சென்ற வாரத்தின் சாரம் என்னவென்றால், நமக்கு உயர்ந்தது என்று தெரிந்தது, எது சரி, எது நல்லது என்று தெரிந்தது, எது முன்னேற்றத்தை தரும் என்று தெரிந்தது என்று நமக்குத் தெரிந்த ஒன்றைக் கூட நம் முன்னேற்றத்திற்காக நாம் செய்யாதது எவ்வளவு பெரிய கயமை என்னும் பொதுப்புத்தி கூட நமக்கு பெரும்பாலும் இல்லை என்பதே. இறைவனே நமக்கு உதவ வேண்டும் என்றால் கூட அவர் வருவதற்கு ஒரு பாதையை நாம் தான் ஏற்படுத்த வேண்டுமென்னும் அடிப்படை ஞானம் கூட இல்லாமல் இருக்கிறோம் என்பதே நமக்கு முதலில் தேவையான பொதுப்புத்தி.
அது இல்லாத போது நமக்கு வரும் துன்பம் பெரும்பாலும் கீழ்க்கண்டவை மூலமாகவே வரும் :
நம் நம்பிக்கை குறைவால் வரும் துன்பங்கள். என்னால் முடியாது, என் விதி இவ்வளவு தான், அன்னைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா, என் QUALIFICATION -க்கு இவ்வளவு தான், என் அறிவுக்கு, என் தகுதிக்கு, என் வயதுக்கு இவ்வளவு தான், இதற்கு மேல் செய்து என்ன பயன் என்ற அவநம்பிக்கைகள் அது ஏற்படுத்தும் தடைகள், முக்கியமானது. தினம், தினம் செய்திகளில், அல்லது நம் வட்டாரத்தில் இதிலிருந்து வெளியே வந்தவர்களை, 60 வயது 80 வயதில் சாதித்தவர்களை பற்றி தெரிந்தாலும் நமக்கு அது போல செய்ய வேண்டும் என்று தோன்றுவதேயில்லை. நம் அருகிலேயே ஒருவர், நமக்குத் தெரிந்த ஒருவர் சாதித்து இருந்தால் கூட, அதைப் பற்றி நன்கு அறிந்து இருந்தால் கூட நாம் அதை செய்வதில்லை. இருக்கும் நிலையை மாற்ற முயலாததால் வரும் துன்பங்கள்.
அது இரண்டாவது நிலைக்கு நம்மைத் தள்ளுகிறது. அதாவது முன்னேற முயலாததால் வரும் பிரச்சினைகள், வேலை, குடும்பம் முதல் வியாபாரம் வரை வரும் பிரச்சினைகள், இந்த கட்டத்தில் வரும். திறமை, திறன், செயல் திறன் , நேர்த்தி அதாவது SKILL, CAPACITY, ABILITY ஆகியவை செயலில் மட்டுமல்ல , உணர்வில் அதாவது TEMPERAMENT என்று சொல்லப்படும் மனதின் வெளிப்பாடுகளில், நடத்தையில், குணத்தில், மனப்பான்மையில் நாம் கொண்டு வர வேண்டிய மாற்றங்களை கொண்டு வராததால், அல்லது கொண்டு வர முயலாததால், அலுவலகத்தில், சமுதாயத்தில், சூழலில், உறவுகளில் வரும் துன்பங்கள்.
