மூன்றாவது தேவை – Individuality – தனித்தன்மை. தனித்தன்மை நம்மை முரண்பாடுகளில்லாத , முரண் பட முடியாத இடத்தில் வைக்கும். உதாரணமாக நான் அன்னையிடம் வந்த புதிதில் சொற்பொழிவுகளை கேட்கும் போது குறிப்பாக Life Divine சொற்பொழிவுகளை கேட்கும்போது எதுவும் புரியாது. அதன் பிறகு pride and prejudice பற்றி கேட்கும் போது இன்னும் குழப்பம் அதிகமானது. Bennet ஆணா, பெண்ணா என்பதில் அடிக்கடி சந்தேகம் வரும். ஆனாலும் பலரும் பிடிவாதமாக அந்த புத்தகத்தை வாங்கி படித்தார்கள், பேசினார்கள், சினிமா பார்த்து விளக்கினார்கள். நான் அதெல்லாம் நமக்கு சரி வராது என்று எண்ணி மனித சுபாவம் என்னும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன். அதுவே என்னை சேவை அன்பராக்கியது. கர்மயோகிடம் கொண்டு சேர்த்தது. என்னை பொறுத்தவரை அது நான் வெளிப்படுத்திய தனித்துவமே. இன்று நான் சொல்வது சரியா தவறா என்ற கேள்வி வரவில்லை. ஏன் இப்படியும் செய்ய கூடாது, இப்படியும் சிந்திக்க கூடாது என்று பெரும்பாலோர் கேட்கும் இடத்தில வந்து விட்டேன். விரும்புவார்கள் என் தொடர்பில் இருக்கிறார்கள். விரும்பாதவர்கள் விலகினார்கள். முரண்பாடு என்பது இல்லை.
நாம் ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மையை வெளிப்படுத்த முயல வேண்டும். அப்படி சிந்தித்து செயல்படுத்தும் போது அது இறைவன் நம்மில் பெற விரும்பும் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் என்கிறார். காரணம் நாம் நம் தனித்தன்மையை பற்றி நினைக்கும் போது, அதை வெளிப்படுத்த நினைக்கும் போது, அதில் இருக்கும் பிரம்மத்தின் Real Idea வே வெளிப்படுகிறது என்கிறார் கர்மயோகி. நம் வழக்கமான பழக்கமான செயல்கள், எண்ணங்கள், சிந்தனைகள் அது வெளிப்படுவதை தடுக்கிறது என்கிறார்.
உதாரணமாக இப்போது ஏற்பட்ட பால் coffee powder விலை ஏற்றத்தால் டீ , காபி விலையை எவ்வளவு உயர்த்தலாம் என்று ஹோட்டல் Association னும் , டீ கடைக்காரர்கள் Association னும் கூடி பேசுகின்றன. கடையடைப்பு கூட அறிவிக்க பட்டுள்ளது. விலை ஏற்றினால் வியாபாரம் குறையும் என்று கூறி பால் விலையை குறைக்க போராட்டங்கள் நடக்கின்றன. இரண்டு அல்லது ஐந்து ரூபாய்க்கு இந்த போராட்டம். அனால் இதே காலகட்டத்தில் coffee day வில் 150 ரூபாயும், starbuck ஸில் 200 ரூபாய்க்கும் விற்கிறது. இரவு 1.00 மணி கூட கடை நிறைந்து இருக்கிறது. எப்படி முடிகிறது. அவர்கள் அதில் ஒரு தனித்துவத்தை பற்றி சிந்தித்ததால் அதை செயல்படுத்தியதால், வந்த சாதனை அது.
சில மாதங்களுக்கு முன் காந்தாரா என்னும் படம் வெகுவாக பேசப்பட்டு உலகம் முழுதும் வசூலில் சாதனை படைத்தது. அது சாதாரண, குலதெய்வம் என்னும் concept கருத்து பற்றிய, நான் சிறு வயதில், காத்தவராயன் கதை என்னும் பெயரில் கேட்ட, பார்த்த சாதாரண விஷயம் தான். ஏராளமான படங்கள் அதை அடிப்படியாக வந்துள்ளது. ஆனால் அதை ஒரு தனித்துவத்துடன் வெளிப்படுத்தி 16 கொடியில் மிகுந்த சிரமத்துடன் தயாரிக்கப்பட்ட படம். இன்று 400 கோடி வசூலை அள்ளிக் குவித்தது.
