அடுத்தது HISTORICAL VIEW.
நம் வாழ்வில் நடந்ததை ஆராய்ந்து அது எப்படி நடந்தது, அதில் என் முயற்சி எவ்வளவு, அருள் எவ்வளவு. இதில் மட்டும் ஏன் அருள் பலித்தது, என்று பார்ப்பது. நம்பிக்கையோடு நாம் செய்த விஷயங்கள் வெகு நாட்களாக பலிக்காமல் இருக்கும் நிலையில், நம்பிக்கையில்லாமல், ஏனோதானோ என்று செய்தவை சில சமயம் பலித்திருக்கும். அது எப்படி நடந்தது.
இவை அனைத்திற்கும் அடிப்படை இப்போது இருக்கும் இந்த சுபாவத்தின் அடிப்படை கட்டமைப்பை உடைக்காமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது என்பது தான். அதன் மூலம் நம் எந்த பண்பு அல்லது வெளிப்படுத்திய செயல் அதிகபட்ச ஏற்புத்தன்மை, RECEPTIVITY -ஐ கொண்டுள்ளது என்று கண்டுபிடித்து, அதை அதிகப்படுத்துவது HISTORICAL VIEW. அது நம் வாழ்வில் நடந்தவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது மட்டுமே, அதுவும் நம்மால் மட்டுமே செய்ய முடியும். இதற்கு யாரும் உதவ முடியாது. அதற்கு முதல் கட்டமாக சாதனை, ஆச்சரியம், அதிசயம் என்று நடந்த ஒன்றை எடுத்துக் கொண்டு இது இப்போது ஏன் நடந்தது, இதற்கு முன் ஏன் நடக்கவில்லை, இது எனக்கு ஏன் நடந்தது, என்னை ஒத்த பிறருக்கு ஏன் நடக்கவில்லை, எனக்கே கூட முன்பு ஏன் நடந்தது, இப்போது ஏன் நடக்கவில்லை என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டால், நம் எந்த பண்பு இதை நடத்திக் கொடுத்தது என்பது புரியும்.
இது போன்று நம் வாழ்வில் நடந்த பல சம்பவங்களையும் எடுத்து கொண்டு ஆராயலாம். காரணம் அன்னை நேரடியாக வந்து எதையும் செய்வதில்லை. ஒரு ஆக்கபூர்வமான சக்தியாக மனிதர்கள், சூழல், திறமை, மனப்பான்மை, பண்புகள், மூலம் தான் செயல்படுகிறார். அத்தகைய மனிதர்கள், சூழல், திறமை, மனப்பான்மை, பண்புகள் நமக்கு பலித்த விஷயத்தில் எப்படி தேடி வந்தது, எப்படி நடந்தது, அல்லது அதற்கு தேவையான , தீவிரம், உறுதி, பண்புகளை இப்போது மட்டும் ஏன் எடுத்துக் கொண்டோம் எனபது புரிந்தால் அருள் நம்மிடம் வரும் பாதை நமக்குப் புரியும். அதை அதிகப்படுத்த வேண்டும்.
கர்மயோகி கொடுக்கும் உதாரணம் -மிகப் பெரிய மரம் வளர்க்கும் முன்பு -அதன் பகுதியாக பெற்றது துளிர்க்க வேண்டுமானால் , துளிர்க்க வேண்டிய இடத்தில தான் சாணம் வைக்க வேண்டும். கட்டு போட்டு பதியம் போடவேண்டிய இடத்தைத் தான் முதலில் கவனிக்க வேண்டும். அது நிச்சயமாக துளிர்க்கும் இடம் எது என்று நமக்கு புரிய வேண்டும் . அப்போதுதான் அது எந்த மரத்தின் பகுதியோ அது போல வளரும்.