இது அடுத்த நிலைக்கு நம்மை தள்ளுகிறது. நம்மை தற்காத்துக் கொள்ள, நம் நிலையை நிலை நிறுத்திக் கொள்ள அது நம் மனப்பான்மையை குறுகியதாக்கி, மேலும் சுயநலத்திற்கு தள்ளி, பிறர் நிலை பார்வை, சம நிலை, எதிர்வினை ஆற்றாதது, ஒப்புமை, அதாவது OTHER MAN POINT, EQUALITY, NON-REACTION , CORRESPONDENCES என்னும் உயர் நிலை மனப்பான்மைகளை பெற விடாமல் தடுத்து, இருக்கும் ஒன்றிரண்டு உயர்ச்சித்த நிலைகள், பண்புகளையும், வெளிப்படுத்தாமல் இருப்பது. தீயதே சரி , நம் நிலைக்கு இதுவே சரி என்று நிரூபிக்க பல சால்ஜாப்புகள் என்று, தற்காப்பு, கயமை, திருட்டுத்தனம், பொறாமை, எரிச்சல், போன்ற FALSEHOOD -க்கு மேலும் மேலும் செல்ல வைத்து துன்பத்தை அதிகப்படுத்துகிறது.
மனம், உணர்வு ஆகியவை பாதிக்கப்பட்ட பிறகு அது நம்மை ஜடத்தில் துன்பம் என்னும் நிலைக்குத் தள்ளுகிறது. சோம்பேறித்தனம், வேலையை தள்ளி போடுவது, நாக்கை கட்டுப்படுத்த முடியாதது, எரிச்சல் வந்தால், சோகம் வந்தால், துன்பம் வந்தால், அதிகம் சாப்பிடுவது, ருசிக்காக அளவில்லாமல் சாப்பிடுவது, வேலை பார்க்காமல் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாதது, RELAXATION என்ற பெயரில் TV SERIAL ஆம்பித்து YOUTUBE, FACEBOOK, INSTAGRAM என்று பார்ப்பது , அதன் மூலம் கற்றுக்கொள்கிறேன் என்று அதற்கு சப்பை கட்டுவது அல்லது தேவையில்லாத, அவசியம் இல்லாத வேலைகளை இப்போது செய்வது, அதுவே முக்கியம் என்று நினைக்கும் COMPLULSIVE PREOCCUPATION போன்ற அர்த்தமற்ற விஷயங்களில் நேரத்தை செலவழிப்பது, அல்லது நண்பர்களுடன் குடிப்பழக்கம், போதை, புகை என்று ஜடத்தை பாதிக்கும், நோய்,வலி ஏற்படுத்தும் விஷங்களில் முடிந்து, அதனால் வரும் துன்பங்களை அனுபவிப்பது.
இந்த நான்கு வகைக்குள் பெரும்பாலும் வாழ்வில் நமக்கு வரும் தடைகளை, துன்பங்களை அடக்கி விட முடியும். இதையெல்லாம் கேட்கும் போதே இப்படி நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரியும். அதற்கான தீர்வும் நமக்குத் தெரியும்.
எத்தனை முறை சொன்னாலும் அலுக்காத உதாரணம் கர்மயோகி கூறும் உதாரணம். எந்த வகை துன்பத்தை, பிரச்சினையை யார் நம்மிடம் வந்து சொன்னாலும் நாம் தெரியாது என்றே சொல்ல மாட்டோம். நமக்கு தெரிந்த நடைமுறை, சமுதாய முறை, அன்னை முறை என்று விலாவரியாக, வக்கணையாக பேசி விளக்குவோம். அதாவது நமக்கு அந்த அளவு தெரியும் என்று பொருள். ஆனால் நமக்கு என்று வரும் போது அதில் 1% கூட செய்ய மாட்டோம். அதனால் தான், நீ ஒரு நாளில் பிறருக்கு செய்யும் ADVICE -ஐ RECORD செய்து வைத்துக் கொள் , பின் கேட்டுப்பார். அவை எல்லாம் உனக்கு நீயே சொல்லிக் கொள்பவை, நீ செய்ய வேண்டியவை என்பார். HALF AN HOUR WITH MOTHER -என்னும் முறையில் இது பற்றி சிந்தித்துப் பார்த்தால் இதில் உள்ள உண்மை சுடும். நம் துன்பம் அனைத்தும் நாம் உருவாக்கியவை தான் என்பது புரியும். நாம் இதை பிடித்து செய்கிறோம் என்கிறார்.(INSIPID என்னும் அத்தகைய மன நிலை பற்றி இந்த வலைதளத்தில் ஒரு கட்டுரை உள்ளது).
