அடுத்த கட்ட முன்னேற்றம் போன்றவை  அந்த நிலையில் தான் நடக்கும். இதற்கான மலர் ‘ஷெண்பகம்’ – அது பற்றி பேசும் போது அன்னை இது போன்று நிறைய கூறியிருக்கிறார். DIVINE SEEMS  TO USE THE PERSON’S OWN MIND TO ANSWER HIM AND EVOLVE என்பது அதன் சுருக்கம்.

விவேகம், பாகுபாடு என்று ஏன் சொல்கிறேன் என்றால் நாம் ஒன்றை ஆராய்ந்து பார்க்கும் போது அதை பகுத்தறிவு என்கிறோம். அது பெரும்பாலும் நம் அபிப்ராயம், கருத்து, முன்முடிவுகள் போன்றவைகளை ஒட்டி அல்லது பழைய அனுபவம் அதனால் வந்த பலன் என்றே இருக்கும். அது உண்மை என்றாலும் அந்த கால கட்டம், சூழல், மனிதர்கள், அன்றைய நம் அறிவு நிலை, செயல் ஆகியவை வேறு. அதனால் அந்த அனுபவம் வேறு. அது போலத் தான் இப்போதும் நடக்க வேண்டும் என்பதில்லை என்னும் விவேகம், பாகுபாடு பொதுப்புத்தி நமக்குத் தேவை. அது அறியாமை அல்ல. அறிவை முழுதும் பயன்படுத்தாத ஒரு நிலை. விடாமுயற்சி   என்னும் பெயரில் நாம் செய்யும் தவறுகளை, செயல்களை இப்போது யோசித்து பார்த்தால், இது புரியும். பெரும்பாலும் செய்ததையே செய்வோம். அல்லது அது சம்பந்தமாக பிறர் சொன்ன அறிவுரை, அல்லது அது சம்பந்தமாக படித்தது, கேட்டது என்று செய்வோம். ஆனால் விவேகம் என்பது என்னவென்றால் ஏற்கனவே செய்ததில் என்ன தவறு, அது பலன் தராததற்கு காரணம் என்ன, அதன் பின்னால் உள்ள சட்டம் என்ன, அதை சரி செய்ய என்ன தேவை  என்று கண்டுபிடித்து  அதை சரி செய்து முன்னேறுவதே விவேகம். இப்போது அதன் பெயர் விடாமுயற்சி அல்ல. அர்ப்பணிப்பு, அது ஆன்மாவின் பண்பு. அதுவே PSYCHOLOGICAL PERFECTION . விடாமுயற்சியிலிருந்து  அர்ப்பணிப்பு என்று மனதில் இருந்து ஆன்மாவிற்கு என்னும் பரிணாம வளர்ச்சி என்பதால் அது சாதிக்கும். அதுவரை இழந்ததையும் சேர்த்தே கொண்டு வரும்.

அடுத்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய பொதுப்புத்தி. VALUES GIVES COMMITMENT  – WE ARE  IDENTIFIED WITH OUR VALUES . முன்பு சொன்ன நாம் பண்புகளால் அறியப்படுகிறோம் என்பதன் தொடர்ச்சி இது. நம் பண்புகள் தான் நமக்கு ஒரு COMMITMENT -ஐ அதை தொடர்ந்து செய்ய, தக்க வைக்க தேவையான MOTIVATION -ஐ ENERGY -ஐ தரும். நாம் ஒரு விஷயத்தில் நல்ல பெயர் எடுத்த பிறகு அதை காப்பாற்றுவதற்குள் நாம் படும் பாட்டை பார்த்தால் இது புரியும். ஒரு அறிவுரையை, சொற்பொழிவை கேட்பது என்று எடுத்துக் கொண்டால் அவை  முன்னேற்றத்திற்கான வழியை தேடும் ஒரு பண்பினால் வந்தது. ஒரு மணி நேரமாக அவர் பேசுவது போரடித்தாலும் எழுந்து போகாமல் இருப்பது இங்கிதம் என்னும் பண்பு தரும் COMMITMENT.  அதனால் எந்த ஒரு செயலுக்கும் ஒரு உயர் பண்பை இணைத்து விட்டால், அதில் ஒரு COMMITMENT தானாகவே வந்து விடும். காரணம் பண்பு என்பது தனியானவை அல்ல.  பல பண்புகளுடன் இணைக்கப்பட்ட ஒன்று.