ஒரு அன்பர் பெரிய திறமை எதுவும் இல்லாதவர், ஆனால் மிகவும் நிதானமானவர். கோபம் என்பதே வராது. பல துறைகளில் ஈடுபட்டு ஏராளமாக சம்பாதிக்கிறார். கர்மயோகி அவரை பார்த்தப் போது அவரது politeness அவரது மிகப்பெரிய பலம். அவரிடம் வேறு திறமைகள் (shallow personality ) இல்லை. ஆனால் இந்த politeness ஒன்றே அவரைக் காப்பாற்றும் என்றார். அதை அவர் அதிக படுத்த வேண்டும் . அதுவே அன்னை அவரிடம் வரும் பாதை எஎன்றார். என்னை எடுத்துக் கொண்டால் என் TECHNICAL KNOWLEDGE அதை SINCERITY -உடன் CUSTOMER க்கு தரும் பண்பே எனக்கு ஓரளவு அருளை தருகிறது என்று நினைக்கிறேன். அதை தினமும் அதிகப்படுத்துகிறேன். அதே போல வேறொரு இடத்தை ஆராயும் போது என்ன செய்யவில்லை என்று தெரிகிறது. நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டால் தான் எனக்கு அடுத்த கட்ட முன்னேற்றம் என்று ஒரு சூழல் வந்த போது சூழலின் கட்டாயம், முன்னேற்றத்தில் உறுதி, தீவிரம், சமர்ப்பணம் அதிகபட்சம் இருந்தது. கர்மயோகியே வியக்கும் அளவு ஆங்கிலத்தில் பேச, எழுத ஆரம்பித்தேன். இது பலருக்கும் தெரியும். ஆனால் வியாபாரத்தை சென்னையை தாண்டி, தமிழ்நாட்டை தாண்டி விரிவு படுத்த எனக்கு இந்தி கட்டாயம் தேவை என்னும் போது, ஆள் வைத்துக் கற்றுக் கொண்டால் கூட எனக்கு இன்றளவும் பேச வரவில்லை. காரணம், அன்று இருந்த உறுதி, ஆர்வம், தீவிரம், சமர்ப்பணம், இன்று இல்லை. ஆனால் அதுவே ஒரு ஆறு மாதங்கள் பெங்களூருவில் இருந்த போது இந்தி, தமிழ் பேசமுடியாத இடம் என்பதால், கன்னடத்தில் பேச முயன்று நான்கைந்து மாதத்தில் கன்னடம் சரளமாக பேசும் அளவிற்கு வந்து விட்டது. சில நேரம் எழுத்துகளை கூட்டி படிக்கும் அளவிற்கு வந்துவிட்டது. எழுத்துக்களை, படிக்க பழக எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை. எப்படி வந்தது என்று தெரியாது. ஆனால் அதன் பின் உள்ள பண்பான CUSTOMER SERVICE, OTHER MAN POINT உடன் என் ஆர்வம், தீவிரம், உறுதி அதை சாதித்தது.
இது போல பல LIFE RESPONSE உதாரணங்களை கூறியிருக்கிறேன். எந்த சட்டத்தால் இது நடந்தது, காட்டுக்குள் அன்னை SYMBOL போட்ட AUTO எப்படி வந்தது, வெள்ளம் எப்படி என் பரிணாமத்தை வளர்த்தது என்பது போன்ற விஷயங்களில் , என் ஏற்புத்ததன்மை , என் படைப்பு திறன் எங்கே இருக்கிறது என்பது இத்தகைய ஆத்ம சோதனைகள் மூலம் பிடிபடும். அதன் பிறகு அதை அதிகப்படுத்த முடியும். அது அருள் வரும் பாதை என்கிறார். அந்த பாதையை தடையில்லாமல் எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது தான் HISTORIAL VIEW மூலம் பரிணாமத்தில் வளர்வது. அதன் மூலம் CREATIVE ELEMENT , படைப்பாற்றலை பெறுவது. இதற்கான நமது ஆர்வம், முயற்சி, நம் சாதாரண IDEA களையும் CREATIVE IDEA களாக மாற்றும். அதற்கான ஞானம் தானே வரும் . வாய்ப்புகளை காண முடியும். நம் தனித்தன்மையை வெளிப்படுத்தி நம்மை வேறு படுத்தி காட்ட முடியும்.