ஒரு வருடத்திற்கு முன் தனுஷ் நடித்த ரகிட, ரகிட என்னும் பாடல் பிரபலமாக இருந்தது தெரியும். அதில் ஒரு குறிப்பிட்ட நடன அசைவை தனுஷ் அருகே, சற்றே தனித்துவத்துடன் வெளிப்படுத்திய extras என்று சொல்லப்படும் துணை நடிகை ஒருவர், பலர் கண்ணில் பட்டார். பேட்டி, பாராட்டுகள் என்று குவிந்தது. எந்த அளவிற்கு என்றால், அந்த படத்தின் கதாநாயகி அந்த காட்சியை வெட்டினால் தவிர நான் அந்த பட promotion க்கு வர மாட்டேன் என்று சொல்லும் அளவிற்கு வந்தது. அதன் பிறகு பல படங்களுக்கு அந்த துணை நடிகை ஹேமா தயாள் dance master ஆக ஆனார். இன்று ஒரு ஹிந்தி படத்திற்கு நடன இயக்குனராக இருக்கிறார். ஒரு சிறு movement இல் அவர் காட்டிய வித்தியாசம், தனித்துவம் இத்தகைய வளர்ச்சியை கொண்டு வந்தது. ஒரு சாதாரண நடனமாடும் ஒரு துணை நடிகை 500 ரூபாய் ஒரு ஷேடியூலில் இருந்து பல லட்சம் சம்பளம் பெறுபவராக மாறுவது என்பது எப்படி பட்ட விஷயம் என்று சினிமா பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும்.
இப்படி பேசும்போது நாம் ஏற்கனவே தெரிந்த ஒன்றை அல்லது பிறர் செய்து கொண்டு இருக்கும் ஒன்றை நம் அறிவு சொல்லும் அளவில் சற்றே மாற்றி செய்வோம். அதை தனித்தன்மை என்று நினைப்போம். அப்படி இல்லாமல் அடிப்படை ஒன்றாக இருந்தாலும் முற்றிலும் வித்தியாசமான, falsehood இல்லாத , பெரும்பாலோருக்கு ஆனந்தம் தருவதாக , முன்னேற்றம் தருவதாக அது இருக்க வேண்டும் . கர்மயோகி அன்னையை உலகுக்கு தந்த விதம், மெண்டல் டெவெலப்மெண்ட் பற்றிய அவரின் கருத்துகள், சுபிக்சத்தை பற்றிய அவர் கருத்துகள் , கல்வியை பற்றிய அவர் கருத்துகள் என்று எதை எடுத்து கொண்டாலும் , முன்பே இருந்தது என்றாலும் இதற்கு இணை இல்லை என்னும் அளவிற்கு எல்லாவற்றிலும் ஒரு தனி தன்மையை காட்டினார். அதை தொடும் அனைவர்க்கும் ஆனந்தம் நிச்சயம்.
அத்தகைய அடிப்படை நாம் காட்டும் தனித்துவதில் இருக்க வேண்டும்.
2004-லில் அன்னையிடம் வந்து திருந்தி இருந்தால் கூட, 2006-இல் கர்மயோகி அவர்களை பற்றி அறியும் வரை, என் ஆசை , ஒரு Gang Leader ஒரு தாதா ஆக வேண்டும் என்றே இருந்தது. அப்போது, வட்டாரம் என்று ஒரு படம் வந்தது. அதில் Arya character மிகவும் தனித்துவம் கொண்டதாக நினைத்து அது போன்றே என் முதலாளியின் நாற்காலியை தொடுவேன் , தடவி கொடுப்பேன். அதன் பிறகு, கர்மயோகி அவர்கள் சொன்னதை பற்றி சிந்தித்து பார்த்த போது , நமக்கு எவ்வளவு தெரிந்திருந்தாலும், எதை செய்தாலும், நம் சுபாவத்தை ஒட்டியே தேர்வு செய்வோம் என்று புரிந்தது. அதையே தனித்துவம் என்று நினைப்போம் என்று புரிந்தது. அதன் பிறகு எப்படி பொசிட்டிவ் ஆக வித்தியாசத்தை காட்டலாம் என்று நினைத்து தொழிலில் ESD எனப்படும் வித்தியாசமான ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டதாலேயே என் வளர்ச்சி வந்தது. மனித ஸ்வபாவத்தில் சொல்லப்பட்ட முதலாளியின் சித்தத்தோடு ஒன்றினால் அவர் நிலையை அடைய முடியும் என்னும் தத்துவம் புரிந்த பிறகு ஒரே வருடத்தில் அவர் இடத்திற்கு நான் வந்தேன்.