உதாரணமாக சுத்தம் என்று ஆரம்பித்தால், ஒழுங்காக அடுக்குதல், தேவையற்றதை விலக்குதல், முழுதும் பயன்படுத்துதல் என்று பல பண்புகளும் அது தொடர்பை ஏற்படுத்தி செம்மையைக் கொண்டு வரும்.

உதாரணமாக இளைக்க வேண்டும் என்பவர்கள், என்ன செய்தாலும் பெரும்பாலும் இளைப்பதில்லை . DIET -ஐ , COMMITMENT -ஐ ஏதோ ஒரு விதத்தில் விட்டு விடுவார்கள். ஆனால், இளைத்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றோ அல்லது இளைத்தால் எவ்வளவு அழகாக இருப்போம், SMALL , MEDIUM  போன்றவைகளில் இருக்கும் ஏராளமான DESIGN-களை போட்டு பார்க்கலாமே என்று நினைத்தால், அதனால் வரும் ஆனந்தத்தை கற்பனை செய்தால், அதில் ஒரு COMMITMENT வரும், DETERMINATION வரும். நீங்கள் யார் என்ன செய்கிறீர்கள், எதற்காக செய்கிறீர்கள், ஏன் செய்கிறீர்கள், எப்படி செய்கிறீர்கள் என்ற தெளிவு இருப்பது பொதுப்புத்தி. அது நாம் நினைத்ததை சாதித்து நாம் பெற வேண்டிய ஆனந்தத்தை  நமக்குத் பெற்று தரும். அப்படி இல்லையென்றால் நம் வாழ்வு பிறரின் விருப்பத்திற்கு நடந்து கொண்டு இருக்கும்.

அடுத்து நமக்கு தேவைப்படும் பொதுப்புத்தி நாம் நம் ஆசைகளை எல்லாம் AMBITION , GOAL , ASPIRATION என்று நினைக்கிறோம். அது தவறு என்று புரிவது. இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு நமக்கு ஏதாவது இருந்தால், அதை COMPARE செய்தால் நம் AMBITION அந்த அளவு நமக்கு இருக்க வேண்டும். அதுவே நம்மை ஓட வைக்க வேண்டும். நம் எண்ணம், சொல், நோக்கம் அனைத்தும் அதை ஒட்டியே இருக்க வேண்டும். அப்போது தான் அது AMBITION . மாறிக் கொண்டே இருந்தால் , அதன் பேர் ஆசை. அது சாதிப்பது கடினம். AMBITION -க்கான அந்த கவனம் தான் நம்மை சரியான சூழலில், சரியான விவேகத்துடன், பாகுபாட்டுடன்  சரியான திசையில் வழி நடத்தும். வெற்றிகரமாக தொழில் செய்பவர்கள், ஆரம்பித்து நடத்துபவர்களிடம் இதை காண முடியும்.

ஆனால் நாம் பெரும்பாலும் சமுதாயம் சொல்லும் அல்லது, உறவு, நண்பர்கள் வட்டம் சொல்வதை நம் AMBITION என்று எடுத்துக் கொள்கிறோம். அவர்களின் சட்டம், பண்பே நமக்கும் சரி என்று படுகிறது. அவர்களின் ORGANISATION VALUE நமக்கு பொருந்தி விடுகிறது. உதாரணமாக, விலையை குறைத்தால் அதிகமாக விற்க முடியும், லஞ்சம் இல்லாமல் முடியாது, FREE , GIFT கொடுத்தால் தான் கூட்டம் வரும் என்று மற்றவர்கள் இருந்தால் நாமும் அப்படியே இருப்போம். நாம் ஒரு கம்பெனியில் இருந்து வெளியே வந்து ஆம்பித்து இருந்தால், அதே போன்ற இன்னோர் கம்பெனியாக, அதே CUSTOMER -ரிடம் செல்லும் ஒருவராகத் தான் இருப்போம். அது AMBITION அல்ல – காப்பி அடித்தல். AMBITION என்றால் ஒரு PERSONAL VALUE வேண்டும். நமக்கான நோக்கம், கொள்கை, அதை அடையும் விதம் போன்றவற்றை பற்றிய தெளிவு வேண்டும்.

முன்பு சொன்னது போல நம் PRIORITY என்னவென்ற தெளிவு வந்த பிறகு வளர்ச்சியா, உயர் சித்தமா, ஞானமா, காதலா, PROSPERITY-யா , குடும்பமா , குழந்தைகளா என்று எதற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், அது நம் சொந்த பண்புகள் மேல் கட்டமைக்க பட வேண்டும். அப்போது தான் அதில் கிடைக்கும் ஒரு சிறு வெற்றியும் அதிக ஆனந்தத்தை தரும். அப்படி நாம் இருப்பது EVER PRESENT என்னும் ஆன்மாவின் பண்பு. அது சிறுமுயற்சிக்கு பெரும் பலன் கொண்டு வரும்.