நம் பண்புகள் அனைத்தும் MORAL NATURE எனப்படும், குடும்பம் மற்றும் சமுதாயத்தால் வந்தது மட்டுமே. நடத்தை முதல் திறமை வரை நாம் பெற்றது அனைத்தும் இந்த இரண்டும் தந்ததால் வந்தவையே. அதையும் தாண்டி நாம் அடிப்பட்டு பாடம் கற்றுக் கொண்டு பெற்றவை EMOTIONAL NATURE ஆக நம்மிடம் உள்ளது. அதைத் தாண்டி நாமே நமக்குத் தேவையான பண்புகளை வளர்த்துக் கொண்டோமா என்றால் இல்லை . பக்திக்காக, குருவுக்காக என்றால் கூட அவையெல்லாம் CLOISTERED VIRTUE கட்டாயத்திற்காக எடுத்துக் கொண்டவையே. உதாரணமாக தியானம், தியான மையம், ஆன்மீக புத்தகங்கள், பக்திப் புத்தகங்கள் படிக்கும் போது மட்டும் நல்ல சிந்தனையோடு இருப்பதால் ஒரு பயனும் இல்லை. ஒரு நாளில் ஒரு மணி நேரம் நல்லவனாக மீதி 23 மணி நேரமும் அத்தனை கயமைகளையும், அறியாமையையும் கொண்டவனாக இருப்பதில் ஒரு பயனும் இல்லை. நம்மை அறிந்து நம் சுபாவத்தை அறிந்து அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வது நாம் சித்தத்தில் வளர்வது. அது புதிதாகப் படைப்பதற்கான ஞானத்தைக் கொடுக்கும். அதுவே SOCIAL WISDOM. சமுதாயத்தில் முன்னேறுவதற்கான ஞானத்தை கொடுக்கும். அதற்கு மேல் கர்மயோகி சொல்வதை பொருத்தமாக தமிழ் படுத்த முடியாததால் ஆங்கிலத்திலேயே தருகிறேன்.
MOTHER’S WISDOM STARTS FROM SOCIAL WISDOM BECAUSE.
DEVELOPMENT OF OUR INTELLIGENCE IS GRACE OF SOCIAL THOUGHT.
DEVELOPMENT OF IDEA OUT OF IT IS GRACE OF SOCIAL WISDOM.
ESSENCE OF ALL ABOVE IS THE WISDOM OF THE INNER SPIRIT.
அப்படி நாம் ஆன்மாவின் சாரம் புரிந்து அதற்கானவற்றை செய்யும் போது நமக்கான படைப்பாற்றல் நமக்கு கிடைக்கிறது. அது நம் ஆன்மாவின் ஆர்வம் என்பதால் “THY WILL” க்கான வித்தினை கொண்டுள்ளதால், அதை CREATIVE ELEMENNT என்று கூறலாம். அடிக்கடி நான் சொல்வது போல நம் வாழ்வில் போராட்டம், துன்பம், முரண்பாடு என்பதே நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும், நாம் யாராக இருக்க வேண்டும் என்று இறைவன் நினைப்பதற்கும் நடக்கும் போராட்டம் தான். முதல் இரண்டு பாகங்களில் சொன்னது போல இந்த இடங்களை கவனித்தால், ஆராய்ந்தால் நம் NEGATIVE THOUGHTS, NEGATIVE சூழல், NEGATIVE நிகழ்வுகளுக்கான காரணம் புரியும். நம் முன்னேற்றம் என்பது அதற்கு எதிரான நிலைக்கு தேவையானபண்புகளை எடுத்துக் கொள்வதில் தான் இருக்கிறது.
குறைந்த பட்சம் தன் நோக்கம் வளர்ந்து பிறர் நோக்கமாக மாற வேண்டும். பிறர் நோக்கம் பலரின் / சமுதாய நோக்கமாக மாற வேண்டும். பின் இந்த உலகத்திற்கான / பிரபஞ்சத்திற்கான நோக்கமாக மாற வேண்டும். பின் அது பிரம்ம நோக்கமாக மாற வேண்டும். இதுவே சித்தம், உயர்சித்தம், இறை சித்தமாக பரிணாமம் பெரும் வழி. இதைத் தான் சாதிக்க காத்திருப்பதை சாதிக்க விடு என்கிறார். அது சந்திக்கும்போது அதாவது உள்ளே இருக்கும் ஆன்மா அல்லது அன்னை சாதிக்கும் போது அது நிச்சயம் புதிய படைப்பாக இருக்கும். வாழ்வில் அது அடுத்த கட்ட முன்னேற்றமாக இருக்கும்.