காரணம் நமக்கு துன்பம் பிடித்திருக்கிறது. அதை பற்றி சிந்திப்பது நமக்கு பிடித்து இருக்கிறது. அது நம்மை ENERGIZE செய்கிறது. நம்மை, நம் வாழ்வை நாம் நடத்துவதாக ஒரு சுய முக்கியத்துவத்தை, SELF IMPORTANCE -ஐ தருவதால், நம்மை, நாம் முன்னிறுத்துவதால், அது நமக்கு பிடிக்கிறது. அது நம்மை ENGAGED ஆக வைத்து இருக்கிறது. அதற்கு நாம் செய்யும் முயற்சிகள் ஒரு SENSE OF ACHIEVEMENT -ஐ தருகிறது. கொஞ்ச நாள் வாழ்வு எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றால் போரடிப்பது போல இருப்பது, ஜீவனற்று இருப்பது போல இருப்பதற்கு காரணம் இது தான். நம் ஒரு அறியாமை, வேறு ஒரு அறியாமையைக் கொண்டு வரும் போது, அது ஒரு புது பிரச்சினையை கொண்டு வரும் போது, நமக்கு ஏதோ வாழ்க்கை வேகமாக போவது போல தோன்றுவதால், அறியாமையே நமக்கு பிடிக்கிறது. அறியாமையை நீ விரும்பி அழைக்கும் போது அறிவு எப்படி உள்ளே வரும் என்று கேட்கிறார் கர்மயோகி.
வாழ்வு பரிணாமத்தில் முன்னேற, தன் ஆழத்தில் இருந்து குரல் எழுப்பும். அது நடைமுறையில் பிரச்சினையாக வந்து நம் கவனத்தை ஈர்க்கும். அதை புரிந்துக் கொள்ள நாம் அதன் ஆழத்தை அறிய வேண்டும். நம் அறியாமையின் ஆழத்தை அது தெளிவுப் படுத்தும். அந்த தெளிவு நாம் பெற நினைத்த ஆனந்தத்தைத் தரும். அந்த தெளிவு முழுமையாக இருந்தால், அது பிரம்ம நோக்கத்தை பரிணாமத்திற்கு தேவையான உயர்சித்ததின் பரிமாணங்களை ஒட்டி இருந்தால், அதுவே வாழ்வில் முன்னேற்றதிற்கான COMMON SENSE -கான பொதுப்புத்தி என்கிறார்.
அது தான் முன்பு சொன்ன அனைத்து பகுதிகளுக்கும் ( ALL PARTS OF BEING) தேவையானதை கொண்டு வரும். இதற்கான நடைமுறை உதாரணங்களை இப்போது சொல்ல போகும் பொதுவான வாழ்க்கை சட்டங்கள், சூட்சும சட்டங்கள் பற்றிய பொதுப்புத்தி-COMMON SENSE பற்றி கூறி விட்டு அதன்பிறகு உதாரணங்களை கூறுகிறேன்.
நூறு கோடி என்னும் புத்தகத்தில் கடைசி வரியாக இதிலுள்ள எல்லாவற்றையுமோ அல்லது ஏதோ ஒன்றையோ செய்தாலும் பலன் இருக்கும். ஆனால் பொதுபுத்தியை உபயோகப்படுத்தவும் என்று இருக்கும். USE COMMON SENSE என்று எழுதியிருப்பார். நடைமுறை தேவைகளைத் தாண்டிய சூட்சும விஷயங்களை அதன் சாரத்தை புரிந்துகொள்வதை பொதுப்புத்தி என்பதற்கு உதாரணமாக எட்டு நிகழ்வுகளை கொடுத்து இருப்பார். அதில் ஒன்று குடிப்பழக்கமும் போக்கிரித்தனமும் கொண்ட ஒருவர் பண்புகளை அதிகமாக வளர்த்துக் கொண்டதால் முன்னேறினார் என்று எழுதி இருப்பார். அது நான் தான்.