அடுத்தது, முயற்சி என்பதை தனி மனித முயற்சி என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நம் ஒவ்வொரு செயலிலும், பலரது முயற்சி, திறமை, ஒத்துழைப்பு, உணர்வு, உணர்ச்சி, அவர்களுடைய GOAL , AMBITION எல்லாம் கலந்து உள்ளது. மற்றவர்களின் தேவை, மனப்பான்மை, உணர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அது OTHER MAN POINT  – பிறர் நிலைப்பார்வை என்னும் உயர்ந்த பண்பாகிறது. சுயநலத்தை விட்டு, நம் தனிமனித தன்மையிலிருந்து விலகி இதை செய்யும் போது தான் சுமுகம் இருக்கும். பல பிரச்சினைகளை அத்தகைய சுமூகமே தடுத்து விடும். குறைந்த பட்சம், எப்படி நம் வாழ்வை ஆனந்தமாக, அர்த்த முள்ளதாக மாற்றத்  துடிக்கிறோமோ, அப்படித் தான் அனைவரும் அவரவருக்கு தெரிந்ததை செய்கிறார்கள் என்ற அடிப்படையான பொதுப்புத்தி, நாம் அடைய வேண்டிய ஆனந்தத்தை துரிதப்படுத்தி கொண்டு வந்து சேர்க்கும்.

அடுத்தது நமக்கு வரும் எதிர்வினை, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை சுமுகம், உறவு, நட்பு என்ற பெயரில் மாற்றி புரிந்துக் கொண்டு விட்டுக் கொடுத்துவிடுவோம். CHALLENGE , RISK  என்று இருக்கும் இடங்களை நாம் வெவ்வேறு காரணம் கொண்டு தவிர்ப்போம். அது நம் ஆழ்மன பயத்தின் வெளிப்பாடு. அதற்கு பதிலாக சுமுகக்குறைவு, பிரச்சினை challenge , RISK-களை நம் GOAL, AMBITION பார்வையில் பார்த்தால் அவை, சூழல் நமக்கு ஏற்படுத்தும் தடை என்பது புரியும். அதை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப நடந்தால் அது நம்மை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.(3)

நான் என் புது PRODUCTக்கான ஆராய்ச்சிகளை செய்துகொண்டு இருந்த போது குறிப்பிட்ட செம்மை வரும் வரை முயற்சி செய்துக் கொண்டு இருந்தேன். நாட்கள் சென்று கொண்டே இருந்தது. ஒரு பெரும் தொகை செலவு செய்தும் அதை அடைய முடியவில்லை. அந்த நேரத்தில் தொழிலாளர்கள் அதிக ஊதியம் கேட்டு வர ஆரம்பித்தார்கள்.  இல்லாவிட்டால் அந்த மாதத்தோடு விலகுவதாகவும் கூறினார்கள். அன்று இருந்த மனநிலையில் போங்கள் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் நிலையில் தான் இருந்தேன். இருந்தாலும் கர்மயோகியிடம் எழுதி கேட்கும் போது நீ அடுத்த கட்டத்திற்கு செல்லப்போவது, அபரிமிதமாக வருமானம் பெறப்போவது அவர்களின் ஆழ்மனதிற்கு தெரிவதால், அவர்கள் அப்படி கேட்கிறார்கள், கொடுத்து விடு என்றார். அவர்கள் கேட்ட ஊதிய உயர்வை தந்த பிறகு, அடுத்த நாளே நான் நினைத்தபடி என் PRODUCT வந்துவிட்டது. இன்று MARKETஇல் குறிப்பிடத்தக்க BRANDஆக இருக்கிறது.

அப்படி இல்லாமல் நாம் வேறு பண்பை, நடத்தை, நல்லெண்ணம் என்ற அடிப்படையில் செய்தால் கூட அது சித்தத்தின் முன்னேற்றம் அல்ல, ஏதோ ஒரு பயத்தின் அடிப்படையில் அடிபணிவது. இது இல்லாமல் மரியாதை, பக்தி, ADORATION , ADMIRATION என்ற அடிப்படையில் சிலவற்றை விட்டுக் கொடுப்போம். அப்படி இருந்தால் நாம் மற்றவர்களின் சுயநலத்திற்கு அல்லது அவர்களது AMBITION-க்குத் தான் நாம் உழைப்போமே  தவிர, நம் ambition பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அதனால் எந்த பிரச்சினை, தடை என்று வந்தாலும் அதை நம் ambition-னோடு பொருத்திப் பார்த்து ஒரு முகமாக செயல்பட வேண்டும் என்பது அடுத்த பொதுப்புத்தி.