INDIVIDUALITY பற்றி கர்மயோகி நிறைய எழுதி இருக்கிறார். குறிப்பாக COMPLETE ACT , பற்றி எழுதும் போது CREATIVE ELEMENT என்பது பற்றி எழுதுகிறார். அது பற்றியெல்லாம் பெரிய விளக்கம் எந்த சொற்பொழிவாளரும் தந்ததாகத் தெரியவில்லை. சமர்ப்பணம் போன்ற ஆன்மீக சொற்களே அன்பர்களுக்கு போதும் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அதன் பின்னால் உள்ள பரிணாம வளர்ச்சிக்கான விளக்கத்தை யாரும் பேசவில்லை. ஆன்மாவின் செயல்கள் அதனுடைய தனித்தன்மையிலிருந்து எழவில்லை. எல்லா படைப்புக்கும் பொதுவாகவும், அடிப்படையாகவுமுள்ள பரம்பொருளின் ஒருமை என்னும் அடிப்படையில் இருந்தே அவன் செயல்கள் எழுகின்றன. அத்தகைய தனி தன்மையை வெளிப்படுத்துபவன் ஆன்மிக தனித்தன்மையையோடு இருப்பான் – பரிணாமத்தில் அது Spiritual Individual என்று அழைக்க படும்.
குறிப்பாக நம் தனித்தன்மை வெளிப்பட வேண்டும் என்றால் நமக்கு சிந்தனைக்கும் எண்ணத்திற்கும் இருக்கும் வித்தியாசம் புரிய வேண்டும். அது நம் உணர்வு, உணர்ச்சி நிலைகளை நமக்கு காட்டும். அப்போது தான் ஒரு விஷயத்தின் சாரத்தை அல்லது ஒரு விஷயத்தின் “ரஸா” வை நாம் காண முடியும். அதுவே தனித்தன்மைக்கும் அதன் மூலம் சாதனைக்கும் வழி வகுக்கும். அதை அவர் SENSE EDUCATION என்ற பெயரில் தரவேண்டும் என்று மிகுந்த ஆவலோடு முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருந்த போது தான் சமாதி அடைந்தார்.
நாம் ஒரு மலரை பார்த்தால், இது சூரியகாந்தி, இது ரோஜா என்று கடந்து விடுவோம். அல்லது அதன் மணம் , அழகு ஆகியவற்றை ரசிக்கிறோம். இது நம் ரசனையா, நம் உணர்வா, உணர்ச்சியா என்றால் இல்லை, இது வழிவழியாக நமக்குச் சொல்லப்பட்டது. இப்படி சொல்லப்பட்ட பூக்களைத் தவிர பிற பூக்கள் நம்மை கவருவதில்லை. அப்படி இல்லாமல் சூரியகாந்தியின் அழகு மட்டுமல்ல, அதைப்பிய்த்து அதன் அமைப்பு, அது ஏன் அப்படி இருக்கிறது, ரோஜா ஏன் இப்படி இருக்கிறது , ஏன் சூரியகாந்தியின் வேலையை ரோஜா செய்யவில்லை என்ற ஒப்புமைகள் நமக்கு உணர்வு பூர்வமாக புரியும் போது, அதனுடன் ஒன்றும் போது, அன்னை ஒவ்வொரு மலரின் ஆன்மாவை பார்த்து அதன் நோக்கத்திற்கு பெயரிட்டது போன்று நம்மால் செய்ய முடியும். அதன் தனித்தன்மையின் சாரம் நமக்கு புரியும் . அது படைக்கப்பட்டதற்கான காரணம் புரியும் . அதன்மூலம், அதன் ஆன்மாவும், இறைவனும் அடையும் ஆனந்தம் புரியும். அந்த அளவு இல்லை என்றால் கூட நாம் பார்ப்பதற்கும், ஒரு கவிஞர் ஒரு பூவை பார்ப்பதற்கும், அதன் மூலம் அவருக்கு ஊற்றெடுக்கும் உணர்வு கவிதை ஆகியவற்றை பற்றி சிந்தித்தால் ஒவ்வொன்றிலும் அப்படிப்பட்ட படைப்பின் சாரத்தை, ரஸாவை பார்க்க ஆரம்பித்தால், நம் தனித்துவம் INDIVIDUALITY, SPIRITUAL INDIVIDUALITY ஆக மாறும். நம் ஆன்மாவின் நோக்கம், நாம் படைக்கப்பட்டதின் நோக்கம் நமக்கு புரியும்.