முகவாதம் வந்து முகம் பழைய நிலைக்குத் திரும்புமா என்று பயத்தில் இருந்த அன்பர் ஒரு நாள் மருத்துவர் ஆலோசனைகளோடு சேர்ந்து இன்னொரு அன்பரை அவர் காதில் விழுமளவு LIFE DIVINE படிக்கச் சொன்னார். சில நாட்களிலேயே எல்லாம் சரியானது. முகம் பழைய நிலைக்கு வந்தது என்று எழுதியிருப்பார். அது என் மனைவி.
எதற்கெடுத்தாலும் பயப்படும் ஒரு அன்பர், அதனால் உயிரை துறக்க வேண்டும் என்னும் நிலைக்கு சென்ற ஒருவர், பின் வாழ்வின் அழுத்தத்தில் தற்செயலாக தைரியமான செயலை செய்ய, அதனால் அந்த AREA -வில் செல்வாக்கு பெற்ற ஒரு அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்று எழுதியிருப்பார். அவர் என் நண்பர்.
இவையெல்லாம் எதைக் காட்டுகிறது என்றால் வாழ்விற்கு என்று சில சட்டங்கள் இருக்கிறது. அதன் படியே வாழ்வு நடக்கிறது என்பது அடிப்படையான பொதுப்புத்தி. வாழ்வின் சட்டங்கள் என்று இருந்தாலும், அதை தாண்டி சில சக்திகள், சட்டங்கள் செயல்பட்டே அதற்கான மறுமொழியை கொடுக்கிறது. அதை நாம் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு நாம் முன்னேறுகிறோம். நமக்கு நிம்மதி என்பதில் ஆரம்பித்து, ஆனந்தம் என்பது வரை அப்போதே கிடைக்கிறது என்கிறார். அதற்கு அடிப்படையான கருத்தாக பலவற்றைக் ACCOMPLISHMENT மற்றும் BUSINESS கட்டுரைகளில் கூறியிருக்கிறார். அவற்றுள் பிரதானமாக எனக்குப் பட்ட எட்டு கருந்துகளை இங்கே தருகிறேன்.
1) GOD IS THE ORIGIN. IT IS HIS WILL IS FULFILLING IN LIFE. இறைவனின் சித்தமே நம் வாழ்வில் வெளிப்படுகிறது.
அது ஒவ்வொருவரின் வாழ்விலும் வெவ்வேறு விதமாக வெளிப்படும். அது பெரும்பாலும் ஒன்று இரண்டு பிரச்சினைகளின் சாரமாகவே இருக்கும் “LIFE REPEATS FOR EVOLUTION”. நம் வாழ்வின் போக்கை நாம் புரிந்துக் கொள்வதே பொதுப்புத்தி. நம் வாழ்வின் அனைத்து பகுதிகளும் எவருக்கும் தெரியாது என்பதால் நாம் தான் இதை கண்டுபிடிக்க வேண்டும்.
2) CONSCIOUS CAUTION THAT GIVES THAT WISDOM AND DISCRIMINATION. அதை உஷார்த்தனமாக விவேகத்தோடும், பாகுபாடோடும் பார்க்கும் விழிப்புணர்வு.
நமக்கு தெரிந்த சட்டத்தை நமக்குள் பொருத்தி பார்க்கும் தவறை செய்யாமல், இந்த CONTEXT க்கு அன்னை, பகவான், கர்மயோகி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்து, அதன் சாரத்தை நம் வாழ்வில் பொருத்திப் பார்ப்பது நமக்கான பொதுப்புத்தியைத் தரும்.