நான் யார் என்னும் ஆன்மீக கேள்விக்கான பதில் கிடைக்கும் இடம் அது என்கிறார் . நம்முடைய வெளி PERSONALITY ஐ INNER PERSONALITY யுடன் இணைக்கும் இடம் அது. (மேலும் விவரம் தேவைப்படுபவர்கள் இதே வலைதளத்தில் WHY LIFE REPEATS என்னும் ஆங்கில கட்டுரையை படிக்கலாம்).
ஒரு ஆரம்பமாக, ஒருபயிற்சியாக, திரும்ப திரும்ப நினைவுக்கு வரும் விஷயங்கள், பொருட்கள், பார்க்கும் மனிதர்கள், ஒரே மாதிரி நடக்கும் சம்பவங்கள், தடைகள் , அதற்கான நம் உணர்வுகள் – COINCIDENCES, INSIGHT – உட்பார்வை போன்றவற்றை ஒரு மாதத்திற்கு எழுதி வைத்துக் கொண்டு எடுத்துப் பார்த்தால் அதில் ஒரு REPEATEDNESS மற்றும் நாம் உதாசீனப்படுத்திய வாழ்வு தந்த எச்சரிக்கைகள் வாய்ப்புகள் நமக்குப் புரிய வரும். அந்த நிகழ்வின் கோர்வை பிடிபடும் போது நம் சுபாவத்தின் சாரம் நமக்குப் பிடிபடும். நம் குணம் , நம் சுபாவம், நம் முன்முடிவுகள், நம் அப்பிராயங்கள் ஏற்படுத்தும் தடைகள் நமக்கு புரியும். நாம் ஏன் அதே இடத்தில இருக்கிறோம் என்பதற்கான காரணம் நமக்கு தெரிய வரும். அதிலிருந்து வெளியே வர, வாழ்வில் வளர, , சுபிட்சம் பெற , பரிணாமத்தில் வளர நாம் எடுக்கும் முயற்சிகள் CREATIVE ELEMENT -ஐ கொண்டதாக இருக்கும். காரணம் அதில் ஒரு தனித்தன்மை வந்து விடும். அந்த தனித்தன்மையுடன் ஆன்மீக பண்புகள் சேரும் போது அவன் ஆன்மீக மனிதன் ஆகிறான்.
குறைந்த பட்சம் அதற்கான ஆராய்ச்சியை யாவது நாம் ஆரம்பிக்க வேண்டும்.
அதற்கு ஒரு ஆரம்பமாக கர்மயோகியின் நான்கு கட்டங்கள் FOUR QUADRANTS முறையை எடுத்துக் கொண்டு ஆராயலாம். அதன் படி ஒரு மனிதனின் சாதனைகளை, உள்ளே வெளியே இரண்டுக்குமான சுமுகம் தான் நிர்ணயிக்கிறது என்பது அடிப்படை. அதனால் அவனது சாதனை என்பது கீழே கொடுத்துள்ள நான்கு மாதிரிகளில் அடங்கி விடும்.
1) உள்ளே தேவையான – VITALலில் தேவையான மனப்பான்மை, உணர்வு, உணர்ச்சி, அதற்கான பண்புகள் அனைத்தும் சரியாக இருந்து வெளியே செயலில் தேவையான திறமை, திறன், செம்மை, நுணுக்கம், அனைத்தும் இருக்கும் போது தோல்வி என்பதே கிடையாது. அங்கு ஒரு படைப்பாற்றல் நிச்சயம் வரும்.
2) வெளியே பலனுக்கு, செயலுக்கு தேவையான அனைத்தும் இருந்தும், அதற்கேற்ற மனப்பான்மை, நோக்கம், எண்ணம், பண்புகள் உள்ளே இல்லையென்றால் அந்த செயலுக்கான பலன், அனைவரும் பெரும் பலன் மட்டுமே நமக்கு வரும். அதை விட அதிகம் என்பது அரிதாகவே இருக்கும். குறைந்த பட்சம் பலம், தீவிரம் , உறுதி போன்றவை உள்ளே இருந்தால் சற்றே அதிக பலன் பெற முடியும்.
3) உள்ளே தேவையான அனைத்தும் இருந்து அதை செயலில் வெளிப்படுத்த தேவையான வெளி விஷயங்கள் இல்லையென்றால், விடாமுயற்சி பொறுமை இருந்தால் அவை சூட்சுமத்தில் சேரும். பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் கூட பலனளிக்காமல் இருக்கலாம். ஆனால் சரியான முயற்சி எடுக்கும் போது அது செயலில் வெளிப்படும் போது அது வரை நாம் இழந்தது அனைத்தும் சேர்ந்து வரும். நமக்கான பலன் சூட்சுமத்தில் சேரும் முறை இது என்கிறார்.
4) நான்காவது உள்ளே, வெளியே என்று எதை பற்றியும் நினைக்காமல், அதற்கான சிந்தனை கூட இல்லாமல் அதாவது உணர்வே இல்லாமல் இருப்பவர்கள், மனித உருவில் உள்ள மிருகங்கள். அவர்கள் முதலில் மனிதனாக வேண்டும். அதாவது முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க வேண்டும். பண்புகளே வாழ்வில் முன்னேற்றத்தின் அடிப்படை என்பதை நம்ப வேண்டும் அதன் பிறகே வாழ்வு முன்னேறும்.
இந்த நான்கு கட்டங்கள் எல்லார் வாழ்விலும் கலந்தே இருக்கும். சில விஷயங்களில் முதல் நிலையிலும் , சில விஷயங்ளைல் , நான்காம் நிலையிலும் இருப்போம். இவற்றை பற்றிய விழிப்புணர்வு, AWARENESS நம் பரிணாமத்திற்கான வழியைக் காட்டும்.
இதை நடைமுறையில் செயல்படுத்துவதற்காக நாம் செய்யும் முயற்சிகள், நம் சித்தத்தை உயர்த்துவது அதை வலுப்படுத்துவது அதன் மூலம் இறை பண்புகள் நம் சுபாவமாவது (DEVELOPING THE STRUCTURE OF OUR CONSCIOUSNESS TO DIVINE CONSCIOUSNESS) அந்த DIVINE CONSCIOUSNESS CREATIVE ELEMENT-ஐ உள்ளடக்கியது.
மேலே சொன்ன இந்த முறைகள் அனைத்திற்கும் பின் உள்ள தத்துவம் நாம் பரிணாமத்தில் உயர்ந்து ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்னும் “THY WILL ” ன் ஒரு பகுதியாக நாம் மாற வேண்டும் என்பதே. அப்போது தான் இறைவனுக்குள்ள அதே படைப்பாற்றல் நமக்கும் வரும். பதியம் போடப்படும் மரம் பின் அதே போன்ற தனி மரமாக வளர்வது போல , இறைவன் விரும்பும் பண்புகளை நாம் நம் பகுதியாக பெறும்போது , நாம் இறைவனின் பகுதி ஆகிறோம் .இதை “முழுமையின் பகுதி ஆவது” என்கிறார். (MIND COMING OUT OF IDENTIFICATION WITH THE PART – TO DISSOLVE ITSELF IN THE VISION OF THE WHOLE ).
மனித பரிணாமம் ஆன்மீக பரிணாமம் ஆவது தான் இந்த யோகம். நம் சாதனைகள் எல்லாம் காலத்தில் – வாழ்வின் சட்டங்களால் – நடந்தது என்றால், காலத்துள் காலத்தை கடந்த நிலையில் ஆன்மீக சட்டங்களால் நடப்பது CREATIVE ELEMENT. என் வாழ்விலும் என் நண்பர்கள் வாழ்விலும் இது நடந்து இருக்கிறது. WE HAVE TO EVOLVE SPIRIT IN TIME TO SPIRIT IN SIMULTANEOUS TIME. அந்த நிலையில் தான் பலகட்டங்களை தாண்டிய சாதனையை நம்மால் செய்ய முடியும்.