அதுவும் இல்லையென்றால் குறைந்த பட்சம் நம் பலத்தின் சாரம் நமக்கும் புரிய வேண்டும். அப்போது தான் ஏராளமான பலவீனம் நம்மிடம் இருந்தால் கூட நம்மால் தனித்துவம் காட்ட முடியும். அப்படி பார்த்த அன்னை SPIRITUAL INDIVIDUAL ஆக மாறினார். மோட்சம் அடைய , இந்த வாழ்விலேயே அந்த ஆனந்தத்தை அடைய வாழ்க்கையைத் துறக்க வேண்டாம், அதற்குப் பதில் திருவுருமாற்றம் செய்யலாம் என்று ஒரு தனித்தன்மை கொண்ட அணுகுமுறையைக் கொண்டு வந்ததால், பகவான் புதிய ஆன்மிகத்திற்குத் தலைவரானார்.
இது போன்ற விஷயங்களை – கர்மயோகியுடன் இருந்தவர்களை கர்மயோகிக்கு இணையாக நினைக்காமல் அவர்கள் வாழ்வில் கடைபிடிக்க முடியாததை பிறருக்கு கூறும் மடமையை ஏற்காமல் நாமே நேரடியாக யாருடைய உதவியும் இல்லாமல் கர்மயோகியிடம் சொல்லி விட்டு படித்தால் நமக்கான ஞானம் வரும். நம் தனித்தன்மைக்கு தேவையான ஞானம் வரும்.
உதாரணமாக நம்மிடம் ஏராளமான பலவீனம், இயலாமை இருக்கிறது. ஆனால், பொறுமை, மற்றும் பக்தி நம் பலம் என்று நினைத்தால், அதை இணைக்கும் சாரமான படைப்பாற்றல் எது என்று பார்த்து அதை இணைப்பாக பயன்படுத்த வேண்டும். அப்போது தனித்தன்மை வெளிப்படும். பொறுமை, மற்றும் பக்தியை இணைக்கும் சாரம் PERSEVERANCE என்னும் MANIFESTING ASPECT. SYNTHESIS OF YOGA வில் முதல், இரண்டாவது அத்தியாயத்தின் பார்வையில் இது பற்றி கர்மயோகி எழுதி இருக்கிறார். இவை எல்லாம் புரிந்தால் நம்மால் ஒரு தனித்துவத்தை தெரியமாக வெளிப்படுத்த முடியும். இல்லையென்றால் பிறர் செய்ததையே செய்துக் கொண்டு இருப்போம். நம் கொள்கை அந்த பார்வையில் நம் செயல்கள் பெரும்பாலும் ஒரு தனித்துவத்தை கொண்டு வரும். தனித்தன்மை என்பது , வழக்கம், பழக்கம் , சம்பிரதாயத்துக்குக் கட்டுப்படாமல் சொந்தமாகச் செயல்படக்கூடிய திறனைத் தனித்தன்மை என்கிறோம்.
திறமை என்பதும் அனுபவம் என்பதும் நம் சூழலால் நாம் பெற்றது. நம் சூழலால் நம் பெற்றவற்றிக்கு , பணம், குடும்பம், வேலை, சமுதாயம் என்று நம் பெற்றவர்களுக்கு நாம் கட்டு படுகிறோம். அதில் இருந்து நாம் விடு படும்போதுதான் நம் தனித்தன்மை வெளிப்படும். அதை ஆன்மாவின் சுதந்திரம் என்கிறார். அதுவே வாழ்வில் தனித்தன்மையாக வெளிப்படும்.
மேற்கூறிய விஷயங்களை எல்லாம் சுருக்கிச் சொன்னால், தனித்தன்மை என்பது ஐந்து பிரதான அடையாளங்களை கொண்டதாக இருக்கும். முதலாவதாக Originality, இரண்டாவதாக Self Confidence மூன்றாவது Unconventional Behaviour Based On Right Convictions, நான்காவது Couragious Decisions , ஐந்தாவது Leading From The Front With Responsiblity . இவை எல்லாம் நம்முள் கொண்டு வர முடிந்தால் கண்டிப்பாக நாம் தனித்தன்மை மிகுந்தவர் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்நாள்வரை தனித்தன்மை இல்லாதவர்களும் இதற்கான சுபாவத்தை வார்த்து கொண்டால் அல்லது இதற்கு எதிரான ஸ்வபாவத்தில் இருந்து திரு உருமாறினால் அந்தளவிற்கு அவர்களுக்குத் தனித்தன்மை வளரும் என்றும் எதிர்பார்க்கலாம்.
காரணம் நாம் மற்ற மனிதர்களிலிருந்து வேறு பட நினைக்கும் போது ஒரு Individuality ஒரு தனித்தன்மை ஒரு தனிப் பார்வை வருகிறது. அது நம் பார்வை, நம் சிந்தனை அது நம்முள் இருந்து வருகிறது என்பதால் அப்படி வித்தியாசமான முன்னேற்றத்திற்கான நோக்கம் பார்வை இறைவன் தேடும் ஆனந்தமாக இருக்கிறது என்பதால் அது படைப்புத் திறன் பெற்று அபரிமிதமாக வளருகிறது. காரணம் பிரம்மம் இப்படி லட்ச கணக்கான கோடிக் கணக்கான தனித்துவத்தை மனித வாழ்வில் ஆனந்தமாக பார்க்கிறது. அதை வாழ்வு ஆர்வம் போன்ற உயர்ந்த பண்புகள் மூலம் பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது என்று எடுத்து கொள்ளலாம். அதாவது வாழ்வு தன் ஆனந்தத்தை கண்டுக் கொள்ள பிரம்மத்தை நாடுகிறது என்று பொருள். அந்த புரிதலே, அந்த விழிப்புணர்வே தனித்துவத்தைக் கொண்டு வரும்.
அன்னை நண்பராக ஒரு உயர்ந்ததை ஏற்க ஆரம்பித்தால், நாம் அன்னையை நோக்கி போகிறோம். அல்லது நம் ஆர்வம், பண்புகள் ஆகிவற்றை பொறுத்து அன்னை நம்மை நோக்கி வருகிறார் என்றும் எடுத்து கொள்ளலாம். . பெரிய ஆத்மாவிற்கு, பெரிய நேரம் வரும் போது தான் பெரிய ஆர்வம் தோன்றும், பெரிய தீர்மானம் வரும் என்கிறார். அந்த தீர்மானத்தை முடிவாக கொள்வது அல்லது அன்னையின் அழைப்பாக கொள்வது நம் தனித்துவத்தை வெளிப்படுத்தும். நம்மை சாதனையாளனாக்கும், பரிணாமத்தில் முன்னேற வைக்கும். அதாவது அன்னை நம்மில், நம் செயல்களில் அதிகம் வெளிப்பட, செய்ய வேண்டியதை அதிக பட்சம் செய்வதே நம்மை சாதிக்க வைக்கும். அப்படி வெளிப்படுத்துவது எல்லாமே எப்போதும் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
அது முரண்பாடு இல்லாத – நம் சூழலை நாம் முடிவு செய்யும் இடத்தில நம்மை வைக்கும்.
உதாரணமாக எனக்கு யாராவது திருமண பத்திரிக்கை கொடுத்து வரவேண்டும் என்று சொன்னால், திருமணத்திற்கு நான் நிச்சயம் வர வேண்டும் என்று நினைப்பார்கள். செல்லவில்லை என்றால் மனஸ்தாபம் வரும். அதுவே கர்மயோகிக்கு பத்திரிகை கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு பத்திரிகை தருவதையே பெரிய பாக்கியமாக நினைப்பார்கள். திருமணத்திற்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கவே இருக்காது. அவரின் ஆசீர்வாதம் பெரிது என்று நினைப்பர். அந்த நிலைக்கு நாம் நம் தகுதியையும், நாம் இருக்கும் சூழலையும் உயர்த்தும் போது நம் சொல்வதுதான் முடிவாக இருக்கும். முரண்பாடு என்பதே இருக்காது.
இப்படி ஒவ்வொரு நிலைக்கும் – அனைவரும் ஏற்கும் நிலை என்று ஒன்று இருக்கும். அந்த நிலைக்கான பண்புகளை அடைவது நம் வாழ்வில் முரண்பாடு என்பதை அறவே விலக்கும்.
இந்த தலைப்புக்கான கட்டுரை இத்துடன் முடிந்தது. அடுத்த வாரங்களில் வேறு ஒரு தத்துவத்தை எடுத்து கொண்டு பேசலாம்.