3) FUNDAMENTALS CANNOT BE IGNORED. அடிப்படைகளை செய்யத் தவறக் கூடாது. அதில் எதையும் மிச்சம் வைக்க கூடாது.
EVOLUTION STARTS FROM THE WISDOM OF THE SOCIETY. சமுதாயம் சொல்லும், முன்னேற்றத்திற்கு உயர்ந்த விஷயங்களைக் கூட நாம் செய்யாமல் அதற்கு அடுத்த நிலை பலன் தராது. சமுதாய சட்டத்தை மீறி வாழ்வு, இறைவன் பலன் தரவேண்டுமென்றால், அதற்கான பலம் மிக அதிகமாக நம்மிடம் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றாலும் முன்னேற்றத்திற்கு அடைப்படையான விஷயங்களை நமக்கு தெரிந்த உயர்ந்த அளவில் கட்டாயம் செய்ய வேண்டும்.
4) PERSONAL AND SOCIAL LIMITS MUST BE HONOURED – நம் வரையறைகள், சமுதாய வரையறைகள் நமக்குத் தெரிய வெண்டும்.
முன்பு சொன்னது போல என் ஆன்மீக வரையறை தெரியாமல், நான் இழந்தவை அதிகம்.
5) LIFE IS SUSTAINED BY GREAT ATTITUDE, MOTIVES AND IDEALS – வாழ்வு, உயர்ந்த மனப்பான்மை, கொள்கை, நோக்கம் ஆகியவற்றுக்கே சரியான மறுமொழியை கொடுக்கிறது.
6) ALL ACTS SHOULD BE CONNECTED TO SPIRITUAL SKILLS – எல்லா செயல்களும் ஆன்மீக பண்புகளுடன் இணைக்கப் பட வேண்டும்.
ஐயமில்லா நிதானத்துடன், நம்பிக்கையுடன் இணைக்கப் பட வேண்டும் . அந்த நிலையில் நமக்கு சூட்சும ஞானம், உட்பார்வை, உள்ளுணர்வு வந்து நமக்கான பொதுப்புத்தியை தானே வெளிப்படுத்தி, நடக்க இருப்பதை சொல்லும். அதனால் துன்பமே இல்லாத வாழ்வு, ஆனந்தமயமான வாழ்வு அமையும் என்கிறார்.
7) TASTE OF IGNORANCE CHANGING INTO TASTE OF KNOWLEDGE IS EVOLUTION – அறியாமையின் ருசியில் இருந்து வெளியே வந்து ஞானத்தை பெறுவதே பரிணாமம்.
ஒவ்வொரு கணமும் நம் செயல், மனப்பான்மை, நோக்கம் ஆகியவற்றை பகுதியாக எடுத்துக் கொண்டு அதன் முழுமை என்ன என்பதை ஆராய வேண்டும்.
8) SOCIETY IS AN INTEGRATED LIVE ORGANISM. IT SYMBOLS TO BE WATCHED – சமுதாயம் நம்மைப் போலவே ஒரு ஜீவனுள்ள படைப்பு. நம்மோடு தொடர்பு கொண்டு அது தரும் சமிஞைகளை கவனிக்க வேண்டும்.
இந்த அடிப்படைகள், அதன் முழுமையான ஞானம் பொதுப்புத்தி COMMON-SENSE என்கிறார். அது புரிந்தால், எந்த துன்பமும் இல்லாத சமநிலையை தரும் என்கிறார். ஆன்மீகத்தில் அது ஆனந்தம் தரும் நிலை என்று சொன்னாலும், வாழ்வில், வியாபாரத்தில், நடைமுறையில் அதை CERTITUDE – ஐயமில்லா நிதானம் – ஆனந்தம் என்று குறிப்பிடுகிறார். அதை பெற்றாலே ஆனந்தத்திற்கு தேவையான அனைத்து பண்புகளும் தானே தேடி வரும் என்கிறார் கர்மயோகி.