அடுத்தது AMBITION மட்டும் போதாது. அதற்கான மனப்பான்மை, திறமை, திறன் ஆகியவற்றை திட்டமிட்டு பெற வேண்டும். அல்லது அப்படி ஒருவர் சாதித்திருந்தால் அவருடைய சித்ததுடன் ஒன்றி அவர் செய்த அனைத்தையும் அதே மனப்பான்மையுடன் செய்ய வேண்டும். அது நம்மை அதே போன்ற ஒரு ஸ்தாபனத்திற்கு தலைவனாக்கும். மனித சுபாவம் புத்தகத்தில் கூறப்பட்ட கருத்துகளில் ஒரு முக்கிய கருத்து இது. இந்த கருத்தை பின்பற்றி நான் அறிந்த மூவர் நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளனர். இது பற்றி பலமுறை பேசி, எழுதி இருக்கிறேன் .நான் எப்படி மூன்றே வருடத்தில் SUPERVISORஇல் இருந்து MANAGER ஆகி, பின் PARTNER ஆகி பின் அதற்கு இணையான COMPANY-ஐ தொடங்கி முதலாளி ஆனேன் என்று.  வாழ்வின் சட்டங்கள் தவறாமல் பலிக்கும் என்பதற்கு என் வாழ்வில் நடந்த பெரிய உதாரணம் இது.

இதை நம்முள் , நம் மனநிலையில் எப்படி கொண்டு வருவது என்பதற்கான PROCESS -ஐயும் சொல்கிறார். நம் மனம் இரு பகுதிகளில் ஆனது.  ஒன்று அறிவு, KNOWLEDGE , இன்னொன்று WILL – உறுதி. இன்று இப்போது கேட்பதை , அறிவு ஏற்றுக் கொண்டால், உணர்வு அதை உண்மை என்று நம்பினால், மனம் அதை செய்ய உறுதி எடுக்கும். மனது மட்டுமோ, அறிவு மட்டுமோ ஏற்றுக் கொண்டால் அது OPINION . அபிப்ராயமாக மாறி விடும். இதை செய்ய வேண்டும் என்று உணர்வில் தோன்றினால், அதை மனம் முழுதுமாக ஏற்கும். அது முடிவு. decision. இது மேல் மனதை கட்டுப்படுத்துவது. இதை ஆழமாக  ஏற்பது, முன்னேற்றத்தை, ஆனந்தத்தை மட்டுமே நினைத்து FOCUSED ஆக ஏற்பது ஆழ் மனதிற்கு செல்வது. அப்போது அந்த முடிவின் பெயர் DETERMINATION தீர்மானம். அந்த தீர்மானம் இந்த எட்டு பொதுபுத்தியையும் நமக்கு பிடிபட வைக்கும்

கர்மயோகியின் நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் கூறப்படும் இத்தகைய பொதுப்புத்திக்கான கருத்துக்களை சில வரிகளில் அடக்கி சிந்தித்து பார்க்க முடியுமா என்று முயன்றேன்.  ஆங்கிலத்தில் ஓரளவு வருகிறது. பொதுபுத்திக்கு நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்:

  • DIVINE’S CHOICE Vs OUR CHOICE
  • WHAT IS RIGHT Vs WHO IS RIGHT
  • EGO SATISFACTION Vs SOUL’S BLISS
  • CHANGE Vs TRANSFORMATION
  • GROWTH Vs EVOLUTION
  • WIN THE SITUATION or WIN THE PERSON
  • ATTITUDE Vs BEHAVIOUR

இந்த கேள்விகளை அவ்வப்போது நமக்கு நாமே கேட்டுக்கொண்டாலே  நம்மைப் பற்றி, முன்னேற்றத்திற்கான நம் பொதுப்புத்தி பற்றி, நாம் அறிந்துக் கொள்ள முடியும்.

இந்த தலைப்பில் என் பகிர்தல் இத்துடன் முடிந்தது. மீண்டும் வேறு ஒரு தலைப்பு, THEME பற்றி சில வாரங்களில் பேசலாம்.

தொடர்புக்கு: WHATSAPP – 8014422222 Mail: rameshposts@gmail.com

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »